புதன், செப்டம்பர் 28, 2005

ப்ரியசகி

சுரேஷ் கண்ணனின் பரிந்துரையை சிரமேற்கொண்டு 'ப்ரியசகி' பார்க்க நேரிட்டது.

உரல் துணுக்குகள்:

1. இந்த படத்திற்காக மாதவன் பேசிய 75 லட்சம் சம்பளத்தில் பாக்கியுள்ள இரண்டு லட்சம் கொடுத்தால்தான் டப்பிங் பேச வருவேன் என்று சொல்லி மாட்டிக் கொண்டார்.

2. மரத்தடி.காம்-இல் Medical Termination of Pregnancy Act Vs Right to life கட்டுரை நீதிபதியின் தீர்ப்பை அலசுகிறது.


கண்டதை சொல்வது:

நடுத்தர வர்க்க குடும்பத்தின் குணநலன்கள் இயல்பாக வெளிப்பட்டிருந்தது.

தம்பியின் அறைக்குள் கதவைத் தட்டாமல் நுழைந்து பேச்சை ஆரம்பிப்பார் ரமேஷ் கன்னா. ஒரே சோப்பை குடும்பத்தின் கடைக்குட்டியில் இருந்து கொள்ளுப்பாட்டி வரை பயன்படுத்தும். முட்டி தெரியும் நைட்டியை அணிந்தால், கூச்சத்தில் நெளியும். புது மனைவி விடிகாலை பத்து மணிக்கு எழுந்து கொள்வாள். கோடாலி முடிச்சுப் போட்டுக் கொண்டு சமையலறையில் குதிக்காமல், காபி ஆர்டர் போடுவாள். சினிமாவுக்கு செல்வதென்றால் குடும்பமே கிளம்பும். மொத்த வீட்டிற்கும் ஒரு டிவி மட்டும்தான் இருக்கும்.

பிறந்த நாளை கணவன் மறப்பான். எல்லா சின்ன, பெரிய, தட்டுமுட்டு, தடா பிரச்சினைகளுக்கும் இல்லத்தரசி பணிந்து போவதை deafault-ஆக கருதுவான். மனைவிக்கு ரம்மியமானப் பொருட்களைக் கூட நாத்தனாருக்கு விட்டுக் கொடுக்க பணிப்பான்.

சுருக்கமாக, காரண காரியங்களை எடுத்துவைக்காமல் குடும்பத்துக்கு அனுசரித்துப் போக எண்ணுவது மிடில் கிளாஸின் தலையாய assumption. குணாதிசயங்களில் மட்டுமே நடுத்தர வர்க்கமாக இருக்கிறது சகி (சந்தான கிருஷ்ணனின்) குடும்பம்.

விளக்கை அணைப்பதற்கு ரிமோட். இரண்டு மூன்று கார்கள். வீட்டுக்குள் சிவாஜி காலத்து அலங்காரப் படிக்கட்டு. இளவலுக்கு மட்டுமே நாற்பதாயிரம் ரூபாய் மாத வருவாய். நாலு லட்ச ரூபாய்க்கு குறைவில்லாத சாங்கினி மோதிரப் பரிசளிப்பு. கார்த்திகை இல்லாதபோதும் கார்த்திகைத் திருநாளாக ஆயில் விற்கிற விலையில் ஆயிரம் விளக்குகளை ஏற்றுதல்.

இயல்பாக செல்லும் படத்தில் விவாகரத்தின் ரத்தை வலிந்து புகுத்தி முடித்திருக்கிறார்கள். சேர்ந்து வாழ வேண்டிய வருடத்திற்குப் பின், தனிக் குடித்தனத்திற்கு கதாநாயகன் ஆதரவு கொடுப்பதாக முடித்திருந்தால் பாந்தமாக இருந்திருக்கும்.

படத்தில் கற்றுக் கொண்ட முக்கிய பாடம்: சதாவிற்கு innie.


| |

1 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு