புதன், பிப்ரவரி 08, 2006

கிராம்மி விருதுகள் 2006

1. (பீட்டில்ஸ் புகழ்) பால் மெக்கார்ட்னி புத்தம்புதிய 'Chaos And Creation In The Backyard' தவிர தங்களுடைய குத்து ஸ்பெஷல் 'Helter Skelter' போட்டுத் தாக்கினார். வயதானாலும் சூப்பர் ஸ்டாரும் மெக்கார்ட்னியும் கலக்குறாங்கப்பா!

2. கற்பனைக்கு இடம் தராத 'Desperate Housewives' நட்சத்திரம், முன்னாள் சூப்பர் மேனின் காதலி டெரி ஹாட்சரின் ஆடை சலிப்பைத் தந்தது. 'வானிடி ஃபேரி'ன் அட்டைப்படம் போல் கற்பனைக்கு விடுவது உகந்தது. (அல்லது பரி-க்கு சுட்டி கொடுக்க வேண்டுமானால், கற்பனைகளுக்கு உகந்தன :-)
3. யூ-2வுக்குக் கொடுக்கும் விருதுகள் போதுமப்பா... கொஞ்சம் மிச்ச மீதிப் பேர்களையும் கவனியுங்க கிராம்மி :-((((((

4. குலுங்கிக் குலுங்கிப் பாடாமல், இறைவனைத் துதித்தார் மரியா கரே. தெய்வீக அனுபவம். இறைவி தரிசனைத்தைக் கொடுக்காமல் சம்ர்த்தாகப் பாடினார் க்ரிஸ்டினா அகிலெரா.

5. காமெடி நாய்கர் டேவ் சேப்பல் வந்தார். அமரிக்கையாக ரெண்டே ரெண்டு வார்த்தை சிரிக்க வைத்துவிட்டு ஓடிவிட்டார். அவர் இல்லாமல் காமெடி செண்ட்ரல் கன்னலே சகிக்கலே! சீக்கிரம் திரும்பு வந்து உய்வியுங்கள் சேப்பல்காரூ.


மிச்ச மீதி உருப்படியான விவரங்களுக்கு கிராம்மி என்று யாஹூவிலோ அல்லது யாஹூ வலையகத்திலோ தேடித் தெளியவும்.முன்குறிப்பு: இந்தப் பதிவில் கூகிள் எங்கும் சுட்டப்படவில்லை \:D/ யாஹூ என்னும் தாழ்த்தப்பட்ட நிரலியை இட ஒதுக்கீடாக உபயோகித்திருக்கிறேன்.3 கருத்துகள்:

ஆனாலும், City of Blinding Lights சிறந்த பாடல் தான். கொடுத்ததில் தவறில்லை எனலாம்.

ஸ்ருசல்

//யாஹூ என்னும் தாழ்த்தப்பட்ட நிரலியை இட ஒதுக்கீடாக உபயோகித்திருக்கிறேன்.
//

;-)

வருடா வருடம் சொல்லி சொல்லி அடிக்கிறாங்களே என்னும் பொறாமைதான் ஸ்ருசல் :-)

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு