குங்குமம் கேள்விகள்
ராஜ்குமார், காரப்பாடி
பலவிதமாக யோசித்து... ஒருவிதமா பேசுவது; ஒருவிதமாக யோசித்துப் பலவிதமாகப் பேசுவது... எது சார் பெஸ்ட் வழி?
க தியாகராசன், குடந்தை
நாவலர் 'உதிர்ந்த ரோமம்'; கலைஞர் 'சிறுபிள்ளை'; எஸ் ஆர் பாலசுப்பிரமணியம் 'காலிடப்பா'; சிதம்பரம் 'வக்கற்றவர்'; ஆனால் இப்படிச் சொல்பவர்?
அ கி வ அசோக்குமார் - கோகிலா, நரிப்பாளையம்
பீகாரில் கொசு இருக்கக் கூடாது என்று கவர்னர் பூட்டா சிங் உத்தரவிட்டுள்ளதைப் பற்றி...?
எஸ் அபுதுல்லா அஹமது, நாகூர்
தேசபக்தர்கள் - தீவிரவாதிகள் : ஒப்பிடவும்
சிலந்தியின் பதில்கள் சிலாக்கியமில்லை. தங்கள் பதில்களை வரவேற்கிறேன் :-)
சொன்னது… 6/14/2005 11:47:00 PM
பாலா பதில்கள் இங்கே
http://arataiarangam.blogspot.com/2005/06/blog-post_111881877333574893.html
சொன்னது… 6/15/2005 12:08:00 AM
1. இரண்டாவதுதான் சிறந்த வழி., பல விதமாப் பேசுனா அவங்க, அவங்க அவங்களுக்குத் தேவையானத எடுத்துப்பாங்க! - யாரவது ஒருத்தர் நம்ம யோசிச்ச மாதிரியும் எடுத்துக்களாம். நம்ம அரசியல்வாதிக பொழப்பே இப்பிடித்தான ஓடுது?., இந்துத்துவாங்கிற ஒரே யோசனதான்., அத இந்தியாவுல ஒரு மாதிரி பேசுறது (நாலு பேரு முட்டாள்தனமா அடிபட்டு செத்தா., நமக்குத்தான் பேரு;) பாகிஸ்தான்ல வேற மாதிரி பேசி; நான் இம்புட்டு முக்கியமானவன் காட்டுறது. அதுமாதிரி.
2. மூப்பனார் - சொதப்பனார் - அத்வானி ஸெலக்டிவ் அம்னீஸ்யாவால் பாதிக்கப்பட்டவர்., ஸ்டாலின் - குட்டித்தலைவர், அன்புமணி- சின்ன அய்யா
இதையெல்லாம் செல்லுபவர் உங்களுக்காக தினமும் 22 மணிநேரம் உழைத்து இவற்றைக் கண்டுபிடித்த, உங்கள் அன்பு சகோதரி.
3. அங்கு மக்களே கொசு மாதிரித்தானே., தனியா எதுக்கு இன்னெரு கொசு?.
4. தேசத்திற்காக தடியடி வாங்குபவர் தேசபக்தர்., தேசத்திற்காக தடியெடுப்பவர் தீவிரவாதி.
என்னண்ணாச்சி சர்தானா?
பெயரில்லா சொன்னது… 6/15/2005 02:35:00 AM
நன்றி :-)
அடுத்து 'துக்ளக்' கேள்விகள் கொடுக்கப் பார்க்கிறேன் ;-)
சொன்னது… 6/15/2005 02:51:00 PM
கருத்துரையிடுக