வெள்ளி, ஏப்ரல் 28, 2006

Tips on 'How to' Advice

துப்பு கொடுக்க பத்து துப்புகள்


  1. பத்து துப்புகள் வழங்குவது சிறப்பு; 10+கொசுறு, ஒன்பது கட்டளை, எட்டு எட்டா மனுசன் வாழ்வைப் பிரிச்சுக்கோ என்று துப்பினால் சாலச் சிறப்பு. (காட்டாக, ஜெயலலிதாவுக்காக எழுதினால் 9, சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு வழங்கினால் 13).

  2. உங்களால் வழங்கப்படும் துப்புகளை, நீங்கள் கடைபிடிக்காமல் இருப்பது சிறப்பைத் தரும். (காட்டாக, கண்ணியமாக எழுத ஆலோசனை கொடுக்கும்போது, பயன்படுத்தக் கூடாத சுடுசொற்கள் என்று ஒரு துப்பு கொடுக்கவும்).

  3. பொத்தாம்பொதுவாக வலைப்பதிவருக்கு டிப்ஸ் என்பதைவிட, பெயர் போட்டு குறிப்பிட்ட வலைப்பதிவருக்கு டிப்ஸ் என்றால், ஏழு வாசகர்களே மீண்டும் மீண்டும் துப்பைப் படிக்க ஓடோடி வருவார்கள். (பல வலைப்பதிவர்கள் ஏற்கனவே இதை சிறப்பாக அனுசரிப்பதால் எடுத்துக்காட்டுக்கே வேலையில்லை).

  4. துப்புக்கு எதிர்துப்பு வழங்குமாறு துப்புகளைத் தொடுக்கவும். (காட்டாக சென்ற புல்லட்டில், 'ஏழு' வாசகர் யார், எந்த வலைப்பதிவர்கள் சகாக்களுக்கு தலைப்பு அந்தஸ்து கொடுக்கிறார்கள் என்று சொல்ல முடியுமா என்னும் அனானி கேள்வி எழவைக்கவும்).

  5. எந்தத் துப்பு வழங்கினாலும், தொழில் நுட்ப சங்கதிகள் ஒன்றிரண்டை சொருகி விடவும். (காட்டாக, கவிதை நன்றாக அமைய முரசு அஞ்சலைக் கொண்டு தட்டச்சவும்.)

  6. மறுப்புக்கூற்றுகள் இல்லாமல் துப்புகள் கொடுக்காதீர்கள். (காட்டாக, என்னுடைய துப்புகள் அவார்டு படம் பார்க்கிற மாதிரி என்ன சொல்லவருகிறது என்று புரியவில்லை போல் தோன்றினால் அது சிறுவனின் அறியாமுயற்சி என்று விட்டுவிடவும்).

  7. மன விகாரங்களை ஆலோசனகளாக எழுத்தில் வடிக்காமல், உங்கள் நோட்பேடில் எழுதிக் கிழித்து விடல் அல்லது கடாசிவிட்டு 'குப்பைத் தொட்டி'யையும் காலியாக்கி (சந்தேகமாக இருந்தால்) கடின இயக்கியை (hard-drive) format-உம் செய்துவிடல் நலம்.

  8. சிறுகதை இலக்கணம் என்று பாரா சொல்பவற்றில் சில துப்பு விநியோகிகளுக்கும் பொருந்தும்.

  9. யார் யாரோ சொன்னதன் தொகுப்பாக இருந்தால் மூலங்களை குறிப்பிட்டு திரட்டு என்று சொல்லிவிடவும் அல்லது திருட்டு தர்ம அடி கிடைக்கும்.

  10. இலவசமாக எளிதாக வழங்கக் கூடியது அட்வைஸ்தான். எனவே, பதிவெழுத விஷயம் இல்லாவிட்டால் 'டிப்ஸ்' பதிவு இடவும். (காட்டாக, எந்த விஷயத்திற்கு துப்பு தருவது என்று விளங்காவிட்டால், துப்பு கொடுக்க துப்புகள் கொடுக்கவும்).





| |

2 கருத்துகள்:

இந்தப் பதிவிற்கு ஏற்றதொரு திருக்குறள் இருக்கிறது, சட்டென்று நினைவுக்கு வரமாட்டேன் என்கிறது...

:-)

Hello Boston bala, your blog is simply amazing.

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு