செவ்வாய், செப்டம்பர் 12, 2006

Thamizmanam vs Thenkoodu - Alexaholic

1. Daily Reach :: கடந்த மாதத்தில் வாசகர்கள் அதிகம் நாடியது: தமிழ்மணம் x தேன்கூடு

(ஆகஸ்ட் 30, 15 இரண்டு நாளிலும் எப்படி இவ்வளவு கூட்டம்?)




2. ஆறு மாத அலசல்: தமிழ்மணம் x தேன்கூடு
(வாரயிறுதிகளில் கூட்டம் அலைமோதாது!)




3. மூன்று மாதம்: தமிழ்மணம் x தேன்கூடு x பத்ரியின் வலைப்பதிவுகள்
(பத்ரியை தேன்கூட்டை விட நிறைய பேர் பார்க்கிறார்கள்!)



நீங்களும் உங்கள் பதிவுகளை இட்லி-வடை போன்ற நட்சத்திரப் பதிவுகளுடன் ஒப்பிட்டு பார்க்கலாம். (Alexaholic) அலெக்ஸாவின் மிகப் பெரிய நிறை (எதிர்மறையாக பேச வேண்டாம் என்னும் நல்லெண்ணத்தால்) மலையையும் மடுவையும் சீர்தூக்க இயலாது. எனவே, தினமலர், தினகரன், தினத்தந்தி என்று ஒரு பக்கம் வரைபடம் இடலாம்; அல்லது தமிழ் முரசு, மாலை மலர் என்று இன்னொரு பார்வை காணலாம். மொத்தமாக தி ஹிந்து, நியு யார்க் டைம்ஸ், ஈ-தமிழ் என்று போடச் சொன்னால் அலெக்ஸாவின் முடிவுகள் போதாமையை வெளிப்படுத்தும்.



நன்றி: Alexaholic: Website Statistics and Website Traffic Graphs & Wikipedia.org is more popular than... - Meta



| |

11 கருத்துகள்:

Its saying "Not in 100,000" when I tried for my blog :(

சுட்டிக்கு நன்றி

வெட்டி
என்னைக் கூட இப்படித்தான் திட்டி வெளியே அனுப்பியது. இருந்தாலும், சுவையாக வேறு ஏதாவது தளங்களை தராசு நிறுக்கலாம் என்று மனந்தளராமல் முயன்றேன். Ajithfans.Com & Rajinifans.com என்று பொழுதைப் போக்கி வலைக்கு வளம் சேர்ப்போம் ;-)

தமிழ்ப் பதிவுகள் - http://tamilblogs.com

இதனை விட்டுவீட்டீர்களே ஐயா!

பாலச்சந்தர்
http://www.balachandar.net/pakkangal

Hi Bala ..the Alexa toolbar is only available in English and only to Internet Explorer users!

You forgot to add that fact ... and also growing popularity of FF!

With regards
OSAI Chella

பாலச்சந்தர்

தமிழ்ப்ளாக்ஸ் போன்ற தளங்கள் வீட்டுப்பாடம் :-D

அப்படியே விகடன்.காம் & குமுதம்.காம் ஒப்பிட்டு பார்க்கலாம். இணையத்திலும் குமுதம்தான் கோலோச்சுகிறது.

திண்ணை, தமிழோவியம், திசைகள், நிலாச்சாரல் ஆகியவற்றை வரைந்து காட்ட சொல்லலாம். (முடிவு என்னை ஆச்சரியப்படுத்தியது :-)

செல்லா
ஒரே வகைப்பாடில் இயங்கும் இரண்டு தளங்களை ஒப்பிடுவதற்கு அலெக்சா ஓரளவு பயனளிக்கிறது.

நெருப்புநரியில் ஓடாது என்பதை நான் அறியேன்! நான் ஆன்றும், இன்றும், கூகிள் கருவிப்பட்டியை விரும்புபவன்.

இந்த மாதிரி பேஜ் ராங்க், அலெக்ஸா எண், பார்வையாளர் எண்ணிக்கை அனைத்துமே ஓரளவிற்கு மேல் தகிடு தத்தத்திற்கு உட்பட்டதுதானே ;-)

எனக்குப் பிடித்த ஸ்பைவேர்களில் ஒன்று அலெக்ஸா டூல்பார்.

குரல்வலையையும், ஈ-தமிழையும் தட்டிலேற்றினேன். தராசு குழம்பிபோய்விட்டது. "not in 1,00,000" என்று சொல்லி துப்பி விட்டது. ப்புவர் பாய். :(

எமெஸ்வி,
எல்லாம் எண்ணிக்கை மயம் (Quantitative vs Qualitative Web)

சாத்தான்,
----எனக்குப் பிடித்த ஸ்பைவேர்களில் ஒன்று----

Anti-spyware or spyware?! ;-)

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு