Top 10 Tamil Blogs on Election
சில தேர்தல்களில் சில வலைப்பதிவுகள்
2006 தேர்தலில் முக்கிய தமிழ் வலைப்பதிவுகள் எவ்வாறு செயல்பட்டன, எவ்விதம் செய்திகளை வழங்கின, எவ்வளவு பயன்பட்டன, எங்ஙனம் முக்கியமானது?
- இட்லி-வடை: அலுவல் சம்பந்தமான க்ளையண்ட் விசிட்டில் தமிழ் நண்பரை முதன்முதலாக சந்தித்தேன். வழக்கமான வானிலை, போக்குவரத்து உசாவலுக்குப் பின் தமிழகத் தேர்தல் குறித்து பேச்சு திரும்பியது. என்னுடைய வலைப்பதிவு(கள்) குறித்தும் சிறிது கோடிட்டேன். 'எனக்கு இந்த ப்ளாக் எல்லாம் தெரியாது... இண்ட்ரெஸ்ட் கிடையாது. நீங்க இட்லி-வடை வெப்சைட் படிப்பது உண்டா?' என்று பேச்சை முடித்துக் கொண்டார்.
தேர்தல் 2006-இல் தமிழ்ப்பதிவுகளின் வலைத்துடிப்பு. - தேர்தல் செய்தி கண்காணிப்பு 2006: படபடக்கும் இள ரத்தத்தை முறை செய்து சீராக்க வழிகாட்டி இல்லாமல் காட்டாறாக கோபமான பதிவுகள். தினகரன், தினமலர், தினமணி என்று மூன்று நாளிதழ்களைப் போட்டுத் தாக்காமல் ஒரு பதிவு கூட வெளிவராது. தொட்டுக் கொள்ள தினத்தந்தி, குங்குமம் என்று வேறு சிலவும் மாட்டும். அக்கறை தென்படும் என்றாலும் அலசலும் இல்லாமல் விஷயம் மட்டுமும் இல்லாமல் half-baked analysis.
மாணவர் குழாமில் அங்கத்தினர் நிறைய இருந்தாலும், அனைத்துப் பதிவுகளும், ஒரே தரத்தை ஒத்து இருப்பதாக பார்த்துக் கொண்டார்கள். வார்ப்புருவில் அச்செடுக்கப்பட்ட எண்ணங்களை தெளிவாக்கி, வலைப்பதிவுக்கேத் தேவையான லாவகத்துடன் வழங்கியிருந்தால் #1. - Hot machi hot: தமிழ்மணத்திலும் பட்டியலிடப்படாமல், சில நாளுக்கு முன்தான் புத்தம் புதியதாகத் துவங்கினாலும் பரவலான கவனிப்பைப் பெற்றுக்கொண்டது. பல பங்களிப்பார்கள் இருப்பதால் கன்ஸிஸ்டென்ஸி கிடைக்கவில்லை. இணையத்திற்கேற்ற ஆங்கிலம் + தமிழ் கலந்த துள்ளலான பதிவுகள். சுயமாய தயாரித்த சரக்கை சுவையாய் கொடுக்கிறார்கள்.
- தமிழகத் தேர்தல் 2006: அமெரிக்கா, சிங்கப்பூர், கனடா (யாரு?) என்று உலகெங்கும் உள்ள சின்னத் திரைகளில் தேர்தல் கோலங்கள் கொடுப்பது எங்கள் 'தேர்தல் 2006'. கூகிள் ஆதரவினால் சி.என்.என்., வெகுஜன ஊடகங்கள் என்று உலா வருகிறது. சில சமயம் 'சுரதா'வினால் வெட்டி/ஒட்டப்பட்ட பத்திரிகை, நாளிதழ் செய்திகள், சிறு நக்கல்கள், வெகு அரிதாக ஒரிஜினல் கருத்துக்கள் தாங்கி வெளிவரும்.
பத்து பேர் சேர்ந்து வடம் இருப்பதால் இன்னும் நிறைய வெரைட்டியாக, உடனுக்குடன் சுடச்சுட இற்றைப்படுத்தப்பட்டு, சொந்தக் கருத்துக்களுடன் வலம் வந்திருக்காதது ஏமாற்றம். - ரஜினி ராம்கி: மனதில் பட்டதை எழுதியதால் authenticity உள்ள பதிவுகள். நம்பகத்தன்மை வரும் அளவிற்கு தற்போதைய நடப்புகளை சொல்லி அலசுபவர். எக்ஸ்பிரஸ் வேகத்தில் தரவுகள் உள்ளடங்கி இருப்பதால், எனக்கு சில கருத்துக்கள் விளங்காமல் போகும். இருந்தாலும் பாமர நடையில் நேரடிப் புகைப்படங்களோடும் காரசாரமான மறுமொழிகளுடனும் உலா கொடுப்பவர்.
- லக்கி லுக் - மடிப்பாக்கம்: ஏப்ரல் மாசம்தான் துவக்கம். வெத்து வேட்டு, சும்மா டைம்பாஸ் என்று சொல்லிக் கொண்டாலும், sophisticated உள்ளடக்கம். தேர்தல் மீட்டிங் கவரேஜ், கருத்துக் கணிப்புகள் தொகுப்பு என்று வேகமாக புகழ் பெற்ற பதிவு. திமுக ஆதரவை வெளிப்படையாக முன்வைக்கிறது.
- கோவி. கண்ணன்: போன மாசம் ஆரம்பிக்கப்பட்டு தமிழகத் தேர்தலை திறம்பட முன்னிறுத்தும் இன்னொரு முக்கிய பதிவு. கிண்டல் கேலிகள் மற்றும் அரசியல்கள் இருக்கும். தேர்தல் முடிவுகள் தொடரை தவறவிடாமல் படிக்க வேண்டும்.
- மாயவரத்தான்: முற்போக்கு, பகுத்தறிவு, நடுநிலைமை, சிந்தனாவாதி போன்ற வலைப்பதிவு பட்டமளிப்புகளுக்கு மயங்காமல் அசத்துபவர். டாஸ்மாக் கடையின் விற்பனையாளன் மட்டும் சரக்கடிக்காதது போல் odd man out. மாற்றுக் கருத்துக்களை முகஞ்சுளிக்காமல் வரவேற்று, எதிர் கருத்து உள்ளவர்களுடனும் தொடர்ந்து விவாதிப்பார். தொகுதி அனாலிஸிஸ், ஆருடம் என்று கஷ்டப்படாமல் content கொடுப்பவர்.
- அப்பிடிப்போடு: கரூர், கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தேனி, நாகை, திண்டுக்கல், தஞ்சை மாவட்டம் என்று நிறைய அலசி, எழுதியிருப்பதாகத் தெரிகிறது. நான் இன்னும் எந்த மாவட்டத்தையும் படிக்கவில்லை. முடிவு வந்தபிறகு என்னாச்சு என்று தெரிந்து கொண்டு விடலாம் என்னும் எண்ணமாகவும் இருக்கலாம்.
- பத்ரி: இன்னும் நிறைய எதிர்பார்த்த பதிவர். காரம் படுகுறைவு. அரிசி மானியம் குறித்த விரிவான பதிவுகள் தவிர எவருக்கு ஓட்டு, தேர்தல் அறிக்கை அலசல் போன்ற பத்ரியுடைய ஸ்டாண்டர்ட் டச் கிடைக்காமல் போனதில் எனக்கு வருத்தம். மயிலாப்பூர் குறித்தாவது வாக்குறுதிகள், வேட்பாளர்கள், பிரச்சாரங்கள் என்று தீனி போட்டிருக்கலாம்.
பிகு: படு சேரியமாய் எழுதும் தமிழ் சசி, ரோஸாவசந்த், ரவி ஸ்ரீனிவாஸ், 'உள்ளல்' ஆதிரை, 'திசைகள்' மாலன் போன்ற பலரை சாய்ஸில் விட்டுவிடுகிறேன். ஓரிரண்டு முக்கியமான பதிவுகளில் அவர்களுடைய வழக்கமான இலச்சினையுடன் ஆழமாக தமிழகத் தேர்தலை அலசுவது, மேற்கண்ட தலை பத்து பதிவர்களின் தொடர்ச்சியான (அதாவது ஜனரஞ்சகமான) கவரேஜூக்கு ஈடாகாது.
பி. குறிப்பிடத்தக்க கருத்து:
ஊருங்க எல்லாத்தையும் ஒரு வெள்ள பேப்பர்ல எழுதிகோங்க. பக்கத்துலயே அந்த ஊர் வேட்பாளருங்க எல்லார் பேரும் எழுதிக்கோங்க. வேட்பாளருங்க பேர் தெரியாட்டாலும் ஒண்ணியும் ப்ரச்னை இல்ல.. திமுக கூட்டணி, அதிமுக கூட்டணின்னு பொதுவா எழுதிக்கோங்க.. அதுல உங்களுக்கு பிடிச்ச வேட்பாளர் அல்லது உங்க அய்யா, அம்மா, அப்பத்தா, தோட்டத்துல புல்லு புடுங்கற பெரிய மூக்கி, மாடு மேக்கிற கொண்ண வாயன் இவங்களுக்கு பிடிச்ச வேட்பாளர் பேர போல்டு பண்ணி ஹைலைட்டர் வச்சி கலர் அடிங்க.. ஆச்சா, முடிஞ்சிது தொகுதி அலசல். "என் கணிப்புப்படி"ன்னு எல்லாருக்கும் படிச்சி காமிங்க... காப்பிரைட் நன்றின்னு நம்ம பேர சொல்லிடுங்க..
தேர்தல் 2006 | TN Elections | தமிழ்ப்பதிவுகள்
குட் செலக்ஷன்ஸ். இதில் பத்ரியை கூட சாய்சில் விட்டிருக்கலாம்!
பெயரில்லா சொன்னது… 5/05/2006 01:39:00 PM
தன்யனானேன் தலைவா..
சொன்னது… 5/05/2006 01:54:00 PM
//அமெரிக்கா, சிங்கப்பூர், கனடா (யாரு?) என்று உலகெங்கும் உள்ள சின்னத் திரைகளில் தேர்தல் கோலங்கள் கொடுப்பது எங்கள் 'தேர்தல் 2006'.//
பாலா, நான் அவனில்லை
சொன்னது… 5/05/2006 02:24:00 PM
அனானி... உண்மைதான். கருத்துக்கு நன்றி.
மா., கா.சி., __/\__
சொன்னது… 5/05/2006 03:08:00 PM
உங்களுடைய இட்டிலிவடைதான் முதல் இடமா? வாழ்த்துக்கள் பாலாஜி.
பெயரில்லா சொன்னது… 5/05/2006 06:29:00 PM
மாயவரத்தான் உங்கள் ஜாதி என்பதால் சேர்த்துக் கொண்டீர்களா லிஸ்டில்?
போலிடோண்டு ரசிகர் மன்றம்
மாயவரம் கிளை.
பெயரில்லா சொன்னது… 5/05/2006 06:30:00 PM
IDLY VADAI - Super Star Rajini
Media watch - Sivaji Ganeshan
Tamil Therthan'06- Kamala kasan
Rajini Ramki - Kajini Surya
Lucky Look - Thala Ajit
Kovi Kannan - Arya
Mayavarathan- Ilayathalapathi Vijay
Apipodu- ciyan Vikram
Badri - Sathya raj
I do not know " why mr.Jayakumar is missing in this"
Jayakumar- Karthic
It is just for fun.
சொன்னது… 5/06/2006 06:49:00 AM
சும்மா நச்னு சொல்லியிருக்கீங்க சிவபாலன். நன்றி!
சொன்னது… 5/06/2006 10:42:00 AM
மாயவரத்தானின் பெருமையை மேலும் மேலும் தமிழ் கூறும் நல்லுலகில் இணைய வீதியில் பரப்பிக் கொண்டிருக்கும் போலி டோண்டு ஒன் மேன் ரசிகர் மன்றத்துக்கு (அது ஒண்ணு தான் கொறச்சல்!) நன்றி.
சிவபாலன்..நல்ல வேளை 'மாயவரத்தான்' அப்படீன்ன உடனே 'சிம்பு'ன்னு சொல்லாம விட்டீங்களே.. அந்த மட்டில் சந்தோஷம். :)
சொன்னது… 5/06/2006 02:39:00 PM
பாஸ்டன் பாலா மிக்க நன்றி.
சொன்னது… 5/06/2006 07:28:00 PM
எங்கள் தே.ப.கூ (தேர்தல் பதிவுகள் கூட்டணி)வின் இளைஞர் அணி தலைவர் ஜெயக்குமாரின் - கருத்து கந்தசாமியைப் பற்றி பின்குறிப்பிலாவது குறிப்பிட்டுஇருக்கலாம். ஓரங்கட்டிடிங்க - சிறிது வருத்தம் தான்.
சொன்னது… 5/06/2006 08:44:00 PM
கருத்துரையிடுக