வியாழன், ஆகஸ்ட் 10, 2006

TK-TO Contest: #32 - #44 : Snap Reviews

  1. மழை: தாய் - உறவுகள் - பிரதீப்

    (புதுக்கவிதை) மதிப்பெண் - 1 / 4

    நாலு வரியில் நறுக்குன்னு முடியுமே அதுவா
    வார்த்தைக்கோலங்களில் சமூக அவலம் வைத்திருக்குமே அதுவா
    வரிக்கு மேலே வரி போர்த்தியிருக்குமே அதுவா
    சீர்திருத்தமாக நினைத்து சிந்தனை தெளிக்குமே அதுவா
    ஒரு நிமிடம் படித்துவிட்டு ஓசி பதிவு போடுமே அதுவா
    பட்டியல் போட்டு ப்ளஸ் வாக்கு கோருமே அதுவா
    தன்னோட கவிதைக்கு மட்டும் நாலு போடுமே அதுவா

    யாருடைய கவிதைங்க இது?

    எளிமைக்காக +1.


  2. எண்ணம்: அன்புள்ள எரியும் திரிக்கு... - அபுல் கலாம் ஆசாத்

    (புதுக்கவிதை) மதிப்பெண் - 2 / 4
    நீ
    மோர்ப் பானை போர்த்திய முதுமக்கள் தாழி
    செந்தில் குமரன் (குமரன் எண்ணம்): விட்டிலுக்கும் மெழுகு வெளிச்சத்திற்கும் உள்ள உறவா? மனிதர் புரிந்து கொள்ள இது மனித உறவு இல்லை என்று நினைக்கிறேன்.


  3. உறவுகள் - ராசுக்குட்டி

    (புதுக்கவிதை) மதிப்பெண் - 3.25 / 4

    கவிதைக்கான எல்லா பயத்துடனும் படிக்க ஆரம்பிக்கிறேன். மகளின் சொல்லாடல் 'அட...' சொல்லும் எதுகை மோனை + நிகழ்வுகளின் எண்ண அணிவகுப்பு. முடிவில் டச்சோ டச். தலை மூன்றில் இடம்பிடித்தால் மகிழ்ச்சியாக இருக்கும்.


  4. பினாத்தல்கள்: கீழ்நோக்கியே பாயும் நீர்வீழ்ச்சி - சுரேஷ்

    (சிறுகதை) மதிப்பெண் - 3.25 / 4
    ஒருவனாவது என்னை அடையாளம் கண்டுகொண்டதில் மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் அவனை எனக்குத் தெரியவில்லையே என்ற குற்ற உணர்ச்சியும்.

    "எங்கே இருந்தாலும் நல்லா இரு. காசை செலவழிக்காதே. நல்லா சிக்கனமா சேத்து வையி. அப்போதான் நாளைக்கு என் நிலைமை வராது. புள்ளைங்கள நம்பாம இருக்கலாம்"

    நான் மௌனம் காத்தேன். என்ன விஷயம் என்று சரிவரத் தெரியாத வெளியாள் வேறென்ன செய்ய முடியும்?
    பாந்தமான உரையாடல்கள். போட்டியென்று வந்துவிட்டால் பெனாத்தலார் சிங்கம். மே 2006 என வெற்றி மேல் வெற்றி கண்டவர். அழகாய் இருக்கிறது. பயமாய் உள்ளது.

  5. எனக்கேற்ற தமிழச்சிகள்: அன்புள்ள அம்மாவுக்கு - மதுரா

    (சிறுகதை) மதிப்பெண் - 3 / 4
    எப்படிக் கசக்கிப் பிழிந்து அடித்துத் துவைத்து பார்த்தாலும் ஒரு சாயமும் கரையவில்லையே நம் உறவைப் பற்றிய நினைவுகளில்! மனம் அவ்வளவு பெரிய புளுகு மூட்டையா?

    "நான் என் பையனை நன்றாகத் தானே வளர்த்தேன்; எதில் விட்டு விட்டேன்; வீட்டு வேலைகள் எல்லாம் அவன் அக்காக்களைப் போல செய்ய வைத்து தானே வளர்த்தேன்"

    நான் என் அம்மாவிடம் மனம் விட்டுப் பேசியது போல், உங்கள் மகன் உங்களிடம் தனியாகப் பேசுவதே இல்லை என்பதை கவனித்த போது வருத்தமாக இருந்தது!

    சில உறவுகள் ஒதுங்கி இருப்பதே பிற உறவுகளுக்கு மரியாதை.

    தடாலடியான ஆரம்பம் உள்ளிழுக்கிறது. அதே உணர்ச்சி வேகம் பிசிறு தட்டாமல் தொடர்கிறார். நல்ல சிறுகதையின் அடையாளம் 'சொந்தக் கதையா?' கேள்வியை மிரட்சியுடன் தொண்டைகுழியில் ஊசலாட வைப்பது. 'ஆச்சரியமான உறவின் உன்னத உணர்வுகளை' உணரவும் வைக்கிறார்.

  6. உறவுகள் ஒடிந்த பறவைகள் !!! - demigod

    (சிறுகதை) மதிப்பெண் - 2 / 4
    கோயிலும் குளமும் இருந்தா போதுமா? மொபைல் போன் வேலை செய்ய ஒரு டவர் போடக்கூடாது?

    அலட்டல் இல்லை. என் இளவயது குமுதம் கதை போன்ற நடை. எப்படி முடியப் போகிறது என்று அனுமாணிக்க விட்டே ஆரம்பிக்கிறார். கிராமத்துடன் ஆன உறவை இன்னும் கொஞ்சம் ஊடாட விட்டிருக்கலாம்.


  7. இன்றும் - கப்பி பய

    (சிறுகதை) மதிப்பெண் - 1 / 4

    கப்பி பய மீது இருந்த எதிர்பார்ப்பா? அல்லது 'பிரா'வை உள்ளிழுத்து கற்பு காக்கும் 'துள்ளாத மனமும் துள்ளும்' வகை ஸ்பரிசக் காதல் காட்சிகளா? பெரும் ஏமாற்றம்.


  8. பேசலாம்: செக்ஸ் இல்லாத கதை - வா மணிகண்டன்

    (சிறுகதை) மதிப்பெண் - 1 / 4

    ஜெஸிலா: ஜனரஞ்சக புத்தகத்தில் வரும் கதைப் போல் இருக்கிறது.

    அத்தைப் பாட்டி சொல்வாங்களே... அது போன்ற விவரணை + மதிப்பீடு. கிசுகிசு நெடி. உறவுகளில் உணர்வுகளைக் காணவில்லை.


  9. பொருனைக்கரையிலே: அம்மாவும் மாமியாரும் கமலம்மாவும் - மானு (yezhisai)

    (சொந்தக்கதை) மதிப்பெண் - 1.5 / 4

    எனக்கு இரண்டு மாமியார்கள்.
    அடடா நீங்கள் நினைப்பது போலில்லை..
    இது என் உண்மையான ,என் வீட்டுக்காரரைப் பெற்றவர். இன்னொருவர் என் மாமனாரைப் பெற்றவர்.

    எப்போது நான் ஏதாவது உளறினாலும் (எப்போது என்று கேட்க வேண்டாம்.that was a full time occupation for me.)இப்போதும் அந்தப் பழக்கம் தொடருவதால்தான் ப்ளொக்கிங் ஆரம்பித்தது!!!)

    உள்ளொன்று மறைக்காத எழுத்து.


  10. பொருனைக்கரையிலே: மென்மைப் பூக்கள் - மானு (yezhisai)

    (சிறுகதை) மதிப்பெண் - 1 / 4

    ஏதோ எனக்கு தெரியாத கேரக்டருங்களை (ஃபீமேல் கைண்ட் குறித்து) சொல்றாங்க.

    கவிதையாக எழுதவில்லை என்பதால் +1. நிஜ சம்பவம் என்பதால் +1. நகாசு இடவில்லை என்பதால் +1.

    மினுக்கிடவில்லை என்பதால் -1. இது போன்ற தெரிந்த நிகழ்வுகளை வித்தியாசமாக சொல்லவில்லை என்பதால் -1.


  11. சென்னைக் கச்சேரி: தீவுகள் - தேவ்

    (புதுக்கவிதை) மதிப்பெண் - 0.5 / 4

    சில சந்தேகங்கள்:
    • கூட்டமாய் தான் (அல்லது) கூட்டமாகத்தான் ?
    • தனித் தனித் தீவுகளாய் (அல்லது) தனித் தனி தீவுகளாய்
    • கரையேரி
    • எங்கேங்கோ
    • நம் உறவுகள்... என்று முடிகிறது. எந்த உறவு என்றே சொல்லவில்லையே :ஓ!



  12. நிகழ்வுகள்: உறவு என்பதால் - சிவமுருகன் நீலமேகம்

    (புதுக்கவிதை) மதிப்பெண் - 0.5 / 4

    ஸ்டீரியோடைப்களை் தொடுக்கிறார். எழுத்துப்பிழைகள் உண்டு (சிலிர்பதில்லை, பெணென்பதால், பெணென்று, ஏற்கமாட்டரே, தவிற்பதில்லை).


  13. பனி விழுதுகள்... 2 - தொட்டராய ஸ்வாமி

    (புதுக்கவிதை)கள்

    மூன்று எழுதியிருக்கிறார்:
    1. தன்னலதாயின் உறவுகளில்.... :: கருத்துக்காக - 0 / 4
    2. தாய்மடி வாசம் :: நான்கடிக் கவிதையில் பிழைகள் மலிந்திருப்பதால்: 0.5 / 4
    3. அப்பா.. :: 1.5 / 4


போட்டியில் கலந்து கொள்ளும் பதிவுகள் குறித்த முந்தைய பதிவு


| |

6 கருத்துகள்:

மணிகண்டன் கதை எனக்கு இன்னும் பிடித்திருந்தது..

என் மதிப்பெண் 3.25/4
போட்டியின்னு வந்துவிட்டா பெனாத்தலார் அசத்துறார்...

:)

//கப்பி பய மீது இருந்த எதிர்பார்ப்பா?//

தன்யனானேன் பாபா..

மிக்க நன்றி..

-----மணிகண்டன் கதை எனக்கு இன்னும் பிடித்திருந்தது..---

ஹ்ம்ம்... முத்து(தமிழினி), நாமக்கல் சிபி, கார்த்திக் பிரபு, தேவ், ம்யூஸ், ஜிரா, உங்கள் நண்பன் சரவணன், (துபாய்) ராஜா, Mouls, வெட்டிப்பயல், கார்திக்வேலு என்று பலரின் பதில்களைப் படித்தேன். பிறகு மீண்டும் இன்னொரு முறையை கதையை படித்தும் பார்த்தேன். ஹ்ம்ம்...


கப்பி __/\__

நகாசு இல்லை +1
நகாசு இல்லாவிட்டால் எப்படி மினுக்கும்?:-))

நீங்களே சொல்லுங்கள்.

நன்றி பாலா. ஆனாலும் எங்க தமிழ் மாஸ்டர் பரமசிவன் சாரை விடக் குறைவா மார்க் போடறீங்க.

வாசகன் தன்னை புத்திசாலியாக நினைத்துக் கொள்வான். அப்படி நினைத்துக் கொண்டு படிப்பவனை உள்ளேயிழுத்து கொக்கிப்பிடியில் சொக்கிப்போய் 'அச்சச்சோ/அடாடா/ஐய்யோ/ஹ்ம்ம்ம்/...' என்று லயிக்க வைப்பதுதான் இந்த நகாசு வேலை.

மினுக்கிடனும்; ஆனா, பல்லிளிக்கக் கூடாது. (சமீபத்திய உதாரணம்: ராசாவின் ரயில் பயணத்தில் போதிய சொருகல் கொடுத்திருந்தார். இரண்டாவது முறை படிக்கும்போதுதான் தெரிந்தது. முதல் தடவை கீழே விழுந்தாரா, வேறு எவரையாவது தள்ளி விட்டுட்டாரா, ராசாவுக்கு கால் விந்திதான் நடக்க முடியுமா போன்ற பய கற்பனைகளுடன்தான் படிக்க வைத்தார். மீண்டும் பார்த்தால், செதுக்கியிருப்பது விளங்கியது).

விமர்சனத்துக்கும் திருத்தங்களுக்கும் நன்றி பாபா.

கடைசியில் நீங்கள் எழுப்பியிருக்கும் சந்தேகத்திற்கான விளக்கத்தை உங்களிடமே விட்டு விடுகிறேன்.

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு