திங்கள், நவம்பர் 21, 2005

குரங்கு கையில் வோர்ட்பிரஸ்

WordPress-இல் இலவசமாக வலைப்பதிய அழைக்கிறார்கள். வலையகம் தோறும் மடல் முகவரி வைத்துக் கொள்வது போல் இங்கும் தொடங்கலாம்.


சில சுவாரசியங்கள்:

 • எழுதியதை துறை வாரியாகப் பிரிக்கலாம்.

 • ஹாலோஸ்கான் போலவே மறுமொழிந்தவர்களின் ஐ.பி.யை தெரிந்து வைத்துக் கொண்டு மோப்பிக்கலாம்.

 • எழுதியவற்றில் ஒரு பகுதியை மட்டும் முகப்பில் காட்டும் வசதி இருக்கிறது. முழு நீளக்கதையையும் முகப்பிலேயே போட்டு பயமுறுத்தாமல், சுருக்கமாக உள்ளிழுக்கலாம்.

 • ஒவ்வொரு பதிவிலும் கொசுறாக Meta (தகவல் குறித்த) தகவல்களை கொடுக்கலாம்.

 • என்னுடைய கையில் மாட்டிய பூமாலையை பார்க்கலாம் ;-)

 • மேற்கண்டவாறு இளித்தால் (:-)), சிரிப்பாகவே சிரிக்க வைக்கிறார்கள்!


  சில கடுப்புகள்:

 • இயங்கு எழுத்துரு போட முடியவில்லை.

 • வலப்பக்கம், இடப்பக்கம் என்று படங்களாகவும், இன்ன பிற சேவைகளாகவும் கூட்டி கழிக்க முடியவில்லை.

 • டெம்பிளேட்டில் கை வைக்க முடியவில்லை.

 • கூடிய சீக்கிரமே காசு கேட்கலாம்.

 • TypePadக்கு இணையாகாது.
  | |

 • 3 கருத்துகள்:

  see my blog in wordpress based blog

  ennamopo.blogsome.com

  You can even touch the templates..
  wordpress way better than blogspot

  arokyam

  hmm.. another half-baked post from you Balaji.

  There are umpteen nbr of ppl who offer wordpress based blogging services(for free).

  wordpress.com is the least user friendly.

  blogsome.com is a little better.

  there's blogneo.com which users wordpress multi-user edition.

  and..

  there's the time tested (cross my fingers) weblogs.us.

  best way is to run it in your own site. next best is ofcourse weblogs.us. unfortunately, they are not accepting new users now. they might start doing so soon.

  Balaji, the way you have written would actually scare away ppl. pls do be responsible atleast in technical posts.

  -Mathy

  ஆரோக்கியம், மதி... விடுபட்டதையும் தெரியாததையும் சுட்டியதற்கு நன்றி.


  ---another half-baked post ---

  கடுமையாக கண்டிப்புத் தொனி தெரிய திருத்துவதற்கு பதிலாக, இதெல்லாம் எழுதவில்லையே என்று சொல்லலாமே மதி. இந்தப் பதிவு நானறிந்த வரையில், எனக்குப் புதுமையான விஷயங்களை, பகிர நினைக்கும் சமாசாரங்களை என்னுடைய லிமிடேஷன்ஸுக்கு உட்பட்டு எழுதுகிறேன்.

  அவற்றில் இலக்கணப்பிழைகள் இருக்கலாம். சொல்லுங்க... திருத்திக்கறேன். நினைவில் நிறுத்தி மீண்டும் வராமல் பார்த்துக்கொள்வேன்.

  சில தகவல் விடுபடுதல்கள் இருக்கலாம். அறிவுறுத்துங்க... தெரிந்து கொள்வேன்.

  எல்லாப் பதிவுக்கும் மறுப்புக்கூற்று, டிஸ்க்ளெய்மருடன் ஆரம்பித்து, முடிக்க வைக்காதீங்க... ப்ளீஸ்

  என்னுடைய ஒவ்வொரு பதிவும் அதனளவில் முழுமையாக இருக்க நான் உங்கள் அளவு உலக அனுபவமும், கற்றலும், புத்தக வாசிப்பும், நுட்ப ஞானமும் அடையாதவன். பாதையைக் காட்டினால், எனக்கு பயனுள்ளதாக இருக்கும்.

  கருத்துரையிடுக

  புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு