Anniyan Censored
sify.com: வரும் 17ம் தேதி வெளியாகவுள்ள அந்நியன் படத்துக்குத் தமிழக சென்ஸார் யூ சர்டிபிகேட் கொடுத்துள்ளது. இதுவரை வந்த ஷங்கர் படங்களிலேயே இந்தப் படத்துக்குத்தான் எந்த பிரச்சனையும் இல்லாமல் சென்ஸார் சர்டிபிகேட் கொடுக்கப் பட்டிருக்கிறது. "படத்தைப் பார்த்த சென்ஸார் அதிகாரிகள்,"நல்ல மெஸேஜ் சொல்லியிருக்கீங்க. வாழ்த்துக்கள்" என்று ஷங்கரிடம் சொன்னார்களாம். "இதையே பெரிய கிஃப்டாக நினைத்தேன்" என்கிறார் ஷங்கர்.
thatstamil: படம் ரூ. 35 கோடிக்கு விற்பனையாகி இருக்கிறதாம். போட்ட காசை விட ரூ. 10 கோடியை எடுத்துவிட்டார் தயாரிப்பாளர் ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்திரன். இயக்குனர் ஷங்கர் அந்நியன் படத்துக்கு ரூ. 5 கோடி சம்பளம் வாங்கியிருக்கிறார். படப்பிடிப்பு தொடங்கி 2 வருடங்கள் ஆகிவிட்டது. கடந்த வருடம் பெரும் பொருட்செலவில் தயாரான தேவதாஸ் படத்திற்கு ரூ.35 கோடி செலவானதாம். இதற்கு அடுத்து அதிக பொருட்செலவில் தயாரான படம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. 525 பிரிண்டுகள் போடப்பட்டுள்ளது.
(சந்திரமுகி ரூ. 30 கோடி அளவுக்கு பிசினஸ் ஆனது. 600 பிரிண்ட் போடப்பட்டது.)
சென்ஸார் அலுவலகத்து காமெண்ட்கள் என்று 'விளம்பரத் தொடர்பாளர்'களே வில்லங்கமாக ஏதாவது கொடுக்கிறார்களோ...
'பாபா'வுக்கும் இதே மெஸேஜ் செய்தி வெளியாகி இருந்தது.
ஞானி மாதிரி யாராவது எழுதினால்தான் திரைப்படங்களுக்கு சான்றிதழ் வழங்குவது குறித்து மேலோட்டமாக தெரிய வருகிறது.
சொன்னது… 6/15/2005 02:50:00 PM
Sify.com: 'அந்நியன்' படத்தின் ரிசர்வேஷன் தமிழ்நாடு முழுவதும் உள்ள தியேட்டர்களில் நேற்று முன்தினம் தொடங்கியது. ரிசர்வேஷன் தொடங்கிய 7 மணி நேரத்தில், எல்லா தியேட்டர்களிலும் 14 நாட்களுக்கு ஹவுஸ்புல் ஆகிவிட்டது. மொத்த டிக்கெட்டும் விற்பனையாகிவிட்டதாம்.
சந்திரமுகி படம், ரிசர்வேஷன் தொடங்கிய 24 மணி நேரத்தில், 12 நாட்களுக்கு ஹவுஸ்புல் ஆனது.
இதன் தயாரிப்பு செலவு ரூ.26 கோடியே 38 லட்சம்.
இந்தப் படத்தை 29 கோடி ருபாய்க்கு இன்சூர் செய்துள்ளனர்.
சொன்னது… 6/16/2005 11:50:00 AM
கருத்துரையிடுக