வெள்ளி, நவம்பர் 11, 2005

அடுப்பங்கரை தோழி

செய்தி: lazy geek:

Looking for a good Indian Girl on Sulekha Seattle Classifieds: "We are looking for a good Indian Girl to share the room with us. Rental will be paid by us. The Girl just needs to cook for us."


மொத்த அறைகள்: 1; சதுர அடி: 700

எங்களுடன் அறையைப் பகிர்ந்து கொள்ள நல்ல இந்தியப் பெண் தேவை. வாடகையை நாங்கள் கொடுத்து விடுவோம். சமையலை மட்டும் கவனித்துக் கொண்டால் போதும்.
- விவேக் சங்கர் • அமெரிக்காவில் அதிகம் செலவாகும் ஜாகையாக சான் பிரான்சிஸ்கோ உள்ளிட்ட வளைகுடா பகுதியில் விவேக் வசிப்பதாக வைத்துக் கொள்ளலாம். வாடகையாக 1000-இலிருந்து 1200 வரை ஆகும். அஏற்கனவே இருவர் (குறைந்தபட்சமாக?) வசிக்கிறார்கள்.

 • சமையலுக்கான எரிவாயு, குளிர் காலத்தைத் தாக்குப்பிடிக்க எண்ணெய், தட்டுமுட்டு சாமான்கள், சோபா போன்ற வீட்டுப் பொருட்கள், கேபிள் டிவி, மின்சாரம், சாப்பாட்டுக்கான உப்பு, புளி, மிளகாய் என்று மற்ற மாதாந்திர பற்றுகளும் இலவசமா?

 • காலை, மதியம், மாலை என்று மூன்று வேளை சமைத்தால் போதுமா? மதிய உணவை அலுவலகத்துக்குக் கொண்டு வந்து தரவேண்டுமா? மூன்று மணிக்கு டிபன் உண்டா?

 • பாத்திரம் கழுவுவது யார்? காய்கறிகள் நறுக்கி சமைக்க வேண்டுமா அல்லது நறுக்கிய காய்கறிகள் வாங்கித்தரப்படுமா?

 • துணி தோய்ப்பது, வரவு செலவுகளை கவனித்துக் கொள்வது, காலணி அணிவிப்பது போன்ற பிற சேவைகளும் செய்தால் கூடுதலாக பணம் தரப்படுமா?

 • பணிவிடை செய்பவளின் திருமணத்திற்காக தக்க முறையில் reference வழங்கப்படுமா?  | |

 • 6 கருத்துகள்:

  பாபா,

  என்னா வேலைக்கு மனுப் போடறப் போறீயளா? :-)

  பாத்துப்பா...

  //திருமண ரெபரன்ஸ்// அது ;-)

  என்ன இது சிறுபிள்ளைத்தனமா இருக்கு

  ---வேலைக்கு மனுப் போடறப் போறீயளா---

  நல்ல ஆஃபர் அப்பா...

  மாச செலவில் 600 டாலர் மிச்சம் பிடிக்கலாம். ரிஸ்க் இல்லாமல் எவாலுவேஷன் பார்த்து, வரப்போகும் கணவன் எப்படி இருக்கவேண்டும் என்று கட்டளைகளை ரெடி செய்யலாம்.

  ---என்ன இது சிறுபிள்ளைத்தனமா இருக்கு---

  "மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல
  மாதவம் செய்திட வேண்டும் அம்மா"
  என்ற கவிமணியின் கூற்றினை உண்மையாக்குகிறார்கள்.

  if the guys can sleep in the backseats of their cars at night
  and wont occupy the room except for restroom purposes that offer can be considered :)

  hahaha...

  சேர்ந்து வாழ்வது என்று சொல்கிறார்களே, அதுவா இது, அல்லது இது சமையலுக்கு மட்டுமான விண்ணப்பமா?
  உறவு முறைகளில் ஏற்படும் மாற்றங்களின் அடையாளம் இது.

  கருத்துரையிடுக

  புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு