Something like Sadness
பதிவெழுத உட்காரும்போது போலித்தனம் ஒட்டிக்கொள்வதாக 'உருப்படாதது' நாராயண் (படிக்க: உருப்படாதது: பைனாகுலர் - ஏப்ரல் 2வது வாரம்) எழுதியிருந்தார். அந்தரங்கத்தில் என்ன நினைக்கிறேன் என்று வெளியில் தெரிவதில்லை. பிறருக்கு தெரியாது என்றால் என்ன சொல்வேன் என்று மறைப்பதில் சுவாரசியம் காணுகிறேன்.
கழிவறையில் அந்தரங்கமாக பேசும் சமயத்தில் மைக்கை அணைத்து வைக்க மறந்தார் கைரா ஃபிலிப்ஸ். (படிக்க: Most men are assholes - Oops! CNN Airs Anchor's Girl Talk Over Bush Speech | NewsBusters.org; பார்க்க: Hot Air » Blog Archive » Potty break mic snafu: CNN’s Phillips chats in the loo during Bush speech)
நேருக்கு நேராக சொல்ல முடியாவிட்டால் இப்படி வலைப்பதிவுகளில் எழுதி பட்டி தொட்டியெங்கும் அறிவிக்க முடிகிறது. பெயர் குறிப்பிடாமல் பொத்தாம்பொதுவாக எழுத முடிகிறது. பதிவெழுதுவது சுத்திகரிப்பு என்பதை விட காழ்ப்பின் வெளிப்பாடுகளாகவே அமைத்து வைத்திருக்கிறேன். நெருப்பு வாயினில் ஓரமாய் எரியும் (படித்து மகிழ: திரை இசைத்தமிழ்: 78. இது என்ன கடவுளே! புரியாது கடவுளே!) என்பதை இரட்டுற மொழிதலாக பதிவருக்கு வைத்துப் பார்த்தாலும் பொருந்துகிறது. இங்கு 'சில', 'நான் யாரை சொல்கிறேன் என்று தெரியுமல்லவா?' போன்ற அடைமொழிகள் கொடுப்பதன் மூலம் இந்தப் பதிவும் இதே வகையில் சேர்த்துக் கொள்ள விரும்புகிறேன்.
'சே! ஒரு நிமிஷத்துக்கும் அடுத்த நிமிஷத்துக்கும் எத்தனை பெரிய நிம்மதி வித்தியாசம்!' (முழுவதும் படிக்க: தூணிலும் இருப்பான்) என்பார் பா. ராகவன். உல்லாசபுரியில் மகிழுந்துப் பயணம். சிவப்பு விளக்கு முடிந்து பச்சை எரிய ஆரம்பிக்கிறது. திரும்ப எத்தனிக்கிறேன். கார் மக்கர். அங்கேயே நின்று விட, 'எனக்கு மட்டும் ஏன் ஆண்டவா' என்று சின்ன விஷயத்துக்கும் இயலாமை கலந்த கோபம் எட்டிப் பார்த்து சினமுற வைக்கிறது.
'பட்ட காலே படும்', என்பதாக மதுமிதா உங்க கணினி மட்டும் வைரஸ், லொட்டு லொசுக்கு தாக்காம எப்பவுமே சரியாக இருக்குமா என்று எழுதி முடித்த தட்டச்சுப் பலகை கூட காய்வதற்கு முன் ஐந்தாண்டுகளாக உறவாடிய மடிக்கணினி மரித்தது. என்றோ நடந்தே தீறும் என்று அறிந்திருந்தாலும், தேவையான கோப்புகளை பிறிதொரு இடத்தில் பாதுகாப்பாக சேமித்து வைத்திருந்தாலும், பிரிவுகள் துக்ககரமானவை. மனிதனைப் போல் மடிக்கணி் துர்நாற்றமெடுத்து, நிழல்கள்: சொக்கலிங்கத்தின் மரணம் போல் கதைக்களனாக அமைவதில்லை.
இன்னும் சிதறலாய் சில சம்பவங்கள். எப்படி இயல்பாய் கோர்த்து விடுவது என்று தெரியாமல் தொடரப் போகிறேன். மலேசியாவை களமாகக் கொண்டு ரெ கார்த்திகேசு (மரத்தடி.காம்(maraththadi.com) - Articles by this Author) நிறைய எழுதுவார். புதிதாக பிறக்கும் குழந்தைக்கு கருப்பசாமி என்று பெயர் வைக்க முடியாது என்பதை இடைச்செருகலாகக் கொண்ட நிகழ்வு மலேசியாவை பின்புலமாகக் கொண்ட கதையில் வருமா என்று பார்க்கலாம். (படிக்க: Lost in Media: Malaysia outlaws unsuitable names)
அமெரிக்காவில் திங்கள் அன்று உழைப்பாளர் தினம். உழைப்பவர்கள் எல்லாம் பிற நாடுகளில் இருந்து வந்தவர்கள்தானே? பின் எதற்கு அமெரிக்கர்களுக்கு விடுமுறை என்று நக்கல் செய்யலாம். அதன் பிறகு எவர் வலைப்பதிவில் காலந்தள்ளுவார்கள் (படிக்க: WSJ.com - No Day at the Beach :: Bloggers Struggle With What to Do About Vacation) என்று வால் ஸ்ட்ரீட் ஜர்னல் சேரியமாய கேள்வி எழுப்புகிறது.
இந்தப் பதிவில் உருப்படியான விஷயமே இல்லையா என்று மனம் வருந்த வேண்டாம். தலைப்பில் (Stestí - Something Like Happiness (2005)) சோகம் இருந்தாலும் சந்தோசமாக முடித்துக் கொள்ள விழைகிறேன்.
கோக், பெப்ஸியை கண்மூடித்தனமாக தடை செய்வது, மீண்டும் அனுமதிப்பது என்று அவசர சட்டம் போட்டாலும், பள்ளிக்கூடங்களை லீனக்சுக்கு (படிக்க: Indian state targets Windows - Business - International Herald Tribune) மாற்றும் முயற்சியில் கேரளா இறங்கியிருக்கிறது.
12,500 கல்விச்சாலைகள். 30,000 கணினிகள். 32 மில்லியன் மக்கள் தொகை. 90 விழுக்காடு படிப்பறிவு கொண்ட மாநிலம். சிறிய வயதில் புழங்கியதையே தொடர்ந்து பின்பற்றும் எனக்கு பள்ளியில் PCக்கு பதில் Vi சொல்லிக் கொடுத்திருந்தால் நானும் சின்னவனாக (படிக்க: வான்கோழி கற்ற கவி: வேட்டை(விளை)யாடு :: அருண் வேலை செய்வது சியாட்டலில் , கமல் உபயோகிக்கும் லாப்டாப், Mac , அப்ப கெளதம் Anti-Microsoft?) பில் கேட்ஸின் முதல் எதிரியாகி இருப்பேன்.
என்ன வளம் இல்லை இந்தப் பதிவில் என்று குழம்புவதற்கு முன் பிடித்த பத்தி:
உலகில் யாரும் யாருக்கும் பெரிதாக நன்மைகள் அதிகம் செய்துவிட முடியாது. இவன் ஒரு தடவை இல்லை என்று சொல்லிவிட்டதால் இவன் நண்பன் இல்லை என்று முடிவு கட்டிவிடாதீர்கள். இல்லை என்று சொல்லுமுன்பே நான் உங்களுக்கு நண்பன் இல்லைதான்.
நான் அவ்வளவு மோசம் இல்லை. நான் அது வரை போவதில்லை. என் எல்லை எனக்குத் தெரியும். பேலன்ஸ் தவறி உத்தமன் ஆகிவிடும் ரகம் இல்லை நான்.
தேவை உங்களுக்குத்தானே தவிர எனக்கல்ல என்பதையும் உங்கள் பிரச்னைகள் என்னைத் துளி கூட பாதிப்பதில்லை என்பதையும் தயவுசெய்து மறக்காதீர்கள். இல்லை என்ற வார்த்தை ஆமாம் என்பதை விடத் தெளிவானது. ஆமாம் என்பதற்கு சமயத்தில் இல்லை என்றும் அர்த்தமாகும்.
அவர்களிடம் இல்லை என்று சொல்லிக்கொண்டிருப்பதற்கு பதிலாக ஒரு அரூப ஓவியத்தை வரைந்து காட்டலாம். அதற்கு ‘சுயத்தின் எச்சங்கள்’ என்பது போன்றொரு தலைப்பு வைக்கலாம்.
- மைய நீரோட்டம்
Life | Ramblings | News
ம்ம்..
:))
:)(
!
:(
அட!
..
சூப்பர்
!!!
சொன்னது… 8/31/2006 11:56:00 AM
இதான் stream of consciousness உத்தியா?
பெயரில்லா சொன்னது… 8/31/2006 02:19:00 PM
லினக்ஸ்க்கு மாறாங்களா?
அவுங்க எப்பொதும் கொஞ்சம் முன்னாடியே இருக்காங்க.
வரவேற்க்க கூடிய முயற்சி.
சொன்னது… 8/31/2006 05:30:00 PM
இப்படி லிங்க் கொடுத்து விளையாடுற விளையாட்டு ரொம்ப நல்லா இருக்குங்கோவ் :-))))
***
உங்க பேச்ச கேட்டுத்தான் ஆரம்பிச்சிருக்கேன்.. வந்து பாத்துட்டு ஏதாவது கருத்து சொல்லுங்க :-)
தேன்கூடு படைப்புகள் பற்றிய விமர்சனத்திற்கு
இங்கே
பாருங்கள்
***
சொன்னது… 9/04/2006 01:11:00 AM
கப்பி... ஜாலியான பின்னூட்டம். நன்றிங்க
சாத்தான்... என்னென்னவோ பேரெல்லாம் சொல்றீங்க :-) நேரம் குறைவாக இருக்கிற உத்தி (விளக்கமா பொறுமையா சொல்ல முடியவில்லை என்பதால் ;-)
வடுவூர், கேரள் லீனக்ஸ் தொடர்பாக மயூரன் & ஸ்ரீமங்கை கஸ்தூரியின் பதிவுகளும் படிக்கக் கிடைக்கிறது. சுட்டிகளை பிறகு இணைக்கிறேன்
சோம்பேறித்தனப்படாமல் ஆரம்பிச்சிருக்கீங்க... முழுவதும் கலக்க ஆசையுடன் எதிர்பார்க்கிறேன். நன்றி சோம்பேறி.
சொன்னது… 9/06/2006 07:17:00 PM
"ம்..." - விட்டு விடுதலையாகிநிற்போம்...!: கேரளம்: தொழிநுட்பத்தின் அரசியல்
<
EnnangaL EzuthukkaL எண்ணங்கள் எழுத்துக்கள்: கேரளப் பள்ளிகளில் லினக்ஸ்
கேரளப் பள்ளிகளில் லினக்ஸ்(contd) :Srimangai(K.Sudhakar)
சொன்னது… 9/06/2006 07:23:00 PM
கருத்துரையிடுக