திங்கள், ஜூன் 13, 2005

துவக்கு

நெடுமாறன்: தென்றல் படத்தின் மூலம் தமிழ்க் குடமுழுக்கு விழாவைக் காட்டிய ஒரே காரணத்திற்காக இயக்குனர் தங்கர்பச்சான் சொல்ல முடியாத அளவுக்கு அவமானங்களுக்கும் புறக்கணிபிற்கும் ஆளாகியுள்ளார். இளம் இயக்குனர் புகழேந்தி ஈழத்தமிழர் அகதிகள் பிரச்சனையை மையமாக வைத்து எடுத்த 'காற்றுகென்ன வேலி' என்னும் படத்தை திரையிடுவதற்கே அவர் உச்சநீதி மன்றம் வரை சென்று போராட வேண்டியிருந்தது. தமிழன் என்ற உணர்வோடு உள்ள இயக்குனர்கள் வ.செ.குகநாதன், சீமான், வேலுபிரபாகரன். வெ.சேகர் போன்றவர்களை ஒதுக்கித்தள்ளும் முயற்சி நடைபெறுகிறது.தளிர்ப்பு - காசி. ஆனந்தன்
இலையுதிர்க் காலம்.
மரம் மொட்டையாக நின்றது.
புல் மேய்ந்த மாடுகள் மரத்தை
இரக்கத்தோடு நோக்கின.
'உன் இலைகள்
விழுந்துக்கொண்டிருக்கின்றன.
உன்னைப் பார்த்தால்
அழவேண்டும் போல்
இருக்கிறது..' என்று ஒரு மாடு
தழுதழுத்த குரலில் கூறியது.
மரம் சொன்னது-
'நான் அதைப்பற்றிக்
கவலைப்படவில்லை. புதிய
தளிர்களுக்காக அவை
விழத்தான் வேண்டும்.'
நிமிர்ந்தே நின்றது மரம்.
அது சொன்னது.
'விழுவதெற்கெல்லாம்
அழுவதற்கில்லை.'


தெளிவு - த. பழமலய்
திருவாட்டியோ
'குதிரை, குதிரைதான்
கழுதை, கழுதைதான்' என்பவர்.
நன் மக்களுக்கோ நான்
ஊறிய இடம்
உப்புக்கிணறாம்.
முன்னறி தெய்வங்களின் ஆறுதல்
'பொசுப்பு இவ்வளவுதான்.'
சுற்றப்பட்டோர் ஏமாற்றம்:
'கரைசேர்ந்துட்டான்!'
மற்றவர்கள் நினைக்கிறார்கள்.
சொல்லவும் செய்கிறார்கள்.
ஒன்றைப் பாருங்களேன்:
'நானா இருந்தா இப்படி
நடந்து போயிக்கிட்டு இருக்க மாட்டேன்.
கார் வச்சிக்கலாம் நீங்க!'
'எல்லாம் இருக்கட்டும்
ஒங்கள பத்தி
நீங்க என்ன நெனக்கிறீங்க?'
அதான் கொளப்புறாங்களே!
தெளியவா-?
விடமாட்டார்கள்!

நன்றி: yahoo groups | thuvakku ilakiya amaippu

2 கருத்துகள்:

அன்புடன் திரு போஸ்டன் பாலாவிற்கு,

மிக்க நன்றி...

துவக்கு இதழில் வெளிவந்த ஆக்கங்களைப் பற்றி உங்கள் வலைப்பூவில் எழுதியமைக்கு...

அப்படியே துவக்கு யாஹூ மடலாடற் குழுவிலும் இணைந்து விடுங்கள்...

மேலும் தங்கள் நண்பர்கள் அனைவருக்கும் துவக்கு இதழைப் பற்றிய செய்தியைக் கொடுங்கள்...

மேலும் தாங்கள் அல்லது தங்கள் நண்பர்களின் சிறப்பான படைப்புகளையும் எங்களுக்கு அனுப்பி வைத்தால், அதை துவக்கு இதழில் வெளியிடவும் பரிசீலனை செய்வோம்.

அன்புடன்

நண்பன்

(துவக்கு ஆசிரியருக்காக...)

நன்றி நண்பன். இணைந்து விட்டேன்.

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு