வெள்ளி, ஆகஸ்ட் 11, 2006

Pesticide Factory - Coca-Pepsi

கோக-கோலா பானங்களில் நச்சுப்பொருள் வரம்பளவு மீறப்படவில்லை: கோக் தகவல் : ஐரோப்பிய ஒன்றியம் நிர்ணயித்துள்ள தரமுறைகளின்படி பார்த்தால் கோக-கோலா பானங்களில் நச்சுப் பொருள்களின் வரம்பளவு மீறப்படவில்லை என கோக் கூறியுள்ளது.

கோக், பெப்சி உள்ளிட்ட 14 வகையான பானங்களில் நச்சுப்பொருள்களின் அளவு அனுமதிக்கப்பட்டதை விட அதிகமாக உள்ளதாக தகவல்கள் வெளியானதை அடுத்து ராஜஸ்தான், பஞ்சாப், கர்நாடகம் உள்ளிட்ட பல மாநில அரசுகள் இந்த பானங்களுக்கு தடை விதித்தன. கேரளத்தில் உற்பத்தி, விற்பனை இரண்டுக்குமே தடை விதிக்கப்பட்டது.

இதையடுத்து கோக் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

"ஐரோப்பிய ஒன்றிய தரநிர்ணயத்தின் படி, தனியே ஆய்வகங்களில் நடத்திய சோதனைகளில் இந்திய மென் பானங்களில் கண்டறியத்தக்க அளவு நச்சுப் பொருள்கள் இல்லை. பிரிட்டிஷ் அரசின் ஆய்வகமான மத்திய அறிவியல் ஆய்வகத்தில் (சிஎஸ்எல்) மென்பானங்கள் தொடர்ச்சியாகப் பரிசோதிக்கப்பட்டு உறுதிப்படுத்தப் படுகின்றன. உலகம் முழுவதும் பின்பற்றுவதைப் போலவே இந்தியாவிலும் எங்களது பானங்களில் பாதுகாப்பு, தரம் விஷயத்தில் சமரசத்துக்கு இடமில்லாமல் செயல்படுவதாக"
கோக் கூறியுள்ளது.

நன்றி: Dhinamani.comராஜஸ்தானில் படித்ததின் சௌகரியம் இந்தியாவில் மீண்டும் கால்வைத்த கோக், சீக்கிரமே குடிக்கக் கிடைத்தது. ஆக்ராவை 'சோதனை சந்தை'யாக வைத்து கொகோ கோலா வந்தவுடன் பிலானிக்கும் உடனடியாக வந்தது. எட்டோ, பத்தோ கொடுத்து உருப்படாததை குடிப்பதற்கு பதிலாக, இருபத்தி மூன்று சில்லறை செல்வழித்தால் 'டைரக்டர்ஸ் ஸ்பெசலில்்' பாதி கிடைக்குமே என்று கணக்குப் போட்டு குடித்த காலம். கோக் போதை ஏறவே இல்லை.

பெங்களூர் ரெக்ஸ் வாசலில் காத்திருந்தபோதும் நிறையரங்காகி (அந்தக் காலத்தில் பாலுறை தானியங்கிகள் கிடையாது) விட்டிருந்தால், பெட்டிக்கடை வாசலில் மிரிண்டாவை விரும்பாமல், அண்டர்கிரவுண்ட் சென்று பருகுவதையே நண்பர்களும் நாடியதால், இன்றளவில் ஃபாண்டா-விற்காக அசின் விற்கிறாரா, மிரிண்டாவை ட்ரிஷா வளைக்கிறாரா என்றறியாத பியர் மணம் மாறாத பாலகனாகவே வாழ்க்கை தொடருகிறது.

அன்றாட உணவுகளில் பூச்சிக்கொல்லிகளும் இன்னபிற preservatives, artificial colors or flavorings, non-essential additives நிறைந்திருப்பதாக Dr.Weil-இல் ஆரம்பித்து பலரும் எழுதி வருகிறார்கள்.

சுருக்கமாக சொன்னால், முகப்பூச்சு களிம்புகள், குளிர்காலத்தில் தோல் வறட்சியைக் காக்கும் விதவித எண்ணெய் என்று வெளிப்புற பயன்பாடு முதல் 'Organic' என்று முத்திரையிடாத எல்லா உட்பொருளும் ஆபத்தானவை.

வீட்டு சாப்பாடு மட்டுமே உட்கொள்ள வேண்டும். பலிகடா ஆவதற்கு முன் ஆடு, மாடு, கோழி சுதந்திரமாக உலாவுதல் வேண்டும். அப்படி அடைக்கப்படாமல் மேய்வதற்கு பரந்த புல்வெளி இருக்க வேண்டும். அந்தப் புல் வளர உரம் இடக் கூடாது. பூச்சிக் கொல்லி போடக் கூடாது. புழுக்களும் இந்த நிலத்தில் தலைக் காட்டாமல் இருக்க வேண்டும்.

வண்ணமில்லா பண்டம் குப்பையிலே என்பது போல் உப்பு சப்பில்லாமல், ஜோதிகாவின் இதயம் எண்ணெய் சேர்க்காமல், அர்ச்சனா ஸ்வீட்ஸ் சாப்பிடாமல் இருந்தாலே ஆரோக்கியமாய் நெடுநாள் வாழலாம். நெய் மணக்க ரவா கேசரி செய்தால் 'வண்ணம்' போடாமல் வெள்ளை வெளேரென்று இருக்கும். மோகன்தால், பஜ்ஜி எல்லாம் ரத்தசோகையுடன் தட்டில் வரும்.
(கொசுறு: komo news | Americans: Too Much Salt, Not Enough Understanding: high-salt diets can cause high blood pressure, a risk factor for heart and kidney disease and stroke. "This is the equivalent of a jumbo jet with 400 people on it crashing every day," says Dr. Stephen Havas, vice president of public health for the American Medical Association. He says if Americans cut their salt use in half, 150,000 lives a year could be saved.)

கோக்/பெப்ஸி எத்தனை பென்சீன் கொண்டிருக்க வேண்டும், எவ்வளவு Yellow No. 5 Lake இருந்தால் 18+ குடிக்க உகந்தவை, brominated vegetable oil எத்தனை வைத்திருந்தால் 21+ மட்டுமே பருக இயலும் என்று சட்டம் இல்லாத நாட்டில் 'அந்நிய நாட்டு அராஜகம்' என்று தலைப்பிட்டு புலம்ப வசதியாய் நச்சுப்பொருளைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். கிங்பிஷரை தடை செய்யாத கேரளா கோக்கை தடை செய்கிறது.

சில கேள்விகள்:

 • எஃப்.டி.ஏ. போன்ற இந்திய அமைப்பு, மது கலக்காத மென் பானங்களுக்கான விதிமுறைகளை அறிவித்து இருக்கிறதா?

 • Nutrition information: ஒவ்வொரு உணவிலும் எத்தனை கொழுப்பு, புரதச்சத்து, போன்றவையும் எந்த உட்பொருள் கொண்டிருக்கிறது என்னும் அறிவிப்பும் அச்சிடுவது கட்டாயமாக்கப் படுமா?

 • ஊறுகாய், பால்கோவா போன்ற அதிஆபத்தான உணவுகளுடன் 'இதை உண்பதால் உங்களுக்கு மாரடைப்போ நிரிழிவு நோயோ இளமையிலேயே தாக்கும்' என்னும் எச்சரிக்கை இடப்படுமா?

 • சென்னையில் பத்து வயதுப் பையன் கூட சர்வ சாதாரணமாக பீடி வலிப்பதையும் பள்ளி மாணவன் அக்கவுண்ட் வைத்து தம் போடுவதையும் சாத்தியப்படுத்துபவர்களின் கடை சீல் வைக்க பிரயத்தனங்கள் மேற்கொள்வது மாதிரி குறைந்தபட்ச பாவ்லா ஆவது காட்டப்படுமா?

 • இந்தியாவில் இதுவரை கோக்/பெப்ஸி சாப்பிட்டு எத்தனை பேர் மரணமடைந்திருக்கிறார்கள்? யார் யாருக்கு என்ன நோய்கள் ஆட்கொண்டுள்ளன? என்ன உபாதைகள் வந்திருக்கிறது?

 • அமெரிக்காவில் இருந்து இந்தியா செல்லும்போது, குழந்தைகளுக்கு தடூப்பூசி போட்டு அனுப்புவார்கள். அப்பொழுது மருத்துவர்கள் சொல்லும் முக்கிய ஆலோசனை:
  'மினரல் வாட்டர் வாங்கினாலும் மூன்று தடவை காய்ச்சி, ஒவ்வொரு காய்ச்சலுக்கும் நடுவில் வடிகட்டி, உங்கள் குழந்தைகளுக்கு குடிக்கத் தரவும். குளிப்பாட்டுவதென்றால் ஒரு முறை வடிகட்டி, காய்ச்சினால் போதுமானது.'
  குழாய் தண்ணீருக்கும் தாஸனி தண்ணிக்கும் கண்ணால் பார்த்தால் ஆறு வித்தியாசம் தெரிந்தாலும், ட்ரீட்மெண்ட் ஒன்றுதானா?


  தொடர்புள்ள சுட்டிகள்:
 • செயற்கை சர்க்கரையை கோக் பயன்படுத்துவதால் வரும் ஆபத்து.

 • கோக்கில் போதைப்பொருள் உண்டா?

 • (Vaccine) தடுப்பூசிகளில் இடம்பெறும் தேவையான நச்சுப்பொருள்

 • CorpWatch : INDIA:Everything Gets Worse With Coca-Cola

 • Pesticide Exposure Damages Nervous System, Brain - Yahoo! News

 • பத்ரியின் வலைப்பதிவுகள் - கோக், பெப்சி - அடுத்து என்ன?

 • YouTube - Aishwarya Rai and Aamir Khan Coca Cola

 • Welcome to Coca-Cola India

 • YouTube - Pepsi India - Elephants are Bad Idea

 • AsiaMedia :: INDIA: Child-labour groups get Pepsi ad banned  | |

 • 13 கருத்துகள்:

  My pint exactly...only written very well and in detail.

  :)

  வணக்கம் பாலா,

  சமூக ஏற்புகளையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். மது பானங்களை விளம்பரம் செய்வதற்கு தடை இருக்கிறது. குடிப்பது என்பது சமூகத்தில் அவமானமாக கருதப்படுகிறது.

  கோடிக்கணக்கில் பணம் செலவளித்து மனச் சலவை செய்யும் விளம்பரங்கள் மூலம் கோலா பானங்களைக் குடிப்பதுதான் மதிப்பு என்று சிறுவர்களைக் கூடத் தூண்டி விடும் கோலா நிறுவனங்களில் பொறுப்பு மற்ற எல்லாவற்றையும் விட அதிகம்.

  சச்சின் டெண்டுல்கர் பால்கோவாவுக்கு முட்டுக் கொடுத்தி தொலைக்காட்சியில் தோன்றுவதில்லை. ஊறுகாய் கூடத் தொட்டுக் கொள்ளத்தான் பயன்படுத்துகிறோம். இவ்வளவு கோடி ரூபாய் கொட்டி மக்களை குடிக்க வைக்கும் கோலா நிறுவனங்கள் தமது விளம்பரங்களைக் குறைத்துக் கொண்டு தரத்தை அதிகப்படுத்துவதில் காசைச் செலவளிக்கலாமே? எதற்கு நாளிதழ்களில் தன்னிலை விளக்க அரைப்பக்க விளம்பரங்கள்?

  அன்புடன்,

  மா சிவகுமார்

  கோக் பற்றி நான் எழுதியிருந்ததை வேறு வார்த்தைகளில் படித்த உணர்வு ஏற்படுகிறது.அருமையான கட்டுரை.நன்றி பாலா.

  என்ன இன்னும் 1 மாதம் இதை வைத்து ஜல்லி அடிப்பார்கள்.கோக் பாட்டில்களை உடைப்பார்கள்.அதன்பின் வேறு வேலைகளை பார்க்க போய் விடுவார்கள்.

  நமக்கும் நல்லா பொழுது போகும்.

  February 20, 2004 இன்னும் விரிவாக படித்து, படித்ததை பகிர்ந்திருக்கிறேன். மீண்டும் அதே செய்தியை படித்தவுடன் (Groundhog day) 'க்ரௌண்ட்-ஹாக் டே'யில் பில் முர்ரே விழித்தெழுவாரே...

  ---குடிப்பது என்பது சமூகத்தில் அவமானமாக கருதப்படுகிறது.---

  நான் மிகவும் வேறுபடுகிறேன். மதுவருந்துவது தரச்சின்னமாக, வர்க்க பிரதிநிதித்துவமாக (ஸ்டேடஸ் சிம்பல்) மாறிவிட்டதாக நினைக்கிறேன்.

  கஃபெயின் போன்ற கெடுதல் நிறைந்த 'கோக்'கில் இருந்து என்ன எதிர்பார்க்க முடியும்? சென்னையில் சாலைதோறும் பழரசக் கடைகள் இருக்கிறது. புத்தம்புது கனிகளைக் கொண்டு கண் முன்னே தயாரித்துத் தருவதை விட்டு விட்டு வேறு எதையும் நினைத்துக் கூட என்னால் பார்க்க முடியவில்லை.

  ---சமூக ஏற்புகளையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். ---

  ஒத்துக்கொள்கிறேன். பதின்ம வயதில் பலவிதமான பியர் ப்ரெஷர் (peer pressure)களுக்கு ஆளாவோமே? என்னுடைய காலத்தில் 'அவளைத் தடுத்து நிறுத்தி பேச முடியுமா' என்று சவால் விட்டு ஏற்றி விட்டவர்கள்; இப்பொழுது 'இந்த இணையத்தளத்துக்கு செல்ல முடியுமா?' என்று dare செய்வதாக நண்பனின் மகன் பகிர்ந்தான்.

  அது என்னாளும் உள்ள கதைதான். அதனால்தான் புகை, மென்பானம் போன்றவை பிரபலமடைகின்றன??

  விரிவான மறுமொழிக்கு நன்றி சிவகுமார்.

  சிறில் & செல்வன்... நன்றி!

  ----கோக் பற்றி நான் எழுதியிருந்ததை ----

  செல்வன்... சுட்டியைத் தர இயலுமா?


  கோக் என்று என்று என் பதிவில் தேடியபோது:

  கில்லி - படத்தின் மெஸேஜ் என்ன : 'கோக் நிறைந்த பாட்டிலை எவ்வளவு வேகமாக வீசினாலும் காட்ச் பிடிக்கலாம்; கோக் காலியான பாட்டிலை பிடிக்க எத்தனித்தால் மணடை உடைய வாய்ப்புண்டு.'

  இதுதான் என் கோக் பற்றிய கட்டுரை பாலா

  http://holyox.blogspot.com/2006/08/134.html

  குடிப்பது எந்த சமூகத்தில் அவமானமாக கருதப்படுகிறது என சொல்லியிருந்தால் தாவலை.இந்தியாவில் கணிசமான பகுதி ஆண்கள் குடிப்பார்கள்.பிறகு எதை வைத்து குடிப்பது அவமானம் என சொல்வது?அதில் அவமானம் எல்லாம் ஒன்றுமில்லை.அளவுக்கு மிஞ்சி குடித்தால் உடல் நலத்துக்கு கேடு.ஒரு நாளைக்கு ஒரு பெக் என அளவோடு அடித்தால் ஒன்றும் கெடுதல் கிடையாது.
  இங்கே ஒயின்பாட்டில் வாங்கிக்கொண்டு விருந்தினரை பார்க்கப்போவது ஒரு கலாச்சாரம்

  ----எதற்கு நாளிதழ்களில் தன்னிலை விளக்க அரைப்பக்க விளம்பரங்கள்?----
  தினசரியில் வேலை செய்யும் நண்பனுடன் தொலைபேசியதில் கிடைத்தது: "கோக்/பெப்ஸி மீது பத்திரிகைகளும், நாளிதழ்களும் கொஞ்சம் வருத்தம் கலந்த கோபத்தில் இருப்பது உண்மைதான். மற்ற பொருட்களைப் போல் இவர்களின் விளம்பரங்கள் எங்களுக்கு கிடைப்பதில்லை. ப்ராண்ட் அம்பாஸ்டர் என்கிறார்கள். கிரிக்கெட், சினிமா என்று ப்ராடக்ட் பொஸிஷனிங் செய்கிறார்கள். இப்படி எங்களிடம் பைசா செல்வழிக்காதவர்கள் மேல் பார்வை திரும்ப வைப்பதற்காகவும் இவ்வாறு நடக்கிறது." என்றான்.

  134.கொலைகார கோக்கை கோவைக்கு அனுப்புங்கள்

  நன்றி செல்வன்... முழுதும் படித்தேன் (பின்னூட்டங்களை இன்னும் முடிக்கவில்லை :-)

  அப்படியே ட்ராக்பேக்: 134.கொலைகார கோக்கை கோவைக்கு அனுப்புங்கள்

  செல்வன்,

  பொதுவாக் இந்தியாவில் நடுத்தர ஏழை வர்க்கத்தில் குடிப்பது ஏற்றுக் கொள்ளப்படுவதில்லைதானே? அப்பா மாலையில் ஒரு பாட்டில் வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வருவது பரவலாக நடப்பதில்லை. கடையிலேயே குடித்து விட்டு வீட்டுக்கு வருவது, அதனால் மனைவி மக்கள் துன்பப்படுவதும்தானே நடக்கிறது.

  கேரளாவில் கோக்கை தடை செய்தது போல மதுவை ஏன் தடை செய்யவில்லை என்று பாலா எழுதியதால் அதைச் சொன்னேன். எந்த ஊடகத்திலும் மது பானங்களுக்கு விளம்பரம் செய்ய அனுமதி இல்லை என்பது இந்தியாவில். அதனால் கோலாக்களையும் மதுவையும் ஒன்றாகப் பார்க்க முடியாது என்ற நோக்கில் அப்படிச் சொன்னேன்.

  அன்புடன்,

  மா சிவகுமார்.

  more updates from NDTV:

  NDTV :: Coca Cola questions CSE: "Coca Cola has questioned the credibility of the testing carried out by Centre for Science and Environment (CSE), which claimed that soft drink products in India contained high levels of pesticides.

  "The CSE is not an accredited laboratory," Coca-Cola India Vice President (Technical) Asim Parekh told reporters. He said no "fixed standards" had been set up for such kind of tests so far.

  Last week, the CSE claimed that tests conducted on more than 50 samples of soft drinks sold by Coca-Cola India and PepsiCo India contained high levels of pesticide residues. However, Parekh said that his company would welcome and support any move to set up standards.

  "We just want that there must be a scientific basis behind the standard....We are willing to work with the government," he said. "It is an issue that concerns science and we should let the scientific community decide about the methodology for conducting tests," Parekh said."

  சிவகுமார்

  உங்கள் கோரிக்கை கோக்கை தடை செய்ய வேண்டும் என்பதா அல்லது அது விளம்பரம் செய்வதை நிறுத்த வேண்டும் என்பதா?மதுபான கம்பனிகள் மினரல் வாட்டரை விளம்பரம் செய்யும் சாக்கில் தங்கள் மதுவகைகளை விளம்பரம் செய்கின்றன.கிங்பிஷர் மினரல் வாட்டர் விளம்பரம் எல்லாம் உண்மையில் கிங்க்பிஷர் பீரின் விளம்பரம் தான்.

  பாரில் குடிப்பேன்,வீட்டில் குடிக்கமாட்டேன் எனும் நடுத்தர வர்க்கத்தின் போலித்தனம் குடிப்பழக்கம் சமூகத்தில் ஏற்கப்படுவதில்லை என்பதற்கான அளவுகோலா?ஏழைவர்க்கமும்,பணக்கார வர்க்கமும் குடியை பெரிய பாவமாக எண்ணுவதில்லை.அது ஒரு சமூக வழக்கமாகிவிட்டது.

  சிகரெட்,பீர் மற்றும் (பாலா குற்றம் சுமத்தும் காபின் உள்ள) காபி,டீ ஆகியவற்றை பப்ளிக்காக விற்கும்போது கோக்கை விற்க மட்டும் ஏன் தடை என்பது எனக்கு புரியவில்லை.

  Dinamani.com - Headlines Page

  கோக கோலா, பெப்ஸி விவகாரம்: இந்தியாவுக்கு அமெரிக்கா மிரட்டல்
  வாஷிங்டன், ஆக. 14: கோக கோலா மற்றும் பெப்ஸிக்கு பல மாநிலங்களில் தடை விதிக்கப்பட்டு இருப்பதால் இந்தியாவில் அமெரிக்க முதலீடுகள் திரும்பப் பெறப்படும் என அந்த நாட்டின் சர்வதேச வர்த்தக துணை அமைச்சர் மிரட்டியுள்ளார்.

  தடை நடவடிக்கை பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்தியதால் அந்த நிறுவனம் தங்கள் தயாரிப்பு ஆபத்தில்லாதது என விளம்பரம் செய்து வருகிறது.

  தங்களுடைய பானங்கள் பாரீஸில் என்ன தரத்தில் இருக்கிறதோ அதே தரத்தில்தான் இந்தியாவிலும் இருக்கிறது. அனுமதிக்கப்பட்ட ரசாயன அளவு என்பது சட்டபூர்வமானது அல்ல. எனவே இதில் சட்டமீறல் எதுவும் இல்லை என அந்த நிறுவனங்கள் விளக்கம் அளித்து வருகின்றன.

  இந்நிலையில் வெளிநாட்டினர் தொழில் துவங்க லாயக்கற்ற நிலைக்கு இந்தியா மாறிவருவதாக அமெரிக்க அரசின் சர்வதேச வர்த்தக துணை அமைச்சர் பிராங்க்ளின் லாவின் கூறினார்.

  ஒரு ரசிகனின் வலை தேடல்கள்: நவீன புலிகேசிகள் -- வலையில் விழுந்தது ! -- தினமலர்: "கோக கோலா மற்றும் பெப்சி குளிர் பானங்களில் அளவுக்கு அதிகமாக ரசாயன நச்சு : மூன்று ஆண்டுகளுக்கு முன் ஆய்வு செய்த போது இந்த குளிர்பானங்களில் நான்கு பூச்சி கொல்லி மருந்துகளின் கலவையே இருந்தது. தற்போது இது ஐந்து பூச்சி கொல்லி மருந்துகளின் கலவையாக உயர்ந்துள்ளது.லின்டேன் என்ற புற்றுநோயை ஏற்படுத்தும் ரசாயன நச்சு அனுமதிக் கப்பட்ட அளவை விட 54 மடங்கு அதிகமாக இந்த குளிர்பானங்களில் காணப்பட்டது. இதே போல் குளோர்பைரிபாஸ் என்ற ரசாயன நச்சின் அளவு 47 மடங்கு அதிகமாகவும், இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஹெப்டாகுளோர் என்ற ரசாயன நச்சு 71 மடங்கு அதிகமாகவும் இந்த குளிர்பானங்களில் காணப்பட்டன. இதில் அனுமதிக் கப்பட்ட அளவை விட பெப்சி குளிர்பானங்களில் 30 மடங்கு ரசாயன நச்சும், கோக கோலாவில் 27 மடங்கு ரசாயன நச்சும் இருப்பது தெரிய வந்துள்ளது.

  அசுரன்: அக்காமாலா, கப்ஸி, இம்சை அரசனும் - தாமிரபரணியும்: "கொல்கத்தவிலிருந்து எடுக்கப்பட்ட சாம்பிளில் லிந்தேன் என்ற மிகவும் அபாயகரமான நச்சு பரிந்துரைக்கப்பட்ட அளவைவிட 140 மடங்கிற்க்கும் அதிகமாக உள்ளது. தானே விலிருந்து எடுக்கப்பட்ட சாம்பிளீல் நியுட்ராக்சின் குளோர்பிரிபோஸ் என்ற நச்சு 200 மட்ங்கு உள்ளது. மேலும் மிக அபாயகரமான இன்டேன், DDT, மாலாதின் மற்றும் குளோர்ப்ய்ரிபொஸ் போன்ற நச்சுகள் ஆய்வுக்கு எடுக்கப்பட்ட எல்லா பானங்களிலும் இருப்பதாக CSE சொல்லுகிறது.


  #1) Indian Freedom and Imperialism - Immediately after August 15
  #2) கடல் நீர் தனியார்மயம், காற்றும் ஆகலாம் எதிர்காலத்தில்
  #4) கோக் அடிமைத்தனத்தின் சுவை
  #5) தண்ணீரில் எழுதிய புதிய மனு நிதி
  #6) நீரில் வணிகம், நிரில்லா துயரம்
  #7) பாட்டில் தண்ணீர் பாண்டியர்களே கொஞ்சம் இங்கே பாருங்கள்

  http://www.ibnlive.com/news/pesticide-cola-poison-content-is-now-deadlier/17411-3.html

  கருத்துரையிடுக

  புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு