வியாழன், ஆகஸ்ட் 17, 2006

National Awards - Amitabh & Sarika Wins?

தேசிய சிறந்த நடிகர் அமிதாப் & சரிகாவுக்கு சிறந்த நடிகை விருது - Dinamani.com

சிறந்த நடிகர் - அமிதாப் பச்சன்
சிறந்த நடிகை - (நடிகர் கமல்ஹாசனிடமிருந்து பிரிந்து வாழும் நடிகை) சரிகா
சிறந்த படம் - (வங்காள மொழியில்) கல்புருஷ்
சிறந்த ஆங்கிலப்படம் - 15 பார்க் அவென்யூ

அகில இந்திய அளவில் சிறந்த திரைப்படம் மற்றும் கலைஞர்களை தேர்வு செய்யும் குழுவுக்கு தலைவரான சரோஜாதேவி தனது குழுவினருடன் தேர்வு விபரங்களை மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்திடம் அளித்தார்.

பிளாக் என்ற இந்திப்படத்தில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவராக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய பழம்பெரும் நடிகர் அமிதாப் பச்சன் சிறந்த நடிகராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

குஜராத் இனப்படுகொலையை சித்தரிக்கும் பர்ஸானியா என்ற படத்தில் நடித்ததற்காக நடிகை சரிகாவுக்கு கிடைத்துள்ளது.

தேர்வுக்குழு தனது முடிவை அமைச்சகத்திடம் ஒப்படைத்தாலும் முடிவு அறிவிப்பதில் சட்டச்சிக்கல் உருவாகியுள்ளது. தணிக்கை செய்யப்படாத படங்களையும் போட்டிக்கு பரிசீலிக்கும்படி மும்பை உயர்நீதிமன்றம் உத்தவிட்டிருப்பதால் இந்தச் சிக்கல் உருவாகியுள்ளது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்வது தொடர்பாக மத்திய சட்ட அமைச்சகத்துடன் தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் ஆலோசித்து வருவதாக தெரிகிறது.




| |

18 கருத்துகள்:

கமல் என்ன சொல்லப் போகிறாரோ?

(அமிதாபுக்கு) ரேகா என்ன சொல்லப்போகிறாரோ... அதையேதான்...

[மனசு கேட்கவில்லை; தனிப்ப்திவும் இடுவதற்கு மேட்டர் இல்லை: இருந்தாலும் ஓவர் ஆக்டிங்கில் கலக்கிய அமிதாப்தான் சிறந்த நடிகர் என்பது சென்ற ஆண்டு சாய்ஃப் அலி கானுக்குக் கொடுத்ததை விட டு டூ மச்]

Not seen black yet..but read the mixed reactions.

அன்புள்ள பாஸ்டன் பாலாஜி,
நீங்க ஓரு தனி ஆளா..இல்ல அஜீத் பாணியில 'நான் ஒரு தனி மனுஷன் இல்ல.. எனக்குப் பின்னால ஒரு கும்பலே இருக்கு..' சொல்ற ஆளா?

நான் அதிகபட்சமா ஒரு நாளைக்கு 4 பின்னூட்டம் போட்டா பெரிசு.. நீங்க என்னடான்ன..எல்லா எடத்துலயும் பின்னூட்டம் போடுறீங்க... தேன்கூடு போட்டிக்கு வந்த படைப்புகளை யெல்லாம் பொறுமையாப் படிச்சு மார்க் போடுறீங்க (நான் இன்னும் 4-5 க்கு மேல படிக்கல).. ஒரு செய்தி எங்கியாவது படிச்சா படிக்கிறதுக்கே எங்களுக்கு நேரம் போதலை.. நீங்க என்னாடான்னா படிச்சு ஒரு விமரிசனம் வேற எழுதறீங்க..

சன் டிவீ நிகழ்ச்சிகள் எல்லாம் பாத்துட்டு விமரிசனம் எழுதறீங்க. இங்கிலீஷ் பொஸ்தகம் படிக்கிறீங்க.. தமிழ் பொஸ்தகம் படிக்கிறீங்க.. விமரிசனம் எழுதறீங்க.. இங்கிலீஷ் படம் தமிழ்ப் படமெல்லாம் வேற விடாம பாக்குறீங்க போல இருக்கு.. இது தவிர காசி கங்கைன்னு வேற சுத்தறீங்க போல இருக்கு.

போதாக்குறைக்கு இட்லி வடையே நீங்க தான்னு ஒரு வதந்தி வேற நிலவுது..

எல்லாத்துக்கும் உங்களுக்கு எங்க நேரம் இருக்குது. மொத்தமாப் பாத்தா ஒரு நாளைக்கு 6-8 மணிநேரம் இதிலேயே செலவழிக்கிற மாதிரியிருக்கு. அதைத் தவிர நீங்க எங்கியோ வேலை வேற பாக்கிறீங்க போல இருக்கு.
இதுக்கெல்லாம் உங்க வீட்டு அம்மா ஒண்ணும் சொல்ல மாட்டாங்களா?

ஆமா தெரியாமத் தான் கேக்குறேன்... நீங்க ஒரு ஆள் தானா.. இல்ல ஒரு கும்பலே இந்த ஒரு பெயருக்குப் பின்னாடி இருக்குதா?

அன்புடன் & ஆச்சரியத்துடன்,
சீமாச்சு..

// ஓவர் ஆக்டிங்கில் கலக்கிய அமிதாப்தான்

படத்தின் இறுதி காட்சிகளில் அமிதாப்பின் நடிப்பு கொஞ்சம் ஒவராக தோன்றினாலும் படம் முழுக்க அந்த கதாபாத்திரம் ஏற்படுத்திய பாதிப்பால் குறை சொல்ல எனக்கு தோன்றவில்லை. ஆனால் சாய்ஃப் அலிகானோடு ஒப்பிடுவதெல்லாம் டூ மச் பாபா

அது சரி பர்ஸானியா பார்த்துட்டீங்களா??. whats ur rating for the Sarika's role in tht ??

//சரோஜாதேவி தனது குழுவினருடன் தேர்வு விபரங்களை மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்திடம் அளித்தார்.
//

சரோஜா தேவியா, அவங்களைத்தான் எனக்கு சின்ன(??)வயசுல இருந்தே தெரியுமே!

அவங்க பெயரில் எழுதிய பல
புத்தகங்கள் படிச்சிருக்கோம்ல :))))


அன்புடன்...
சரவணன்.

சீமாச்சு...

தங்களின் கனிவான மறுமொழியும், அதை பொதுவில் இட்டு பலர் முன்னிலையில் பாராட்டியதற்கும் எத்தனை நன்றி சொன்னாலும் போதாது. பியரும் பாலும் கலந்தடிச்சாப்ல வந்த கிக்கோடு தூங்கி எழுந்து, கொஞ்சம் அடக்கத்துடன், - ஆடாத நன்றி பதில்மொழி :-D)


---எல்லா எடத்துலயும் பின்னூட்டம் போடுறீங்க---

இதெல்லாம் எத்தனை x அத்தகைமை :-)

ரோசா (கூத்து!: கேவலத்திலும் கேவலம்!), மு. சுந்தரமூர்த்தி (மணிக் கூண்டு: பேராசிரியர் அன்பழகன் - அம்மா செயலலிதா) போன்றோர் ஒன்று போட்டாலும் கலக்குகிறார்கள்.


---தேன்கூடு போட்டிக்கு வந்த படைப்புகளை யெல்லாம் பொறுமையாப் படிச்சு மார்க் போடுறீங்க (நான் இன்னும் 4-5 க்கு மேல படிக்கல)---

உங்களை மாதிரி சோம்பேறிகளை மேலும் படிக்க வைப்பதற்காகத்தான் இந்தப் பதிவு. நல்லா இருக்கும் (குறைந்தபட்சம் பரவாயில்லையாக இருக்கலாம்) என்று நம்ப வைத்து, அனுப்பி வைத்தால், எனக்கு மகிழ்ச்சி.


----சன் டிவீ நிகழ்ச்சிகள் எல்லாம் பாத்துட்டு விமரிசனம் எழுதறீங்க. இங்கிலீஷ் பொஸ்தகம் படிக்கிறீங்க.. தமிழ் பொஸ்தகம் படிக்கிறீங்க.. விமரிசனம் எழுதறீங்க.. இங்கிலீஷ் படம் தமிழ்ப் படமெல்லாம் வேற விடாம பாக்குறீங்க போல இருக்கு.. இது தவிர காசி கங்கைன்னு வேற சுத்தறீங்க போல இருக்கு.----

எல்லாம் பொழுதுபோக்குங்க. பலரும் இதையெல்லாம் செய்கிறார்கள். தன் வாழ்க்கையை பகிர்வதில் (மைய நீரோட்டம் » ரோசனை - கீழ்க்கண்ட கார்ட்டூன்) தமிழ்ப்பதிவர்களுக்கு பயம் கலந்த தற்காப்புணர்வு அதிகம் இருக்கிறது. மற்றவனை விமர்சிப்பது கை வந்த கலையாக இருப்பதை எல்லாம் சொல்லிகிட்டடு... ஹி...ஹி....


----போதாக்குறைக்கு இட்லி வடையே நீங்க தான்னு ஒரு வதந்தி வேற நிலவுது..----

இது பாவம்யா... தனி மனிதத் தாக்குதல் வேண்டாமே :-) பாவம் இட்லி-வடையார்(கள்).


----அதைத் தவிர நீங்க எங்கியோ வேலை வேற பாக்கிறீங்க போல இருக்கு. இதுக்கெல்லாம் உங்க வீட்டு அம்மா ஒண்ணும் சொல்ல மாட்டாங்களா?----

பார்த்தார்கள். இன்று கொஞ்சம் சிறப்பு கவனிப்பு (:

மீண்டும் மனமார்ந்த நன்றிகள்

----பர்ஸானியா பார்த்துட்டீங்களா??. whats ur rating for the Sarika's role in tht ??---

இன்னும் பார்க்கவில்லை. நான் பார்க்கவேண்டிய பட்டியல் பெரிதாகிக் கொண்டே இருக்கிறது... சில:
* ஓம்காரா
* கார்பரேட்
* மக்பூல்
* கங்காஜல்
* சாந்தினி பார்
* சோக்கர் பாலி
* ஃபனா
* நெவர் ஸே குட்பை
* யூன் ஹோத்தா தோ க்யா ஹோத்தா
* அந்தோணி கௌன் ஹை

சரவணன் & சிறில், சென்ற வருடத்தில் உங்கள் பார்வையில் தேசிய விருது பெறத்தக்க தகுதி வாய்ந்தது எது என்று ஒரு கணிப்பிடுங்களேன் :-)

என்னுடைய பதிவு:
1. தமிழ் சினிமா - 2005
2. திரைப்பாடல்கள் - 2005
3. திரைப்படங்கள் - 2005

Chumma pogalaamnu dhaan paathen, but mudiyalai. So handing out my opinions as usual even though I know nothing about subject :D

Sarikavukku neenga kuduthurukka introduction thevai illiyonnu thonudhu

I 100% agree. This was a copy/convert/paste post from 'The Dinamani.com - Cinema'. To further exmplify it, I even tried bringing Rekha into the context in one of my earlier feedbacks.

Atleast one person observed the arrogant MCPish writing in the public.
- An inarrogant Aaniyalvaathi

அன்னியன் விக்ரமுக்கு கிடைக்கும்னு பாத்தனே ஏமாத்திட்டாங்களே :-((

National Awards: Row over leakage of list : "Aparna Sen is on cloud nine as she has heard from the grapevine that she has won an award - Best English Film for 15 Park Avenue. She doesn't care that the list of awardees has been leaked and certainly suspects no ulterior motives behind it.

Buddhadeb Dasgupta, film director, is less comfortable with the leak. He is happy that his film, Kalpurush, is the best film but the advance unofficial notice is causing discomfiture."

thakavalukku nanRi, BABA !

//போதாக்குறைக்கு இட்லி வடையே நீங்க தான்னு ஒரு வதந்தி வேற நிலவுது..
//
Definitely NOT (100 %) ;-) I am sure :)

----Definitely NOT (100 %) ;-) I am sure :)----

சாம்புவை குழப்புவது என்ற முடிவோடு பின்னூட்டம் இட்டிருக்கீங்க போல ;-P

BABA,
//சாம்புவை குழப்புவது என்ற முடிவோடு பின்னூட்டம் இட்டிருக்கீங்க போல ;-P
//
In fact, I am more than 100% Sure ;-)

//Sarikavukku neenga kuduthurukka introduction
thevai illiyonnu thonudhu//


WA சொன்னதை நானும் வழிமொழிகிறேன்

----WA சொன்னதை நானும் வழிமொழிகிறேன் ----

நீங்க சொல்வதை நானும் வழிமொழிகிறேன். (அடைமொழியோடு தினமணியில் வந்ததை சுட்டுவதும் என்னுடைய நோக்கம்)

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு