புதன், பிப்ரவரி 08, 2006

புதிய சலுகை - ஜெயா

அரசு ஊழியர்களுக்கு மட்டும் சலுகைகள் வருவதாக இன்று 'தேஸிகள்' என்று செல்லமாக அழைக்கப்படும் அமெரிக்க வாழ் என்.ஆர்.ஐ.க்கள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் புகார் கூறினர்.

அமெரிக்க தேஸிகளின் பத்திரிகைகளான 'லிட்டில் இந்தியா', 'தென்றல்', போன்ற மாத இதழ்களின் நிருபர்களை திடீரென்று அழைத்து சந்தித்த செல்வி. ஜெயலலிதா, "இணையத்தில் மட்டும் வம்பளந்தாலும், அமெரிக்கத் தமிழர்களையும் வாக்கு வங்கிகளாகத்தான் நான் பார்க்கிறேன். எனக்கு பாரபட்சம் கிடையாது. உங்களில் சிலர் தமிழகத் தேர்தலின் போது, இந்தியாவுக்கு வருகை புரிந்தாலும், வாக்களிப்பது கிடையாது என்பது எனக்குக் கவலையைத் தருகிறது. தாங்கள் எந்தக் கட்சிக்கும் வோட்டளிக்காமல் திரும்புவதற்கு மரணபயம் தவிர, வேறு எண்ணங்களும் இருக்கலாம் என்றே எனக்குத் தோன்றுகிறது" என்று ஆரம்பித்தார்.

தொடர்ந்து அமெரிக்கத் தமிழர்களுக்கு பல சலுகைகளை அறிவித்தார். அமெரிக்காவில் சம்பாதிப்பதற்கு ஓப்பான சம்பளம், பதினைந்து நாள் வரை ஈடாகாத் தரப் போவதாகக் கூறினார்.

"ஒரு நாள் சம்பளத்திற்கு கூட சபலப்படுபவர்கள் அவர்கள். தாங்க்ஸ்கிவிங் போன்ற தினங்களுக்காகக் காத்திருந்து வருகிறார்கள். தேர்தல் சமயத்தில் வருபவர்கள், சகாய விலையில் தாசில்தாரை (உரிய முறையில்) கவனித்துக் கையெழுத்து வாங்கி, 'விடுமுறைத் தேர்தல்' என்னும் படிவத்தை தகுந்த அன்பளிப்புடன் அதிமுக அலுவலகத்தில் சமர்ப்பித்தால், பத்து வருடங்களுக்குள், அவர்களின் விடுமுறை கால ஊதியம் திரும்பத் தரப்படும்" என்றார்.

இதைக் கேள்விப் பட்டவுடன் 'முரசொலி' நிருபர்கள் கலைஞர் கருணாநிதியிடம் விரைந்தார்கள். நாளைய சன் டீவியில் தன்னுடைய அறிக்கை வெளியாகும் என்று கலைஞர் சொன்னதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உங்களுக்காக நாளைய கலைஞரின் இன்றைய அறிக்கை:

"நான் என் வக்கீல்க்களைத் தொடர்பு கொண்டுள்ளேன்.அம்மையார் சோனியா காந்தியுடன் அளவளாவினேன். கூட்டணிக் கட்சிகளுடனும் சர்வ கட்சி மாநாடு போடவுள்ளேன். இந்த சலுகையை வளைகுடா நாட்டில் இருக்கும் தமிழருக்கும் கொடுக்காதது காலங்காலமாகத் தாழ்த்தப்பட்டோரை வஞ்சிப்பதைக் காட்டுவதாக இராமதாஸ் என்னுடன் தொலைபேசினார். என்னைப் பொறுத்தவரை கடாரம் சென்ற தமிழ்க்குடிமகனும் ஒன்றுதான். கலிங்கம் சென்று உழைக்கும் தேசியத் தமிழனும் ஒன்றுதான். அனைவருக்கும் இந்த சலுகை வேண்டுமென்று கொல்கதா முதல் க்யூபெக் வரைத் தமிழர்கள் போராடுவதாக எனக்குத் தகவல்கள் வந்து கொண்டிருக்கிறது.

நான் ஆட்சிக்கு வந்தால் 'விடுமுறை சந்தை' என்பதை புதிய நிகழ்ச்சியாக சன் டிவியில்ல் அறிமுகப்படுத்துவேன்." என்று முடித்துக் கொண்டார்.

சிகாகோவில் இருக்கும் வைகோ, அதிமுக-வின் புதுமையான அறிவிப்பை வரவேற்பதாக டெலக்ஸ் அனுப்பியுள்ளார்.

தொடர்புள்ள நிஜ அறிவிப்பு: சென்னைஆன்லைன்



|

2 கருத்துகள்:

இதுக் குறித்து பழுத்த அரசியல்வாதியும் மக்களுக்காக் மண்டபம் கொடுத்த தே.மு.தி.க தலைவர் விசயகாந்த், நேதாஜியின் மறு அவதாரம் அண்ணன் கார்த்திக், தமிழகத்தின் கலைந்தக் கேச சிங்கம் தாடி வைத்த சிங்கம் விசய டி ராசெந்தர் ஆகியோரின் அறிக்கைகளை இந்தப் பதிவில் இருட்டடிப்புச் செய்த பாஸ்டன் பாலாவிற்கு என் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதோடு அடுத்தப் பதிப்பில் அந்த அறிக்கைகளை வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி

உங்களுக்கு என்னுடைய பதில் அறிக்கை :P

---மக்களுக்காக மண்டபம் ---

பலுக்கப் பிழையைப் பாருங்க தேவ்... 'மகன்களுக்காக' என்பதைத் தவறாக எழுதிட்டீங்க ('தன் மக்களுக்காக' என்றும் தாங்கள் எழுத நினைத்திருக்கலாம் :-)

---நேதாஜியின் மறு அவதாரம் ---

மீண்டும் பிழையான தகவல் ;-)

'நேதாஜி' படத்தில் நடித்தவர் சரத்குமார். 'போஸ்' படத்தின் ஹீரோ ஸ்ரீகாந்த்.

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு