திங்கள், ஜூன் 13, 2005

ஜாக்ஸன் துரைபோகிற போக்கில் சில எண்ணங்கள்:
1. அன்று ஒஜே சிம்ஸன்; இன்று ஜாக்ஸன்.
2. பணம், புகழ் எல்லாம் வந்தாலும், வாழ்க்கையில் 'தேடல்' இருந்து கொண்டேதான் இருக்கிறது.
3. புகழ்பெற்றவர்களை -- சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு குற்றமற்றவர் என்று நிரூபிப்பது இயலாத காரியம்.
4. அமெரிக்காவில் நக்கீரனும் நெற்றிக்கண்ணும் மிஸ்ஸிங்.
5. எவ்வளவோ முக்கியமான விஷயங்கள் இருக்க, ஊடகங்களும் (நானும்தான் :-), இந்தச் செய்திக்கு முக்கியத்துவம் தந்து எழுதுகிறார்கள்.
6. இதன் பிறகும் குழந்தைகள் 'நெவர்லாண்'டுக்கு அனுப்பப் படலாம்.
7. உண்மை என்ன என்பதை வாக்குமூலம் கொடுத்தாலும், பணம் குற்றஞ்சாட்டியவரைக் கூட சரிய வைக்கும்.
8. ஊருக்கு பெரிய மனிதன், கையைப் பிடித்து இழுத்தால், அனைவரும் வேடிக்கை பார்ப்பார்கள்; கண்டிக்க மாட்டார்கள்.

2 கருத்துகள்:

Michael has no money.He is popular, but that is not enough to win the case.This case is much more complicated than OJ Simpson.

ஓ.ஜே. வழக்கை விட சிக்கலானதா? ஹ்ம்ம்... ஒரு விரிவான பதிவைப் போடுங்க!

தொலைக்காட்சியில் மக்கள் கருத்தைத் தொகுத்துக் கொண்டிருந்தார்கள். பலர் மகிழ்ச்சியும், சிலர் அதிர்ச்சியும் தெரிவித்திருந்தார்கள். வீட்டில் இருந்து பலான காஸெட்கள், மது ஊட்டியதற்கான மரபணு சான்றுகள் ஆகியவை இருந்தும் மதிப்பிழந்த தாயினால் வழக்கு பலவீனமடைந்ததற்கு சிலர் வருத்தமடைந்தார்கள்.

சந்தோஷம் தெரிவித்த ஒருவரிடம் கேட்ட கேள்வி: 'உங்க மகனை நெவர்லாண்டுக்கு அனுப்புவீங்களா?'

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு