திங்கள், அக்டோபர் 24, 2005

சிறந்த அட்டைப்படங்கள்



நான் அட்டைப்படத்தை பார்த்து புத்தகங்களை வாங்கும் ரகம்.

எண்பதுகளில் சிகரெட் துணுக்குகளுக்கு நடுவே எலும்புக் கூட்டின் கை தெரியும் விகடன் அட்டைப்படம் இன்றும் பயமுறுத்தும். நடிகைகளைத் தாங்கி வரும் தேவி, ராணி. சினிமா தலைப்புச் செய்திகளையும் பேட்டியையும் முகப்பாக வைத்து வரும் குமுதம். 'கவர் ஸ்டோரி'யை முன்னிறுத்தும் இந்தியா டுடே.

கடந்த நாற்பதாண்டுகளில் வெளியான ஆங்கில இதழ்களின் அட்டைப்படங்களில் தலைசிறந்த நாற்பதை magazine.org வரிசைப்படுத்தியுள்ளது.

தலை பத்தில் இரண்டு இடங்களை 'நியு யார்க்கர்' பிடித்துள்ளது. தலை நாற்பதில் 'எஸ்க்வெயிர்', 'டைம்', 'லைஃப்' ஆகியவை தலா நான்கு முகப்புகளை வைத்துள்ளது.

வெற்றிபெற்றவையில் 32 புகைப்படங்கள்;
7 ஓவியங்கள்;
2 வார்த்தைகள் மட்டுமே கொண்டவை.

1960களில் வெளிவந்தவையில் 11 முகப்புகள் வென்றிருக்கிறது.
1970களில் இருந்து 8;
1980களில் இருந்து 3;
1990களில் இருந்து 10;
2000களில் இருந்து 9;

தொடர்புள்ள பக்கங்கள்: ASME Unveils Top 40 Magazine Covers | தலை 40 முகப்புகள்



| |

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு