செவ்வாய், மார்ச் 14, 2006

Four Stuff

நான் அஞ்ஞாதவாசம் இருந்தப்ப துபாய்வாசி அழைத்தார். இப்ப கேவியாரும் கூவுகிறார்.

தலை பத்து கணக்கா, தலை நாலு சொல்லச் சொல்றாங்க...


நான்கு வசிப்பிடம்:
முதன் முதலாக இந்தக் கேள்விக்கு அமெரிக்கன் விசாவை நிரப்பும்போதுதான் யோசித்தேன். இவ்வளவு நாடோடியா இருக்கிறேனே என்று சந்தோஷமாக இருந்தது.

1. +2 முடிகிற வரைக்கும் வீடு/பள்ளிக்கூடம் இருந்த சென்னை மைலாப்பூர். +1 சேர்ந்த பிறகுதான் மைலாப்பூரைத் தவிர சென்னையில் வேறு சில இடங்களும் இருக்கிறது என்று அறியப்பெற்றேன். அப்போதைய திமுக மந்திரிகள் சாதிக் பாட்சா மற்றும் பொன். முத்துராமலிங்கத்தின் மகன்கள் பள்ளியில் சேர்ந்ததும் இரு வருடங்களை கொஞ்சம் வேகமாக நகர்த்தியது.

2. டெல்லி: கொஞ்ச காலம்தான் இருக்கப் போகிறோம் என்று தெரிந்தே ரசித்த ஊர். சென்னைக்கு மாற்றாக உயர்தர சாலைகள், பொழுதுபோக்கு அம்சங்கள், இயல்பாக நட்பு பாராட்டும் எதிர்பாலார் கொண்டவை. சென்னையைப் போலவே மோசமான பேருந்து வசதி. சென்னையில் இருக்கும் பத்து மணி நைட் ஷோ சுதந்திரம், இளைப்பாற கடற்கரை, பயமற்ற நகர்வலம் போன்றவை மிஸ்ஸிங்.

3. பெங்களூர்: துள்ளலான நகரம். டெல்லியின் நுகர்வோர் முகத்தையும் சென்னையின் தளர்ச்சியான போக்கையும் தன்னுடைய ஸ்டைலில் கலந்துகட்டி best of both worlds கொண்டது.

4. பாஸ்டன்: ரொம்ப காலம் வசித்ததால் கொஞ்சம் போரடித்து நிறையப் பழகிப் போயிருக்கிறது.



நான்கு அரசியல்வாதி:
1. விஜயகாந்த்: இறந்து போனவர்களை நான் நினைவு கூர்வதை விட இருந்து சாதிப்பேன் என்று நம்பிக்கையாகப் பேசும் இவரை நம்புகிறேன். வரப் போகும் கூட்டணி ஆட்சிகளுக்கு ஏற்றவர். பெண்களை வேட்பாளராக்குவதில் முக்கியத்துவம்; வித்தியாசமாக செய்யவேண்டும் என்னும் துடிப்பு; நடித்து சம்பாதித்ததை அரசியலில் விட்ட முன்னோடிகள் இருந்தும், தைரியமாக களத்தில் குதிப்பு; ரஜினி மாதிரி பொதுமகனாக இல்லாமல் தலைமகனாக வேண்டும்.

2. ஸ்டாலின்: திட்டம் தீட்டுறேன்; அடிப்படை வசதியைப் பெருக்குகிறேன் என்று ஜல்லியடிக்காமல், திறம்பட சென்னை மேயராக செயல்பட்டவர். கலைஞருக்கு மகனாக இருப்பதினாலேயே கிடைக்கும் எதிர்மறை விமர்சனங்களை நேர்த்தியாக எதிர் கொள்பவர்.

3. தயாநிதி மாறன்: வாரிசு என்பதால்தான் இந்த இடத்தில் இருக்கிறேன் என்பதைத் தயங்காமல் ஒத்துக் கொண்டு, அதை மீறி, தன்னுடைய தொலைநோக்கு திட்டங்களினாலும் ஆர்வத்தினாலும் வீரியமாய் முக்கியமான மந்திரியாக விளங்குகிறார். சன் டிவி பேட்டியில் இயல்பான பேச்சு; அரசியல்தனமற்ற உரையாடல்; போலிகளற்ற வெளிப்பாடுகள் மூலம் பெரிதும் கவர்ந்தார்.

4. சோ: மார்க்ஸிஸம், பெரியாரியம், காந்தீயம் என்பது போல் இணையத்தில் சோத்தனம் என்று சொல்லுமளவு தனக்கென நடை, எவரையும் உரசிப் பார்க்கும், உறுத்தும் விமர்சனங்கள் வைப்பவர். நக்கீரன், நெற்றிக்கண் என்று புதிய தலைமுறை பத்திரிகைகள் வந்தாலும் துக்ளக்கை இன்னும் தாக்குப்பிடிக்க வைப்பது. Provocative & incisive.



நான்கு படம்:
1. ஜோ ஜீதா வஹி சிக்கந்தர்: பதின்மப் பருவத்தில் பார்த்த காதல் படம். 'வள்ளி' பாணியில் சொல்வதானால் 'உன்னை யாரைக் காதலிக்கிறாங்களோ, அவளைக் காதலி!' இதன் உல்டாவாக வந்த 'பத்ரி' ரசிக்கவில்லை. இந்தப் படத்துக்காகவே இன்றளவும் ஆயிஷா ஜூல்காவின் விசிறி.

2. பொய்க்கால் குதிரை: பாலச்சந்தரின் நிறையப் படங்கள் அழுது வடிய கிரேசியாய் சிரிக்க வைத்த படம். அதன்பிறகு இதே பாணியில் வந்த 'அரிச்சந்திரா'வும் நல்ல உல்டா.

3. இன்று போய் நாளை வா: 'இதயம் பேசுகிறது'வில் பாக்கியராஜ் தன்னுடைய கதையை எழுதும்போது இதில் நடந்த பல சம்பவங்களை சொல்லியிருப்பார். படத்தைப் பாராட்டினால் 'ஈவ் டீஸிங்' என்று ப்ளாங்க் நாய்ஸ் ப்ராஜெக்டில் ப்ராக்கெட் போடப்படும் அபாயம் இருக்கிறது.

4. திருவிளையாடல்: தருமியின் கேள்வி பதில்; பாடல் போட்டிக்கு பயம்; சிதறலான சம்பவங்களைக் கோர்த்து படத்தின் பகுதிகளைப் பார்த்தாலும் சேனல் மாற்றாமல் தொடர வைக்கும். ஷார்ப் வசனங்கள். இன்று இந்த மாதிரி மூட நம்பிக்கைகளைப் பாராட்டாமல் ஆனால் தத்துவ விசாரத்தைக் கோரும் ஆன்மிகப் படங்கள் வராதது இன்னொரு காரணம்.



நான்கு உணவு:
1. கோபி/சிக்கன் மன்சூரியன்: அமெரிக்காவின் சீன உணவகங்களில் கிடைக்காத பதார்த்தம். சில தென்னிந்திய இடங்களில் மட்டுமே நாவில் நிற்கும் தனிச்சுவையுடன் கொறிக்க விடுகிறார்கள்.

2. ஸ்பினாஷ் க்ரொய்ஸாண்ட்: கிட்டத்தட்ட கீரை வடை போல் டேஸ்ட். ஆனால், நடுநடுவே வெண்ணெய் நீக்கமற நிறைந்திருக்கும். எண்ணெயில் பொரிக்காமால் bake செய்யப்படுவதால் 'சத்து' என்னும் பிம்பம் உண்டு.

3. மோர்க்குழம்பு: காரமும் உண்டு; தயிர்ச்சுவையும் உண்டு; பூசணிக்காய், வறுத்த வெண்டை, சுண்டக்காய் என்று விதவிதமான காய்கறிகள்.

4. ஹாஷ் ப்ரௌன்ஸ்: உருளை போண்டா மாதிரியான பதார்த்தம்தான். காலைப்பசியில் மெக்டோனால்ட்/பர்கர் கிங் சென்று வாங்கி விண்டு வயிற்றுக்கு செல்லும்போது 'கொண்டா... கொண்டா...' சொல்லும்.


நான்கு தொலைக்காட்சி நிகழ்ச்சி:
1. பாஸ்டன் லீகல்: நிறைய சட்டநுட்பங்களை சாமானியனும் அறியுமாறு எளிமையாகத் தரும்விதம். பார்வையாளனை புத்திசாலியாகக் கருதி காட்சிகளை நகர்த்தும் வேகம். இவற்றுடன் துளி காதல்; துளி பாசம்; துளி செண்டிமெண்ட்.

2. முதல் பயணம் (கே டிவி): அதிகம் பிரபலமில்லாதவர்களை அறிய முடிகிறது. திரைக்குப் பின் பணிபரியும் டப்பிங் கலைஞர்கள், ஒளி ஓவியர்கள், பாடகிகள், துண்டு கதாபாத்திரங்கள் எடுப்பவர்களைப் பேட்டி காண்கிறார்கள். கிட்டத்தட்ட 'நூற்றுக்கு நூறு' என்னும் நிகழ்ச்சியும் இதே காரணங்களுக்காக விருப்பமானது. (பேட்டி எடுக்கும்போது தேவதர்ஷினி இடையூறாக தடைப்படுத்துவதுதான் ஒரே படுத்தல்.)

3. நினைவுகள் (சன் டிவி): அம்மு. (நடுநடுவே ஏதோவொரு திரைப்படத்தையும் காட்டுவார்கள் என்று ஞாபகம்.)

4. வெஸ்ட் விங்: அமெரிக்க அரசியலை தடாலடியாகப் புரிய உதவுகிறது. ஜிவ்வென்று சீட் நுனிக்குத் தள்ளும் உலகப் போராட்டங்கள்; ஆள்பவர்களின் மனக் குமுறல்கள்; மேலிடத்து பதவி விளையாட்டுக்கள்.


நான்கு வலையகம்:
1. ஜஸ்ட் சமாச்சார்: நோ நான்சென்ஸ்; ஒன்லி நியூஸ்

2. இன்றைய சிறந்தக் கருத்துப்படங்கள்:மாரடைப்பு கொடுக்கவைக்கும் அன்றாட நிகழ்வுகளை நகைச்சுவையாகப் பகிடி செய்கிறார்கள்.

3. தேன்கூடு: வரிசைக்கிரமமாக படிக்கமுடிகிறது. எங்கு வரைக்கும் படித்தோம் என்பதை அறிந்து விட்ட பதிவில் இருந்து மேய முடிகிறது. அதிகம் பார்வையிட்ட பதிவுகளைத் தவறவிடாமல் காட்டுகிறது. பின் எப்பொழுதோ நிதானமாகப் போக வேண்டிய பதிவுகளை சேமிக்க முடிகிறது.

4. டெக்னோரட்டி: இணையத்தில் என்ன நடக்கிறது? என்ன பேசிக் கொள்கிறார்கள்?


அடுத்து அழைக்க விரும்பும் நால்வர்:
இதைப் படிக்கும் முதல் நான்கு பேரை அழைக்கிறேன். எனக்கொரு லிங்க் கொடுத்தால் தன்யனாவேன். முன்கூட்டிய நன்றி :-)




| |

11 கருத்துகள்:

பாஸ்டனா இல்லை நியுஹாம்ஷையரா ?

சோ எப்போ அரசியல்வாதி ஆனார் ? அவர் அரசியல் விமர்சகர்தானே ? உடனே ராஜ்யசபான்னு கதை வேணாம்.

அரசியல்வாதிக்கும், அரசியல் விமர்சகர்களுக்கும் நிறைய வித்தியாசம் உண்டு.

மேலும் அரசியல்வாதி பட்டியலில் முதலில் கேப்டனா ? அவர் [கட்சி தொடங்கியதை தவிர] இன்னும் ஒன்னும் செய்யலியே. இது உங்கள் விருப்ப பட்டியல் என்றாலும் 800 பேர் படிக்கிற சபைக்கு வந்துடுச்சுல அப்போ நாங்க கருத்து சொல்லித்தானே ஆவனும்.

// நான்கு தொலைக்காட்சி நிகழ்ச்சி:

ஏதோ 'off beat'ஆ சொல்லனுன்னு சொன்ன மாதிரி இருக்குது. ஈதமிழ் பதிவுல வர்ற மேட்டருக்கு சம்பந்தமே இல்லை. எனக்கென்னவோ 'மிட் நைட் மசாலா' பார்கறதை சொல்லலையோன்னு தோணுது.

// நான்கு வலையகம்:

கூகிளை காணோமே உம்ம கணிணியில பூச்சி வர்ற, காத்து கருப்பு புடிச்சுக்க. அதேபோல் தமிழ்மணத்தையும் காணுமே.

சரி இதுக்கு மேல போட்டு கிண்ட வேணாம்.

உங்க நாலு பதிவு நல்லாருக்கு..
எனக்கு Law and Order ரெம்ப பிடிக்கும்.
Boston legal ஸ்ப்பீடு ரெம்ப ஜாஸ்தி.

சிறில்,
வேறொரு நண்பருடன் முன்பு பேசும்போது 'எனக்கு The Practice, Boston Legal-தான் Law & Order, CSI-ஐ விடப் பிடித்திருக்கிறது' என்றவுடன் இரண்டு காரணங்களை முன்வைத்தார்.

1. உனக்கு குற்றவாளிகள் தப்பித்து செல்வது பிடித்திருக்கிறது. எனக்கு 'சட்டம் தன் கடமையை செய்யும்' என்பதில் நம்பிக்கை வைப்பதால் 'அரசுத்தரப்பு' வெல்லும் லா அண்ட் ஆர்டர் பிடிச்சிருக்கு.

2. ஒரு விஷயத்தை/குற்றத்தை/கேஸை எடுத்துக் கொண்டு பல கோணங்களில் ஆய்வதை விட, பல விஷயத்தை ஒரே சமயத்தில் பார்ப்பது உனக்கு விருப்பமாக இருக்கலாம் என்றார்.

அதற்குப் பிறகு அவரிடம் 'பிடிச்சிருக்கு' என்று சொல்வதற்கு முன் கொஞ்சம் உளவியலாய் யோசித்து விட்டுதான் பேசுகிறேன் ;-)) (என்னோட மனைவிக்கு அனைத்து லா & ஆர்டரும் வெகு விருப்பம்... சில சமயம் பார்ப்பதுண்டு)

---எனக்கென்னவோ 'மிட் நைட் மசாலா' பார்கறதை சொல்லலையோன்னு ---
---தமிழ்மணத்தையும் காணுமே---

பார்க்கிற எல்லா நிகழ்ச்சியுமா (செல்கின்ற எல்லா வலையகமுமா) சொல்ல முடியும்? :P (ரொம்ப பிடித்தமான நான்கு மட்டுமே அடுக்கறேன்)

---கூகிளை காணோமே ---

கருவிப்பட்டி மட்டுமே கூகிளில் போதுமானது. நான் தேடுவதற்கு விடைகள் 'கூகிள்' பக்கத்தில்தானே வருகிறது என்று சொல்லலாம்... ஆனால், ஒவ்வொரு விடைக்கும் தனித்தனி உரல் இருக்கிறதே. மேலும் தினசரி 'தேடிக்கொண்டா' இருக்கிறோம்?

அஹா நீங்க இப்பிடியும் (!)எழுதுவீங்கன்னு தெரியாமப் போச்சே.

உங்களை நாலு பதிவுல லிங்க்கா கொடுத்திருப்பேனே.

:)))

§¸Å¢Ã¡ƒ¡ þýÛÁ¡ ¯Â¢§Ã¡¼ þÕ측÷?

---இப்பிடியும் (!)எழுதுவீங்கன்னு---

இப்படி போட்டுத் தாக்கறீங்களே தல :-)

---கேவிராஜா இன்னுமா உயிரோட இருக்கார்?---

இன்னும் எந்த 'உயிரில்' இருக்கிறார் என்று (என்னைக்) கேட்காத வரைக்கும் சரிதான் ;-)

//ஜோ ஜீதா வஹி சிக்கந்தர்: பதின்மப் பருவத்தில் பார்த்த காதல் படம். 'வள்ளி' பாணியில் சொல்வதானால்

Pahela nashaa paatu engey kidaikkum thalai?

நானும் எழுதிட்டேனுங்கோ. நன்றி.

http://thavam.blogspot.com/2006/03/blog-post.html

லேட்டா வந்தாலும், லேட்டஸ்டா வந்திருக்கீங்க பாலா!

மிகவும் வித்தியாசமாக எழுதியிருக்கிறீர்கள், வாழ்த்துக்கள்.

என்ன இருந்தாலும் நான் 'tag' செய்த ஆள் இல்லையா? ;)

'பெஹ்லா நஷா' என்னிடம் ஒலிவட்டில் இருக்கிறது. எம்.பி3 ஆக மாற்றி அனுப்புகிறேன்.

மீனாக்ஸ்... ஸ்பெஷல் நன்றிங்க.

---என்ன இருந்தாலும் நான் 'tag' செய்த ஆள் ---

அதே... அதுதான் மேட்டர் ;-)

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு