ஞாயிறு, நவம்பர் 12, 2006

Idly - Vadai & DJ Thamilan

nedstatbasic.net & ilead.itrack.it popup

நான் உலாவும் வலைப்பதிவர்களில் இருவர் (படம் காட்டுதல் அல்லது பயமுறுத்துதல் & இட்லி - வடை) WebStats4U (Webstats4u.com - Catalogue / Top 10 charts) பயன்படுத்துகிறார்கள்.

இண்டர்னெட் எக்ஸ்ப்ளோரரில் சென்றால் சில சமயம் ஐ.ஈ.

புன்னுனிமேல் நீர்போல் நிலையாமை என்றெண்ணி
இன்னினியே செய்க அறவினை - இன்னினியே
நின்றான், இருந்தான், கிடந்தான் தன் கேளலறச்
சென்றான் எனப்படுதலால்.
இறந்து விடுகிறது.

ஃபயர்பாக்ஸோ, இரத்தபீஜனாக, அணுப்பிளந்து பல சாரல்களைப் போட்டு சாளரங்களைத் திறந்து கணினியையும் கணித்திரையையும் ஆக்கிரமிக்கிறது.

நெட்ஸ்டாட்பேஸிக்.நெட் அல்லது வெப்ஸ்டாட்ஸ்4யு.காம் பயனர்களுக்கு ஒரு வேண்டுகோள். இந்த இலவச புள்ளிவிவரக் கணக்குகளில் இருந்து வேறு இடத்துக்கு மாறலாம். அல்லது, கீழ்க்கண்ட தளங்களில் சொல்லும் வழிமுறையைப் பின்பற்றலாம்:

ilead.itrack.it popup - எப்படி தவிர்ப்பது | இன்னொரு சுருக் முறை

முழுவதும் படிக்க: ilead.itrack.it popup - SWI Forums

11 கருத்துகள்:

ஓஹோ, அதான் பிரச்சனையா?

தூர்தர்ஷன் மட்டும் இருந்த காலத்தில், ஒளிபரப்பில் ஏதாவது சிக்கல் இருந்தால், " தயவு செய்து தொலைக்காட்சிப் பெட்டியை நோண்ட வேண்டாம்" யூ.எம் கண்ணனோ யாரோ அனவுன்ஸு செய்வார்கள். அந்த மாதிரி, ஒவ்வொரு முறையும், இட்லி வடைக்குப் போன போதும், என் கணிணியில் தான் ஏதோ பிரச்சனை என்று நோண்டினாலும் சரியாகவில்லை. இப்பல்லாம், இட்லி வடையை ரீடரில், அப்பப்ப படிக்கறதோட சரி.

ம்...இப்படியும் இருக்கிறதா பிரச்சினை. இதுவரை தெரிந்ததில்லை. குறிப்பிட்டுச் சொன்னமைக்கு நன்றி.
....
/நெட்ஸ்டாட்பேஸிக்.நெட் அல்லது வெப்ஸ்டாட்ஸ்4யு.காம் பயனர்களுக்கு ஒரு வேண்டுகோள். இந்த இலவச புள்ளிவிவரக் கணக்குகளில் இருந்து வேறு இடத்துக்கு மாறலாம். அல்லது, கீழ்க்கண்ட தளங்களில் சொல்லும் வழிமுறையைப் பின்பற்றலாம்./
இரண்டில் ஒன்றை விரைவில் நடைமுறைப்படுத்துகின்றேன். நன்றி பாலா.

@பிரகாஷ்,
ரீடர் வகையறாவா... கவலையில்லை. நேரடியாக செல்பவர்களுக்கும், பின்னூட்டங்களை கர்மசிரத்தையாக பின்பற்றுபவர்களுக்கும்தான் பிரச்சினை.

---யூ.எம் கண்ணனோ யாரோ அனவுன்ஸு ---

எதிரொலி-தானே : ))

---இரண்டில் ஒன்றை விரைவில் நடைமுறைப்படுத்துகின்றேன்.---

நன்றி டிசே. சௌகரியமாக இருக்கும்.

டுபுக்கு பக்கம் போனாலும் எனக்கு இந்த பிரச்சனை இருக்கிறது. அவருக்கு இந்த சுட்டியை அனுப்புகிறேன்.

இதுதான் பிரச்சினையா? சில சமயம் இட்லி வடையின் பதிவுகள் சரியாக வராமல் போக இது பிளாகர் பீட்டாவின் சதி என்று நினைத்தேன்.

@இ.கொ.,

டுபுக்கு பதிவொன்றின் பின்னூட்டத்தில்தான், நான் இந்தப் ப்ரச்சினை குறித்து அறிந்துகொண்டேன். சமீபத்தில் (சோண்டு சமீபம் அல்ல ; ) நான் அவரின் வூடு பக்கம் சென்றபோது எவ்வித தடங்கலும் இல்லாமல் உலாவ முடிந்தது.

@பத்மா,
---பதிவுகள் சரியாக வராமல் போக---

உண்மை... உண்மை. இன்று 'கிழக்கு கடற்கரை சாலை' படிப்பதற்காக, டிசே பக்கம் சென்றபோது, கிட்டத்தட்ட கணினியை திரும்பவும் தொடங்க வேண்டிய நிலைக்குக் கொண்டு சென்றது அந்த ஐலீட்.ட்ராக்.ஐடி.

இதை முன்பே எங்கேயோ பார்த்திருக்கிறோமே என்று துழாவிய போது கிடைத்த உதவியைப் பகிர்ந்தேன்.

ஸ்டாட்கவுண்டர் எனக்கு சிரமமில்லாமல் வேலை செய்கிறது.

இட்லிவடையின் வலைப்பதிவில் PopUp விளம்பரம் பயன்படுத்தப்படுகிறது தான் முக்கிய பிரச்சினை என்று நினைக்கிறேன்.
டி.சே தமிழனின் வலைப்பதிவு எனக்கு எப்போதும் பிரச்சினை தந்ததில்லை.

நீங்கள் சொல்வது போல் எனக்கு எந்த பிரச்சனையும் ஏற்பட்டதில்லை. இட்லி வடையாரின் பக்கத்தை நான் நேரிடையா தமிழ்மணத்திலிருந்துதான் open பண்ணுகிறேன். நீங்கள் firefox முயன்று பாருங்கள்.

பாலா,
டிசே பதிவில் எனக்கும் எந்தப் பிரச்சனையும் வந்ததில்லை..நேற்றைய பதிவில் பாவனாவின் சில போட்டோக்கள் தான் லோட் ஆகாமல் படுத்தின. சரி, அதனாலென்ன என்று விட்டுவிட்டேன் :)

இட்லிவடைக்கு யோசனை சொன்னாலும் சொன்னீங்க, இப்போ அவர் பதிவு லோட் ஆகி முடிக்கும்போது பச்சை இலையின் மேல் பாகம் மட்டும் தான் தெரிகிறது. மிச்சமெல்லாம் வெள்ளை.. :(

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு