புதன், நவம்பர் 02, 2005

சனி #8

#1: மறுப்புக்கூற்று(கள்): இந்தப் பதிவை படிப்பதால் கூட்டல் கழித்தல் மேலான நம்பிக்கைகள் மூடமாகலாம். உங்கள் உடைந்த ஸ்கேலைக் கொண்டு ரிச்டர், சனியை சுற்றியிருக்கும் தூசு வட்டம் ஆகியவற்றை அடிக்க நேரிடலாம்.

#2.

Yarl.com :: எண் சோதிடம்: இந்திய எண் சோதிடர்கள் ஒவ்வொரு எண்ணுக்கும் ஒவ்வொரு கோளை ஒதுக்கி பலன் சொல்கிறார்கள்.

1 - ஞாயிறு,
2 - கேது,
3 - குரு,
4 - இராகு,
5 - புதன்,
6 - சுக்கிரன் (வெள்ளி )
7 - சந்திரன்,
8 - சனி,
9 - செவ்வாய்

#3.

#4.
திருப்பாவை: சில விளக்கங்கள் - ஹரி கிருஷ்ணன் - (maraththadi.com): "பேர்த்து என்ற சொல்லுக்கு 'மறுபடியும்' என்று ஒரு பொருள் வரும். பேர்த்தும். 'பின்னைப் பழம்பொருட்கும் பேர்த்துமப் பெற்றியனே' என்று திருவாசகம் சொல்லும். இங்கே இருக்கும் 'பேர்த்து' வேறு. பெயர்த்து என்பதன் வழக்கு வடிவம். கலோக்கியல். ஓரிடத்தை விட்டு இன்னோரிடத்திற்கு அசைவது பெயர்தல். இடப் பெயர்ச்சி. குரு பெயர்ச்சி, சனி..... இத்யாதி."


#5. 24. தமிழச் சாதி :: சி. சுப்ரமணிய பாரதியார் பாடல்கள் - மதுரை திட்டம்:
.....
விதியே தமிழச் சாதியை எவ்வகை
விதித்தாய் என்பதன் மெய்யெனக் குணர்த்துவாய்.
ஏனெனில்
சிலப்பதி காரச் செய்யுளைக் கருதியும்

திருக்குற ளுறுதியும் தெளிவும் பொருளின்
ஆழமும் விரிவும் அழகும் கருதியும்
எல்லை யொன் றின்மைஎ எனும் பொருள் அதனைக்
கம்பன் குறிகளாற் காட்டிட முயலும்
முயற்சியைக் கருதியும் முன்புநான் தமிழச்

சாதியை அமரத் தன்மை வாய்ந்தது என்று
உறுதிகொண்டிருந்தேன். ஒருபதி னாயிரம்
சனிவாய்ப் பட்டும் தமிழச் சாதிதான்
உள்ளுடை வின்றி உயர்த்திடு நெறிகளைக்
கண்டு எனது உள்ளம் கலங்கிடா திருந்தேன்.
.....


#6. ரா.பார்த்திபனின் கிறுக்கல்கள்

தோஷம்: சனி தோஷம்
பரிகாரம்: ஆஞ்ச நேயருக்கு துளசி மாலை போட்டு அபிஷேகம் செய்ய வேண்டும்.
என் பிரகாரம்: மன வளர்ச்சி குன்றியவர்களுக்கு, மருந்து மாத்திரை வாங்கித் தர வேண்டும்.

#7.
ஔவையார்:
ஆத்திசூடி - உயிர்மெய் வருக்கம் :: 16. சனி நீராடு.


#8. உலகத்தை அதிக அளவு நாசமாக்கிய பூகம்பங்கள்

அ) பாகிஸ்தான் (அக்ட். 8, 2005) - 80,000 இறப்பு
ஆ) இந்தோனேஷியா (டிச. 26 [2+6 ==8], 2004 - 280,000 (சுனாமியும் கூட வந்தது)
இ) தென்கிழக்கு ஈரான் (டிச. 26, 2003) - 26,200 இறப்பு
ஈ) இந்தியா (ஜன. 26, 2001) - 20,000 இறப்பு
உ) துருக்கி (ஆக. 17 [1+7 == 8], 1999 - 17,000 இறப்பு
ஊ) நார்த்ரிட்ஜ், கலிஃபோர்னியா (ஜன. 17, 1994) - 60 இறப்பு (இருபது முதல் நாற்பது பில்லியன் வரையிலான சேதங்கள்)
| |

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு