Poonga - Web Design & Feedback
பூங்கா - இணையத் தமிழின் முதல் வலைப்பதிவு இதழ் என்னும் அடைமொழியோடு வெளிவருகிறது. இந்தப் பதிவில் என்னால் முடிந்தவரை 'முதல் வலைப்பதிவு இதழா?', 'பொருளடக்கத் தேர்வு எப்படி?', 'ஆசிரியர் குழுவில் எவர் இருக்கிறார் என்னும் ஆருடங்கள்', 'Joomla! பயன்படுத்துகிறார்கள் போல?' போன்றவற்றை தவிர்த்து விட்டு, பயனீட்டாளனாக சில யோசனைகள்:
(என் புரிதல்களின் பிழை இருப்பின் திருத்தவும்.)
- ஒன்றின் மேல் ஒன்று இடித்துக் கொள்ளும் எழுத்துக்கள்
- இடப்பக்கம் இருக்கும் தலைப்புகள் உரசிக் கொள்கிறது (காட்டாக விமர்சனம் & பொருளாதாரம்). சில சமயம் விமர்சனம் போன்ற தலைப்புகள் காணாமலும் போகிறது.
- உப தலைப்புகளும் முக்கிய பகுதிகளின் மேலேயே வரவைப்பது சுளுவாக பல இடங்களுக்கு செல்ல வகை செய்தாலும், சில உப தலைப்புகளை படிக்க இயலாதபடி வைத்திருக்கிறது.
- வலப்பக்கம் உள்ள இடுகைகளின் சற்றே நீண்ட தலைப்புகளும் பின்னிப் பிணைகின்றன.
- இடப்பக்கம் இருக்கும் தலைப்புகள் உரசிக் கொள்கிறது (காட்டாக விமர்சனம் & பொருளாதாரம்). சில சமயம் விமர்சனம் போன்ற தலைப்புகள் காணாமலும் போகிறது.
- வலப்பக்கம் உள்ள இடுகைத் தலைப்புகளில் சிவப்பு பின்னணியில் சிவப்பு எழுத்துக்கள்.
- ஒரே தலைப்பில் பல இடுகைகள் இருந்தால், அவை அனைத்தும் சிதறலாகத் தெரிகிறது. கீழ்க்காணும் படத்தில் 'நிகழ்வுகள்/பொது' மற்றும் 'கவிதை'
- மேலே உள்ள படத்தில் 'மரணத்தின் வாசனை' பதிவுக்கு அருகே உள்ள ஸ்வஸ்திக் 'ங்' புகைப்படத்திற்கும் உள்ளே இருக்கும் விஷயத்திற்கும் என்னால் தொடுப்பு கொடுத்து சம்பந்தப்படுத்த இயலவில்லை.
- தொடர்புக்கு பகுதியில் 'பூங்கா'வின் மின்னஞ்சல் தருவது போன்றவை தனி மடல்/மின் மடல் அனுப்ப உதவும். பயனர் ஒப்பந்தம் (User Agreement and Privacy Policy) சேர்ப்பது, பொதுவான வலையக அமைப்பை ஒத்திருக்கும்.
- நீரும் நீட்சியும் - 768x1024
வண்ணமிலாத் தென்றலும் வண்ணத் தீண்டுகையும். - 1024x768
அனைத்து நிழற்படங்களுக்கு பொதுவான, ஒரே மாதிரியான அமைப்புக்குள் இடுவது, பார்வையாளருக்கு உதவும். - மாதத்தை மாற்றினாலும், இடப்பக்க பட்டியல் தற்போதைய அக்டோபர் வார இடுகைகளுக்கு அழைத்து செல்கிறது. காட்டாக, 18 செப் 2006 சென்றாலும், வாசிப்பு அனுபவம் என்று தேர்ந்தெடுத்தால் டோட்டோ-சான் ஆகியவை கிடைப்பதில்லை.
- ஓவ்வொரு இடுகையின் கீழும் Prev மற்றும் Next இருந்தால் அங்குமிங்கும் வலைபாய்வதற்கு கை கொடுக்கும். அனைத்து இடுகையிலும், பின்னூட்டங்கள அறிந்து கொள்ள வசதியாக, அசல் பதிவின் சுட்டி தரப்பட்டிருக்கிறது. பல இடத்தில் க்ளிக் செய்தாலே, செல்லுமாறு தந்திருந்தாலும், சில இடங்களில், முகவரி மட்டுமே இடப்பட்டிருக்கிறது.
விழைப்பட்டியல் சில: - அனைத்து வார 'நட்சத்திர தேர்வு'களையும் ஒரு சேர படிக்க வசதி செய்து தந்தால் வாசகருக்குப் பயனுள்ளதாக அமையும்.
- மலர் 1 & மணம் 1 - ஆக ஆரம்பித்தது ஆண்டு 1 & இதழ் 2, 3 என்று மாறியுள்ளது நன்றாக இருக்கிறது. எனினும், அடிக்கடி வேறு பெயர் மாறாமல் இருக்கலாம்.
- Bloglines | Subscribe: செய்தியோடைகளைத் தானியங்கியாக கண்டிபிடிக்கும் வசதி.
- தமிழ்மணத்தில் பிடிஎஃப் கோப்புக்கள் தர வசதி செய்வது போல் பூங்காவையும் பத்திரிகை போல் மின்னஞ்சலில் அனுப்ப pdf வடிவமைத்தல்.
ரசித்த அம்சங்கள்: - மூன்று வாரங்கள்தான் ஆகியிருந்தாலும், ஒவ்வொரு வாரமும் நுட்பத்தில் மேம்பாடுகளைப் புகுத்தி வடிவ நேர்த்தியைக் கொண்டு வந்தது.
- ஆரம்பத்தில் நவதிருப்பதி போல் பல யாஹூ குழுமங்கள்; ஒவ்வொன்றாக சென்று தரிசனம் ஆகும். தொடர்ந்து வலைப்பதிவுகள். அதை ஒருங்கிணைக்க தமிழ்மணம் திரட்டி. அங்கும் எதை படிப்பது, எதை விடுப்பது என்னும் குழப்பம். அதன் தொடர்ச்சியாக, பூங்கா போன்ற இடுகைப் பரிந்துரைகள் தோன்றுவது சிரமமில்லாமல் வாசகரை மகிழ்விக்கிறது.
- திங்கள் அன்று தவறாமல் வெளியாகும் கச்சிதம்.
Poonga | Thamizmanam | Reviews
//மலர் 1 & மணம் 1 - ஆக ஆரம்பித்தது ஆண்டு 1 & இதழ் 2, 3 என்று மாறியுள்ளது நன்றாக இருக்கிறது. எனினும், அடிக்கடி வேறு பெயர் மாறாமல் இருக்கலாம்.//
குற்றம் கண்டுபிடித்தே பேர்வாங்கும் பதிவரைய்யா நீர்.
:)
அது சரி இந்தப் பதிவு பூங்காவில் சேர்க்கப்படுமா?
தேவையான பயனுள்ள அலசல் (அதையும் சொல்லணுமே).
பின் குறிப்பு: உங்கள் மடலை எதிர் பார்த்திருக்கிறேன்..
சொன்னது… 10/04/2006 12:03:00 PM
கவனமா ஒண்ணொண்ணையும் கவனிச்சு இருக்கீங்க!!!
கண்ணுலே விளக்கெண்ணெய் ஊத்திக்கிட்டுப் பார்ப்பீங்களோ? :-))))))
எங்கள் சார்பா(???)தானே கேட்டுருக்கீங்க?
சொன்னது… 10/04/2006 02:05:00 PM
சிறில் அலெக்ஸ்
---குற்றம் கண்டுபிடித்தே பேர்வாங்கும் பதிவரைய்யா---
எல்லாருமே அப்படித்தான் என்று நினைத்தேனே :P
---தேவையான பயனுள்ள அலசல்---
கண்ணில் பட்ட உறுத்தல்களை பார்த்துவிட்டு புறந்தள்ளாமல், சுட்டிக்காட்டினால் களைந்துகொள்ள வசதியாக இருக்குமே என்னும் எண்ணம்தான் :)
சொன்னது… 10/04/2006 02:23:00 PM
எதுக்கு இவ்வளவு பெரிய கண்ணாடி போட்டு இருக்கீங்கன்னு நல்லாத் தெரியுது. ;)
சொன்னது… 10/04/2006 02:24:00 PM
துளசி __/\__
---எங்கள் சார்பா(???)தானே கேட்டுருக்கீங்க---
நமக்காகத்(!!!)தான் கோரிக்கை வைத்திருக்கிறேன்
---கண்ணுலே விளக்கெண்ணெய் ஊத்திக்கிட்டுப் பார்ப்பீங்களோ---
விளக்கெண்ணெய் குடிக்கணும் என்று எவராவது மிரட்டாத வரைக்கும் சரி ;))))
சொன்னது… 10/04/2006 02:28:00 PM
அப்படியே ஒவ்வொரு தலைப்புக்கும் போடற குட்டி குட்டி புகைப்படங்களை எங்கு இருந்து எடுத்துப் போடறாங்கனு சொன்னாலும் தேவலை. படத்தை எல்லாம் எங்கேயோ பார்த்தமாதிரியே இருக்கு
பெயரில்லா சொன்னது… 10/04/2006 02:42:00 PM
நீங்க டெஸ்டீங்ல இருக்கீங்களா??? அப்படீனா அந்த கம்பெனி ரொம்ப குடுத்து வெச்சவங்க :-)
சொன்னது… 10/04/2006 02:54:00 PM
//எல்லாருமே அப்படித்தான் என்று நினைத்தேனே :P//
:)
சொன்னது… 10/04/2006 07:27:00 PM
வி.பி.
நானே நிரலி எழுதி, நானே (யூனிட் டெஸ்ட்) சோதனையும் செய்வதால், இவ்வளவு எல்லாம் நுணுக்கி கவனிப்பதில்லை.
That was funny » Top 20 Programmers’ Excuses - jokes, humor, hilarious things
The Top 20 replies by programmers when their programs do not work:
1. That’s weird…
2. It’s never done that before.
3. It worked yesterday.
4. How is that possible?
5. It must be a hardware problem.
6. What did you type in wrong to get it to crash?
7. There is something funky in your data.
8. I haven’t touched that module in weeks!
9. You must have the wrong version.
10. It’s just some unlucky coincidence.
11. I can’t test everything!
12. THIS can’t be the source of THAT.
13. It works, but it hasn’t been tested.
14. Somebody must have changed my code.
15. Did you check for a virus on your system?
16. Even though it doesn’t work, how does it feel?
17. You can’t use that version on your system.
18. Why do you want to do it that way?
19. Where were you when the program blew up?
20. It works on my machine.”
சொன்னது… 10/04/2006 08:42:00 PM
இ.கொ.
புட்டியுள்ள கண்களெல்லாம் குற்றம் காண்பதில்லை;
குற்றம் காணும் கண்களெல்லாம் புட்டி போடுவதில்லை ;-))
(சந்திரபாபு குரலில் ரசிக்கவும் :D)
சொன்னது… 10/04/2006 08:45:00 PM
நல்லாத்தான் ஆலோசனை சொல்லியிருக்கீங்க.. இதை தமிழ்மணத்திற்கு/பூங்காவிற்கு மின்மடலிட்டு இருக்கிறீர்களா ??
***
என்ன, நீங்க டெவலப்பரா ??? ஒரே ஆச்சர்யம்தான் போங்க...
***
20 சாக்குபோக்குகள் சூப்பர்...
***
எழுத்துக்கள் ஒன்றன்மேல் ஒன்று தெரியும் முதல் குறைபாடு, உங்கள் கணிணி செட்டிங்கினால் இருக்கலாம், எனது கணிணியில் சரியாகவே தெரிகிறது...
சொன்னது… 10/05/2006 04:15:00 AM
அருமையான விமர்சனம் பாலா.. எல்லோருடைய எண்ணங்களையும் பிரதிபலிக்குது உங்க விமர்சனம்
சொன்னது… 10/05/2006 05:42:00 AM
சோ.பை. __/\__
---தமிழ்மணத்திற்கு/பூங்காவிற்கு மின்மடலிட்டு இருக்கிறீர்களா ?---
ஜிமெயில், யாஹூ மின்னஞ்சலில் அனுப்பும்போது, கீழ்க்காணும் படம், இரண்டாவதாக இணைத்துள்ள படத்தில் என்றெல்லாம் சொல்வது கடினம். எனவே, மடலிடவில்லை.
நினைவூட்டலுக்கு நன்றி. இந்த சுட்டியை அவசியம் அனுப்பி வைக்கிறேன்!
---உங்கள் கணிணி செட்டிங்கினால் இருக்கலாம்,---
I tried with Firefox & IE 7 in a 1280x1024 resolution box. This overlapping issue is dependent on the size of the browser window and certainly appears in Firefox.
சொன்னது… 10/05/2006 06:49:00 AM
கார்த்திகேயன் __/\__
உங்க புகைப்படத்தில் தமிழ்ப்பட நாயகன் மாதிரியே இருக்கிறீர்கள். அசப்பில் 'கொக்கி' திரைப்படத்தின் கரணை நினைவூட்டுகிறது :)
சொன்னது… 10/05/2006 06:51:00 AM
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும்.
(திருக்குறள்- பெரியாரை துணைக்கோடல்)
பூங்காவிற்கு தட்டலும் குட்டலும் சரியே!
சொன்னது… 10/05/2006 07:24:00 AM
மணியன் & வைசா __/\__
சொன்னது… 10/06/2006 07:39:00 AM
பூங்கா - இணையத் தமிழின் முதல் வலைப்பதிவு இதழ் - பூங்கா - வடிவமைப்பும் யோசனைகளும்
சொன்னது… 10/09/2006 09:27:00 AM
கருத்துரையிடுக