வியாழன், ஜூலை 14, 2005

கள்ள மார்க்கம்

என்.வினாயகம் ::

சில தினங்களுக்கு முன் பெங்களூர் செயின்ட் ஜான்ஸ் ரோட்டில் என்னுடைய டூவீலரில் வந்து கொண்டிருந்தேன். அங்கே ஒரு ஓரமாக நின்றுகொண்டு ரோட்டில் செல்லும் வாகனங்களை வீடியோ கேமராவில் ஒருவர் படம் பிடித்துக் கொண்டிருந்தார். நான் உட்பட யாரும் அவரை சட்டை செய்யாமல்தான் கடந்து சென்றோம். ஆனால், அவர் வீடியோ எடுத்ததற்கான காரணம்... பதினேழு நாட்களுக்குக்குப் பிறகுதான் தெரிந்தது.

'நீங்கள் ஒருவழிப் பாதையில் சென்றிருக்கிறீர்கள். அதற்கான வீடியோ ஆதாரம் இருக்கிறது. எனவே நூறு ரூபாய் அபராதம் கட்டுங்கள்' என்று பெங்களூர் நகர போக்குவரத்துக் காவல் துறையிலிருந்து கடிதத்தை அனுப்பி வைத்திருந்தார்கள். தவறு செய்ததை உணர்ந்த நான் உடனடியாக பணத்தைக் கட்டிவிட்டேன்.

போக்குவரத்து விதிகள் மீறப்படும்போது சம்பந்தப்பட்ட நபர்களை மடக்கி வைத்துக் கொண்டு, காவலர்கள் போராடுவதை விட, இப்படிச் செய்தால் சத்தமில்லாமல் விதி மீறல்கள் குறைய வாய்ப்பிருக்கிறது என்றே தோன்றுகிறது. தமிழகத்திலும் இதை பின்பற்றலாமே ?

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு