skip to main |
skip to sidebar
யு.எஸ். ஓப்பன் டென்னிஸ்
ஆனா கோர்னிகோவா மாதிரி பதுமை நடை மட்டும் பயிலாமல், வெற்றியும் கண்டார் மரையா ஷரபோவா
மகளிர் & ஆடவர் இறுதிச்சுற்று, ஐந்து மலை கடந்த அகஸிக்கும் பாக்தாதிசுக்கும் இடையேயான இரண்டாம் சுற்று என்று மூன்று ஆட்டங்களை மட்டுமே தொலைக்காட்சியில் பார்க்க நேரம் கிடைத்தது.
பெக்கர் வெல்ல வேண்டும் என்று பிரார்தித்த காலந்தொடங்கியே, முக்கிய தருணங்களில் ஓரிரு புள்ளிகளை தட்டிச் சென்றால், ஆட்டத்தை வென்று விடலாம் என்று அறிந்திருந்தேன். அந்த அதிமுக்கிய 30-40 கணக்கு சமயத்தில், நிதானம் தவறாமல், பதறாமல், தங்களின் சிறப்பான ஆட்டத்தை வெளிக்கொணர்பவர்களைப் பார்த்தால் பொறாமை கலந்த ஆச்சரியம் வருகிறது.
இறுதியாட்டத்தின் மூன்றாவது செட். 6-5 என்று பின்தங்கியிருந்தாலும் சொந்த சர்வீஸை தக்கவைத்தால் டை ப்ரேக்கருக்கு இழுத்து விடலாம். தடாலடியாக 0-40 என்று ரோடிக் சரியும்படி, தன்னுடைய ஆட்டத்தினை உயர்த்திக் காட்டுகிறார் ரோஜர் ஃபெடரர். அதுவரை பரிமளித்து வந்த ஆண்டி ரோடிக் சின்ன சறுக்கலில் தன்னம்பிக்கை இழந்து ஆட்டத்தைக் கைவிடுகிறார்.
மகளிர் இறுதியில் மரியாவின் வீச்சுக்கு ஜஸ்டினால் (Justine Henin-Hardenne) ஈடே கொடுக்கமுடியவில்லை. தன் அழகை நன்கறிந்தவர், ஈவினிங் கௌன் மிளர ஒவ்வொரு ஆடையில் தோன்றினாலும், 'ஆட்டத்தின் மேலே கண் வையடா தாண்டவக்கோனே' என்று நிறைவாக வென்றார். கடந்த முறை சந்தித்தபொழுதெல்லாம் இதே ஜஸ்டினிடம் ஜகா வாங்கி மண்னைக் கவ்வியதை நினைத்து மிரளாமல், எடுத்தவுடன் தோல்விமுகமாக 0-2 என்று தடம்புரண்டாலும், பொறுமையாக முன்னேறி, உணர்ச்சிகளைப் புதைக்காமல் வெளிப்படுத்தி, சிறப்பான ஆட்டத்தைக் கொண்டு வந்தார்.
பிபிசி செய்தி: ஐம்பதினை எட்டும் நவரடிலோவோ ஐம்பது ஒன்பது பட்டங்களுடன் விடைப்பெற்றார் - ஓய்வு பெறும் வயதே அல்ல. இன்றும் ஆடினால் கூட, எதிராளி கெலிப்பது கஷ்டம்தான்.
The Unsung Hero : outlookindia.com - மார்ட்டினாவுக்கு சற்றும் சளைத்தவரல்ல இந்தியாவின் லியாண்டர் பியஸ். சானியா, சச்சின் என்று ஈயங்கள் மிளிரும் காலத்தில் இவருக்கு இந்தியாவில் கிடைக்கும் மரியாதை சற்று குறைச்சல்தான்.
Tennis | US Open | Maria Sharapova
முகப்பு
//இறுதியாட்டத்தின் மூன்றாவது செட். 6-5 என்று பின்தங்கியிருந்தாலும் சொந்த சர்வீஸை தக்கவைத்தால் டை ப்ரேக்கருக்கு இழுத்து விடலாம்//
இது வரைக்கும் தான் நேத்து நான் பார்த்தேன்.
ரோஜர் ஃபெடரர் தோத்துடுவாரோனு பயந்து டி.விய ஆப் பண்ணிட்டு நெட்ல ஸ்கோர் மட்டும் பாத்துட்டு இருந்தேன்...
இந்த தடவை நான் பெட் கட்டினவங்கதான் ரெண்டுலயும் (மகளிர் & ஆடவர்)ஜெயிச்சாங்க ;)
சொன்னது… 9/11/2006 08:07:00 AM
நிர்மல்,
முதல் தடவை பார்த்தபோது, இப்படி surrogate விளம்பரம் செய்பவர்கள் அநேகமாக நைக்கியாகத்தான் இருக்கவேண்டும் என்று நினைக்க வைக்கும் விளம்பரம். மெகென்ரோ கூட வருகிறார்!
படப்பிடிப்பில்: YouTube - Maria Sharapova Behind The Scenes (Nike)
நைக் விளம்பரம்: YouTube - Maria Sharapova Nike Commercial
வெட்டி,
----ரோஜர் ஃபெடரர் தோத்துடுவாரோனு பயந்து ----
அதன் பிறகு ஏறி நின்று நர்த்தனமாடினார். கடைசி செட்டில் 4-0 வந்தவுடன் வெறுத்து கன்னல் மாற்றிவிட்டேன்.
சொன்னது… 9/11/2006 08:15:00 AM
//சானியா, சச்சின் என்று ஈயங்கள் மிளிரும் காலத்தில்//
சானியா சரி. இன்னும் பெருசா ஒண்ணும் சாதிக்கலை. ஆனா சச்சினை அந்த அளவுக்குக் கொண்டு போறது சரியா?
மார்டினா மற்றும் மைக்கேல் பற்றிய எனது பதிவு இங்கே
சொன்னது… 9/11/2006 08:36:00 AM
எல்லா போட்டிக்களையும் பார்த்துவந்தேன் இறுதி ஆட்டங்களை கோட்டைவிட்டுவிட்டேன்.
நம்ம டி.வி.ஆர் ரெக்கர்ட் செய்யாமல் போனது இன்னொரு காரணம்.
பயஸ் ஒரு காலத்தில் லைம் லைட்டில் இருந்தவர் என்பதை மறுக்கமுடியாது.
சொன்னது… 9/11/2006 08:45:00 AM
அன்னா கோர்னிகோவாவின் படம் போடாத பாலாவை புறக்கணிப்போம்
சொன்னது… 9/11/2006 08:58:00 AM
பாபா
உமக்கு வயசு 30 க்கு மேலேயா ? இன்னமும் அன்னா கோர்னிகாவை ஞாயபம் வைத்து இருக்கிறீரே ?
சொன்னது… 9/11/2006 09:24:00 AM
நான் இன்னும் கப்ரியலா சபாடினியை மறக்காத ஆசாமி (40+ :ஓ ;-)
அதை விடுங்க... பழய நெனப்புதான் பேராண்டி என்று ஆரம்பிப்பதற்கு முன், அடிபட்டு எழுந்த மார்ட்டினா ஹிஞ்சிஸ் எப்படி இருக்காங்க :-(
சொன்னது… 9/11/2006 09:27:00 AM
இலவஸ்...
நேற்றே படித்தேன்; அதான் பயமுறுத்துகிற தலைப்பு கொடுத்து, டபுள் டபுளா தெரிகிறீர்களே ;-)
சச்சினுக்கு வயசாகி விட்டதல்லவா? கிட்டத்தட்ட ஒரே சமயத்தில் களமிறங்கிய இருவரில், லியாண்டர் இன்னும் மின்னுவதால் அப்படி எழுத வைத்திருக்கும்.
சொன்னது… 9/11/2006 09:29:00 AM
மகேந்திரன்... சின்னவனின் கருத்தூட்டம் பார்த்தீங்களா...
சொன்னது… 9/11/2006 09:30:00 AM
சிறில்,
----டி.வி.ஆர் ரெக்கர்ட் செய்யாமல் போனது---
அச்சச்சோ, கையொடிந்த மாதிரி இருக்குமே...
தொலைக்காட்சியில் காணத் தகுந்ததாக எதுவுமே இருக்காதே...
பாலும் கசந்து, பழமும் புளிக்குமே...
விளம்பரம் எல்லாம் இன்று புதிதாய் பிறக்குமே...?
சொன்னது… 9/11/2006 09:32:00 AM
//மகேந்திரன்... சின்னவனின் கருத்தூட்டம் பார்த்தீங்களா//
யாரது இப்படி சொல்வது? இங்கே பார்க்கவும்
http://www.superiorpics.com/anna_kournikova/pictures1.html
http://www.superiorpics.com/anna_kournikova/pictures2.html
http://www.superiorpics.com/anna_kournikova/pictures3.html
சொன்னது… 9/11/2006 09:42:00 AM
பாபா
ரோஜர் பேரப்பாத்தவுடனே
பின்னூட்டம் போட கை பரபரங்குதே.
ரோடிக்கின் அறிவுரையாளர் (பயிற்சியாளர் ன்னு சொல்லக்கூடாதாம்)
என்ன ஆட்டம் போட்டாரய்யா,வேற யாருங்க, ஜிம்மிதான்.
ஏஸ் போட்டே ஜெயிப்போமின்னாரு. கடைசியாட்டத்துல ரோடிக்
போட்டதென்னமோ ஏழுதான். பெடரர் போட்டதுதான் அதிகம்.
ஜெயித்தாலும் தோத்தாலும் என்னிக்குமே யாரையுமே பாராட்டாத அமெரிக்கத்திமிர்
ரோடிக்கிடமும் பாத்தோம்.
பெடரர் எவ்வளவு அமைதியா எதிராளியை பாராட்டுனாரு.
அள்ளிட்டு போனது மில்லியன்களை மட்டுமில்ல.*இதுல lexus வேற.
உள்ளங்களை கூடத்தான்.
சொன்னது… 9/11/2006 10:01:00 AM
அம்மிணியும் அவிங்க அத்தான் சைஸ் புகழ் (NSFW) இக்லேஸியஸூம் மாலிபு பீச்சில் அடித்த கொட்டத்தை நானும் படம் எடுத்து இருக்கிறேன். ( அதை எல்லாம் என் ப்ளாகில் போட்டா, தொரத்தி விட்டுவிடாங்க ! ).
அன்னா நல்ல ஆட்டக்காரார் (?!?) என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.
But Anna is sooooooooooooooo 90's !
சொன்னது… 9/11/2006 10:10:00 AM
பெருஸ்,
ராபின் வில்லியம்ஸை பார்த்தால் ஜிம்மி கான்னர்ஸ் நினைவுக்கு வரும்?!
ரஃபேல் நடால் தவிர யாரும் நெருங்க முடியாதபடி இருக்கிறார் போல. ரோடிக் தோற்றதில், நிகழ்ச்சி வர்ணணையாளர்கள் பெரிதும் வருத்தத்துடன் கருத்துக்களைப் பரிமாறினார்கள்.
டைகர் வுட்ஸ் எழுந்து நின்று கைதட்டி கவனிக்கும் அளவு ஒரு வீரர்!
சொன்னது… 9/11/2006 10:34:00 AM
//சானியா, சச்சின் என்று ஈயங்கள் மிளிரும் காலத்தில் இவருக்கு இந்தியாவில் கிடைக்கும் மரியாதை சற்று குறைச்சல்தான்.
//
இருந்தாலும் நீங்க சச்சின இப்படி குறைச்சு சொல்லத்தேவையில்லை :(
"Cricket is our Religion and Sachin is our God"
சொன்னது… 9/11/2006 10:50:00 AM
----Cricket is our Religion and Sachin is our God----
சரி ;-)
கங்குலிக்கோ மனோஜ் பிரபாகருக்கோ மாற்றி விடலாம் :-)
சொன்னது… 9/11/2006 10:57:00 AM
//பெடரர் எவ்வளவு அமைதியா எதிராளியை பாராட்டுனாரு.
அள்ளிட்டு போனது மில்லியன்களை மட்டுமில்ல.*இதுல lexus வேற.
உள்ளங்களை கூடத்தான்.
//
பெருசு கரெக்டா சொன்னீங்க!!! பெடரரோட அமைதி, பொருமை எல்லாம் நம்ம சச்சின் மாதிரியே ;)
முகத்துல எந்த ரியாக்ஷனும் காட்டாம அட்டகாசமா ஆடறாரு...
பாபா,
எனக்கு கங்குலியும் பிடிக்கும்... ;)
(திறமை இல்லாம அவ்வளவு சாதனை பண்ண முடியுமா??? )
சிங்கிள்ஸ்ல லியாண்டர் பியாஸ் ஜெயிச்சார்னா, ஒரே நாள்ல சச்சினை முந்திடலாம். டபுல்ஸ்ல ஜெயிக்கறதால தான் பெருசா யாரும் கண்டுக்கறதில்லை.
சொன்னது… 9/11/2006 11:11:00 AM
folks... forgive me :-)
one of the inetersting posts I came across today:
Jabberwock: How to improve interest levels in men's tennis
Suggestions for the ATP:
– Introduce a special Swiss Watch/Time Out rule for Roger Federer whereby he is required to win each match in under 1 hour 45 minutes, failing which it goes by default to the opponent.
(The players will, however, be required to play on past the 1:45 point. If Federer eventually takes more than 2 hrs 15 mins to seal the match he misses the next Grand Slam.)
சொன்னது… 9/11/2006 11:53:00 AM
//Introduce a special Swiss Watch/Time Out rule for Roger Federer whereby he is required to win each match in under 1 hour 45 minutes, failing which it goes by default to the opponent.
(The players will, however, be required to play on past the 1:45 point. If Federer eventually takes more than 2 hrs 15 mins to seal the match he misses the next Grand Slam.)
//
Super...
Even then I will bet Federer will WIN ;)
சொன்னது… 9/11/2006 12:06:00 PM
//டைகர் வுட்ஸ் எழுந்து நின்று கைதட்டி கவனிக்கும் அளவு ஒரு வீரர்!//
புலிக்கு ப்ரீ டிக்கட் குடுத்து உள்ள இஸ்த்துகினு வந்தது ரோஜராம்...எனக்கு ரோட்ரிக் பாத்துலாம் பயமில்ல இஸ்த்துகினு வந்தவர் என்ன நினைப்பாரோன்னு ஆடினேன்னு சொல்லீருக்காரு (AFP)
சொன்னது… 9/11/2006 09:05:00 PM
//சானியா, சச்சின் என்று ஈயங்கள் மிளிரும் காலத்தில்//
Like some before me, I strongly object to this statement about Sachin. Even strongly condemn.
சொன்னது… 9/11/2006 10:33:00 PM
"அனானிகள் சார்பில் கோவியாருக்கு இங்கும் ஒரு கண்டனம்...."
அவர் பதிவில் எங்களுக்கு இடம் தரும்வரை, அவர் பின்னுட்ட்ங்களிடும் இடங்களில் நாங்க மேல சொன்ன கண்டன வாக்கியங்களை இடுவதாக
அ மு க பாசறை தீர்மானம்....பதிவர்கள் தாங்களாகவே தங்கள் பதிவுகளில் மேலெ கூறிய வாக்கியங்களை சேர்த்திட அ மு க அறிவுருத்துகிறது.
அ மு க பாசறை
அல்சுர், பெங்களூர்
பெயரில்லா சொன்னது… 9/13/2006 11:23:00 PM
தங்க தலைவர் பெடரர் வாழ்க..தங்க தலைவி சரபோவா வாழ்க..
(p.s)i support your criticism on sachin..
சொன்னது… 9/15/2006 04:54:00 AM
ஆபரேசன் சக்ஸஸ்; பேசண்ட் செத்துட்டான்... என்பார்களே!
அந்த மாதிரி, நூற்றி சில்லரை அடித்தாலும், கடைசியில் தோற்று விட்டார்கள் (Rain rescues West Indies after Tendulkar ton - Sify.com).
சொன்னது… 9/15/2006 05:34:00 AM
நம்பி,
---I somehow lost interest in sports along with my heros Pete, Jordan (Basket ball)----
பெக்கர், ஜோர்டான் என்று இதை எனக்கு மாற்றிக் கூறலாம்.இருந்தாலும், நேரம் கிடைக்கும்போது டென்னிஸிலும், என்,பி.ஏ. கால்-இறுதிகளில் இருந்து கூடைப்பந்திலும் இன்னும் ஆர்வம் தொடர்கிறது.
----May be some one with extra-ordinary talent to compare with Pete----
ஃபெடரரை விடவா!?
----What is the richest state of India----
சம்பந்தமில்லாமல் பொது அறிவு கேள்வி கேக்கறீங்க... என்னோட அனுமானங்கள் பஞ்சாப்/டெல்லி ஆக இருக்கும். சிறிய மாநிலங்கள் பெரும் பொக்கீடு போடுவதாக படித்த ஞாபகம்.
சொன்னது… 9/15/2006 05:39:00 AM
மீனாக்ஸ்,
----I strongly object to this statement about Sachin. Even strongly condemn.----
கோபி ப்ரையன் (NBA.com: Kobe Bryant Bio) போல் சச்சின் சிறப்பாக ஆடினாலும், அணியை வெற்றிய்டைய செய்வதில்தான் திறமை இருக்கிறது. அலுவலில் கலக்கி, நிறுவனத்திற்கு லாபம் ஈட்டி, பின்னணியில் கைகோர்த்து, திறமையை வெளிப்படுத்த முடியாத அதி சிறப்பான புத்திசாலி, பேராசிரியராக மட்டுமே மிளிர முடியும்.
சச்சினும் சிறப்பான வீரர். கிரிக்கெட் ரிலே ரேஸாக இல்லாமல், ஐம்பது மீட்டர் ஓட்டப்பந்தயமாக இருந்தால் ஈயம், பித்தளை போன்ற ஒப்பீடுகள் என் மனதில் எழாமல் இருந்திருக்கும்.
சொன்னது… 9/15/2006 05:47:00 AM
பெ மகேந்திரன், ___/\___
சொன்னது… 9/15/2006 05:48:00 AM
கருத்துரையிடுக