செவ்வாய், ஜூலை 04, 2006

Kalaaba Kaathalan

கலாபக் காதலனை பார்த்தேன்... ரசித்தேன். தோன்றிய சில:

 • சாஃப்ட்வேர் எஞ்சினீயர்களைக் கிண்டலடிக்கிறார்கள்: கண்மணி மிக அழகாக specifications கொடுக்கிறாள். அகிலன் மாதிரி ஆறடி உயரத்தில் சொவ்வறை வல்லுநராக இருக்க வேண்டும். மாமியார் வீட்டுடன் இருக்கக் கூடாது. நகரத்தில் வசிக்கணும். எக்ஸெட்ரா... அகிலன் ஒரு கணினி நிபுணன். எப்படி புரிந்து கொள்வான்? எப்படி செயல்படுவான்? படு நக்கல் + யதார்த்தம்.

 • கண்மணி சொல்வாள் 'என்னைப் புரிந்து கொள்ள முடியாது': 100/100 உண்மை. அவளைப் புரிந்து கொண்டதாக நான் எண்ணியதால் - மாமாவுடன் சென்றவுடன், ஒரு தலைக் காதலனைக் கொலை செய்து விடுவாள் என்று எண்ணிய எனக்கு அதிர்ச்சி. அவளைக் கோழையாக சித்தரிக்காத இயக்குநர் இகோர், கடைசி காட்சியில் மட்டும் பல்டி அடிக்கிறார். செத்திருக்க வேண்டியது - வன் புணர்ந்த மாமாவோ, கூட்டிக் கொடுத்த அகிலனோ.

 • சென்னையின் கணினிப் பயிற்சியகங்கள்: மல்டிமீடியா கற்றுக் கொள்பவளுக்கு '/'க்கும் '\'க்கும் வித்தியாசம் தெரியவில்லை. வலையகம் செல்வதற்கு வழி கேட்கிறாள். எப்பா சாமீ... என்.ஐ.ஐ.டி.க்களும் எஸ்.எஸ்.ஐ.க்களும் ஒழுங்கா கற்றுக் கொடுக்க வேண்டும்.

 • கணி வேலையின் மன அழுத்தம்: முதுகு வலிப்பது கணினி வேலையின் இலவச இணைப்பு. அதற்கு நரம்பு மருத்துவரை அணுகாமல், நங்கையினை நாடி பிடிக்க சொன்னால் வலி மாயமாகவிட்டாலும், அடிக்கடி கழுத்து திருகிக் கொள்ளத் தோன்றும்.

 • கணி வேலையின் சித்தாந்தம்: மேலாளர் சொல்வதை கீழே பணிபுரிபவனிடம் சொல்லக் கூடாது. சகாவின் புலம்பல்களை மானகையாளர்களின் சந்திப்புகளில் போட்டுக் கொடுத்துவிடக் கூடாது. அகிலனும் அன்பரசியிடமும், குடும்பத்தினரிடமும் கண்மணியைக் குறித்துப் பகிர்ந்து கொள்ளாமல், open communication பின்பற்றாத அலுவல் சூழலை வீட்டிற்கும் எடுத்து செல்கிறான்.

 • லாவண்யா நர்மதா: ஊருக்கு வந்த புதிதில் Ramada Innஐப் பார்த்து 'என்னங்க... நம்ம ஊரு ஆளுங்க கூட ஹோட்டல் நடத்துறாங்க போல? அங்கேயேத் தங்கிக்கலாமே' என்று விசாரிப்பதை ஒட்டுக் கேட்டது போன்ற லாவண்யா ஐஸ்க்ரீம் காட்சி. வெள்ளந்தி வெள்ளந்திதான்.

 • சம்பந்தி பிணக்கு: நெஞ்சில் நின்ற, 'அட... என்னம்மா பாலகுமாரன் அனுபவிச்சிருக்காரு' என்று மனம் வெளிப்பட சிரித்து, உணர்ந்து, ஒன்றிய டிவி ரிமோட் போர் காட்சியமைப்பு.

 • கவிஞர்கள் கிண்டல்: கவிதை எழுதுவது எப்படி என்று கையேடு தயாரிப்பது போல் சுளுவாக விளையாடுகிறார்கள். உதவி இயக்குநர்கள் ஆளுக்கொரு வரியைக் கொடுத்து, கோர்த்து, பின் நவீனத்துவமும் வைரமுத்துயிஸமும் பிணைந்து எவ்வாறு பாடலும் புனைவும் எழுதுவது எளிது என்பதை அல்வா ஊட்டுகிறார்.

 • காதலில் நல்ல காதல் எது? கள்ள காதல் எது? எல்லா காதலும் காதல்தான்: கணவனில் நல்ல கணவன் எது? சந்தேக புருஷன் எது? எல்லா கணவனும் கண்ட்ரோல் ஃப்ரீக்தான்!

  கலாபக் காதலன் விமர்சனங்கள்  | |

 • 12 கருத்துகள்:

  அண்ணன்,பாலா அண்ணன், கை கொடுங்க முதல்ல. அந்த படத்த முழுசா பாத்துக்கு. ஒரு மாசமா நானும் அதை முழுசா பாத்து விடலாம் என்று பாக்குறேன். இன்னும் முடியலை. இப்ப தான் கண்மணியின் முறை மாமன் வந்து மொட்டை மாடியில் கண்மணிகிட்ட பேசிட்டு போயி இருக்கான்........ ஹம் பார்ப்போம்,,, என்ன அவசரம்....

  ஆச்சரியம் பாருங்க.. நேத்து தான் இந்தப் படத்தை நானும் பார்த்தேன்..

  //அவளைக் கோழையாக சித்தரிக்காத இயக்குநர் இகோர், கடைசி காட்சியில் மட்டும் பல்டி அடிக்கிறார். செத்திருக்க வேண்டியது - வன் புணர்ந்த மாமாவோ, கூட்டிக் கொடுத்த அகிலனோ.//
  - இது தான் எனக்கும் தோணிச்சு..

  ---மாசமா நானும் அதை முழுசா பாத்து விடலாம் என்று பாக்குறேன்---

  இந்த மாதிரி படமெல்லாம், அரைத் தூக்கத்தில், பாதி சமையலில், இந்தியா டுடே போன்ற புத்தகத்தைப் புரட்டிக் கொண்டு, தொலைபேசியில் பேசிக் கொண்டு பார்க்க வேண்டிய படம்.

  பொன்ஸ், அக்சயா ரொம்ப நன்றாக நடித்திருந்தார்கள்.

  இந்த படத்தை இன்னும் பார்க்கவில்லை - ஒன்றும் சொல்வதிற்கில்லை

  //இந்த மாதிரி படமெல்லாம், அரைத் தூக்கத்தில், பாதி சமையலில், இந்தியா டுடே போன்ற புத்தகத்தைப் புரட்டிக் கொண்டு, தொலைபேசியில் பேசிக் கொண்டு பார்க்க வேண்டிய படம். //
  அய்யோ.. அய்யோ.. அப்படியே தாங்க பார்த்தேன்..

  // பொன்ஸ், அக்சயா ரொம்ப நன்றாக நடித்திருந்தார்கள். //
  சாரி, யாரு அக்சயா? கண்மணியா? எனக்கு அந்த அன்பரசி (ரேணுகா?) நல்லா செஞ்சிருக்கிறதா தோணிச்சு.. ஆர்யா குரல் தான் சொதப்பிட்டாங்க.. அது தான் அவர் உண்மைக் குரலோ என்னவோ..

  உயிர் பார்த்துவிட்டீர்களா?

  ----அன்பரசி (ரேணுகா?) நல்லா செஞ்சிருக்கிறதா தோணிச்சு---

  ஆமாம். அதுவும் முந்தைய படங்களில் நகரத்துக் காதலியாக ஒரே மாதிரியாக (கொஞ்சம் அலுப்பைத் தந்தவருக்கு) இந்தப் படத்தில் பாசாங்கில்லாத கிராமத்தாரை முன்னிறுத்தும் பாத்திரத்தில் நன்றாக செய்திருந்தார்.

  ---அது தான் அவர் உண்மைக் குரலோ என்னவோ.. ---

  ஆர்யாவின் விசிறிகள் தங்களுக்குக் கறுப்புக் கொடி காட்டுமாறு பணிக்கப் போகிறேன் :-)


  ---உயிர் பார்த்துவிட்டீர்களா---

  இன்னும் இல்லையே (வரிசையில் காத்திருக்கும் அடுத்த படம்: அழகாய் இருக்கிறாய்; பயமாய் இருக்கிறது)

  அக்சயா
  "கலாபக் காதலன்' படத்தில் மிகச் சிறப்பாக நடித்த நடிகை அட்சயாவுக்கு, ஈமுகோழி வளர்ப்புமுறையைத் தமிழகத்துக்கு அறிமுகப்படுத்தி லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளித்துவரும் "அரவிந்த் மாடர்ன் ஃபார்மஸ் உரிமையாளர் ஏ.ஜி. ராமச் சந்திரன் விருது வழங்கி வாழ்த்துரை வழங்கினார்.

  "தமிழக எல்லையிலிருந்து இங்கே வந்திருக்கிறேன். தாகம் என்பது எல்லோருக்கும் இருக்கணும். அது பத்திரிகையாக இருப்பது பாராட்டுக்குரியது. 15 ஆண்டுகாலமாக சிறப்புடன் வெளிவருகிறது. 1992லிருந்து நான் தாகம் படித்து வருகிறேன். ஈமு கோழி வளர்ப்பு, முயல்வளர்ப்பு ஆகியவற்றை தாகம் மூலம் அறிமுகப்படுத்தி, 1லட்சத்து 45 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை கொடுத்துள்ளேன். எல்லோருக்கும் தாகம் இருக்கிறது. அதற்கு ஊக்கம் தர ஆள் வேண்டும்.''

  விருதைப் பெற்றுக்கொண்டு நடிகை அட்சயா, நன்றி தெரிவித்துப் பேசியதுடன், "எல்லா டைரக்டர்களும் பாம்பே, பெங்களூர்னு பெண்களை தேடுறாங்க. Talented தமிழ் Girlsக்கு வாய்ப்புத்தரணும்'' என்று சொல்லி, பார்வையாளர்களைப் பரவசப்படுத்தும் விதத்தில் ஒரு பாடலையும் பாடினார்.
  ....
  விருது பெற்றுக் கொண்ட சீமானின் உரைக்காக அரங்கம் தன் காதுகளைத் தீட்டிக் கொண்டது.
  தற்கு முன் பேசிய சகோதரி (நடிகை அட்சயா) தமிழ் Girlsக்கு வாய்ப்புக் கொடுக்க வேண்டும் என்றார். தமிழுக்கு அப்புறம் Girls என்று சொல்கிறவர்களுக்கு வாய்ப்புக் கொடுத்தால் நாங்க தூக்குப் போட்டுத்தான் தொங்கணும். பேசினால் ஆங்கிலத்திலேயே பேசி, அந்த மொழியை கௌரவப்படுத்தணும் அல்லது தமிழிலேயே பேசி தாய்மொழியை வாழ வையுங்கள். தமிழில் பாதி பேசி, ஆங்கிலத்தில் பாதி பேசி எழவு மொழியாக ஆக்கி வைத்திருக்கிறீர்கள். இந்தமாதிரி பிரச்சினைகள் உள்ள தமிழ்த் திரையுலகில் ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆசையில் தான் "தம்பி' படம் எடுக்கப்பட்டது

  http://keetru.com/thaagam/jun06/pradeepan.html

  இந்த மாதிரி படமெல்லாம், அரைத் தூக்கத்தில், பாதி சமையலில், இந்தியா டுடே போன்ற புத்தகத்தைப் புரட்டிக் கொண்டு, தொலைபேசியில் பேசிக் கொண்டு பார்க்க வேண்டிய படம்.

  I thought that was how you wrote
  so many blog posts also :).Thanks
  for revealing the secret :)

  //ஆர்யா குரல் தான் சொதப்பிட்டாங்க.. அது தான் அவர் உண்மைக் குரலோ என்னவோ.. //
  குரல விடுங்க, முகத்தில் கொஞ்சம் ரியாக்ஷன் காட்ட கூடாது. ஏதோ சம்பளம் வாங்காம ப்ரியா நடிச்ச மாதிரி இருக்கு. அறிந்தும் அறியாமல் படித்தில் நடித்த ஆர்யா தானானு ஒரு சந்தேகம் வந்துடுச்சு.

  //அரைத் தூக்கத்தில்,//
  இது ஒட விட்டவுடன் முழுத் தூக்கம் வந்துடுச்சு.

  இத விடுங்க, சரவணானு ஒரு படம் வந்துச்சே அத பாத்தீங்களா... அந்த படத்த பாத்தவுடன் எங்க வீட்டு ராமாயணம் என்ற படத்தில் வி.கே.ராமசாமி கோந்து அல்வா கிண்டி எஸ்.வி.சேகருக்கு குடுப்பார். அது மாதிரி அல்வாவ நம்ம சிம்புவுக்கு கொடுத்தா என்னனு இருக்கு.
  அந்த படத்தில் ஒரு செம காமெடி சீன் ஒன்னு இருக்கு. யாராச்சும் தெரிந்தவர்கள் சொல்லாம். அந்த படமே மிக பெரிய காமெடி தான். அதிலும் அந்த சீன்......

  ---சரவணானு ஒரு படம் வந்துச்சே அத பாத்தீங்களா---

  சன் டிவியில் பார்த்ததே போதும் போதும்னு ஆயிடுச்சுங்க! நான் சிம்பு வெறியன் (அதாவது சிம்புவைப் பார்த்தா எனக்கு வெறி பிடிச்சிரும்; எனவே, கொஞ்சம் தள்ளியே இருக்கிறேன் ;-)

  Tamil | TamilNadu | Thaagam | Aniversary அனானி... நன்றி


  ---that was how you wrote
  so many blog posts also ---

  கண்டதை சொல்லுவதுதானே நம்ம ஸ்டைலு :-)

  கருத்துரையிடுக

  புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு