ஆறு வரிகளில் கதை சொல்ல அழைக்கிறார் எர்னஸ்ட் ஹெமிங்வே. அவர் எழுதியது:
‘For sale: baby shoes, never used.’
சுஜாதா 55 வார்த்தைகளில் சிறுகதை எழுத சொன்னது அந்தக் காலம். ஆறு வரி கதைகள் நிகழ்காலம்.
என்னுடைய முயற்சிகள் சில: வலைப்பதிவுக்குத் தடை. இந்தியாவில் 52.6% உற்பத்தி பெருக்கம்.
தெருப்பொறுக்கி என்னையே முறைக்கிறான். நான் அவளை முறைக்கிறேன்.
"என்ன வேண்டும்?" 'புகழ்' "ஏன்?" 'அதுதான் தெரியவில்லை.'
கடவுள் மறுப்புக் கொள்கையை எழுதியவனை தரிசிக்க தடியடி.
சினிமா பார்ப்பதற்கு முன் IMDB.com படிக்கிறான் விமர்சகன்.
ரயிலில் குளிரூட்டு சுணங்கல். வாயிற்கதவைத் திறந்தவனுக்கு மோட்சம்.
குண்டுவெடிப்பு - 250 இறப்பு: தலைப்புச்செய்தி. பட்டினி சாவு?
Shamash Says... : "The Hemingway Challenge" வலைப்பதிவில் இருந்து சில ஆங்கில ஆறு வரிக் கதைகள்:
“Forgive me!” “What for?” “Never mind.” – John Updike
Eyeballed me, killed him. Slight exaggeration.-- Irvine Welsh
Satan- Jehovah- fifteen rounds. A draw. – Norman Mailer
I saw. I conquered. Couldn’t come. - David Lodge
Oh, that? It’s nothing. Not contagious.- Augusten Burroughs
She gave. He took. He forgot – Tobias Wolff.
வந்தியத்தேவன் முன்னர் எழுதிய 55 வார்த்தை கதைகள்: தொடரும் குளம்பொலி!!! வந்தியத்தேவன் :: வீட்டுக்கு வீடு | நிதர்சனம் | எங்கள் அண்ணா | தனயன்
Short Stories | Six Word | தமிழ்ப்பதிவுகள்
ஆறு வார்த்தை கதைங்க. ஆறு வரி கதைனு தப்பா சொல்லிட்டீங்களே!
ஆனைக்கு அடி சறுக்கும் ;)
//தெருப்பொறுக்கி என்னையே முறைக்கிறான். நான் அவளை முறைக்கிறேன்.//
பக்காவாக இருக்கு
//கடவுள் மறுப்புக் கொள்கையை எழுதியவனை தரிசிக்க தடியடி.//
சும்மா நச்சுனு இருக்கு
சொன்னது… 7/20/2006 09:18:00 AM
பா.பா,
ச்சும்மா நானும் எழுதலாம்னு நினைச்சப்ப உடனே தோன்றியது.
1. திரையரங்கில் குண்டுவெடிப்பு. நல்லவேளை எனக்கு டிக்கெட் கிடைக்கவில்லை
2. இந்தியா கிரிக்கெட்டில் ஜெயித்தது. நான் பரிட்சையில் தோற்றேன்.
பெயரில்லா சொன்னது… 7/20/2006 10:09:00 AM
தமிழில் வலைப்பூக்கள்.
இங்கேயும் அடிதடஇ.
தேடுகிறேன் நிம்மதி.
சொன்னது… 7/20/2006 10:23:00 AM
----ஆறு வார்த்தை கதைங்க. ஆறு வரி கதைனு----
ஓ! :-( முதலாளி வந்துடுவாரோ என்னும் அவசரத்தில் எழுதினால், எது உருப்படுகிறது! நன்றி நாகை சிவா
----ஆனைக்கு அடி சறுக்கும் ----
நான் அவ்வளவு குண்டு இன்னும் ஆகலியே ;-)
சொன்னது… 7/20/2006 10:52:00 AM
விக்னேஷ், இரண்டுமே மிக சிறப்பாக அமைந்திருக்கிறது. பகிர்வுக்கு நன்றிகள்
சொன்னது… 7/20/2006 10:53:00 AM
குறும்பா(haiku) கொத்தனார் :-)
உங்களுடைய ஆறு வார்த்தையை பார்த்து உதித்தது...
பதவி உயர்வு பூங்கொத்து. குல்கந்து கேக்-கில் வண்டு.
சொன்னது… 7/20/2006 11:02:00 AM
தியேட்டரில் கட்டவுட்டிற்கு பாலாபிஷேகம். பிள்ளையோ அழுது பசியால்.
விக்னேஷ், நல்லா வந்திருக்கு உங்க கதைகள். மேலே எழுதியது அதன் தாக்கமே.
சொன்னது… 7/20/2006 12:34:00 PM
நன்றி பா.பா & இ.கொ,
நீங்கள் கொடுத்த தைரியத்தில் மனதில் தோன்றிய இன்னும் நாலு கதைகளை தனிப்பதிவாக ( ரொம்ப காலமாய் ஆறு பதிவுக்கு என்ன செய்வது எனத்தெரியாமல் முழித்துகொண்டிருந்தேன் ;)- ) செய்திருக்கிறேன். ஏண்டா பாரட்டினோம்கிற ரேஞ்சுக்கு இருக்கிறதானு படிச்சிட்டு சொல்லுங்க.
http://vicky.in/dhandora/?p=168
பெயரில்லா சொன்னது… 7/20/2006 09:58:00 PM
நன்றி நம்பி. ஒரு வரையறைக்குள் (வெண்பா அளவுக்கு படுத்தாமல்) எழுத சொல்கிறார்கள்.
---Isn't we call them 'kavithai'---
Ernest Hemingway நாவலாசிரியர். ஆறு வார்த்தைகளில் கதை சொல்வது கஷ்டமான விஷயம் தான். நான் எழுதியது சில முயற்சிகள் :-D
- பழமொழியை உல்டா செய்வது : யானை வரும் பின்னே; மணியோசை வரும் முன்னே ==> "சினிமா பார்ப்பதற்கு முன் IMDB.com படிக்கிறான் விமர்சகன்."
- செய்திகளைப் பகிடி செய்வது : "வலைப்பதிவுக்குத் தடை. இந்தியாவில் 52.6% உற்பத்தி பெருக்கம்."
- வெகுசனப் பத்திரிகைகளில் வரும் நீதியைப் புகட்டும் ஒரு பக்க கதைகள் : "தெருப்பொறுக்கி என்னையே முறைக்கிறான். நான் அவளை முறைக்கிறேன்."
- அறிக்கை விடுவது; கவர்ச்சியான தலைப்பு; உளவியல் சிந்தனை என்று நீங்களும் அடர்த்தியான ஆறு வார்த்தை கதை எழுத முயற்சிக்கலாம் ;-)
உங்களின் முயற்சியை இப்படி மாற்றி வைத்துப் பார்க்கத் தோன்றியது...
ஹைக்கூ:
1. ஊர், பெயர் என்ன
என்று கேட்டவன்
அனானிமஸ்
2. 'அமெரிக்கா சுதந்திர நாடல்ல' எழுதினான்
தமிழகத்து இந்தியன்
(இன்றைய 'குறும்பா'க்கள் தன்னிலை அனுபவம் என்பதை விட பொருளின் குணாதிசயங்களையும் சமூக விமர்சனங்களையும் சொல்லுகிறது.)
ஆறு வார்த்தைக் கதை:
மீட்டிங் அறுக்கிறது. 'அரசு ஊழியர்கள் பொறுப்பற்றவர்கள்' - வலைப்பதிந்தேன்.
சொன்னது… 7/21/2006 06:32:00 AM
குறும்பாக் கொத்தனார்?!
கவிதை அலர்ஜி.
குறும்பா பாபா?
அப்பப்பா எத்தனை பா?
பாவம்ப்பா பா விட்டுடப்பா .
விக்னேஷ் பதிவிலிட்டது
பாபா போட்டது பதிவு. நட்சத்திரம் செய்தார் ஹைஜாக். :)
விக்னேஷ், இதுவும் தமாஷ்தான். இன்னும் கோபம் வேண்டாம்.
சொன்னது… 7/21/2006 08:36:00 AM
ஊர்கூடி தேரிழுக்க நிலைக்குவந்தது தேர்
ஊர்சேரி மக்கள்???
சொன்னது… 7/21/2006 08:54:00 AM
இந்திய பட்டம் பறக்கிறது அமெரிக்க வானில் :))
சொன்னது… 7/21/2006 09:24:00 AM
டாவின்ஸி கோடு போல இதோ என்னுடைய பங்களிப்பு:
ஈழததமிழர் படும்பாடு; வயிறு எரிகின்றது பிரேஜில் தோற்றது.
அல்லது
ஈழததமிழர் படும்பாடு; வயிறு எரிகின்றது ஜிடேன் தீவிரவாதி.
சரக்குமார் விஜய'சூர்ய கமலஹாஸன் நெப்போலியன் கும்பகோண உதிர்மொட்டுக்கள்.
தீட்ஷிதர் போட்டுத்தாக்கு. கண்டதேவி கூனிக் குறுகி உள்ளேன்.
நம்பிக்கையின்பாற்பட்டு அமெரிக்காவை விட்டு இந்தியாவில் சிறுதொழில் செய்கின்றேன். தேசபக்தி!
சங்கரமடம் சந்தி சிரிக்கின்றது. முழுப் பூசணிக்காயாய் ஆதீனங்கள்.
கண்ட(தேவி)நாள் முதலாய் காதல் பெருகுதடி... கையினில் திருப்பாச்சேத்தி
படிக்கப்போனேன். துரத்தி அடித்தது. பாபா பதிவின் லின்ங்குகள்.
குலைகுலையாம் மந்திரிக்காய் தொலைஞ்சு போச்சு பத்ரி லின்ங்காய்
மூனா கானா லேனா சூனா செந்தமிழில் முகலேசு
போகப் போக உங்களுக்கே தெரியும் போய் வருகின்றேன்.
(கடேசி ச்சும்மா) வர்ட்டா...
சொன்னது… 7/21/2006 11:31:00 AM
//நம்பிக்கையின்பாற்பட்டு அமெரிக்காவை விட்டு இந்தியாவில் சிறுதொழில் செய்கின்றேன். தேசபக்தி!//
ஏழாகிப்போச்சே... எழவு...
இப்பிடி வைச்சுக்கலாம்...
அமெரிக்காவை விட்டு இந்தியாவில் சிறுதொழில் செய்கின்றேன். தேசபக்தி!
சொன்னது… 7/21/2006 11:56:00 AM
பாபா,
என் 2 சென்ட்டுகள்.
காலேஜில் டாவடித்தது பாப்பாத்தியை. இன்டர்நெட்டில் எதிர்ப்பது பார்ப்பனியத்தை.
ஊர் ரெண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் - நியூட்ரல் ஜல்லி.
Play the opponent, not the board - Tamil Blogdom
(Note: Play the board, not the opponent is a saying in Chess)
- பி.கே. சிவகுமார்
சொன்னது… 7/21/2006 12:08:00 PM
இன்னும் சில: (கதையா கவிதையா உடைத்துப் போட்ட உரைநடையா என்று தெரியாது. வெள்ளி பிற்பகல் தூக்கத்தைக் கெடுக்கும்விதமாக முயன்றது.)
வலைப்பதிவெழுதிச் செத்துப் பிழைக்கிறான் அனுதினமும்
ஸ்ரீரங்கநாதருக்கும் தில்லையம்பலத்தாருக்கும்
பீரங்கி வேண்டாம்
பிரபந்த-திருவாசகம் போதும்
(குறிப்பு: சரியான வரிகள் நினைவில் இல்லை. ஆனால், ஸ்ரீரங்கநாதரையும் தில்லையம்பலத்தாரையும் பீரங்கியில் பிளக்கும் நாள் எந்நாளோ என்ற பொருளில் பாரதிதாசன் எழுதிய கவிதையொன்று இருக்கிறது.)
உள்குத்து வெளிக்குத்து
காணாமல் போனது
பொதுக்கருத்து
அரசியல் பேசமாட்டார்
அரசியல் செய்வார்
வலைப்பதிவு நிபுணர்
கருத்து கந்தசாமிகளுக்கு இரண்டு பக்கமும் இடி.
கருத்துள்ள பதிவைவிட
கமெண்ட்டுள்ள பதிவே மேல்.
கொஞ்சம் சினிமா
கொஞ்சம் அரசியல்
தமிழ்வலைப்பதிவு வளர்கிறது
ஆறு வார்த்தைகளை அடுக்கினால் கதை கவிதை இன்னபிற ரெடி.
பத்துப் பதிவெழுதிய பின்னே எல்லாரும் எழுத்தாளர்.
இரண்டாயிரமாண்டு செத்துக்கிடந்த தமிழை இன்டர்நெட்டில் வேகமாக வளர்க்கிறார்.
சொன்னது… 7/21/2006 01:41:00 PM
முடிந்தது போராட்டம். இனி சிவாஜி தலையிலும் எச்சம்!
இப்போதான் தினமலர் திறந்தேன். முதல் படமே நடிகர் திலக சிலை திறப்பு விழா பற்றித்தான். அதனால் வந்தது....:)
சொன்னது… 7/21/2006 02:07:00 PM
----முடிந்தது போராட்டம். இனி சிவாஜி தலையிலும் எச்சம்! ----
தவறாக எடுத்துக் கொள்ள மாட்டீர்கள் என்னும் தைரியத்தில் சொல்கிறேன். முன்னதை விட பன்முனைப்போடு வெளிவந்திருக்கிறது.
படித்தவுடன் எனக்குத் தோன்றியது:
புத்தன் யேசு காந்தி பிறந்தது எதற்காக? பெற்றோருக்காக!
சொன்னது… 7/21/2006 02:21:00 PM
----காலேஜில் டாவடித்தது பாப்பாத்தியை. இன்டர்நெட்டில் எதிர்ப்பது பார்ப்பனியத்தை.---
இதற்கு பொருத்தமாக வெளிவர முடியாமல் பொட்டிக்குள் இருக்கும் படத்தின் பாடல்: Black Friday - Music India OnLine :: Badshah In Jail
----ஸ்ரீரங்கநாதரையும் தில்லையம்பலத்தாரையும் பீரங்கியில் பிளக்கும் நாள் எந்நாளோ என்ற பொருளில் பாரதிதாசன----
ஆம் : ஹரிமொழி - கவிதைத் தொகுப்பும் இலக்கிய (இளகிய?) விமரிசனங்களும்
----அரசியல் பேசமாட்டார்; அரசியல் செய்வார்; வலைப்பதிவு நிபுணர்---- என்பதற்கு ஒப்ப :
MAANIDAL - மானிடள்: April 2006: "Ordnance என்ற ஆங்கிலச் சொல்லிற்கு பீரங்கி, சகடத்தின் மேல் ஏற்றப்படும் பெரிய இயந்திரத்துப்பாக்கி, படைக்கலச் சாலையரங்கம் என்ற பொருள்களைத் தருகிறது சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலத் தமிழகராதி"
அறிக்கைகளாக பிடித்தவை:
பத்துப் பதிவெழுதிய பின்னே எல்லாரும் எழுத்தாளர்.
-----இரண்டாயிரமாண்டு செத்துக்கிடந்த தமிழை இன்டர்நெட்டில் வேகமாக வளர்க்கிறார்.-----
இணையம் உளவாக இண்டெர்னெட் கூறல்
கமர்கட் இருக்க கஷாயம் கவர்ந்தற்று :-)
சொன்னது… 7/21/2006 02:38:00 PM
குசும்பா,
'கருத்துள்ள பதிவைவிட கமெண்ட்டுள்ள பதிவே மேல்.' என்னும் பிகேயெஸ் கருத்தொப்ப, உள்குத்தியதற்கு நன்றி.
'கதை கேட்கப் போனேன்; குசும்பு வாங்கி வந்தேன்?!'
----சரக்குமார் விஜய'சூர்ய கமலஹாஸன் நெப்போலியன் கும்பகோண உதிர்மொட்டுக்கள்.----
'ரஜினியை எப்படி விட்டு விட்டீர்கள்; ஓ! சிவாஜி?'
----சங்கரமடம் சந்தி சிரிக்கின்றது. முழுப் பூசணிக்காயாய் ஆதீனங்கள்.----
'அனுராதாவுக்கும் ரமணனுக்கும் ஒரு வார்த்தைதான் வித்தியாசம். பின்னெழுத்துக்கள்'
----குலைகுலையாம் மந்திரிக்காய் தொலைஞ்சு போச்சு பத்ரி லின்ங்காய்----
'தனிமனிதத் தாக்குதல். பின்னூட்ட அங்கீகரிப்பு. அரிப்பு வாதம்'
சொன்னது… 7/21/2006 02:45:00 PM
//காலேஜில் டாவடித்தது பாப்பாத்தியை. இன்டர்நெட்டில் எதிர்ப்பது பார்ப்பனியத்தை.//
:-)
சொன்னது… 7/21/2006 04:23:00 PM
இன்னும் கொஞ்சம்: (எல்லாரின் ஆறுவரி கதை/கவிதைகளையும் தொகுத்து ஒரு பதிவாக இடுவது குறித்து யோசிக்கலாமே.)
எக்ஸ்ஸைப் பரிசோதித்த டாக்டர் "வலைப்பதிவு சின்ட்ரோம்" என்றார்.
(விளக்கம்: எக்ஸ் கதாபாத்திரத்தின் பெயர்)
அவளைப் பார்த்தான். அவளும் பார்த்தாள். பயந்து பின்வாங்கினான்.
பிள்ளைகள் முன்னே சண்டையிட்டார்கள். படுக்கையில் கொஞ்சிக் கொண்டார்கள்.
கைகுலுக்கியபின் அமைதியாக ஆடினர் சதுரங்கத்தை. அரசியல்வாதி ஆச்சரியப்பட்டார்.
பீர்பாட்டிலைக் கவிழ்த்து வைத்தான். பேப்பர் நிரம்பியது எழுத்துகளால்.
சிரித்தழுதோடியாடி திரை நிரைத்தான். தேறாதென்றார் இருக்கையிலிருந்த படி.
- PK Sivakumar
சொன்னது… 7/21/2006 05:01:00 PM
திருத்திய வடிவம்:
கல்லூரியில் பாப்பாத்தியை டாவடித்தான். இன்டர்நெட்டில் பார்ப்பனியத்தை எதிர்க்கிறான்.
(இப்போது இது கதையாகிறது. முன்னர் எழுதியது பல கருக்களாகவும் அறிக்கைபோலவும் தோன்றுவது உண்மைதான். அவற்றையும் இப்படி மாற்ற முடியும்.)
உதாரணமாக பத்துப் பதிவெழுதிய பின்னே எல்லாரும் எழுத்தாளர் என்பதைப் பின்வருமாறு மாற்றலாம்.
பத்துப் பதிவு எழுதினார். எழுத்தாளரானார்.
அதேபோல,
ஊர் இரண்டுபட்டது. கூத்தாடி கொண்டாடினார். நியூட்ரல் ஜல்லியடித்து.
கருத்தையல்ல எதிராளியை ஆடினார். வலைப்பதிவு கூட்டம் கைதட்டியது.
ஸ்ரீரங்கநாதருக்கும் தில்லைநடராசருக்கும் பீரங்கி வேண்டாமென்று பிரபந்த-திருவாசகம் பாடினார்.
அவர் அரசியல் பேசமாட்டார். செய்வார். வலைப்பதிவு நிபுணர்.
கருத்து கந்தசாமியானார். இரண்டு பக்கமும் இடி வாங்கினார்.
ஆறு வார்த்தைகளை அடுக்கினார். கதை கவிதை ரெடி.
திருத்திய வடிவங்களைக் கணக்கில் கொண்டு விமர்சிக்குமாறு நண்பர்களை வேண்டுகிறேன்.
அன்புடன், பி.கே. சிவகுமார்
சொன்னது… 7/21/2006 05:11:00 PM
"ஸ்ரீரங்கநாதருக்கும் தில்லைநடராசருக்கும் பீரங்கி" முழங்கினார். இப்போதைக்கு பிரபந்த-திருவாசகம் பாடினார்.
பெயரில்லா சொன்னது… 7/21/2006 05:47:00 PM
பிள்ளைகள் முன்னே கொஞ்சிக் கொண்டார்கள். படுக்கையில் சண்டையிட்டார்கள் (அமெரிக்க முறை!)
பெயரில்லா சொன்னது… 7/21/2006 05:49:00 PM
//----சரக்குமார் விஜய'சூர்ய கமலஹாஸன் நெப்போலியன் கும்பகோண உதிர்மொட்டுக்கள்.----
'ரஜினியை எப்படி விட்டு விட்டீர்கள்; ஓ! சிவாஜி?'//
//----குலைகுலையாம் மந்திரிக்காய் தொலைஞ்சு போச்சு பத்ரி லின்ங்காய்----
'தனிமனிதத் தாக்குதல். பின்னூட்ட அங்கீகரிப்பு. அரிப்பு வாதம்'//
தவறான தகவல்களைத் தந்தற்காக "பொது மன்னிப்பு" பாபா கேட்க வேண்டும். ஏன் கேட்க வைப்பேன் என்று "அன்புடன்" கேட்டுக் கொள்கிறேன்.
சொன்னது… 7/21/2006 06:03:00 PM
வளர்கிறது:
தேன்கூடு போட்டியிலும் இடஒதுக்கீடு தேவை என்றார் பேராசிரியர்.
காப்பிரைட் வழக்கறிஞர் சட்டப் புத்தகத்தை ஜெராக்ஸ் எடுத்தார்.
அனுமதி வாங்காமல் பிரசுரமாவென அழுதார். அடுத்தவர் செய்தபோது.
ஊடகங்கள் கவனிக்கவில்லை. புலம்பினார். அதையும் யாரும் கவனிக்கவில்லை.
(வளரலாம்.)
சொன்னது… 7/21/2006 06:12:00 PM
பிகேஎஸ்ஸிற்குப் பிடித்தது பித்து. பாவம் ஆறு வார்த்தைகள்!
பிகேஎஸ், சும்மா ஜாலிக்கு. கோச்சுக்காதீங்க, நீங்க எழுதறது நல்லாவே இருக்கு. :)
இன்னைக்கு பூரா நானும் இப்படித்தான் இருக்கேன். :D
சொன்னது… 7/21/2006 06:32:00 PM
தொடர்கிறது...
வன்னிய ஓட்டு அம்பிக்கு இல்லை. அம்பி-சாமி வன்னியருக்கெதற்கு?
அதீதமாக உணர்ச்சி வசப்பட்டதால் அய்யாவும் பேசினார் ஆங்கிலத்தில்.
கவலைப்படாதீர்கள் உங்கள் கருத்து சுதந்திரம் மாடரேஷன் செய்யப்படுகின்றது.
உரிக்க உரிக்க ஒன்றுமேயில்லை; போடா வெங்'காயம்' என்றார்கள்
கண்ணகி திரும்பி வந்தாள்; காணாமல் போனது சுனாமி
தொடரலாம்...
சொன்னது… 7/21/2006 06:52:00 PM
பிள்ளைகளிடம் கோபித்து வெளிவந்தான். பக்கத்து வீட்டுக்காரியிடம் சிரித்தான்.
கவிதை எழுதினான். கதைபோல. கதையெழுதினான். கட்டுரை என்றார்கள்.
இலக்கிய விசாரம் செய்தார்கள். இலக்கிய அனுபவம் தொலைந்தது.
ராத்திரி புணர்ந்த முகத்தைக் காலையில் காணச் சகிக்கவில்லை.
- PK Sivakumar
சொன்னது… 7/21/2006 07:24:00 PM
http://pksivakumar.blogspot.com/2006/07/blog-post_21.html
சொன்னது… 7/21/2006 07:32:00 PM
sir kalkkureenga..nan ungal pakkathai adiakdi padipane..aanal pinnotam ida thona villai..
ippodhu idugirane..valaipadhivargalil ungalukku than mudhalidam..
nandri thodarndhu eludhungal.
சொன்னது… 7/21/2006 11:14:00 PM
karthick!
ungkalathu pinnUttaam enakku ittathu thaaNe? :-)
Kusumban
சொன்னது… 7/22/2006 08:25:00 AM
பிற்சேர்க்கை:
ஜூலை 22, 2006
வினவியரை "மெண்டலா" என்று கேட்டவரைப் பரிதாபமாகப் பார்த்தனர்.
பன்னிரண்டாம் திருமண நாள். முடிந்தவுடன் நினைவுக்கு வந்தது.
சொன்னது… 7/22/2006 09:46:00 AM
sorry for the typo. correction.
வினவியவரை "மெண்டலா" என்று கேட்டவரைப் பரிதாபமாகப் பார்த்தனர்.
சொன்னது… 7/22/2006 10:24:00 AM
More:
மனைவி பிரசவவலியில் துடித்தாள். நர்ஸ் அழகாக இருக்கிறாள்.
காசுக்கேற்ற சுகம் கிடைக்க வயகரா சாப்பிட்டுப் போனான்.
அவர் செத்துப் போனார். எல்லாரும் பாராட்டினார்கள்.
படிப்பு. அழகு. திமிர். எனக்கு அவளைப் பிடிக்கவில்லை.
அம்மாவுக்கும் மனைவிக்கும் சண்டை. அவன் வாக்கிங் போனான்.
பின்னூட்டம் நூறாகியது. ஐம்பது அவரது. ஆனாலும் மகிழ்ந்தார்.
பிள்ளைகள் தூங்கியபின் நெருங்கினாள். டயர்டா இருக்கு என்றான்.
நினைத்ததை எழுதினார். பிரபலமானார். பிறர் நினைப்பதை எழுதினார்.
அவன் வலைப்பதிவில் பிஸி. அவள் 'சாட்"டில் பிஸி.
மேலதிகாரி திட்டினார். வெளியே வந்தான். செக்ரட்டரியிடம் வழிந்தான்.
ஆறு வார்த்தையில் நூறு எழுதினான். எதிலும் கதையில்லை.
சொன்னது… 7/22/2006 02:02:00 PM
இரு பின்தொடர் சுட்டி:
ஆறு வார்த்தைக் கதைகள்
vicky.in/dhandora : For sale: baby shoes, never used
சொன்னது… 7/22/2006 07:23:00 PM
ஆங்கிலப் பதிவில் இருந்து:
Lost in Media: The Hemingway Challenge
Nithya said...
She came. She kissed. I blushed.
Wife calls husband. Phone with mistress.
Arun J said...
I thought she loved me! "who?"
Boston Bala said...
I saw. She kissed. I killed. :-)
Pager vibrates. Wife construes work. Mistress.
-----what is the intention of a six word story---
Just SMS. It's Free. Blogs Blocked. ;-)
priya said...
I stared;
He sensed;
loved
சொன்னது… 7/22/2006 07:28:00 PM
----ungkalathu pinnUttaam enakku ittathu thaaNe----
----sir kalkkureenga..---
ஓக்க மெய்ப்பு பார்க்கிறேன்.
எனக்கு 'என்பது' எங்களுக்கு என்று ஃப்ரீமேஸனார், பிகேயெஸ், குசும்பன், விக்னேஷ், நம்பி, மதுமிதா, கோவியார், நா.சி., நம்பி, (யாரையாவது விட்டுட்டேனா... இந்த ஆஸ்ச்கார் விருது விழாவில் நாய்க்குட்டி, மனைவி, மகள், எதிர் வீட்டு ம்யூஸ் (இது அந்த ம்யூஸ் அல்ல (போலிக்காக அதை சொல்லி வைக்கிறேன்) அதற்காக அவரை தவிர்க்க வில்லை (ம்யூஸுக்காக சொல்லி வைக்கிறேன்)), டைனோ போன்ற வாசகப் பெர்ருந்தகைகள்) என்று அவர்களையே சேரும் :-)
(இந்தக் கருத்து வேண்டாம் என்று கணினி இரு முறை தொய்ந்து போனது. -->
கணினி தொய்ந்தது; வயாக்ரா திறந்தேன். எஃப்டிவி ரிப்பேர்.)
சொன்னது… 7/22/2006 07:35:00 PM
பிகேயெஸ்: கதை என்று நான் கருதுபவை (மிகவும் விரும்ம்பியது தடி எழுத்தில்)...
பிள்ளைகளிடம் கோபித்து வெளிவந்தான். பக்கத்து வீட்டுக்காரியிடம் சிரித்தான்.
ராத்திரி புணர்ந்த முகத்தைக் காலையில் காணச் சகிக்கவில்லை.
பன்னிரண்டாம் திருமண நாள். முடிந்தவுடன் நினைவுக்கு வந்தது.
மனைவி பிரசவவலியில் துடித்தாள். நர்ஸ் அழகாக இருக்கிறாள். என்று தொடங்கும் 'மேலும்...'இல் அனைத்துமே நன்றாக வாய்த்திருக்கிறது. நன்றி!
பிற விமர்சனங்கள்:
தேன்கூடு போட்டியிலும் இடஒதுக்கீடு தேவை என்றார் பேராசிரியர்.
நான் (கொலை செய்து) மாற்றினால் - சப்தஸ்வரங்கள் முடிவுகளிலும் இடஒதுக்கீடு தேவை: பின்க் ஃப்ளாய்ட்
காப்பிரைட் வழக்கறிஞர் சட்டப் புத்தகத்தை ஜெராக்ஸ் எடுத்தார்.
பதிப்புரிமை அத்துமீறலா? காப்பிரைட் சட்டப்புத்தகம் ஜெராக்ஸ் தேவை.
ஊடகங்கள் கவனிக்கவில்லை. புலம்பினார். அதையும் யாரும் கவனிக்கவில்லை.
ஊடகங்கள் அசட்டை. புலம்பினார். உபசரணையுண்டு; தனியே தொடர்ந்தார்.
கவிதை எழுதினான். கதைபோல. கதையெழுதினான். கட்டுரை என்றார்கள்.
நெடுங்கவிதை விமர்சனம் : கதைபோல. அனுபவக்கதை : விமர்சகன் விடவில்லை
(என்னைத்தான் என்று வைத்துக் கொள்ளுங்கள்)
சொன்னது… 7/22/2006 08:04:00 PM
சுரேஷ் (penathal Suresh) - ஆறு வார்த்தையில் கதைகள் - என் முயற்சி (22 Jul 2006)
சொன்னது… 7/22/2006 08:06:00 PM
குசும்பா...
பத்ரி தன்னுடைய வலைப்பதிவில் இருந்து, தமிழ்ப்பதிவுகளுக்கான கிடங்கை காலி செய்ததை தற்போதுதான் அவதானிக்கிறேன். மன்னிக்க
(இங்கே ஒரு சிரிப்பான் போட்டு என்னுடைய மன்னிப்பை மன்னன் ரஜினியை மாதிரி மீசைத்தட்டிக் கொள்ள ஆசைதான்... இருந்தாலும், ரஜினி என்பவரை தங்கர் பச்சான் முதல் கவனம் தேவைப்படும் பதிவர் வரை தேவைக்கேற்ப தலைப்பு முதல் உள்ளடக்கம் வரை ஈர்த்துக் கொள்வதால், அவரை விட்டு விடுவோம்)
பிகு: கஷ்டப்பட்டு 50-க்கு முக்கு முனகிறேன். அடுத்ததில், உங்கள் குறுங்கதைகளை அலசுகிறேன்!
சொன்னது… 7/22/2006 08:24:00 PM
வன்னிய ஓட்டு அம்பிக்கு இல்லை. அம்பி-சாமி வன்னியருக்கெதற்கு?
'மற்ற ஜாதி ஓட்டுக் கிடைக்குமா?' பரிசம் போட்டான்.
அதீதமாக உணர்ச்சி வசப்பட்டதால் அய்யாவும் பேசினார் ஆங்கிலத்தில்.
கருத்து சேரியமும் எண்ண வீரியமும் தேவை. எடு ஆங்கிலத்தை.
கவலைப்படாதீர்கள் உங்கள் கருத்து சுதந்திரம் மாடரேஷன் செய்யப்படுகின்றது.
'அருமை!' உடனடியாக வரப்பெற்றது. 'உவ்வேக்' கிடப்பில் போடப்பட்டது.
உரிக்க உரிக்க ஒன்றுமேயில்லை; போடா வெங்'காயம்' என்றார்கள்
பத்ரி குறுங்கதை புரியவில்லை; பொறிப்புரை சரணடைந்தான் பயந்தாங்கொள்ளி.
கண்ணகி திரும்பி வந்தாள்; காணாமல் போனது சுனாமி
'சுனாமி பார்வையிட அமைச்சர் தாய்லாந்து பயணம்'. கோடை.
சொன்னது… 7/22/2006 08:35:00 PM
பாபா,
மன்னிப்பெல்லாம் எதற்கு? சம்பந்தப்பட்ட வரிகளை நீக்கியிருந்தாலே போதுமே :-)
எனக்கென்னமோ ஹெமிங்வே'ன்னா உருகுவே, பராகுவே மாதிரி ஏதோ ஒரு ஊரு பேருன்னுதான் நெனைச்சிக்கிட்டு இருந்தேன். என்னயவே ஆறு வார்த்தையில கதை, அதுவும் கலர் கோடு போட முடியாமல் எழுத வைத்ததற்கு மிக்க நன்றி...
என்ன சாரே அரை சதம் என்ன??? டெண்டுல்கரோட அதிசயமான ரெட்டை சதமடிப்போமே !!! பிகேஎஸ் மனசு வைக்க வேண்டும் ;-)
சொன்னது… 7/23/2006 09:13:00 AM
க்ருபா
Maraththadi : Message: Re: Six Word Stories
Re: Six Word Stories
அட, இது நல்லா இருக்கே!! சரி, நானும் முயற்சிக்கிறேன்.
ஆறு வரிக்கதைகள் என்றாலும் தலைப்பு வைக்கலாம் இல்லையா?
*****************************
விட்டுக்கொடுத்தல்
-------------------------
திருமணம் முடிந்ததும் தொடங்குகியது போட்டி, இருவரும் ஜெயிக்க.
சண்டை
-----------
வெடித்ததும் பாயும் வித்தியாசமான ஏவுகணை, சப்பாத்திக் கட்டை.
காதல் திருமணம்
-------------------------
காதலித்த பெண்ணையே மணமுடிந்தான், உழைப்பிற்கு ஏற்ற கூலி.
Asking out
--------------------
கொண்ட்டாட்ட வாழ்க்கையில் திண்டாட்ட கணங்கள், அத்தனையும் சொர்க்கம்.
க்ருபா
சொன்னது… 7/23/2006 10:39:00 AM
என்னது! 50க்கு முக்கலா? சேருங்கள் சங்கத்தில். 500தான்.
சொன்னது… 7/23/2006 11:02:00 AM
என்னது! 50க்கு முக்கலா? உங்களுக்குமா பின்னூட்டக் கயமைத்தனம்?
சொன்னது… 7/23/2006 11:03:00 AM
என்னது? 50க்கு முக்கலா? போலீஸைக் கூப்பிடுங்கள் வரும்.
சொன்னது… 7/23/2006 11:04:00 AM
என்னது? 50க்கு முக்கலா? அதான் வாந்தாச்சே. வாழ்த்துக்கள்!
சொன்னது… 7/23/2006 11:04:00 AM
ஐம்பதிலும் ஆசை வரவைத்த் இலவசக்கொத்தனாருக்கு __/\__
சொன்னது… 7/24/2006 06:09:00 AM
அடப்பாவி பாபா, நாற்பதுக்கும் மேற்பட்ட ஆறு வார்த்தைக் கதைகளை நான் போட்டேன். ஐம்பது போட்டதற்கு கொத்ஸ் அவர்களுக்கு நன்றியா. உமக்கு இனி ஆறு வார்த்தைகளில் பின்னூட்டம் வர வாழ்த்துகிறேன். (உதாரணம்: "கசுமாலம், இது எல்லாம் என்ன, ஒரு பதிவா", "இன்னும் எவ்ளோ நாளைக்கு காபி பேஸ்ட் செய்வாய்", "எடுத்துப் போட்டது இருக்கட்டும் பாபா, உன் கருத்தென்ன" வகை தொகையறாக்களாக பின்னூட்டம் வரக் கடவது :-) ).
அன்புடன், பி.கே. சிவகுமார்.
PS: Kidding
சொன்னது… 7/24/2006 11:49:00 AM
-----
"கசுமாலம், இது எல்லாம் என்ன, ஒரு பதிவா",
"இன்னும் எவ்ளோ நாளைக்கு காபி பேஸ்ட் செய்வாய்",
"எடுத்துப் போட்டது இருக்கட்டும் பாபா, உன் கருத்தென்ன?
-----
:-))
சொன்னது… 7/24/2006 12:32:00 PM
முன் நவீனத்துவம்:
ஒன்று இரண்டு மூன்று நான்கு ஐந்து ஒன்று
இடை நவீனத்துவம்:
ஒன்று இரண்டு மூன்று நான்கு ஐந்து முப்பத்தாறு
பின் நவீனத்துவம்:
றுன்ஒ றுன்மூ முமுமு டுண் டுண் ஐஐஐ
அறிவியல் புதினம்:
0x1 0x2 0x3 0x4 0x5 0x1
சொன்னது… 7/24/2006 05:27:00 PM
"ஏக் தோ தீன்..." பாடினார். கொளுத்தினார் தமிழ்வெறியர்.
"ஒன்று! மூன்று!! ஆறு!!!" - எண்ணினார் நியாயவிலை அலுவலர்.
தெருவோவியத்தின் மேல் சில்லறை. "ஒன்று, இரண்டு" தேனீரருந்தினான்.
"ஒன்று... இரண்டு" "இன்னிக்கு இனிமேல் கஸ்டமர் வேணாம்."
சொன்னது… 7/24/2006 08:34:00 PM
பின்லாடன்செய்தி மூலைமுடுக்கெல்லாம், ஈழத்தமிழன்செய்தி - ஐயோ நான் பார்க்கவேயில்லை.
சொன்னது… 7/24/2006 08:41:00 PM
பயங்கர வார்த்தை விளையாட்டு நடந்திருக்கே.. ஆளாளுக்கு வார்த்தைக்கு ஒரு குத்து போட்டு விளையாடியிருக்காங்க!!
//இணையம் உளவாக இண்டெர்னெட் கூறல்
கமர்கட் இருக்க கஷாயம் கவர்ந்தற்று :-)//
ஆஹா.. உங்க பதிவைவிட பின்னூட்டங்கள் நல்லாயிருக்கு சில சமயம்.
சொன்னது… 7/24/2006 08:53:00 PM
----உங்க பதிவைவிட பின்னூட்டங்கள் நல்லாயிருக்கு----
;-)))
வாசித்து முடித்தவுடன்... 'செய்தியை விட அனுபவங்கள் பிடித்திருக்கிறது'
சொன்னது… 7/25/2006 06:32:00 AM
2x3x7: Half a dozen
சொன்னது… 8/04/2006 08:29:00 AM
கருத்துரையிடுக