செவ்வாய், செப்டம்பர் 12, 2006

News Stories - Sep 1st Week

  1. சேர்த்து வைத்த துணைநகரம் :: கைகொடுத்த பா.ம.க. & கண்சிமிட்டும் ரஜினி! - எஸ்.சரவணகுமார்
    பணம் காசக் கண்டு விட்டா புலி கூட புல்ல தின்னும் கலிகாலமாச்சுதடா கண்மணீ!

  2. அமெரிக்க யேல் பல்கலை.யில் தமிழ் விரிவாக்கப் பணி :: எழுத்தாளர் காஞ்சனா தாமோதரன் முயற்சி

  3. பாஜகவினரின் தாக்குதலைக் கண்டித்து லக்நௌவில் கத்தோலிக்க பள்ளிகள் மூடல்

    லக்நௌவில் உள்ள லோரெட்டோ கான்வென்ட் பள்ளியில் கடந்த 6-ம் தேதி சிறப்பு பிரார்த்தனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், மேற்குவங்கத்தைச் சேர்ந்த நோபோ குமார் மண்டல் என்ற கிறிஸ்தவர் கலந்துகொண்டார். பிரார்த்தனையின்போது அவர், யேசு கிறிஸ்து தனது உடலில் கலந்திருப்பதாக கூறினார். இதனைக் கண்ட மாணவர்கள் பயந்துபோயினர்.

    இந்நிலையில், லோரெட்டோ கான்வென்ட் பள்ளிக்குள் பாரதீய ஜனதா கட்சியினர் கடந்த ஞாயிற்றுக்கிழமை வந்துள்ளனர். கிளர்ச்சியுடன் வந்த அவர்கள், பள்ளியின் சொத்துக்களை சேதப்படுத்தியுள்ளனர்.


  4. தென்னிந்திய சினிமா, 'டப்பிங்' கலைஞர்கள் சங்கத் தலைவர் ராதாரவி

  5. அரசு வழங்கும் உதவித் தொகை பெற வங்கிக் கணக்கு :: இளைஞர்கள் அதிருப்தி
    • அரசு தரும் உதவித் தொகையைப் பெறுவதற்கு தற்போது ரூ. 500 செலுத்தி வங்கிக் கணக்கைத் தொடங்க வேண்டும்
    • தாய் அல்லது தந்தை, கணவர் அல்லது மனைவியின் மாத வருமானம் ரூ. 2 ஆயிரத்துக்கு மேல் இருக்கக் கூடாது
    • அஞ்சல் வழிக் கல்வி பயில்வோருக்கு இந்த உதவித் தொகை வழங்கப்படாது


  6. திமுகவில் இருந்து எம்.ஜி.ஆர். பிரிவதை தவிர்க்கத் தயாராக இருந்தேன் :: ஆர்.எம்.வீ. பிறந்தநாள் விழாவில் கருணாநிதி பேச்சு

  7. மணிப்புரி மொழிக்கு நாகா மாணவர் தடை

  8. பாக். துருப்புகள் நடமாட்டம்:
    பாகிஸ்தானில் பலுசிஸ்தான் பழங்குடி இனத் தலைவரும் காஷ்மீர் பிரச்சினையில் இந்தியாவின் நிலைக்குத் தொடர்ந்து ஆதரவு அளித்து வந்தவருமான அக்பர் பக்டி மர்மமான முறையில் கொல்லப்பட்டது உள்நாட்டில் பெரும் பிரச்சினையை ஏற்படுத்தி உள்ளது. மேலும் ஆப்கன் எல்லையில் தலிபான்கள் நெருக்கடி கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில்தான் கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டை ஒட்டியுள்ள பகுதிகளில் துருப்புகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.


  9. சொந்தச் செலவில் இலவச அரிசி வழங்கிய முதல்வர் :: சோ. முருகேசன் - சா. பக்கிரிசாமிப்பிள்ளை நூற்றாண்டு நாள்.

  10. குறும்பட போட்டியில் பங்கேற்க வாய்ப்பு :: சென்னையில் உள்ள மனச்சிதைவு ஆராய்ச்சி மையத்தின் (SCARF) போட்டி

  11. நெரிசலை சமாளிக்க துணை நகரத்துக்கு மாற்றாக புதிய மாநகராட்சிகளை உருவாக்கலாம்- அரசுக்கு யோசனை :: வி. கிருஷ்ணமூர்த்தி



சென்ற வார செய்தித் தொகுப்பு



| |

4 கருத்துகள்:

பாலா

நல்லப் பல பதிவுகளை தரும் நீங்கள்
ஏன் உங்கள் பதிவுகளை தமிழில் பெயர் வைக்க கூடாது? இது ஓர் வேண்டுகோள் மட்டுமே!!!

நன்றி
மயிலாடுதுறை சிவா...

தமிழில் பெயர் வைத்தால் வரி விலக்கு உண்டு ;)

நன்றி சிவா.

சமீப காலம் வரை தமிழ் தலைப்புகளையே விரும்பி வந்தேன். இதற்கு முன் சிலர் வினவினார்கள். அப்போது சொன்ன பதில் இப்போதும் பொருந்தும். சுருக்கமாக.... (விளையாட்டாக யோசித்திருக்கிறேன்; தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்)

1. தமிழில் தலைப்பு வைக்கும்போது வாசகரைக் கவரும்படி வைப்பதற்காக ஜோதிகா ரசிகர்களா தேன்கூடு வாசகர்கள்? என்றெல்லாம் கவர்ச்சியாக வைக்க தட்டச்சுப் பலகை அழைத்தது.

2. போதிய இடைவெளிகளில் ப்ளாகர்.காம் இடுகைகளை கபளீகரம் செய்தது.

3. கடந்த இரு வாரங்களில் Vettaiyadu Vellaiyadu என்று கூகிளித்தவர்களை ஏமாற்ற விரும்பாதது.

4. அலுவல் மின்மடல் அனுப்பும்போது கூட 'அடுத்த திட்டமும் கோப்புக் குழப்பங்களும்' என்று சப்ஜெக்ட் போட்டு அனுப்பும் அளவு தமிழ்ப்பற்று ஏறிப்போனது.

5. இந்தத் தலைப்பு மோகமும் கொஞ்ச நாளில் அலுத்துப் போய், ஹிந்திக் கற்று கொள்ள விரும்பும் மட்டும் வளர்வது.
:-)

வெட்டி
----தமிழில் பெயர் வைத்தால் வரி விலக்கு உண்டு----

உங்களுக்கும் ஒரு அஞ்சு போடறேன்

1. தமிழ்மணம், தேன்கூடு (சரியா? அகரவரிசைப்படி & காலவரிசைப்படி சொல்லிட்டேன்... எப்பாடா...) ஆகியவற்றின் வாசகர் பரிந்துரை & அதிகம் பார்வையிடப்பட்டவை பட்டியலில் பங்கீடு அளிக்கப்படும்.

2. ஆறு பதிவரிடமிருந்து எட்டு பின்னூட்டங்களாவது அருளப்பெறும்.

3. தேசிபண்டிட், கில்லி, புட்வோட் (சரியா? அகரவரிசைப்படி & காலவரிசைப்படி சொல்லிட்டேனா?) போன்றவற்றில் பரிந்துரைக்கப்படும்.

4. சிறில் அலெக்ஸின் சோற்றாங்கைப் பட்டி, தேசிகன் பக்கத்தில் 'படித்தேன்!ரசித்தேன்!' போன்ற வார்ப்புரு மாற்றங்களில் தரிசிக்கப்படும்.

5. தினமலரின் 'இண்டெர்நெட் டாட் காம்', தினத்தந்தியின் 'கம்ப்யூட்டர் ஜாலம்', கல்கி 'வலைபாயுதே', ஜூனியர் விகடன் 'டிஜிட்டல் ஜூ.வி' ஆகிய எல்லாவற்றிலும் உரல் இடிக்கப்படும்.

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு