வெள்ளி, ஜூலை 14, 2006

Cooling Tamil Blogosphere

Bunks Party Proudly Presents Onnum Onnum Renduஒண்ணும் ஒண்ணும் ரெண்டு (1+1 =2): சூடாக உள்ளது. வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு, என் பங்குக்கு, கவனம் திருப்ப இந்த பதிவு.


பூனை புலியாகுமா?
கழுதைக்குத் தெரியுமா கைதி எண்?
சட்டையைத் திற... காற்று வரும்
சீறும் பாம்பை நம்பு
சிரிக்கும் சிறுத்தையை நம்பாதே

நாலு மிருகத்துக்கு நல்லதுன்னா
எதுவுமே தப்பில்ல

உன்னை நான் கட்டிக் கொள்ள
என்னை நீயும் தழுவிக் கொள்ள
உல்லாசம் பொங்கும் இன்ப நாள்
மதிய உணவுக்கு நேரமாச்சு
Legal Sea Foods அல்லது Bugaboo Creek போயிட்டு வரேன்.

அதுவரை ஆழமான பதிவு எழுதுவது எப்படி என்று அறிந்து கொள்ளுங்கள்.| |

28 கருத்துகள்:

எப்பிடி தலீவா இப்படியெல்லாம்?!

இப்பொழுது நான் உங்களுக்கு நன்றி சொல்லலாமா? கூடாதா? உத்தரவு வாங்க எந்த துறையை அணுக வேண்டும்?

ஊடக கண்காணிப்புத் துறை
பின்னூட்ட எண்ணிக்கை வளர்ப்பு வாரியம்
அனானி மறுமொழியிடுவோர் சங்கம்
***** கிசுகிசுப்போர் ஒன்றியம்
நன்றி நவில்வோர் நல அமைப்பு

சொல்லுங்க... ஒன்றைக் கூட்டிக் கொடுங்க

கலக்கல்

Nakkiran __/\__
அசல் வேண்டுகோளுக்கு இணங்க:

1. எனக்கு நானே எஜமானாம்
ஆண்டான் இல்லை
அடிமை இல்லை

2. தேனாகப் பேசியதும்
சிரித்து விளையாடியதும்
வீணாகப் போகுமென்று
யாரேனும் நினைக்கவில்லை

3. சரக்கு இருந்தா வித்துப்பாரு
ஜாடைப் பேச்சு பேச வேணாம்
விறைப்பு எதுக்கு
நரம்பு சுளுக்கு
உடம்பு ஒச்சமாக வேணாம்

4. ஒரு பக்கம் பாசம் அம்மா
மறு பக்கம் நேசம் அம்மா
இரண்டுக்கும் இடையில மிருதங்கம் போல் ஆனேன்

5. தேனோடை ஓரமே
நீராடும் நேரமே
புல்லாங்குழல் தள்ளாடுதே

மிக்க நன்றி பாலா அவர்களே.

//பூனை புலியாகுமா?//
சூடு கண்ட பூனை சும்மா இருக்குமா ?

பூனை புலியாகுமா? என்று குறிப்பிடுவதன் மூலம் என்ன சொல்ல வருகிறீர்கள்? பூனை தோற்றத்தில் புலியாகுமா என்று கேட்கிறீர்களா? அல்லது என்னதான் இன்று தோற்றத்தில் புலிகள் என்றாலும் அது செயலில் பூனைதானே என்று இளக்காரமாக சொல்கிறீர்களா?

சிரிக்கும் சிறுத்தையை நம்பாதே என்று சொல்வதன் மூலம் அடக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட ஒரு சமூகம் சிரிப்பதை கூட நம்பக்கூடாது என்று நைச்சியத்தை புகுத்தும் ***த்தன (ஒரு பதிவரின் பெயர்) மேட்டுக்குடி மனோபாவத்தை வெளிப்படுத்துவதன் மூலம் பூனை (புலியாகாதது) குட்டி வெளிவந்தது...

ஆண் பெண் கற்பு நிலை விவாதங்களின் மூலம் நீங்கள் ஒன்றுமே கற்றுக்கொள்ளவில்லையா? சட்டையை திற காற்று வரும் என்ற படத்தில் ஒரு ஆணின் மார்பகமும், ***உம் வெளிப்படையாக தெரியும் அளவு வெளியிட்டிருப்பது ஆபாசம் இல்லையா? இப்படி எல்லாம் ஆபாசத்தை கடை பரப்பிவிட்டு போலி டோண்டுவை மட்டும் குறை சொல்வது கயமைத்தனம் இல்லையா? (எதிர்காலத்தில் இதை கண்டிக்காமல் போலியை மட்டும் குறை சொல்வதை கேள்வி கேட்கும் போலியின் ஆதரவாளர்கள் அவச்சொல்லில் இருந்து ஒரு வழியா தப்பினேன்)

*

இந்த பின்னூட்டத்துக்கு நன்றியை உடனடியாக ஒரு தனி பின்னூட்டமாகவோ அல்லது 1) ந 2) ன் 3) றி என்று பிரித்து பிரித்து >3 பின்னூட்டங்களாகவோ போடுவீர்கள் என்று நம்புகிறேன்... இல்லை உங்கள் பெயரில் நீங்களே பதிவு எழுதுகிறீர்கள் என்று குற்றம் சாட்டுகிறேன்... அப்படி இல்லையெனில் அதை நிரூபிக்கவும்... இல்லையென்றால் இதுவரை நாங்கள் வைத்திருந்த உங்கள் பிம்பத்தை சுக்கு ஆயிரமாக உடைத்து எறிந்துவிடுவோம்...

பாலசந்தர் கணேசன்... இன்றைய பொழுதிற்கு பதிவெழுத எண்ணம் உதிக்க வைத்ததற்கு நன்றி.
----
கோவி.கண்ணன்... புலிக்குப் பிறந்தது பூனையாகுமா
----
யாரும் பணிந்திடும் தெய்வம் - பொருள்
யாவினும் நின்றிடும் தெய்வம்,
பாருக்குள்ளே தெய்வம் ஒன்று; - இதில்
பற்பல சண்டைகள் வேண்டாம்.

வெள்ளை நிறத்தொரு பூனை - எங்கள்
வீட்டில் வளருது கண்டீர்;
பிள்ளைகள் பெற்றதப் பூனை, - அவை
பேருக் கொருநிற மாகும்.

சாம்பல் நிறமொரு குட்டி - கருஞ்
சாந்து நிறமொரு குட்டி,
பாம்பு நிறமொரு குட்டி - வெள்ளைப்
பாலின் நிறமொரு குட்டி.

எந்த நிறமிருந்தாலும் - அவை
யாவும் ஒரேதர மன்றோ?
இந்த நிறம்சிறி தென்றும் - இஃது
ஏற்ற மென்றும் சொல்லலாமோ?

வண்ணங்கள் வேற்றுமைப் பட்டால் - அதில்
மானுடர் வேற்றுமை யில்லை;
எண்ணங்கள் செய்கைக ளெல்லாம் - இங்கு
யாவர்க்கும் ஒன்றெனல் காணீர்.

1) ந

2) ன்

3) றி

//கோவி.கண்ணன்... புலிக்குப் பிறந்தது பூனையாகுமா//

புரிகிறது ... சின்ன பையன் சிறுகதை எழுதுவதைத் தானே சொல்கிறீர்கள் :)))

முகமூடி :-)))))

கிறுக்குவதை கழிப்போம்
கழிப்பதை கிறுக்குவோம்


ன்
றி
யை இப்படி மேலிருந்து கீழே ... விழுந்து கும்பிடு போட்டு சொல்லி புல்லரிக்க வெச்சிட்டிங்க :)))

//Boston Bala said...
முகமூடி :-)))))

கிறுக்குவதை கழிப்போம்
கழிப்பதை கிறுக்குவோம்
//
கிறுகிறுத்துடுச்சி ...:))

----சிறுகதை எழுதுவதைத் தானே சொல்கிறீர்கள்---

உங்க சிறுகதைக்கே இவ்வளவு தன்னடக்கமா சொல்லிக் கொண்டால், நான் எழுதும் முயற்சியெல்லாம்! :-)

---இப்படி மேலிருந்து கீழே----

குறுக்கெழுத்துப் புதிர் என்று உள்குத்து போடாத வரைக்கும் :-D)

--- ... விழுந்து கும்பிடு போட்டு --

ஆஹா, அதிமுக-வில் எனக்கு எதிர்காலம் இருக்கிறது \:D/

//உங்க சிறுகதைக்கே இவ்வளவு தன்னடக்கமா சொல்லிக் கொண்டால், நான் எழுதும் முயற்சியெல்லாம்! :-) //

நான் என்னைச் சொல்லவில்லை ... உங்களைத்தான் சொன்னேன். உங்கள் அம்மாவை பற்றிய ஒலிநாடா பதிவை படித்துவிட்டு நான் பாராட்டிச் சொன்னது மறந்துவிட்டீர்களா ?
பெரியவங்க பெரியவங்க தான் சின்ன விசயமெல்லாம் ஞாபகம் இருக்காது :)))

//ஆஹா, அதிமுக-வில் எனக்கு எதிர்காலம் இருக்கிறது \:D/ //
அதிமுகவிற்கே எதிர்காலம் இருக்கிறது என்று நம்புவதால் தானே ... ம் நடத்துங்க :)))

:))))))

பாலா,
இன்னிக்கு தான் கவனிச்சே ஒரு படத்தை போட்டு தமிழ் வலைபதிவாளர்கள் அப்படின்னு போட்டு இருக்கிங்க அந்த ஆளை சொல்றீங்களா இல்ல படத்தை சொல்றீங்களா இல்ல ரெண்டுக்கும் நடுவுல இருப்பதை சொல்றீங்களா?

சந்தோஷ் ...

எந்தப் பதிவை/புகைப்படத்தை சொல்றீங்க? புரியலியே

பாலா கூல் பண்ண உங்க வழக்கமான பேன் இருக்கும் என வந்தால் இப்படியா..

ஏசி வச்சிருக்கலாமே
பேன் - Fan
ஏசி - A/C

----ஒரு படத்தை போட்டு தமிழ் வலைபதிவாளர்கள் அப்படின்னு போட்டு இருக்கிங்க ---

தேடிய போது கிடைத்த இரண்டு: Blogs & the Blogging Bloggers who Hype them & வலைஞருக்கு பதிவெழுதியபின் உண்டாவது...

சிவா...
விசிறி என்பது சூடான சொல்லாகவும், அஸிஸ்டெண்ட் கமிசனர் (ஏசி) வந்தால் இன்னும் சீரியஸாகும் என்பதால் cool ads with cooler folks.

//இப்பொழுது நான் உங்களுக்கு நன்றி சொல்லலாமா? கூடாதா? உத்தரவு வாங்க எந்த துறையை அணுக வேண்டும்?//

நீங்க 'பூமி'ன்னு வெச்சுக்குவோமே. (இப்போதைக்கு பூமியாகிட்டீங்க!). 'துணை கிரகத்து' கிட்ட தான் பர்மிஷன் வாங்கணும். இல்லாட்டி ஒரு வாரம் கூட கண்டுக்க பட மாட்டீங்க. ஜாக்கிரதை.

இன்னிக்கு தலைப்புச் செய்திகள் எதுவும் இல்லையா ?

என்ன சார் நடக்குது இங்கே? ஒண்ணும் புரியலையே...

----தலைப்புச் செய்திகள் எதுவும் இல்லையா ---

போட்டா போச்சு :-D)
------
ராஜேஷ்... நாலைந்து படங்கள் கிடைத்தது. அதைப் பகிர்ந்து கொள்ள ஒரு பதிவு. அம்புட்டுதான் நடக்குது இங்கே (மெய்யாலுமே ;-)

பாலச்சந்தர் கணேசன் சொன்ன சங்கதிக்கான சுட்டிகள்:
நேற்றையப்பொழுது.....
அன்புள்ள மாயா அவர்கள் பார்வைக்கு!
அன்புள்ள தமிழ் மணம் நிர்வாகிகளுக்கு,

-----

பாலச்சந்தரின் அழைப்பை ஏற்று
வலைப்பதிவை விட்டு விலகுவது
தோழி உஷாவுக்கு - 2

------
இன்னும் நிறைய வலைப்பதிவர்கள் இது தொடர்பாக எழுதியிருக்கலாம்.
நான் படித்த சிலவற்றைப் பகிர்ந்திருக்கிறேன்.

எல்லாம் படிக்க முடியா விட்டால், என்னுடைய குறுவுரை: வழக்கமான கருத்து பேதங்களும், பிறரின் எண்ணங்களை அனுமானிப்பதில் உள்ள குறைபாடுகள்தான் என்று சொன்னால், சன் டிவி டாப் 10 'கால் மேல் கால் & சுழலும் நாற்காலி' முத்திரை கிடைக்கும் என்பதால் நீங்களே முழுவதும் (அனைத்து மறுமொழி + பின்னூட்ட சுட்டிகளுடன்) படித்து தெளிக :-)

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு