வியாழன், ஆகஸ்ட் 10, 2006

Bojinka

Guardian Unlimited | Special reports | Timeline: Aircraft terror plot

இந்தியா கோக்கில் நச்சுப்பொருள் இருப்பது போல் லண்டனில் இருந்து கிளம்பும் விமானங்களில் அனேக நீராகாரங்களுக்கு தடை. திரவங்களில் வெடிப்பொருள் கலந்து நியு யார்க், வாஷிங்டன் (டிசி), லாஸ் ஏஞ்சலீஸ் நகரத்தின் மேல் பறக்கும் விமானங்களை வெடிக்க வைப்பது திட்டம். இருபத்தி நால்வரை கைது செய்திருக்கிறார்கள்.

தாய்ப்பாலை சுவைத்துக் காட்டி எடுத்து செல்ல வேண்டும். பிறிதொருவருக்கு நஞ்சு கொண்டு சென்றாலும், நாம் மருந்தை உட்கொண்டால் மட்டுமே உள்ளே அனுமதி.

  • அரங்கேறியிருந்தால், 9/11 போல் அலங்காரமாக 8/11 என்று நாமகரணமிட்டு மலர்க்கொத்து இட்டிருக்கலாம்.

  • சென்ற மாதமாக இருந்தால் 'தேன்கூடு - தமிழோவியம்' போட்டிக்கு 'மரணம்' என்று தலைப்பிட்டு செய்திக் கட்டுரை இட்டிருக்கலாம்.

  • பிரிட்டிஷ் ஏர்வேஸில் பயணிக்கும்போது உணவுக்கு முன்பும், உணவருந்தும் போதும், உண்டு களைத்த பின்பும், அனுசரணையாக 'என்ன சரக்கு அடிக்கறீங்க' என்று எத்தனை தர்மபத்தினிகளையும் அப்பிராணி அசமஞ்சங்களையும் படுத்தினார்களோ? அவர்களின் சாபம்தான் ஏவுகணையாக திருப்பி அடித்திருக்கிறது. (BBC NEWS | Science/Nature | Q&A: Liquid explosives)

  • உட்கொண்டாலும் எந்தவித உபாதையும் செய்யாமல்; ஆனால் வெடிக்கத் தகுந்த திரவங்களை இன்னும் 'குழந்தை உணவாக' ஃபார்முலா கண்டுபிடிக்காத 'அறிவியலாளர்கள் முட்டாள்கள்' என்று அல்-க்வெய்தா அறிவித்திருக்காது. (CNN.com - No lotion, long lines in U.S. airports - Aug 10, 2006)

  • இஸ்ரேல், வளைகுடா பக்கம் எண்ணெய் இருப்பதால் பிரச்சினை. அந்த எண்ணெய் கபளீகரம் செய்ய பிரான்சு, இங்கிலாந்து, அமெரிக்கா போட்டி போடுவதால் அங்கும் ஆபத்து. அவ்வப்போது தோன்றும் பஞ்சாப், காஷ்மீரை கணக்கில் எடுக்காவிட்டால் இந்தியாதான் சுகநிவாஸ்.

  • நவம்பர் தேர்தல், புஷ்ஷின் கட்டுக்கதை சூழ்ச்சி, ஈரானுக்கு எதிரான ஆயத்தம், ஹிஸ்பொல்லாவை தவிடு பொடியாக்க, லமாண்ட்டை மட்டம்தட்ட (படிக்க: அமெரிக்க செனட் தேர்தல் - சிறு குறிப்பு - சுந்தரவடிவேல்) என்று அவரவர் விருப்பத்திற்கேற்ப நிலைமையின் தீவிரத்தை வாதம் புரிந்து நீர்க்க வைக்க ஆரம்பித்துவிடலாம். War Room - Salon.com

  • இந்த பதிவின் தலைப்பை தேடுபவர்களுக்காக: The plot, codenamed Bojinka — a play on the Serbo-Croatian word for explosion — by its Pakistani planners (TIME.com: Was the Airline Plot a Rerun? -- Page 1)

  • விமானங்களில் செல்லும் வாய்ப்பு கிடைக்காமல், அமெரிக்க/லண்டன் நகரங்களில் வசிக்காமல், நிறைய நேரம் இருந்து, மேலும் விதவிதமான எண்ணப்பகிர்வுகளைப் படிக்க விரும்பினால்: Slashdot | BBC Reports UK-U.S. Terror Plot Foiled




    | |

  • 12 கருத்துகள்:

    //பிறிதொருவருக்கு நஞ்சு கொண்டு சென்றாலும், நாம் மருந்தை உட்கொண்டால் மட்டுமே உள்ளே அனுமதி. //

    பாபா முத்திரை.

    பாபா,
    லாப்டாப், காமிரா எல்லாம் கைல(Cabin Baggage) எடுத்துப் போகக் கூடாதுங்கிறாங்களே.. உண்மையா?

    (எனக்கு வசதியா) என்னவெல்லாம் எடுத்துப் போகலாம்னு புது விதி ஏதாவது போட்டிருந்தா சுட்டி கொடுங்களேன்..

    சிறில்... குழந்தையுடன் நான் முதல் தடவை சென்ற போது டைலனால் ஜுரம், டைலனால் ஜலதோஷம், டைலனால் அலர்ஜி, டைலனால் மூக்குச்சளி, டைலனால் மூக்கடைப்பு, டைலனால் உடம்புவலி என்று விதவிதமாக எடுத்து சென்றேன். இனி விக்ஸ் ஆக்சன் 500 மாதிரி ஒன்றும்,ஃப்ரான்ச் ஆயில் மட்டுமே கைவசம் வைத்திருக்க வேண்டும். (ப்ரான்ச் ஆயில் என்.எச்சை குடிக்க முடியுமா ;-)

    பொன்ஸ்... சுருங்க சொன்னால், நிலைமை சுமுகமாகும் வரை (அதாவது மக்களும் தாளிகைகளும் மறக்கும் வரை) அமெரிக்காவை விட்டு வெளியில் எங்கும் பறக்க வேண்டாம்.

    போய்த்தான் ஆக வேண்டுமென்றால், இரண்டே இரண்டுக்குத்தான் அனுமதி: பாஸ்போர்ட்/பச்சை அட்டை & பணப்பை.

    (வெளியில் இருந்து பார்த்தாலே தெரியக் கூடிய பை தேவை என்கிறார்கள். பற்பசை, முகப்பூச்சு களிம்பு, சீப்பு எல்லாம் தூரப் போயே போச்சு)

    பிரச்சினை 2005 - ஈராக் ஆரம்பத்தில் எழுதியது: "பொருளாதாரத்தை குலைக்க வேண்டும். அது மக்கள் மத்தியில் அதிருப்தியை தோற்றுவிக்கும். அதனால் அரசின் பலம் வீக்கமடையும். அதிகாரத்தின் நம்பகத்தன்மையும் வீழும். குழப்பத்தை காசு செலவில்லாமல் உருவாக்கலாம். தடுப்பது மிகவும் கஷ்டம். எங்கோ ஒரு பாலத்தை வெடி வைத்து தகர்த்தால் போதும். அனைத்து பாலங்களுக்கும் காவலாளிகளின் தேவை தோன்றும். ஒரு தியேட்டருக்குள் குண்டு வீசினால் போதும். எல்லா பொது இடத்திலும் நுழைவதற்கு முன் சோதனை போடும் அவசியம் உருவாகும்.

    Counterinsurgency Warfare: Theory & Practice by David Galula, 1964"

    //அமெரிக்காவை விட்டு வெளியில் எங்கும் பறக்க வேண்டாம்.//

    கொடுமை கொடுமை.. அவ்வளவு நாள் இருந்தாலும் என்னை உள்ள பிடிச்சு போட்ருவாங்க! :(

    சென்ற மாதமாக இருந்தால் 'தேன்கூடு - தமிழோவியம்' போட்டிக்கு 'மரணம்' என்று தலைப்பிட்டு செய்திக் கட்டுரை இட்டிருக்கலாம்.


    உட்கொண்டாலும் எந்தவித உபாதையும் செய்யாமல்; ஆனால் வெடிக்கத் தகுந்த திரவங்களை இன்னும் 'குழந்தை உணவாக' ஃபார்முலா கண்டுபிடிக்காத 'அறிவியலாளர்கள் முட்டாள்கள்' என்று அல்-க்வெய்தா அறிவித்திருக்காது.

    - Dark Humor :(

    //சென்ற மாதமாக இருந்தால் 'தேன்கூடு - தமிழோவியம்' போட்டிக்கு 'மரணம்' என்று தலைப்பிட்டு செய்திக் கட்டுரை இட்டிருக்கலாம்.//

    இது 'பாலா பஞ்ச்' ரசித்தேன் :)

    Travel Recommendations for Flights Originating in the United States

    * Arrive at the airport at least two hours prior to departure for domestic flights and 3.5 hours for international flights

    * NO LIQUIDS OR GELS OF ANY KIND WILL BE PERMITTED IN CARRY ON BAGGAGE.

    * ITEMS MUST BE IN CHECKED BAGGAGE. This includes all beverages, shampoo, sun tan lotion, creams, tooth paste, perfume, hair gel, and other items of similar consistency. Exception: Baby formula and medicines must be presented for inspection at the checkpoint.

    * Beverages purchased in the boarding area (beyond the checkpoint) must be consumed before boarding because they will not be permitted on board the aircraft.

    * Passengers traveling from the U.K. to the U.S. will be subject to a more extensive screening process at the boarding gate.

    * International passengers be aware that although you may carry laptops, etc. from the United States to the UK, all carry-on luggage is prohibited on flights originating in the UK

    Cooperate with security officials and be prepared for security screening
    * Pack lightly - use clear plastic bags to facilitate faster screening.
    * Review the list of TSA banned items when packing.


    Additional Check-in Requirements for

    Passengers may take through the airport security search point, in a single (ideally transparent) plastic carrier bag, only the following items:

    * Pocket size wallets and pocket size purses plus contents (for example money, credit cards, identity cards etc (not handbags));

    * Travel documents essential for the journey (for example passports and travel tickets);

    * Prescription medicines and medical items sufficient and essential for the flight (eg, diabetic kit), except in liquid form unless verified as authentic.

    * Spectacles and sunglasses, without cases.

    * Contact lens holders, without bottles of solution.

    * For those traveling with an infant: baby food, milk (the contents of each bottle must be tasted by the accompanying passenger) and sanitary items sufficient and essential for the flight (nappies, wipes, creams and nappy disposal bags)

    * Female sanitary items sufficient and essential for the flight, if unboxed Tissues (unboxed) and/or handkerchiefs Keys (but no electrical key fobs)

    All passengers must be hand searched, and their footwear and all the items they are carrying must be x-ray screened.

    Pushchairs and walking aids must be x-ray screened, and only airport-provided wheelchairs may pass through the screening point.

    ராஜேஷ்... பயம்+கோபம்+இயலாமை ==> சிக் ஹ்யூமர்

    கோவி... Dark Humorதான் என்னுடைய ரசனைங்கறீங்க ;-)) நடத்துங்க :-P)

    செய்திகளைச் சுவையாக தரும் பாலாவுக்கு நன்றி. என்னைப் பொறுத்த வரை (23 வருஷம் தமிழ்நாட்டில் வாழ்ந்த படியால் எதிலும் சதி காணும் எண்ணம்) வரப் போகும் தேர்தலுக்கான முன்னோட்டம் என்று தோன்றுகிறது.

    //பிரிட்டிஷ் ஏர்வேஸில் ... அனுசரணையாக 'என்ன சரக்கு
    அடிக்கறீங்க' என்று எத்தனை தர்மபத்தினிகளையும் அப்பிராணி அசமஞ்சங்களையும் படுத்தினார்களோ? அவர்களின் சாபம்தான் ஏவுகணையாக திருப்பி அடித்திருக்கிறது.

    இது என்னமோ எனக்கு பிடிக்கவில்லை. சாபம் என்று மற்றவர்கள் போல் சொல்லியிருக்க வேண்டாம். பிரிட்டிஷ் ஏர்வேஸ் இந்தியர்களை "சொல்லி அடித்த" கதைகள் வேறு நிறைய உண்டு. என் எதிர் வீட்டார் (ABCD - அமெரிக்கக் குடிமக்கள், இருவரும் மருத்துவர்கள்) இந்தியா சென்ற போது விமானத்திலே கேவலமாக நடத்தப்பட்டார்கள் - கடுப்பாகி, செனட்டர் வரை கம்ப்ளெயிண்ட் கடிதம் எழுதினர்... அப்புறம் என்ன ஆயிற்றோ - நாங்கள் அந்த ஊரை விட்டு வந்து விட்டோம்...

    கருத்துரையிடுக

    புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு