வெள்ளி, ஜூன் 10, 2005

உடுப்பதற்கு ஆடை கூட இல்லாதவர்கள்

Dinakaran::

வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் பட்டியலில் நடிகைகள் ஜஸ்வர்யாராய், மல்லிகா ஷெராவத், ராணி முகர்ஜி பெயர்கள் இடம் பெற்றுள்ளது.

வறுமைக் கோட்டுக்கு கீழே வாழ்பவர்கள் யார் என்ற பட்டியலை தரும்படி மாவட்ட நிர்வாகங்களுக்கு பீகார் அரசு உத்தரவிட்டது. ஆனால் மாவட்ட நிர்வாகங்கள் தாமதம் செய்தது. குறிப்பிட்ட தேதிக்குள் தந்தே ஆக வேண்டும் என்று அரசு கெடுபிடி செய்தது. எனவே அவசரம் அவசரமாக அரசுக்கு மாவட்ட நிர்வாகங்கள் பட்டியல் அனுப்பியது. அதைப் படித்துப் பார்த்த போது வறுமையில் வாடுவோர் பட்டியலில் ஐஸ்வர்யாராய், மல்லிகா ஷெராவத், ராணி முகர்ஜி, மாதுரி தீட்சித், ரவீணா டாண்டன் ஆகியோர் பெயர்களும் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாடுவதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

முசாபர்பூர் மாவட்டத்தில் இந்த கணக்கு கொடுத்து இருந்தனர். இந்த கணக்கெடுப்புப்பணியை தொடக்கப்பள்ளி ஆசிரியர்களிடம் ஒப்படைக்கப்பட்டு இருந்தது. அவர்கள் வீடு வீடாகச் சென்று தகவல் சேகரிக்க சோம்பல்பட்டு மாணவர்களிடம் ஒப்படைத்தனர். அவர்களும் வீடு வீடாக செல்லாமல் இருந்த இடத்தில் இருந்தபடி விளையாட்டாக நடிகைகளின் பெயர்களை எழுதி வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்வதாக குறிப்பிட்டனர். இப்போது இந்தப் பட்டியலை சரிபார்த்து தவறுகள் களையப்பட்டு வருகிறது. சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

9 கருத்துகள்:

எஸ்.வி சேகர் (one more exorcist) நாடகத்தில் ஒரு காட்சி.

(எஸ்.வி சேகர்,அவர் அப்பா,தாத்தா)

அப்பா : ஏம்பா உனக்கு அறிவுயில்ல, அவன் தான் சின்ன பையன் அவன் கூட போய் A படம் பார்த்திருக்கியே

எஸ்.வி.சேகர் : அப்பா, தாத்தாவ திட்டாதே.

பாவம்பா அந்த பொன்னு ரொம்ப கஷ்டபடறா, ரொம்ப ஏழை. படம் முழுக்க போட்டுக்க துணியே இல்லாம வர்றா. அப்புறம் நம்ம தாத்தாதான் உணர்சிவசப்பட்டு அவரு
வேட்டிய கழத்டி ஸ்கிரீன்ல தூக்கி போட்டார்.

ஆமாம் ஆமாம் அவர்கள் உடுத்தும் உடைகளிலிருந்தே தெரியவில்லையா அவர்களின் "வறுமை" ? :-))

Please post images with "img src="" hspace=4 vspace=4"

rani kooda ishindu irukum ezhuthu will be readable then.

இவங்களோட ஜான் அப்ரஹாம், டினோ மொரொயோ, அப்புறம் இந்தில நடிக்கிற எல்லா கதாநாயகர்களையும் சேத்துக்கோங்க.

தம்மை ஹீரோக்களாகவும், ஹீரோயின்களை ஏழைகளாக அடிமைப்படுத்தும் எண்ணம் கொண்டவர்களிடமிருந்து வேறு என்ன எதிர்பார்க்க முடியும்! அதை ஆதரிக்கும் விதமாக இந்தப் புகைப்படங்களும் இருக்கிறது!
-ரகு.

Boston Sir,
Thanks :)

தலைப்பை பார்த்து ஓடி வந்தேன் கவுத்திட்டீங்களே

இவர்களுக்கும் பீகாருக்கும் என்ன சம்பந்தம் பாலா?

ஆடைப் பஞ்சத்திற்கு பதில் போட்ட அனைவருக்கும் என்னுடைய நன்றி.

ராகவன், ரிஷி கபூரும் சல்மான் கானும் ஆரம்பித்ததை தற்போதைய எம்டிவிடீயோக்களும், திரைப்படங்களும் தொடர்கிறது ;-)

ஜீவா. தினகரன் செய்தி படித்தீர்களா? நடக்க சோம்பி சித்தப்பன் வீட்டில் பெண்ணெடுக்கும் கதையாக, கணக்கெடுப்புப்பணியில் தப்பும் தவறுமாக போட்டு வைத்திருக்கிறார்களே!?

பொருத்தமான படங்களாகக் கேட்காதீர்கள். பீகாரின் ஏழ்மை சித்தரிக்கும் படங்களை விட இவர்களின் நிழற்படங்கள்தான் இணையத்தில் எளிதில் புழங்குகிறது :-|

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு