வலைப்பதிவரின் வாழ்க்கைச்சுழல்
1. வலைப்பதிவுகளுக்குள் தடுக்கி விழுதல்
2. தொடர்ச்சியாக ஒரு சில வலைப்பதிவுகளைப் படிக்க ஆரம்பித்தல்
3. பின்னூட்டமிட தொடங்குதல்
4. வலைப்பதிவுக்கு காள்கோளிடுதல்
5. எவ்வளவு பேர், எப்பொழுது வந்தார்கள், எத்தனை தடவை, எப்படி வரவழைத்தோம் என்று புள்ளி விவரப் புள்ளியாக மாறுதல்
6. எதைப் பார்த்தாலும் இது வலைப்பதிவுக்குப் பொருந்துமோ என்ன்னும் சிந்தனை மேலோங்குதல்
7. மாற்றுக் கருத்தை இடித்துரைப்பதாலும் தனி மனிதத் தாக்குதலினாலும் புலம்புதல்
8. வலைப்பதிவுக்கு மூடுவிழா நடத்துதல்
9. மூன்று நாளுக்குள் ரசிகர்களின் பேராதரவுக்கிணங்க சொந்த மனையில் புது அவதாரம் எடுத்தல்
10. சுட்டி கொடுத்து நிறைய வாசகர் உள்ள வலைப்பதிவர்களின் கவனத்தை ஈர்த்தல்
11. வலைப்பதியும் சகாக்களை கண்டம் விட்டு கண்டம் சென்று அளவளாவுதல்
12. செய்திகளையும் சொந்த அனுபவங்களையும் எழுதுவதை நிறுத்திவிட்டு, இன்ன பிற வலைப்பதிவுகளையும் அவற்றின் தாக்கங்களையும் பற்றி மட்டுமே கிறுக்குதல்
13. மீண்டும் #7 முதல் #12 சுழலுதல்
14. #12-காக பிற பதிவுகளில் பழியாகக் கிடந்ததால், வேலையை இழத்தல்
15. புத்தம்புதிய கொந்தி அணிந்து பிறிதொரு பதிவைத் தொடங்குதல்
மறுப்புக்கூற்று: இந்தப் பதிவு என் சொந்த அனுபவத்தில் எழுதப்பட்டதல்ல :-)
நன்றி: MinJungKim.com - Braindump v 5.0 :: Lifecycle of Bloggers (வழி: எஸ் கே)
//புத்தம்புதிய கொந்தி அணிந்து //
கொந்தின்னா என்ன?
தொந்தியா?
சொன்னது… 7/21/2005 01:35:00 PM
mask.
Since all Mugamoodi, Peyarili, Anionmoss is taken and branded... கொந்தி!
சொன்னது… 7/21/2005 01:49:00 PM
சரியாத்தான் சொல்லிருக்கீங்க.
பெயரில்லா சொன்னது… 7/21/2005 02:16:00 PM
வார்த்தைகளுக்கு தட்டுப்பாடான நேரங்களில் படம் காட்டுதல் - இதை விட்டுவிட்டீர்களே
சொன்னது… 7/22/2005 10:48:00 AM
Good Catch Kumaress.
சொன்னது… 7/22/2005 10:50:00 AM
கருத்துரையிடுக