தற்போது புரட்டும், நூலகத்தில் கிடைத்த, மூன்று ஆங்கிலப் புத்தகங்கள்:
The Fate of Africa: From the Hopes of Freedom to the Heart of Despair: Martin Meredith - ஆப்பிரிக்காவின் வரலாறு. தெரியாத பூமிக்குள் கை பிடித்து அழைத்து செல்கிறார்.
All the King's Men : Robert Penn Warren: லூயிஸியானாவின் முன்னாள் கவர்னர் Huey Long-இன் உண்மைக் கதை என்பது வாங்க வைத்தது. சாதாரண மனிதன் சேவை செய்ய அரசியலுக்கு வருவதும், பதவிக்கு வந்தபின் கெட்டுப் போவதையும் விவரிக்கும் நாவல். 1946-இல் எழுதப்பட்டது. புலிட்சர் பரிசை வென்றிருக்கிறது.
Guilt, Blame, and Politics: Allan Levite: இருபது வயதில் கம்யூனிஸ்ட் ஆக இருப்பவர், நாற்பது வயதில் கன்சர்வேடிவ் ஆக மாறும் பின்னணி, சுய மதிப்பு vs விடுதலை உணர்ச்சி, சுகங்களை அனுபவித்து செல்லும் கையாலாகத்தனத்தினால் எழும் குற்றவுணர்வு போன்றவற்றை வலது சாரி கருத்தாக்கத்தில் கொடுக்கிறார்.
Books
கருத்துரையிடுக