Telugu & Tamil Superstars mentioned in Boston Newspaper
அதிகாலை என்று சொல்ல முடியாது. அலுவலுக்கு விரையும் காலை என்று சொல்லலாம். இலவசமாக கிடைக்கும் பாஸ்டன் மெட்ரோ (Metropoint) எடுத்துக் கொண்டேன். குளிர் எட்டிப் பார்க்க ஆரம்பித்ததால், இழுத்துப் போர்த்தியிருக்கும் அமெரிக்க மாமிகள். மக்களை கவனிப்பதுதான் பொழுதுபோக்கு என்றாலும் நாளிதழையும் புரட்டினேன்.
GOLIMAAR
முதலில் கண்ணில் பட்டவர்: YouTube - கோலிமார்
While Bollywood cinema may be a foreign concept to some, this clip is sure to convince you of its inventive brilliance. Just kidding. It’s a total rip off of Michael Jackson’s “Thriller” but therein lies the beauty. “Golimaar,” with the Wal-mart version of Jackson’s original costume and a slew of less convincing spooks, dances his way into your heart with slick Hindi moves and a killer Casio beat.
சிரஞ்சீவியும் ராதாவும் ஆடும் தெலுங்குப் பாடல். இணையத்தினால் உலகம் சுருங்குகிறது என்பதற்கு காட்டாக பாஸ்டன் பேப்பரில் தெலுங்கு சூப்பர்ஸ்டாரை வாரியிருந்தார்கள்.
LITTLE SUPERSTAR
நடுநிலை தவறாமல், பக்கத்திலேயே சூப்பர்ஸ்டார் படத்தையும் சுட்டியிருக்கிறார்கள்: YouTube - Little Superstar
But don’t get us wrong, Bollywood has managed to produce a one-of-a-kind “Little Superstar” of its own. Catch what couldn’t possibly be an actual child (perhaps this is a Gary Coleman/Andy Milonakis sort of thing?) do the worm and some other sweet moves so smooth that he puts most full-grown adults to shame. Plus, these moves while his lazy friend presses stop and start on the boombox.
ரஜினியை 'சோம்பேறி' என்று வர்ணித்ததை கண்டித்து பெட்டிஷன் போட வேண்டும். வாருங்கள்! கண்டனக் கடிதம் எழுதுவோம்!!
யூ ட்யூப்பில் 'லிட்டில் சூப்பர்ஸ்டார்' குறித்த கிங்ஸ்லியின் (சென்ற வாரத்து) பதிவு: The Little Superstar Goes Ginormous by Kingsley 2.0
Youtube | Rajini | Boston Metro
ஒன்றைக் கவனித்தீர்களா?
பிபிசியும் சரி அமெரிக்காவின் மெட்ரோவும் சரி இந்தியா என்றாலே பாலிவுட் என்றே பிடித்துக் கொண்டு தூங்குவதை. இப்படியான ஒற்றைப்படியான இந்தியா பற்றிய அறிவுதான் இப்போதும் மேற்கிலே இருக்கிறது. பத்மினி இறந்தபோதுகூட, அவரின் பாலிவுட் படங்களையே பிபிசி தூக்கிப்பிடித்துப் பட்டியல் போட்டது. பாலிவுட்டிலும்விட தென்னிந்தியாவிலே (கோலிவுட்டிலே) தயாரிக்கப்படும் படங்களின் எண்ணிக்கை அதிகம் என்பது எவருக்கும் தெரிவதில்லை. இத்தனைக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால், ஓர் இஸ்ரேலியர் இந்தியாவின் திரைப்படவுலகைப் பற்றி - வடக்கு தெற்கு எல்லாம் உள்ளடக்கி- ஒரு படத்தொகுப்புநூலை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இதற்கு ஒரு கண்டனக்கடிதத்தினை மெட்ரோவுக்கு எழுதவேண்டும் ;-)
சொன்னது… 10/05/2006 06:59:00 AM
சிரஞ்சீவியின் பாடல் தெலுங்கா என்பதை ஒன்றிற்கு இரண்டு முறை கேட்டு தெளிந்த பிறகு பதிவெழுதினான். ஒரு வார்த்தையாவது எழுதிப் போட்டுவிட வேண்டியதுதான். இருங்க... எழுதிட்டு வருகிறேன் :)
சொன்னது… 10/05/2006 07:08:00 AM
எழுதுவதை கவனமாக எழுதுங்கள். அவர்கள் அதையே பிரசுரித்தாலும் பிரசுரிக்கலாம்
______
CAPital
http://1paarvai.wordpress.com/
http://1kavithai.wordpress.com/
சொன்னது… 10/05/2006 05:57:00 PM
யாருய்யா இங்க, என் பேரை என் பர்மிஷன் இல்லாம் யூஸ் பண்றது ????
பிச்சுப்புடுவேன் பிச்ச்ச்சி :-)))
****
//ரஜினியை 'சோம்பேறி' என்று வர்ணித்ததை கண்டித்து பெட்டிஷன் போட வேண்டும். வாருங்கள்! கண்டனக் கடிதம் எழுதுவோம்!!//
ஆமாம் தலைவர் படங்களிலும், தனி வாழ்விலும் சுறுசுறுப்பாகவே இருக்கிறார்... ஆகவே நானும் கன்னடக் கடிதம் எழுதத் தயார், முகவரி கொடுங்கள் !!
****
தெலுங்கு சூப்பர்ஸ்டார் சீரஞ்சீவி நடித்த 'ஸ்டாலின்' படம் வெற்றியா / தோல்வியா என்று ஆராய்ந்து சொல்லுங்களேன், பாலா !!
சொன்னது… 10/05/2006 10:44:00 PM
//ஓர் இஸ்ரேலியர் இந்தியாவின் திரைப்படவுலகைப் பற்றி - வடக்கு தெற்கு எல்லாம் உள்ளடக்கி- ஒரு படத்தொகுப்புநூலை ஒன்றை வெளியிட்டிருந்தார்.//
திரு.பெயரிலி அவர்களே, மேல் விவரம் ப்ளீஸ்...
( இல்லே டோண்டு இஸ்டைலிலே விளித்துப் பார்த்தேன். வர மாட்டிங்குது)
சொன்னது… 10/05/2006 10:47:00 PM
சோ.பை.
---சூப்பர்ஸ்டார் சீரஞ்சீவி நடித்த 'ஸ்டாலின்' படம் வெற்றியா / தோல்வியா---
சிரஞ்சீவி, ரஜினி நடித்த மோசமான படங்கள் கூட தோல்வி என்று ஒப்புக் கொள்ளமாட்டார்கள் என்றே நினைக்கிறேன். தெலுங்கப் படப் பரிந்துரைகளுக்கும், பாக்ஸ் ஆபீஸ் ரிப்போர்ட்களுக்கும், நான் வெட்டிப்பயலையே நம்பியுள்ளேன் ;-)
அவரை விசாரித்து தெர்ந்து கொள்ளும் வரை உங்களுக்காக செய்தி: சிரஞ்சீவியின் “ஸ்டாலின்’ ரிலீஸ்: 4 ரசிகர்கள் சாவு
சொன்னது… 10/06/2006 07:30:00 AM
capitalz
---அவர்கள் அதையே பிரசுரித்தாலும் பிரசுரிக்கலாம்---
இன்னும் வெளியாகவில்லை (எழுதி அனுப்பினால்தானே வெளியிடமுடியும் என்கிறீர்களா :)
சொன்னது… 10/06/2006 07:33:00 AM
கருத்துரையிடுக