வெள்ளி, ஜனவரி 06, 2006

துக்கடா

ஆண்டொன்று போனால் வயதொன்று போய் விடுமே; அதற்கு முன்னாலே, வலைப்பதிவு பத்து தொடங்க வேண்டும் என்னும் கொள்கைக்கு பங்கம் விழாமல் இருக்க கில்லி ஆட ஐகாரஸ் பிரகாஷ் கூப்பிட்டவுடன் ஒத்துக் கொண்டு பழக ஆரம்பித்திருக்கிறேன்.

கில்லியின் குறிக்கோள்களாக நான் என்ன புரிந்து வைத்துக் கொண்டிருக்கிறேன்:

1. நூறு நாள் விடுமுறையாக நீங்கள் காஷ்மீர் சென்றாலும் அல்லது ஒரு வாரம் சத்தியமங்கலத்தில் கடத்தப்பட்டாலும் விட்டுப்போன வலைப்பதிவுகள் எல்லாவற்றையும் புரட்டுவது சாத்தியமல்ல. அப்பொழுது கில்லி பயன்படும்.

2. எழுத ஐடியா தோன்றாதபோது, கில்லியைப் புரட்டினால் பாப் கல்ச்சரும் வலை மிக்ஸரும் கிடைக்கும்.

3. பிரகாஷும் கூட இருப்பதால், obvious என்று நான் விட்டு விடுவதும், taboo என்று என்னை விலக்கிக் கொள்ளும் சமாச்சாருடன் இருக்கும்.

4. முடிந்தவரை கருத்து தீர்ப்பளிக்காமல், கைகாட்டியாக அமையும்.

5. பிடித்த, படித்த தமிழ்ப்பதிவுகளை நொடி நீதிபதியாகத் தொகுப்பதைப் போல், தமிங்கிலரின் பதிவுகளை கோர்க்க வேண்டும்.

6. கஷ்டப்பட்டு பத்து பாயிண்ட் வர வேண்டுமே என்றெல்லாம் மினுக்கிடாமல், சட்டு புட்டென்று பிடித்த பதிவுகளைப் பகிர முடியும்.

7. கூடியமட்டும் நேரடி செய்திகளைக் கொடுக்காமல், வலைப்பதிவர்களின் எண்ணங்கள் மூலம் முக்கியத்துவமான நிகழ்வுகளை காட்டலாம்.

8. சுய பிரலாபங்களை விட்டு விட வாய்ப்பு அமைக்கலாம்.



கூடிய சீக்கிரமே தேர்தல் 2006-இல் நிற்க சீட் கேட்க வேண்டும். ஆனால், ஹேஷ்யங்கள் எல்லாம் சுத்த வேஸ்ட் என்று இன்றைய வால் ஸ்ட்ரீட் ஜர்னலில் பிளந்து கட்டியிருக்கிறார் 'எண் ராஜா'.


தமிழ் பதிப்பகங்களில் கிழக்கு மற்றும் உயிர்மை இரண்டும் எப்போதுமே இணையத்துக்கு முக்கியத்துவம் வழங்கி வந்தது. இவர்களுடன் எனி இந்தியன் பதிப்பகம் வலை மூலமாகவே அறிவிப்புகளை சுடச்சுட வெளியிட்டு வந்துள்ளது. இணையத்தின் மூலம் புத்தக வாசிப்பும், பிடிக்கக்கூடிய புத்தகங்களின் அறிமுகமும் எளிதில் கிடைக்கிறது.

சுஜாதாவின் புத்தகங்களுக்கு திரை வரிசை. இலக்கிய புத்தகங்களுக்கு நவீனவாதிகளின் வரிசை.

சுஜாதா இலக்கியவாதியா என்று பிலிம்சேம்பரில் யாரும் வம்பு கிளப்ப மாட்டார்கள். ஜெயமோகன் அரசியல்வாதியா என்று புக் பாயிண்ட்டில் எவரும் அல்வா கிண்டமாட்டார்கள்.

சன் டிவியின் 'வணக்கம் தமிழகம்' போல் இலக்கிய விழாக்களும் பன்முகத்தை இழந்து வருகிறது. வாசகர்களுடன் 'கேள்வி-பதில்', மதிப்புரை கொடுப்பவர்களின் உண்மையான விமர்சனம், நண்பர்களுடன் வெளிப்படையாகப் பேசுவதைப் போன்ற பாவத்துடன் பார்வையாளர்களுடன் விவாதம் போன்றவற்றை அமெரிக்க அமர்வுகளில் பார்க்க முடிகிறது.

கெட்ட வார்த்தை போடாதவரை, வாக்குவாதம் முற்றி கொதிப்பு உயராத வரை, விளிம்புக்கு சென்று கேள்வி கேட்டு, பதில்களைக் கோருகிறார்கள். 'வணக்கம் தமிழக'த்தில் சொற்பொழிவாற்ற விட்டு விட்டு, வேடிக்கை பார்த்துக் கொண்டு ரமேஷ் பிரபா, கையைக் கட்டிக் கொண்டு உட்கார்ந்திருப்பது போல் இல்லாமல், சுஜாதா விழாவுக்கு ஜெயமோகனும்; நவீன எழுத்தாளர் சபையில் 'ஏன் தலையை சுற்றுகிற மாதிரி எழுதினால் இலக்கியம்' என்று நக்கலுடன் சுஜாதா கேள்விக்கு தெளிவு பிறந்தாலும், சினிமா வாசகர்கள், புத்திலக்கியம் பக்கம் தலையை நீட்டுவார்கள்.


| |

5 கருத்துகள்:

ந்ல்ல முயற்சி பாலா!! கில்லியாக வென்றிட வாழ்த்துக்கள்.

கில்லி நன்றாக இருக்கிறது, நல்ல யோசனை. வாழ்த்துக்களும் நன்றியும்.

நன்றி சரவ் & ஸ்ரீகாந்த்

முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

கில்லி எவ்விதம் தினப்பதிவிலிருந்து மாறுபடும் ?
தினப்பதிவில் எதை எழுதினாலும் வரும்.
கில்லியில் அப்படியில்லை. சரிதானே ?

http://dinapadhivu.blogspot.com/

கில்லி » ஏன் கில்லி? பார்த்தீர்களா :-)

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு