வியாழன், பிப்ரவரி 09, 2006

வலையகங்கள் - ஆனந்த் சங்கரன்

சில மின் இதழ்கள் ஒரு பார்வை - ஆனந்த் சங்கரன்

தினகரன், தினமலர், தினத்தந்தி, தினபூமி,... விகடன், குமுதம், யாஹூ குழுமங்கள், மற்றும் 800க்கும் மேற்பட்ட வலைப்பதிவுகள், அதில் நடக்கும் சுவாரஸ்யமான விஷயங்கள், என படிக்க உட்கார்ந்தால் 24 மணி நேரம் பத்தாது.

விகடன், குமுதம் போன்று பெரிய நிறுவனங்கள் போல் இல்லாமல், வலைப்பதிவு போன்று தனியொரு மனிதனின் படைப்பாகவும் இல்லாமல் நடுவில் இருக்கும் மின் இதழ்கள் பற்றி ஒரு பார்வை. இந்த கட்டுரையில் வரும் மின் இதழ்களை, நடத்தும் நிர்வாகிகளை பற்றிய பரிச்சயம் எனக்கு உண்டு.

அவர்களுக்கு என்னை தெரியுமா தெரியாது, ஆனால் அவர்களை எனக்கு ஓர் அளவுக்கு தெரியும்.

மின் இதழ்களை ஒப்பிடும் என்னுடைய டேபிளை இணைத்துள்ளேன்


திண்ணை : கடந்த ஏழு வருடங்களாக சீராக ஆயிரகணக்கான வாசகர்களோடு வியாழன் தோறும் தடையில்லாமல் வெளிவருகிறது. யாஹு குழுமம், வலைப்பதிவு என்றெல்லாம் வருவதற்கு முன்பே பலவிதமான எழுத்தாளர்களை எழுத ஊக்குவித்தது / அறிமுகப்படுத்தியது என்ற பெருமையை தட்டிச்செல்கிறது. வாரம் தோறும் இருபதுக்கும் அதிகமான படைப்புகள், சிறிய / பெரிய படைப்பாளிகள் என்று வலம் வருகிறது. மேலும் முந்தைய படைப்புகளை சென்று படிக்க வழி வகுக்கிறது. முந்தைய இதழ்களை வார இதழாகவே படிக்க முடிந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். லாப நோக்கில்லாமல் என்று முதல் பக்கத்தில் இருக்கிறது. அதை மெய்பிக்கும் வகையில் தளத்தில் விளம்பரங்கள் எதுவும் கிடையாது. Anyindian திண்ணை நிர்வாகிகளின் மற்றொரு சேனல் என்பதால் அது மட்டும் இருக்கிறது.

குறைகள் என்று பார்த்தால் ஏற்கனவே பலருக்கும் தெரிந்ததுதான்,

  • எளிதாக படிக்ககூடிய எழுத்துரு கிடையாது.

  • கட்டுரைகள் சீராக வடிவமைக்கபடாமல் இருக்கும்.

  • தேடுவது சிரமம்

  • பல வருடம் பின் தங்கிய தொழில் நுட்பம்.



    திசைகள் : தமிழ் மக்களுக்கு அதிகம் பிரபலமான சன் டிவி / எழுத்தாளர் 'மாலன்' அவர்கள் கௌரவ ஆசிரியராக நடத்தி வரும் மின் இதழ். கடந்த மூன்று ஆண்டுகளாக மாதந்தோறும் வெளிவருகிறது. திண்ணை போல் அதிக படைப்புகள் இதில் கிடையாது. தேர்தெடுக்கப்பட்ட எழுத்தாளர்கள் என்று மாதந்தோறும் பதினைந்துக்கும் குறைவான படைப்புகள். யுனிகோடில் வெளிவந்த முதல் இதழ் என்று படித்ததாக நினைவு. முந்தைய படைப்புகளை படிப்பது சற்று சுலபம். மாதா மாதமாக சென்று படிக்கலாம். இதுவும் லாப நோக்கில்லாமல் நடத்தப்படும் ஒரு மின்னிதழ்.

    குறைகள் என்று பார்த்தால்

  • யுனிகோடு தவிர, பின் தங்கிய தொழில் நுட்பம்.

  • HTML லே-அவுட்டே இதில் சரியாக இல்லாததுதான்.



    தமிழோவியம் : தொழில்நுட்பத்தில் முன்னோடியாக இருக்கும் மின்னிதழ். நான்கு வருடங்களுக்கு மேலாக வெளிவருகிறது. தீபாவளி மலரை சிறப்பாக வெளியிடுவார்கள். அவ்வப்போது போட்டிகள் நடக்கும். Consistentஆக ஒரு சிலர் தொடர்ந்து எழுதுகிறார்கள். வலைப்பதிவுகளைப் போல மறுமொழிகள் இருப்பதால் படிப்பதற்கு ஆர்வத்தைத் தூண்டுகிறது. வாரம் தவறாமல் தமிழ்ப்பட விமர்சனம் இருக்கும். கருத்துப்படம் போல் வ...வம்பு ரசிப்பேன். ஜோதிடம் பார்த்து தருவது, ஈ-புக் விற்பது போன்ற வணிக சேவைகள் உண்டு.

    குறைகள் என்று பார்த்தால்

  • வெரைட்டியாக எதிர்பார்க்க வைக்காமல், ஒரே மாதிரியான சரக்கு வருவது.

  • வியாழன், வெள்ளி என்று அப்டேட் செய்து கொண்டிருந்தவர்கள், ஞாயிறு, திங்கள் என்று மாற்றிக் கொள்வது.

  • எது எங்கே இருக்கிறது என்று site map தெரியாமல், புதியவர்கள் கொஞ்சம் மிரளலாம்.



    நிலாச்சாரல் : "Nilacharal.com : Yet another website #@! No? So what’s special?" என்று அவர்கள் சொல்வது போல் இதை வெறும் மின்னிதழ் என்று வகைப்படுத்த முடியாது. இதில் அதையும் தாண்டி .. பல விஷயங்கள் உள்ளது. வார இதழ், ஷாப்பிங், வாழ்த்து அட்டை என இதில் அடக்கம். நிலாச்சாரல் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளிலும் படைப்புகளை வெளியிடுகிறது. இதில் தேடுவதற்கான வசதியும், முந்தைய வாரங்களை எளிதாக செல்ல வசதி இருக்கிறது.

    குறைகள் என்று பார்த்தால்

  • முகப்பில் எழுத்துரு மிகவும் சிறியதாக உள்ளது. நிறைய தொடுப்புகள் காட்ட வேண்டும், அதே சமயம் 800x600 திரையிலும் தெரிய வேண்டும் என்ற எண்ணமாக இருக்கலாம்.

  • புதிய தொழில் நுட்பங்கள் இருப்பது போல் தெரியவில்லை. (யுனிகோட்,செய்தியோடை, xml)



    அம்பலம் : இன்றைக்கு இருக்கும் பல மின்னிதழ்களுக்கு முன்னோடி என்று சொல்லலாம். பிரபல எழுத்தாளர் சுஜாதா அவர்கள் பொறுப்பேற்று நடத்தும் வார இதழ். விகடன் சென்ற ஆண்டு அமல்படுத்திய கட்டண சேவையை மூன்று ஆண்டுகளுக்கு முன்பே 'சிறப்பு அம்பலமாக' செய்த பெருமை இதற்கு உண்டு. சினிமா, சிறுவர், வாழ்த்துஅட்டை என சில பிரிவுகளும் உண்டு. சுஜாதா என்ற ஒரு மெகா ஸ்டாரை மட்டும் நம்பி இயங்கும் தளம்.

    குறைகள் என்று பார்த்தால்.

  • புதிய தொழில் நுட்பத்திற்கு மாறாமல் இருப்பது.

  • சிறப்பு அம்பலத்தில் [சுஜாதா அவர்களின் படைப்புகள் தவிர] படிப்பதற்கு பெரிதாக ஒன்றும் கிடையாது.



    ஆறாம்திணை : முன்பு சிறப்பாக இருந்த இணையதளங்களில் இதுவும் ஒன்று. தற்போது எப்படி என்று தெரியவில்லை. முழுவதும் காசு கொடுத்து படிக்க வேண்டும். முகப்பு பக்கத்தை பார்த்த வரையில், காசு கொடுத்து படிப்பதற்கான / சுண்டி இழுப்பதற்கான அறிகுறி இல்லை. தற்போது, தென்றலாக அமெரிக்காவில் ஆறாம்திணையின் சில பக்கங்கள் மட்டும் படிக்க கிடைக்கிறது.


    அப்புசாமி : பாக்யம் ராமசாமி அவர்களின் தளம். எப்பொழுது புதிப்பிக்கப் படுகிறது என்று சரியாகத் தெரியவில்லை. அந்தக்கால எழுத்தாளர்களின் விஷயங்கள் அபரிமிதமாகக் கிடைக்கும். நகைச்சுவை, சினிமா, நையாண்டி என்று ஜனரஞ்சகமாக இருக்கும். அப்புசாமி, சீதாப் பாட்டிக்காகவே தொடர்ச்சியாக போய் பார்ப்பேன்.

    Tamil E-zines Feature Comaprison - Anand Sankaran



    மின் மடலைப் படித்தவுடன் நானும் ஒரு அட்டவணைப் போட்டுப் பார்த்தேன். ஒரு 'டிக்' குறி ஓரளவுக்கு வசதி உண்டு என்பதையும்; மூன்று டிக் மார்க்குகள் பலமாக இருக்கிறது என்பதையும் குறிக்கும்.

  • பு.எ.பி. - புதிய எழுத்தாளர்களைப் பிரசுரித்தல்
  • வலையமைப்பு - வலையக வடிவம், எளிதில் கண்டுபிடிக்க, தேட, மேய முடிவது
  • வடிவம் - நிழற்படங்கள், புகைப்படங்கள், கிராஃபிக்ஸ் போன்றவற்றின் ஒரிஜினாலிடி

  • ஓரிஜினாலிடி - பிற வலைப்பதிவுகள், வெகுஜன ஊடகங்கள், வார சஞ்சிகைகள், நாளிதழ்களின் பிரதிபலிப்பு மற்றும் தாக்கம்
  • மறுமொழி - பின்னூட்ட வசதி
  • தரம் ரகம் - (Rating) தரவரிசைப் படுத்தும் வசதி

  • வகை - பிரிவு வாரியாக வகைப்படுத்துதல்
  • புரவலர் - தளத்தின் சில பகுதிகளை மற்றவருக்கு பயன்படுமாறு வேறு வலையகங்களில் சொருகும் வசதி (put a small amount of the site's content on an external site)
  • அந்தரங்கம் - Personalisation

    தவறுகளை, விடுபட்டவைகளை சுட்டவும். என் புரிதல் மாறுமானால், அட்டவணை திருத்தப்படும்.



    |

  • 9 கருத்துகள்:

    you have missed pathivukal.there may be more ezines if include webulagam , keetru etc.this is
    an useful and interesting exercise.
    in terms of technology some of them
    are in another century:). how many of them are readable in firefox.

    //முன்பு சிறப்பாக இருந்த இணையதளங்களில் இதுவும் ஒன்று. தற்போது எப்படி என்று தெரியவில்லை. முழுவதும் காசு கொடுத்து படிக்க வேண்டும். முகப்பு பக்கத்தை பார்த்த வரையில், காசு கொடுத்து படிப்பதற்கான / சுண்டி இழுப்பதற்கான அறிகுறி இல்லை
    //
    என் கணிப்பும் இதே...

    Yeah, missed out pathivukal. Will add it next time. As Ravi rightly said, this is a very useful exercise to see where these sites are going. 10 years down the line i dont know how many of these will survive. After the .com crash many similar websites went for a toss.

    Almost everything works in firefox. Except for thinnai.

    - Anand Sankaran

    Thx Ravi & Kuzhali. Will add the column for FF & the row for 'Pathivugal'.

    Webulagam, Thatstamil, Tamil-Sify etc are news zines with almost daily updates from various sources incl. agencies.

    நல்ல ஆய்வு. அடுத்த முறை எப்போ?

    Probably next year... yesterday was Web Content Awareness Day

    நல்ல ஆய்வு. நிறைகுறைகளைத் தெரிந்துகொள்ள வாய்ப்பளித்தது. நன்றி

    ஒரிஜினாலிடியை எதன் அடிப்படையில் கணித்தீர்கள் என்று விளக்கம் தந்தால் மகிழ்வேன் (I am not challenging your judgement. Like to know where to improve. Thanks)

    'Originality' is a quick call on my part thinking about 1) the variety, 2) influencing the streams, 3) being less reflective & more thoughtful, 4) path breaking analysis, & 5) citizen journalism, the user conducts original reporting instead of parroting MSM content

    charuonline.com - 'Konal Pakkangal' [by Charu Nivedita] is there for a long time. I wonder how it has been missed out in your list.

    கருத்துரையிடுக

    புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு