வியாழன், மார்ச் 02, 2006

Madras Engg College Protests

நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் வேண்டாமா? | எஸ்.ஆர்.எம் கல்லூரி ரகளை | Dreamchaser's Blog | SRM Engineering College Under ATTACK!

மாணவர்களை நினைத்தால் சந்தோஷமாக இருக்கிறது. அணி திரண்டிருக்கிறார்கள். ஆதிக்க சக்திகளை தூக்கியெறிந்திருக்கிறார்கள். அநியாயத்துக்கு எதிராக குரல் எழுப்பியிருக்கிறார்கள். எஸ்.ஆர்.எம். அனுப்பிய அடியாட்களையே மிரள வைத்திருக்கிறார்கள்.

மணி ரத்னம் கூட நம்பும்படியாகத்தான் படம் எடுத்திருக்கிறார். 'இரமணா', 'ஜெண்டில்மேன்' போன்ற எழுச்சிப் பட கிளைமேக்ஸ்கள் கூட நிஜத்தில் சாத்தியமே.

எம்.ஜி.ஆர். கல்லூரி மாணவர்கள்தான் முதலில் தட்டிக் கேட்டிருக்கிறார்கள் (கல்லூரி மாணவன் சொன்னபடி). ஏற்கனவே கூவம் ஆக்கிரமிப்பால் இடிபாடுகளுக்கிடையில் கல்லூரிக்கு சென்று வந்தவர்கள். (என்னுடைய முந்தைய பதிவு).

பி.ஈ. கிடைக்காது. பி.எஸ்சி.தான் தருவார்கள் என்றவுடன் கையில்க கிடைத்ததை வைத்துத் கண்ணில் பட்டதையெல்லாம் தாக்கியிருக்கிறார்கள்.

விஷயம் பரவி 'பாரத் என்ஜினீயரிங்' கல்லூரிக்கு சென்றிருக்கிறது. பிரச்சினையை சுமூகமாக அணுகி, கரிசனத்துடன் பார்த்தவர்கள் இந்த மாணவர்கள் மட்டும்தான்.

அடுத்த நியூஸ் எஸ்.ஆர்.எம். அடைந்திருக்கிறது.

பக்கத்தில் இருக்கும் நெடுஞ்சாலை உயர்தர உணவகத்தை ரணகளமாக்கியிருக்கிறார்கள். கம்ப்யூட்டரை அப்படியே திருடாமல், உடைத்து விட்டு, பார்ட் பார்ட்டாக பிரித்து, சி.பி.யூ., மௌஸ், கீ-போர்ட், ராம், சவுண்ட் கார்ட் என்று அக்குவேறாக கடத்தியிருக்கிறார்கள்.

அந்தப் பகுதியிலிருந்து பாரிமுனை வருவதற்கு நண்பர் ஒருவர் 800 ரூபாய் கொடுக்க வேண்டிய அளவு ஆட்டோக்காரர்களுக்கும் அமர்க்களமான வருமானம்.

'சத்யபாமா'வில் போர் முரசு கொட்டியவுடன் விழித்துக் கொண்ட மேனேஜ்மெண்ட், மாணவர்களின் +2 மார்க் ஷீட்களை கிழித்தெறிந்திருக்கிறது. அனேகருக்கு நம்முடைய ஒரிஜினல்களும் கிழிபடுமோ என்ற பயத்தில் அடங்கினாலும், கல்லூரி பஸ்கள் எல்லாம் பலத்த சேதம்.

நியாயம் கேட்க போன காஞ்சிபுரம் சங்கரா பொறியியல் கல்லூரியின் கூட்டத்தில் நசுங்கி மிதிபட்டு மாணவன் ஒருவன் இறந்திருக்கிறான்.

அம்ருதானந்தமயி, வேலூரி இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜி என்று இன்னும் சிலர் அமைதி காக்கிறார்கள்.

ஒரு ஸீட் வாங்க இரண்டு லட்சம் ரூபாய் கேட்டுப் பெறுகிறார்கள். கணினிப் பொறியியல் கேட்காமல் இரண்டாம் தர நிலையில் உள்ள எலெக்ட்ரிகல், எலெக்ட்ரானிக்ஸுக்கு ஒன்றரை லட்சம் என நிர்ணயித்திருக்கிறார்கள்.

கிரெஸெண்ட், வேல்டெக், வெங்கடேஸ்வரா போன்ற பெருசுகள் இன்னும் 'அண்ணா பல்கலைக்கழக'த்துடன் இணைந்திருக்கிறார்கள். தொலைநோக்குடன் தனிவழியாக செல்லாமல் கூட்டுக் குடும்பத்தில் நிம்மதியான வாழ்க்கை.

இட ஒதுக்கீடுகளினால் சீட்டே கிடைக்கவில்லை என்பது புராணமாக மாறி, 'அண்ணா பல்கலை'யுடன் இணைந்த கல்லூரிகளில் பல இடங்கள் காலியாக இருக்கிறது. இருந்தாலும், எம்ஜியார், எஸ்ஸாரெம், சங்கரா என்று லட்சம் கொடுத்து, கோடிக் கணக்குகளிலும் மண் விழுந்ததாகவே மாணவர்கள் நினைக்கிறார்கள்.

தன்னம்பிக்கை என்பதெல்லாம் காணாமல் போயிருக்கிறது. க்ரூப் டிஸ்கஷனில் வெற்றி பெறுவதற்கும், ஆப்டிடியூட் போட்டிகளில் தேர்வாவதற்கும் பிஈ-யாக இருந்தல் என்ன்? பி.டெக். ஆக இருந்தால் என்ன? பி.எஸ்சி.யாக இருந்தால் என்ன?

இந்த மாதிரி திறமையுடன் ஆசிட் பாட்டில் வீசுவது எல்லாம் அரசியலுக்கு வந்தால் பயன்படும். இப்படிப்பட்ட 'கூட்ட' மனப்பான்மையுடன் ரகளை செய்வது கட்சி ஆரம்பித்தால், திராவிட பாரம்பரியத்தைக் கட்டிக் காக்கும்.

ஆனால், சொந்தக் கல்லூரியின் பஸ்ஸையும், தினசரி பயன்படுத்தி வித்தை கற்கும் கணினிகளையும் உடைப்பதனால் யாருக்கு லாபம்?

வெளியூருக்கு சென்று 'நான் சத்யபாமாவில் படித்தேன்'/'நான் எம்.ஜி.ஆரில் என்ஜினியரிங் கற்றேன்' என்றால் இனி எல்லாருக்கும் தெரிந்திருக்கும். 'ஓ... கம்ப்யூட்டர் லேப் எல்லாம் அடிச்சு உடைச்சீங்களே? அந்த காலேஜ்தானே...' என எளிதாக அறியுமாறு விசிட்டிங் கார்ட் செய்திருக்கிறார்கள்.

தான் நினைத்தால், தங்கள் படை சேர்ந்தால் அழிச்சாட்டியம் செய்யலாம் என்னும் தைரியத்தை சினிமாவும் சமூகமும் சேர்ந்து இவர்களுக்கு தோன்ற வைத்திருக்கிறது.

வருகிற தேர்தலில் கட்சி ஆரம்பித்து, கன்ஸ்ட்ரக்டிவ் ஆக மாற்ற தலைவர்தான் எவரும் இல்லை.




| |

3 கருத்துகள்:

இவர்கள் கல்லூரியில் மாணவர் சங்கம் அமைப்பது, அவர்கள் தேர்தல் நடைமுறை பற்றியும் ஒரு கருத்துக்கணிப்பு நடக்கிறதாம்.

:))

அப்படியா... கல்லூரி தேர்தல்களில் ஜெயிப்பது எளிதாச்சே :P

வர்க்கப் பிரிவினை : "கல்லூரியில் உள்ள பிரச்சினைகள் அலுவலகப் பிரச்சினைகளிலிருந்து மாறுபட்ட ஒன்று. கல்லூரியில் மாணவர் பணம் கட்டுகிறார். அந்த பங்களிப்பில் உரிமையாகக் கேட்கிறார். அலுவலகத்தில் பணியாளர் உழைப்பைத் தருகிறார். அந்த பங்களிப்பில் உரிமையைக் கேட்கிறார்.
கடமையைச் செய்வதும் உரிமையைக் கேட்பதும் ஒன்றுக்கொன்று தொடர்பான ஒன்று.

கல்லூரி மாணவர் உறவையும், அலுவலகம் பணியாளர் உறவையும் தொழிலுறவாகப் பாவித்தால், இந்த உறவுக்கு வழிகாட்டியாக இரண்டு சிந்தனைகள் இந்தியாவில் உள்ளன. அவை மார்க்சீய சிந்தனை. மற்றது காந்தீய சிந்தனை.

மார்க்சீய சிந்தனை போராட்டத்தையும், பலாத்காரத்தையும், சர்வாதிகாரத்தையும் வழிமுறையாக நம்பி இயங்குகிறது.இச்சிந்தனை இரு வேறுபட்ட வர்க்க நலன்களுக்கு இடையே உருவாகும் மோதலை அடிப்படையாகக் கொண்டது."

http://www.thehindu.com/2006/02/14/stories/2006021416270400.htm

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு