ஞாயிறு, மே 15, 2005

டிவியிலும் துள்ளுகிறது இளமை

இன்றைய சன் டிவி படம் 'துள்ளுவதோ இளமை'. படம் படு சைவமாக காண்பித்தார்கள். இந்த மாதிரி மெஸேஜ் படத்தையா 'ஏ' குத்தி, மலையாளப் பட ரேஞ்சுக்கு முத்திரை மோசடித்து, ஷெரினுக்கு கவர்ச்சி நடிகை அந்தஸ்தை கொடுத்தார்கள் என்று வினா எழுப்பும் அளவு வெட்டியிருந்தார்கள்.

அந்தப் படத்தையும் இரண்டாம் பகுதியில் உம்மென்று பார்க்க வைத்த மும்பை எக்ஸ்பிரசும் தலைவர் தமிழில் நடித்தால் எப்படி இருக்கும் என்று கொஞ்சம் கற்பனையோடு பார்த்த ஸ்வதேஷும் பிறகொரு நாள் போஸ்ட்டின் விஷயங்கள்.

சன் டிவியின் அசல் 'துள்ளுவதோ இளமை'யாக கோலங்கள் சீரியல் இருந்ததாம். தேவயானியின் சகோதரனாக வருபவரும் அபியுடன் கூட வேலை பார்க்கும் தீபா வெங்கட்டும் சம்பந்தப்பட்ட அஃபிஷியல் ட்ரிப்பின் அந்தரங்கக் காட்சிகள் 'உலகத் தொலைக்காட்சிகளில் முதன் முறையாக' என்பது போல் நெடுந்தொடர்களின் லஷ்மண் ரேகாவைத் தாண்டி பல மீட்டர்கள் ஓடியதாம்.

சீரியல்தானே ஓடுது... என்று குழந்தையுடன் பார்த்துக் கொண்டிருந்தவர்கள், பதறியடித்து ரிமோட்டைத் தேடி சேனலை மாற்றியிருக்கிறார்கள்.

நான் 'கோலங்கள்' பார்க்காததற்காக நிம்மதிப் பெருமுச்சு விட்டுக் கொண்டாலும், தீபா வெங்கட்டின் குறிப்பிட்ட காட்சிகளைத் தவறவிட்டு விட்டோமோ என்று ஏக்கப் பெருமூச்சு வந்ததாக, இல்லத்தரசி சந்தேகப்பட்டார்.

விகடன் பத்திரிகைதான் மாறிப் போனது என்றால், விகடன் தயாரிப்பும் தாராளமாயமாக்கலை நன்றாகவே செய்கிறது!? ஒரு வாரம் முன்பே முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கைகள், கபர்தார் எல்லாம் கொடுத்து மிரட்டினால் டி.ஆர்.பி. ரேட்டிங் கூடியிருக்குமே...

குறிப்பிட்ட கோலங்களை எவராவது பார்த்திருந்தால், மெய்யாலுமாகவே எல்லைகள் வரம்பு மீறியதா அல்லது சாதாரண டாடா உப்பு கூட பெறாத மேட்டரா என்று தெளிவுபடுத்துங்கள்.

பி.குறிப்பு: பேவரிட் அன்னியன் பாடலை சுழற்சியில் ஓடவிட்டுக் கொண்டேயிருப்பது போல், இப்பொழுதெல்லாம் 'மெட்டி ஒலி' மீண்டும் மீண்டும் அரைத்த மாவை புளிக்க வைப்பதால், முன்னாள் சித்தி, சமீபத்திய அண்ணாமலை, என்றும் ராதிகாவின் புதிய மொந்தை 'செல்வி'யே தேவலை.

6 கருத்துகள்:

கொஞ்சம் லேட் ஆனாலும் பரவாயில்லைன்னு "மனைவி" பாருங்கு....மெட்டி ஒலி, கோலங்களைக் காட்டிலும் மனைவி தான் பெஸ்ட்.....

சன் டிவியின் அசல் 'துள்ளுவதோ இளமை'யாக கோலங்கள் சீரியல் இருந்ததாம். தேவயானியின் சகோதரனாக வருபவரும் அபியுடன் கூட வேலை பார்க்கும் தீபா வெங்கட்டும் சம்பந்தப்பட்ட அஃபிஷியல் ட்ரிப்பின் அந்தரங்கக் காட்சிகள் 'உலகத் தொலைக்காட்சிகளில் முதன் முறையாக' என்பது போல் நெடுந்தொடர்களின் லஷ்மண் ரேகாவைத் தாண்டி பல மீட்டர்கள் ஓடியதாம்.

அந்த காட்சியை/கோலத்தை காணும் வாய்ப்புபெற்ற பாக்கியசாலிகளில் ஒருவன் என்றமுறையில் உங்களுடைய கூற்றை வன்மையாகக் கண்டிக்கிறேன்... :) (அல்லது ஒருவேளை இங்கு சிங்கப்பூரில் கத்தரி போட்டுவிட்டார்களா)

முதலில் ஒரே அறையில் தங்கவே மறுத்து, பின்னர் சோபாவில் என்று இறங்கி, பின்னர் ஒரே கட்டிலில் என்று வந்து நின்றது/படுத்தது கதை... பின்னர் முதுகு காட்டி...
முகங்காட்டி படுத்திருந்து... பின்னர் கைகள் தவழ்ந்து...
அவனுடைய முகம்,
கனாகண்டேனின் பரபரப்பானபாடலில் வரு(மா)மே - அந்த இடங்களெல்லாம் கடந்து,
தீபாவின் முகத்தோடு இயைந்ததோடு...
பாவிப்பசங்க தோடரும்... போட்டுட்டாங்க:)

அந்தக்காட்சி முடிந்தவுடன், மனைவி சொன்னது - இதெல்லாம் டூ மச்.
இருக்கலாம், இதுவரை நாடகங்களில் இது போன்று இருகதாபாத்திரங்கள் (கணவன்/மனைவி கூட) படுக்கையில் படுத்திருந்து பார்த்ததில்லை.

அந்தவகையில் வேண்டுமானால், திரைப்படத்தைநோக்கியோ, உலகத்தொலைக்காட்சியை நோக்கியோ போனதாக சொல்லலாம்:)

தமிழ்திரையின் மிட்நைட் மசாலா, விண் டிவியின் ராத்திரி ரவுசு எல்லாம் பார்க்க உமக்கு குடுத்துவைக்கவில்லை :)

சந்திரன்... நான் மொத்தமாக தீபா வெங்கட் நடிக்கும் சீரியல்களுக்கு மாறி விடலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

அன்பு... என் சந்தேகத்தைத் தீர்த்து வைத்த, விரிவான பதிலுக்கு நன்றி. மனைவியின் தோழிகளிடம் 'அப்புறம் என்ன நடந்தது... சொல்லுங்க!?' என்று விலாவாரியாக கேட்கவும் முடியவில்லை. எல்லாரும் 'அநியாயம்பா... அக்கிரமம்' என்று மட்டும் பூடகமாக கண்டித்துவிட்டு ஒதுங்கி விட்டார்கள்.

இந்த மாதிரி காட்டப்போகிறோம் என்று முன்பே சின்னதாய் ஒரு வார்னிங் கொடுத்தால், நல்லா இருந்திருக்கும்.

ராம்கி... 'கண்ணிழந்தான் பெற்றிழந்தான் எனவுழந்தான்' என்னும் ரேஞ்சுக்கு ஃபீல் பண்ண வைக்கறீங்க சார் :P)

ஏழரை மணிக்கு வர்ற சீரியலை நானெல்லாம் எந்தக் காலத்துல ஆபீஸு முடிஞ்சு சீக்கிரமாப் போய்ப் பார்க்குறது? ம்ஹூம்! எனக்கில்ல எனக்கில்ல..!!

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு