வியாழன், ஜூலை 14, 2005

பிரமேயம்

THANGAIKKOR GEETHAM ::

தட்டிப் பார்த்தேன்
கொட்டாங்கச்சி
தாளம் வந்தது
பாட்ட வச்சி

தூக்கி வளர்த்த
என் அன்புத் தங்கச்சி
தூக்கி எறிஞ்சா
கண்ணு குளமாச்சி

தேனாக நெனச்சுத்தான்
உன்ன வளர்த்தேன்
நீயும்
தேளாகக் கொட்டிவிட
நானும் துடிச்சேன்



தோள் மீது
தொட்டில் கட்டி தாலாட்டினேன்
தாய் போல
நான்தானே சீராட்டினேன்

யாரென்று நீ கேட்க
ஆளாகினேன்
போவென்று நீ விரட்டும்
நாயாகினேன்

மலராக நெனச்சுத்தான்
உன்ன வளர்த்தேன்
நீயும் முள்ளாக தைச்சு விட
நானும் தவிச்சேன்



பாதியில வந்த சொந்தம்
பெருசு என்றே
ஆதி முதல் வளர்த்த என்ன
வெறுத்து விட்டே

பாசம் வச்ச என் நெஞ்சு
புண்ணாகவே
புருஷன் பக்கம்
பேசிவிட்ட தங்கச்சியே

கிளியாக நெனச்சுத்தான்
உன்ன வளர்த்தேன்
நீயும் கொட்டி விட
வலியில நானும் தவிச்சேன்

3 கருத்துகள்:

ஏய் டண்டணக்கா... டணக்க டக்கா...

நேயர் விருப்பம் : காக்கா புடிக்காம ஜால்ரா அடிக்காம பாட்டு ப்ளீஸ்.! ஹிஹி

>>காக்கா புடிக்காம ஜால்ரா அடிக்காம பாட்டு

அது என்னங்க பாட்டு? எந்தப் படம்?

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு