திங்கள், மே 16, 2005

அது ஒரு கனாக் காலம்

இசை: இளையராஜா
இயக்குநர்: பாலு மகேந்திரா

'நீங்கள் கேட்டவை' போன்ற படங்கள் பாடல்களுக்காகவே ஓடியது அந்தக் காலம். இந்தப் படத்தில் நடிகர்களையும் தன்னையும் மட்டுமே நம்பி பாலு மகேந்திரா களமிறங்கியிருக்கிறார் போல் தெரிகிறது.

அந்த நாள் ஞாபகம் :: விஜய் யேசுதாஸ், ஷ்ரேயா கோஸல் - 1.5 / 4
முதல்முறையாக ஷ்ரேயா கோஸலுக்கு பதிலாக வேறு யாரையாவது பாட விட்டிருக்கலாமோ என்று தோன்ற வைக்கும் பாடல். சாதனா சர்கம் மாதிரி தேவையில்லாத இடங்களில் இழுத்து விடுகிறார்.

என்னடா நெனச்சே :: ரஞ்சித், விஜய் யேசுதாஸ் - 1 / 4
அச்சச்சோ... கொஞ்ச நாள் கழித்து ராஜாவின் டப்பாங்குத்து. தனுஷின் ஆராதனைப் பாடல். பாடகரை மாற்றியிருந்தால் சோபித்திருக்கலாம்.

காட்டு வழி கால்நடையா :: இளையராஜா - 2 / 4
ராஜாவின் கோட்டையான தத்துவ தனிப்பாடல். பாடலாசிரியர் வலு சேர்க்காதது முதல் வருத்தம். இன்னும் எத்தனை நாள்தான் இப்படி சோகமாகப் பாட வேண்டுமோ என்பது போன்ற அலுப்பு தெரிவது இரண்டாவது வருத்தம். முடிவில் ஓரணா மிட்டாய் போல ஒரு அசட்டு தித்திப்பு.

கிளி தட்டு கிளி :: பவதாரிணி, ஜோதி - 3 / 4
பவதாரிணி க்ராஜுவேட் ஆகியிருக்கிறார். இரண்டு தடவைக் கேட்டதில் படத்தில் மிகவும் பிடித்த பாடலாகத் தோன்றுகிறது. ராஜாவின் முத்திரை இசையோடு மெல்லிய வரிகளில் அசத்துகிறார்கள்.

உன்னாலே தூக்கம் :: ரஞ்சித், மாலதி - 2 / 4
தனுஷ் ப்ரியாமணியுடன் மங்கலான விளக்கொலியில் கசமுசா செய்யும் பாடல். மாலதி நிறையவே அசத்தி வாசித்திருக்கிறார்.

ராஜா அரசோச்சியது எண்பதுகளில். பாலு மகேந்திராவும் இளையராஜாவும் என்றாலே எதிர்பார்ப்புகள் இறக்கை கட்டி பறக்கும். அதுவெல்லாம் ஒரு கனாக் காலம்.

4 கருத்துகள்:

wanted to listen to it today... after seeing this, my interests hv come down... anyhow, still will give a try.

I listened to it yesterday. I liked the V.Yesudas/Shreya Ghosal song. Also the Ilayaraja Song. I am happy that Raja is giving some good tunes again.

By the way, what is with Northern singers and tamil songs. Namma oorla paada yarume illayah? ennappa achu chinmayee, harini, sujatha, chitra enga avanga.

இந்த ரஞ்சித்-தும் சப்த்ஸ்வரங்களின் கண்டுபிடிப்புதான்... கார்த்திக் போன்றே கலக்கட்டும் இன்னொருவர் சுக்ரனில் பாடிய சங்கீதா மகாதேவன்

ராம்... என் பேச்சை கேட்காமல், நீங்களும் ஒரு நாள் முழுக்கக் கேட்டுப் பாருங்க :-)

ஷ்ரேயா கோஸல் கொஞ்சம் உருப்படியா, மெனக்கிட்டு உச்சரிப்பில் கவனமெடுத்துப் பாடி வந்தாங்க. அவங்களும் accent போட்ட மாதிரி பாடியதில்தான் வருத்தமே :-( ராஜாவுக்கு போரடிச்சுப் போன மாதிரி ஒரு ஃபீலிங். இல்லாட்டி பசங்களுக்காக ரொம்பவே அடக்கி வாசிக்கிறாரா? அதுதான் திருவாசகம் வரப் போகிறதில்லையா! பார்த்துடுவோம்...

சமீபத்தில் ஸ்பெஷல் சப்தஸ்வரத்தில் நாலு (புதிய பிண்ணணிப்) பாடகர்களைப் பார்த்தேன். சங்கீதாவுக்கு 'சுக்ரனில்' நல்ல மெட்டுகளாக அமைந்துள்ளது. அப்பொழுது தோன்றியது: அந்தக் காலத்தில் வாணி ஜெயராம், ஜானகி, பி சுசீலா என்று நாலஞ்சு பேருதான். இன்றைக்குத்தான் எவ்வளவு (ஆரோக்கியமான) போட்டி + வெரைட்டி!

அப்படியே ஆங்கிலம் (அல்லது இந்தி கூடத்தான்) மாதிரி எல்லாரும் தனி ஆல்பம் அமைத்து வெளியிட ஆரம்பித்தால், திரைப்பாடல் என்றில்லாமல் இசைக்களம் மேலும் விரிவும் உலகப்பார்வையும் பெறும்!?

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு