செவ்வாய், நவம்பர் 15, 2005

கூகிள்ராஜாவுக்கு புள்ளிவிவரம் வருதா

ஸ்டாட்கவுண்டர் போன்ற எண்ணற்ற சிறு நிறுவனங்கள் புள்ளிவிவரங்களைக் கொடுத்து வந்தது.

யார் வந்தார்கள், எதற்காக இந்த வலையகம் தேடலில் கிடைத்தது, எப்படி வரவழைக்கப்பட்டார்கள், எந்த ஊர், என்ன ஐ.பி. முகவரி, எப்பொழுது என்றெல்லாவற்றையும் கொடுத்தார்கள்.


அவர்களின் நிலை::



ஐய்யா கூகிள் அனலிடிக்ஸ் வந்தாச்சு::



12 மணி நேரம் காத்திரு என்கிறார்கள். ஹ்ம்ம்ம்ம்.... பார்ப்போம்::


  • Google Analytics கூகிளின் ஆட்சென்ஸ் விளம்பரசேவையுடன் இணைந்து பயன்படும்.

  • எல்லா வலையகங்களிலும் பயன்படுத்தலாம். ஆட்சென்ஸ் வைத்திருக்கவேண்டிய கட்டாயம் இல்லை.

  • நம்மிடம் கூகிள் விளம்பரசேவை இல்லாவிட்டாலும், 'அனாலிடிக்ஸை' நிறுவுவதன் மூலம், நம்முடைய வலையகத்தின் பழக்கவழக்கங்களை, கூகிளுக்கு வழங்கி விடுவோம்.

  • மாதந்தோறும் உங்கள் வலையகத்துக்கு வருகை புரிபவர்களின் எண்ணிக்கை ஐந்து மில்லியனைத் தாண்டினால் 'அனாலிடிக்ஸ்' உபயோகிக்கக் கூடாது.

  • ஒரு மில்லியனுக்கு மேல் வருமானம் ஈட்டும் இரண்டரை லட்சத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்களில் 17 சதவீதம் மட்டுமே ஏதாவதொரு 'புள்ளிவிவர' நிரலியை பயன்படுத்துகிறார்கள். மீதமுள்ள இரண்டு லட்சத்து சொச்ச ஸ்தாபனங்களை குறிவைத்து அனாலிடிக்ஸ் களமிறங்கியுள்ளது.

  • $460 மில்லியன் வருமானம் புரளும் தொழிலில் WebSideStory, WebTrends, Omniture போன்றவர்கள் முன்னோடிகளாக இருக்கிறார்கள்.

  • இலவசமாக தருவதற்காக 'அர்ச்சின்' (Urchin) நிறுவனத்தை முப்பது மில்லியனுக்கு கூகிள் வாங்கியது.

    தகவல்: Google Blogoscoped | Google to offer its clients free trail of clicked-on ads - Technology - International Herald Tribune





    | |

  • 8 கருத்துகள்:

    நான் முந்திகிட்டேன் பாலா,

    http://imohandoss.blogspot.com/2005/11/blog-post_113202867103671256.html

    ஆனா விலாவரியா போட்டுரிக்கீங்க, பார்க்கலாம் எதா இருந்தாலும் 12 மணிநேரம் கழிச்சுதான் சொல்லமுடியும்.

    PS: ஒரு விளம்பரம்

    //# மாதந்தோறும் உங்கள் வலையகத்துக்கு வருகை புரிபவர்களின் எண்ணிக்கை ஐந்து மில்லியனைத் தாண்டினால் 'அனாலிடிக்ஸ்' உபயோகிக்கக் கூடாது.//

    அதாவது 'ஆட்சென்ஸ்' பயன்படுத்தாவிட்டால் மட்டும். உங்கள் தளத்தில் 'ஆட்சென்ஸ்' இருந்தால் இந்த தடுப்பு பொருந்தாது.

    படமும் நன்றாக இருக்கிறது, அதைப் பார்த்து சொன்ன கதையும் நன்றாக இருக்கிறது

    வெப்-பேஸ்ட் சர்வீஸ்களில் ஒரு மைக்ரோஸாஃப்ட் ஆகிவிட்டது கூகிள். இருந்தாலும், கூகிளுக்கு எம்.எஸ்-ஸுக்கு இருக்கும் எதிர்ப்பு இல்லையே..

    மோகன் தாஸ் பதிவபாத்து நானும் சேர்ந்திருக்கேன். இன்னும் இரண்டு மணி நேரம் இருக்கு. பார்ப்போம்.

    அழகா படம் போட்டு விளக்கறீங்களே!

    குரல் கொடுத்தவர்களுக்கு நன்றி :-)

    --12 மணிநேரம் கழிச்சுதான் --

    ப்ளாகராக இருந்தபோது ஸ்டாட்ஸ்.ப்ளாகர்.காம் என்பதை கொடுத்திருந்தார்கள். இப்போது மேம்படுத்தின சேவை?!

    ---'ஆட்சென்ஸ்' பயன்படுத்தாவிட்டால் மட்டும்---

    கவனிக்க மறந்தேன். நன்றி.

    ---கூகிளுக்கு எம்.எஸ்-ஸுக்கு இருக்கும் எதிர்ப்பு ---

    எல்லாம் பி.ஆர். செய்யும் மாயம்.

    ப்ரைவசி போச்சு...
    உலகத்தையே ஒரு குடைக்குள் ஆள்கிறார்...

    என்று ஸ்லாஷ்டாட் மக்கள் புலம்பல் எல்லாம் மைக்ரோசாஃப்டை மட்டுமே குறி வைப்பது ஏனோ!

    >> Google Analytics கூகிளின் ஆட்சென்ஸ் விளம்பரசேவையுடன் இணைந்து பயன்படும்.
    >> எல்லா வலையகங்களிலும் பயன்படுத்தலாம். ஆட்சென்ஸ் வைத்திருக்கவேண்டிய கட்டாயம் இல்லை.

    Google Analytics has nothing todo with Adsense. The limit of 5 million hits for Google Analytics is waived for AdWords customers. Adsense and Adwords are different products. for more details http://google.blognewschannel.com/index.php/archives/2005/11/14/for-the-last-time-the-difference-between-adsense-and-adwords/

    intha blog postla irukkara ella padamume soooper. figure yaarunu sonningana konjam nalla irukkum

    ---Adsense and Adwords ---
    Thx for the link

    ---yaarunu sonningana ---
    http://bioscope.blogspot.com/2005/11/actress-saloni-from-oka-oorilo.html

    Saloni (from Oka Oorilo) - Telugu cinema Photo Gallery - Actress

    கருத்துரையிடுக

    புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு