சனி, செப்டம்பர் 09, 2006

Vettaiyaadu Vilaiyaadu - Madhavan's Review

சொதப்பல் விளையாட்டு - மாது

வெள்ளித்திரையில் 'வேட்டையாடு விளையாடு' கண்டு களித்த சக பாஸ்டனார் மாதுவின் மடல்.


தலைப்பை படித்துவிட்டே புரிந்திருக்கும். வேறு தலைப்பு தோன்றவில்லை - மன்னிக்கவும். பலருக்கு புரிந்திருக்கும் வேட்டையாடு விளையாட்டை பற்றிய கட்டுரை என்று. விறுவிறுப்பாக ஆரம்பிக்கின்றது கதை. கொடூரமான கொலை. துப்புத் துலக்க வருகிறார் உயர் காவலதிகாரி. பிணத்தைக் கண்டுபிடிக்கிறார். அதற்குப் பிறகு படம் நகர மறுக்கின்றது. ஏதேதோ காட்டி படத்தை கஷ்டப்பட்டு நகர்த்த முயற்சித்திருக்கிறார் இயக்குனர். (பார்வையாளர்கள் இஙகேயே வெளியே செல்லலாம்)

மிக வலுவான கதை முடிச்சை வைத்துக்கொண்டு, அதை அவிழ்ப்பதில் தவறியிருக்கிறார்கள். கொடூரக் கொலைகளுக்கு வலுவான காரணத்தையும், வில்லனையும் முன் வைக்காதது ஒரு காரணமாக இருக்கலாம் (Hannibalன் படத்தை வில்லனின் அறைச் சுவற்றில் ஒட்டி விட்டால், வில்லன் ஒரு Hannibal Lecterஆக ஆகிவிடமுடியாது). வில்லனை கண்டுபிடிக்கும் விதத்தில் எந்தவித நுட்பமும் இல்லாதது ஒரு thrillerன் மிகப் பெரிய குறை. வில்லனின் கதாபாத்திரம் மிக மெலிதாக படைக்கப் பட்டிருக்கிறது. தலை நிறைய முடி வைத்துக் கொண்டு இரைந்து பேசினால் (பேசுவது பாதி புரியவில்லை) சைகோ வில்லனாக ஆகி விட முடியாது. நடு நடுவே வில்லன் தான் ஒரு மிகச் சிறந்த மருத்துவராக் உலகை சாவிலிருந்து காப்பாற்றப் போகிறேன் என்று வசனம் பேசுகிறார், எதற்கு என்று புரியவில்லை. ஒரு வேளை பார்வையாளர்களை சைகோ ஆக்கப் பார்க்கிறார்களோ?

கமல்-ஜோதிகா காதல் filler valueக்காக சேர்த்திருப்பது போலிருக்கிறது. ஏற்கனவே தோய்ந்த கதையே மேலும் தொய்ய வைக்கிறது. படத்தில் இருந்த சிறு விறு விறுப்பையும் போக்கி விடுகிறது.

கதாநாயகன் மிகவும் கஷ்டப்படாமல் வில்லனை கண்டுபிடித்து விடுகிறார். இங்கேயாவது படத்தை முடித்திருக்கலாம். பார்வையாளர்கள் மகிழ்ந்திருப்பார்கள். "ஒ...இன்னும் இரண்டரை மணி நேரம் முடியவில்லையா இன்னும் கொஞ்சம் இழுப்போம்" என்று வில்லனை தப்பிக்க விடுகிறார்கள். அதற்குப் பிறகு ஒரிரு தமிழ்ப் படங்களைப் பார்த்திருந்தால் கூட முடிவை யூகித்திருக்க முடியும்.

படத்தில் ஒரிரு நிறையும் இருக்கிறது - ப்ரகாஷ்ராஜின் நடிப்பு (அழுகைப் பயிற்சி கமலா?), ஜோதிகாவின் அலட்டலில்லா நடிப்பு, ந்யூ யார்க் ஒளிப்பதிவு, கமலின் தொப்பை.

இந்த படத்திற்கு ப்ராயச்சித்தமாக கமலும் கௌதமும் தனித்தனியாக ஒரு நல்ல படத்தை எடுத்து தமிழ்த் திரையுலகிற்கு சமர்ப்பிக்க கடவதாக.




| | |

12 கருத்துகள்:

//ப்ரகாஷ்ராஜின் நடிப்பு (அழுகைப் பயிற்சி கமலா?), ஜோதிகாவின் அலட்டலில்லா நடிப்பு, ந்யூ யார்க் ஒளிப்பதிவு, கமலின் தொப்பை.

//

கமலின் தொப்பை? இயல்பாக தானே இருந்தது....

Despite of all negative reviews,VV is doing extremely good business in TN ,Kerala and overseas .In chennai ,It has broken all records for opening collection (including chandramuki)

so kamal bashers ..try your luck next time

எனக்கு இன்னும் படம் பார்க்கு வாய்ப்பு கிடைக்க வில்லை..பார்த்து விட்டு என் கருத்துக்களையும் ஒரு பதிவாக போடனும்


அப்படியே நம்ம பக்கத்து வந்து தேன்கூடு போட்டிக்கு நான் எழுதியுள்ள கதையை படித்து
ஒட்டு போடுங்க..உங்கள் கருத்துக்களையும் சொல்லுங்க.

I agree with madhoo on most of the comments.

there's way too much violance in the movie.

This is a directors movie for sure Kamal has for once not thrust himself into the movie and played the role like it should have been played.

The success of this movie in TN is surprising. Music should play a godd part int it I guess. technically superior, and the plot demands it.

Somehow I do not have a great feeling about this movie.

//The success of this movie in TN is surprising//
சிறில்,
வேட்டையாடு விளையாடு கமலின் தரத்துக்கு கீழாக இருக்கலாம் .ஆனால் கண்டிப்பாக தமிழ் திரைப்படங்களின் தரத்துக்கு மேலானது தான் என்பது என் கருத்து .நீங்களும் நானும் கமல் எப்போதும் 'அன்பே சிவம்' தரத்துக்கு படம் தர வேண்டும் என விரும்புகிறோம் .ஆனால் 'அன்பே சிவம்' மக்களால் புறக்கணிக்கப்பட என்ன காரனம் .ஒரு கமல் ரசிகனாக அன்பே சிவம் தோல்வி தமிழ் ரசிகர்கள் மீது கோபத்தையும் ஏமாற்றத்தையும் கொடுத்தது .ஆனால் கமலை குறை சொல்பவர்கள் எப்படி இருந்தாலும் குறை சொல்வார்கள் .கமல் படம் அற்புதமாக இருந்தும் தோல்வி அடையும் போது அவரை கிண்டல் செய்யும் இந்த பேர்வழிகள் ,அதே நேரம் கமல் படம் வெற்றியடையும் போது தரம் பற்றியெல்லாம் பேசி கேலி செய்வார்கள் .கமல் என்ன தான் செய்ய முடியும் .அவ்வப்போது வர்த்தக ரீதியாக இல்லாமல் போனாலும் கமல் படங்கள் முழுத் திருப்தி அளிக்கும் போது ஆத்மார்த்தமாக மகிழும் நான் ,எதிர்பார்த்த அளவு இல்லையென்றாலும் வர்த்தரீதியாக வெற்றியடையும் போதும் மகிழ்கிறேன் .ஒரு நல்ல கலைஞன் வர்த்தக உலகில் முழுதும் அடித்துச்செல்லப்படாமல் இருக்க இந்த வெற்றி தேவை .

கமலின் தோல்விக்காக வழி மேல் விழி வைத்து காத்திருக்கும் கமல் வெறுப்பாளர்களுக்கு அதிர்ச்சி கொடுக்க இதோ வேட்டையாடு விளையாடுவின் வசூல் சாதனை

I have nothing against Kamal and I do not root for his downfall; but read this in the news today:

Did Kamal & Murali cheat Assistant Director Senthilkumar: Dasavatharam « Bala’s Blog: நடிகர் கமல் நடிக்கும் “தசாவதாரம்’ படத்துக்கு தடை கோரி போலீஸில் மனு.

வரிக்கு வரி அப்படியே என் எண்ணத்தைப் பிரதிபலித்த இந்தப் பதிவுக்கு ஒரு 'ஓ'!!

நானும் கமல் ரசிகன் தான்.
ஆனால் இது என் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை.

அன்பே சிவம் போன்ற ஒரு படம் கொடுப்பதற்கக இது போல ஒரு 10 படம் கொடுக்கும் கமலை என்னால் மன்னிக்க முடியவில்லை.

விஜய் டீ.வி.யில், மதனோடு கௌதம் கொடுத்த பேட்டியைப் பார்த்தீர்களா?

இப்படத்தின் இரண்டாம் பகுதியின் தொய்வுக்குக் காரணம் புரியும்.

ஜோ - கமல் காட்சிகள் தேவையே இல்லாத ஒன்று!

எனக்கு ஏமாற்றமே!

பாலா...!

கமல் முகத்தை சிதைத்துக் கொள்ளாமல் முழுசா வச்சு ஒரு படம் நடிச்சிருக்கார் அது பொறுக்கவில்லையா உங்களுக்கெல்லாம்...?
:)))

பாருங்கள் பாருங்கள் அடுத்தபடத்தில் அசத்தப் போகிறார்... ஒரு நகைச்சுவை ப்ரிவியூ இங்கே

http://kaalangkal.blogspot.com/2006/09/1.html
:)

கமல் கௌதம் ஜோடியிடம் இருந்த எதிர்பார்ப்புக்கு இந்த படம் கொஞ்சம் disappointment தான். படம் முழுக்க "காக்க காக்க.." நெடி. ஆனால் கமல் director-ஐ overshadow செய்யாமல் இருந்தது வரவேற்கத்தக்கது.

----ஆனால் கமல் director-ஐ overshadow செய்யாமல் இருந்தது----

சூப்பர் ஸ்டார், உலக நாயகன் படம் என்றால் அவர்கள் ஆக்கிரமிக்காமல் இருந்தாலே சந்தோஷம் என்றாகிய நிலையை எண்ணினால்... 'தண்ணீர் விட்டோ வளர்த்தோம்... சர்வேசா இப்பயிரை கண்ணீரால் வளர்த்தோம் கருகத்திருவுளமோ.' என்று மெட்டு கட்டலாம் ;-)

ரஜினியின் சந்திரமுகியிலும், கமலின் வே.வி.யிலும் இதுதான் நிறைவு. அவர் பாபா-வுடன் நிப்பாடி விடுவார்? ஆனால், கமல் 'ஆயிரம் படத்தை சொதப்பியவன் அரை இயக்குநன்' என்று புதுமொழி தராவிட்டால், ரசிகன் எனக்கு மகிழ்ச்சியே :-D

Box office collection is not measured from the chennai city. as we all know that chennai has lot of cinema complex espially A class theatres. But when u just go beyond chennai city one will find the true box office collection. Once again kamal proved that he is the actor for class not for mass. Though i like the movie, still i would not accept this as a blockbuster. comparing with chnadramukhi's box office collection, it is ridiculous....

I too agree this kamal did not overshadow director....

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு