ஞாயிறு, ஜூலை 23, 2006

Sivaji Statue Opening Vizha

சிவாஜி சிலைத் திறப்பு சன் தொலைக்காட்சியில் தொகுத்திருந்தார்கள். கவர்ந்த சில தருணங்கள்.

  • பங்குப் பெற்றோரின் பெரும்பாலானவர்களின் ஆடை வெள்ளை நிற சட்டை, வேட்டி. எங்கெங்கு காணினும் வெளுப்புதான்.

  • எல்லோரும் சோகமே உருவாய் குடிமுழுகிப் போனது போல் இருந்தார்கள். சாதனையாளரை கௌரவிக்கும் விழாவில் சந்தோஷமாகப் பட்டுப் புடைவையில் இருந்தவர் லதா ரஜினிகாந்த்.

  • சிவாஜியின் மனைவி கமலா மேடையேறாததற்கு பிரபு காரணம் சொன்னார். அண்ணன் இராம்குமார் முதல் வரிசையிலோ, அரங்கில் பேசாததற்கோ என்ன காரணம் என்று விளங்கவில்லை.

  • 'சந்திரமுகி'யில் ஜோதிகா பேய் போல் கண்களை உருட்டுவதற்கு சிவாஜியின் நடிப்பு உதவியிருக்கிறது. பாரதியாக சிவாஜி கனவு காணும் 'கை கொடுத்த தெய்வம்' படத்தின் 'சிந்து நதியின் மிசை' கை கொடுத்ததாக பி. வாசு சொல்லியிருக்கிறார். ஓவர் ஆக்சனுக்கு வஞ்சப் புகழ்ச்சி அணி.

  • பேச்சுக்களில் சாதாரணமாக கமல் தான் நிமிர்ந்து உட்கார வைப்பார். இன்று அது கேயெஸ் ரவிக்குமாருக்கு மட்டுமே சொந்தம். வெளிப்படையான எதார்த்தமான் பேச்சு. 'படையப்பா'வில் ரிகர்சல் எடுக்கும்போது உரத்த உச்சரிப்பு அதிகமாகப் பட்டிருக்கிறது. நேரில் சொல்லவும் பயமாய் இருந்திருக்கிறது. டேக் எடுக்கப் போவதற்கு முன்
    'அண்ணே... ஒரு வாட்டி என் காதோடு வசனத்தை மட்டும் சொல்லிடுங்களேன்!'

    சொல்லி முடித்தவுடன்...

    'இதை விட அதிகமாய் ஒரு இன்ச் கூட வேணாங்க'
    என்று சொல்லி விட்டு, இடத்தை விட்டு ஓடி, கேமிராவிற்கு அருகில் சென்று 'ஸ்டார்ட்' சொல்லி மறைகிறார்.

    சிம்மக்குரலோனை இயக்குவது எவ்வளவு நகாசான வேலை என்பதையும், நடிப்பைக் கறக்கும் இயக்குநரின் சிரமத்தையும் அலாதியாய் சொன்னார்.

  • சிவாஜியிடம் இருந்து நேரந்தவறாமையையும், 'இயக்குநர் சொல்வதை இம்மியளவும் மாறாமல் அப்படியே நடப்பதையும்' கற்றுக் கொண்டதாக விஜய் பகிர்ந்தார்.

  • சிவாஜியின் வரலாற்றில் துவக்கமும் (பராசக்தி சக்சஸ்) கலைஞரால் தான்; சுபம் போட்டு முடிப்பதும் (மெரீனா சிலை) கலைஞரால் தான் என்றார் பாக்கியராஜ்.

  • தமிழன் ஒவ்வொருவரிடமும் நால்வரின், நாலு தமிழர்கள் மட்டுமே தாக்கமாக இருக்கும் என்றார் வைரமுத்து:
    1. கருணாநிதி;
    2. எம். ஜி. ஆர்.;
    3. சிவாஜி &
    4. கண்ணதாசன்.
    தனக்குப் பொருத்தமானதை 'என் தாழ்மையான கருத்து' என்பது புத்திசாலியின் எழுத்து. தனக்கு உவந்ததை 'உலகத்தின் கருத்து' என்று genralize செய்வது புத்திசாலியின் மேடைப் பேச்சு.

  • கலைஞரைக் குறித்த விழாவா, சிவஜி சிலைத் திறப்புக்கான விழாவா என்று பேசிய ஒவ்வொருவரும் ஐயப்பட வைத்தாலும், விஜயகாந்த் சிவாஜியைத் தவிர்த்து கருணாநிதி துதியோடுப் பேச்சை முடித்துக் கொண்டார்.

  • கருத்துக் கேட்ட பலரும் சிவாஜியின் பிடித்த படப்பட்டியல் கொடுத்தார்கள். இது எனக்கு டக்கென்று வந்த படங்களின் பெயர்கள்:
    * பலே பாண்டியா,
    * சபாஷ் மீனா,
    * தேவர் மகன்,
    * திருமலை ரகசியம்,
    * தூக்கு தூக்கி,
    * உத்தம புத்திரன்,
    * திருவிளையாடல்,
    * பராசக்தி,
    * திரும்பிப் பார்,
    * கப்பலோட்டிய தமிழன்,
    * விடுதலை

  • ரஜினியின் பேச்சு சிகரம் வைத்தாற் போல் சிறப்பாக வந்தது. எழுதி வைத்துக் கொண்டு படிக்காமல், குட்டிக் கதை, சுவாரசியமான மேற்கோள்கள் என்று இயல்பாய், ஆளுமையோடு வெளிவந்தது. மேடையிலேயே விஜயகாந்த்திற்கு வாழ்த்துக்கள் சொல்லி, தன்னுடைய அரசியல் திறமையையும் ஓரளவு காட்டிக் கொண்டார். 'அரசியல் ஒரு குதிரை; சினிமா ஒரு குதிரை' என்று ஆரம்பித்து குதிரைப் பந்தயமாக வருணித்து அலுக்காதமாதிரி பேசினார்.

  • பாண்டிச்சேரியில் பெப்ரவரி 12 சிவாஜியின் சிலையைத் திறந்திருக்கிறார்கள். சிவாஜி குடும்பத்தில் ஒருவரான கமல், நட்பைக் கூட கற்பைப் போல் எண்ணும் டாக்டர் கலைஞர், எல்லாராலும் பங்கேற்க இயலவில்லை.



    | |

  • 13 கருத்துகள்:

    //எல்லோரும் சோகமே உருவாய் குடிமுழுகிப் போனது போல் இருந்தார்கள். சாதனையாளரை கௌரவிக்கும் விழாவில் சந்தோஷமாகப் பட்டுப் புடைவையில் இருந்தவர் லதா ரஜினிகாந்த்.//

    சிவாஜியின் ரசிக கண்மனிகளே... காரணம் கிடைத்துவிட்டது. வாருங்கள் போரட்டத்திற்க்கு ஆயத்தமாவோம்.

    //அண்ணன் இராம்குமார் முதல் வரிசையிலோ, அரங்கில் பேசாததற்கோ என்ன காரணம் என்று விளங்கவில்லை.//
    இராம்குமாருக்கு கூச்சசுபாவம் இருக்கலாம்,ஒரு வேளை அதனால் கூட தன்னை முன்னிருத்திக் கொள்ள விரும்பியிருக்கமாட்டார், குடும்பத்துல குழப்பத்தை உண்டுபண்ணிடாதையா...


    //பேச்சுக்களில் சாதாரணமாக கமல் தான் நிமிர்ந்து உட்கார வைப்பார்.//

    'தலை'வன் தலைவந்தான்..

    //சிவாஜியின் வரலாற்றில் துவக்கமும் (பராசக்தி சக்சஸ்) கலைஞரால் தான்; சுபம் போட்டு முடிப்பதும் (மெரீனா சிலை) கலைஞரால் தான் என்றார் பாக்கியராஜ்.//

    ச்சூ.. ச்சூ இந்த காக்காய்ங்க தொல்லை தாங்க முடியலையேப்பா..

    //கலைஞரைக் குறித்த விழாவா, சிவஜி சிலைத் திறப்புக்கான விழாவா என்று பேசிய ஒவ்வொருவரும் ஐயப்பட வைத்தாலும், விஜயகாந்த் சிவாஜியைத் தவிர்த்து கருணாநிதி துதியோடுப் பேச்சை முடித்துக் கொண்டார்.//

    அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா...

    //ரஜினியின் பேச்சு சிகரம் வைத்தாற் போல் சிறப்பாக வந்தது. எழுதி வைத்துக் கொண்டு படிக்காமல், குட்டிக் கதை, சுவாரசியமான மேற்கோள்கள் என்று இயல்பாய், ஆளுமையோடு வெளிவந்தது//

    ரஜினிராம்கியிடமிருந்து ஒரு பின்னுட்டம் நிச்சயம்.


    //பாண்டிச்சேரியில் பெப்ரவரி 12 சிவாஜியின் சிலையைத் திறந்திருக்கிறார்கள். சிவாஜி குடும்பத்தில் ஒருவரான கமல், நட்பைக் கூட கற்பைப் போல் எண்ணும் டாக்டர் கலைஞர், எல்லாராலும் பங்கேற்க இயலவில்லை.//

    கமலஹாசன் உண்மையாகவே சிவாஜி அவர்களை நேசித்தார். கமலஹாசனுக்கு படத்தில் மட்டுமே நடிக்கத் தெரியும். சிலரைப்போல வெளி உலகத்திலும் நடிக்கத் தெரியாது, இதுதான் கமலின் பலமும் பலவீனமும்.

    அன்புடன்...
    சரவணன்.

    saw the program...liked everything. I am a big fan ..of ...well movies so I do not see the bad...unless it is reallly reallly bad.

    I like Sivaji's acting so it is great to have a statue for him. Like you had mentioned many would agree that Sivaji is a great actor if only the director could extract that great acting from him. He proved it so very well in Devar magan a gem among his movies.

    (e-kalappai not working today and running out pf time and patience. thus English).

    //சிவாஜி குடும்பத்தில் ஒருவரான கமல், நட்பைக் கூட கற்பைப் போல் எண்ணும் டாக்டர் கலைஞர், எல்லாராலும் பங்கேற்க இயலவில்லை

    :-)

    // ஓவர் ஆக்சனுக்கு வஞ்சப் புகழ்ச்சி அணி.

    தலைவியின் ரசிகர் மன்றத்தின் சார்பில் இதனை வன்மையாக கண்டிக்கிறேன்

    // ரஜினியின் பேச்சு சிகரம் வைத்தாற் போல் சிறப்பாக வந்தது.

    போராட்டம் வாபஸ் !!!!

    // பலே பாண்டியா, //

    இதில் "மாமா.. மாப்ளே.." பாட்டில் சிவாஜியும், எம்ஆர்ராதாவும் காட்டும் முகபாவ போட்டியை அடிச்சுக்க இன்னைக்கு வரைக்கும் எதுவும் இல்லை! சென்ற நூற்றாண்டின் சிறந்த ஹீரோ வில்லன் பாட்டு (அடுத்தது ரஜினி-சத்யராஜ் "என்னம்மா கண்ணு?" :) )

    // பொருத்தமானதை 'என் தாழ்மையான கருத்து' என்பது புத்திசாலியின் எழுத்து. தனக்கு உவந்ததை 'உலகத்தின் கருத்து' என்று genralize செய்வது புத்திசாலியின் மேடைப் பேச்சு. //

    இது கொஞ்சம் ஓவருங்க! :)))

    //பொருத்தமானதை 'என் தாழ்மையான கருத்து' என்பது புத்திசாலியின் எழுத்து. தனக்கு உவந்ததை 'உலகத்தின் கருத்து' என்று genralize செய்வது புத்திசாலியின் மேடைப் பேச்சு.//
    அவருக்கு இது என்ன புதுசா? அது சரி எம்.ஜி.ஆரை தமிழன் என்று எப்பொழுது ஒத்துக் கொண்டார்கள். ஒன்னும் சொல்ல மாட்டேன் என்கின்றார்கள்.

    //'சந்திரமுகி'யில் ஜோதிகா பேய் போல் கண்களை உருட்டுவதற்கு சிவாஜியின் நடிப்பு உதவியிருக்கிறது//
    பி. வாசுக்கு நல்லா காமெடி வருது.

    //கலைஞரைக் குறித்த விழாவா, சிவஜி சிலைத் திறப்புக்கான விழாவா//
    அதே டவுட் தான் எனக்கும்.... என்னமோ போங்க....

    சில ஜென்மங்களுக்கு சிவாஜியை குறை சொல்லுவது தன்னுடைய லெவலே வேற என்று காட்டிக்கொள்ள நினைக்கும் போலித்தனம் .யாரை எங்கே வைப்பது என்றே யாருக்கும் தெரியல்லே .அட! அண்டங்காக்கைக்கும் குயில்களுக்கும் பேதம் புரியல்லே!

    //திருமலை ரகசியம்//
    There is no such a movie..I think you meant 'Thangamalai Ragasiyam'

    கடமையை செவ்வனே செய்ததற்கு பாராட்டு :))

    சிலருக்கு காக்கைக்கூட்டம் (அவர் மொழியிலே) அருகிலிருக்கவேண்டுமென்ற எதிர்பார்ப்பு . காக்கைகளுக்கு சோறு இருக்குமிடமே சொர்க்கம். தைரியலக்ஷ்மியிடமிருந்து சாணக்கியனை நோக்கிவர ஒரு வாய்ப்பு. அதற்குமேல் இந்த கருமத்தைப்பற்றி சொல்ல என்ன இருக்கிறது?


    எனது கேள்விகள் இங்கே..
    http://lldasu.blogspot.com/2006/07/blog-post_23.html

    ---இராம்குமாருக்கு கூச்சசுபாவம் இருக்கலாம், குடும்பத்துல குழப்பத்தை உண்டுபண்ணிடாதையா...---

    சந்திரமுகி வெற்றி விழாவில் இல்லாத கூச்சம்; இப்பொழுது வந்திருக்குமோ ;-) அவங்க குடும்ப விவகாரத்தில் நான் எதுக்கு மூக்கை நுழைக்கணும் :-)


    ----ரஜினிராம்கியிடமிருந்து ஒரு பின்னுட்டம் நிச்சயம்.---

    தங்கள் ஞாப திருஷ்டியை யாம் மெச்சுகிறோம்.


    ---கமலஹாசன் உண்மையாகவே சிவாஜி அவர்களை நேசித்தார்.----

    பல பேட்டிகளில் தங்கள் பாசத்தையும் உறவையும் பகிர்ந்துள்ளார். கலைஞர் சிலை திறப்பதால், அந்த விழாவிற்கு ஆஜர் கொடுக்கவென்று சிலர் வந்தது போல் பட்டது. பாண்டிச்சேரி விழாவிற்கு செல்ல முடியாததற்கு நிச்சயம் தவிர்க்கவியலாத காரணங்கள் இருந்திருக்கும்.

    ---I like Sivaji's acting so it is great to have a statue for him.---

    100/100% நன்றி சிறில்.

    ராம்கி, விக்னேஷ், இளவஞ்சி, நாகை சிவா, முத்து, தாஸு __/\__

    ---..I think you meant 'Thangamalai Ragasiyam' ---

    நன்றி. கூகிள், ஐ.எம்.டி.பி. உதவி இல்லாமல் எழுதினால் நிலைமை இப்படி ஆகி விடுகிறதே :-)

    இளவஞ்சி...

    // தனக்கு உவந்ததை 'உலகத்தின் கருத்து' என்று genralize செய்வது //

    -----இது கொஞ்சம் ஓவருங்க! :))) -----

    ஆகஸ்ட் 2, 2006 தேதியிட்ட இந்தியா டுடேவில் அட்லாண்டிக்குக்கு அப்பால் பற்றிய தன் கருத்துகளை பவுத்த அய்யனார் விம்ர்சனத்தில் இருந்து:

    இணையத்தில் எழுதுபவர்களுக்கு உள்ள பெரிய வசதி, அச்சு இதழ்களைப் போல படைப்புகளை தேர்வு செய்து வெளியிடுவது கிடையாது. அதனால் இணைய இதழ்களில் வெளிவரும் கதைகளும் கவிதைகளும் இருபது ஆண்டுகளுக்கு முந்தைய வாசனை அடிக்கின்றன.

    கருத்துரையிடுக

    புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு