திங்கள், நவம்பர் 13, 2006

Madhumitha Blog & Borat vs Martha Stewart

குரங்கு கையில் பூமாலை

பிரேசிலில் பத்திரிகையாளனாக எழுத வேண்டுமானால், இரண்டு தகுதிகள் வைத்திருக்க வேண்டும்:

  1. தாளிகைத்துறையில் பட்டம்
  2. நிருபராக பணியாற்ற உரிமம்

நல்ல வேளை...

வலைப்பதிவில் அந்த மாதிரி எதுவும் குறைந்தபட்ச அளவுகோல் எதுவும் இல்லை. அந்த தைரியத்தில் மதுமிதா வினவியவுடன், காற்றுவெளியைக் குறித்த வலை வாசிப்புரையை அவரின் பதிவில் இட்டிருக்கிறேன்.

காற்றுவெளி: Madhumitha's Kaatru Veli - Boston Balaji : Reader Views

  • இளவஞ்சியைக் குறித்து மதுமிதா என்ன சொல்கிறார்?
  • தமிழ்மணத்தின் 'அண்மையில் மறுமொழியப்பட்ட இடுகைகள்' வர இவர் என்ன செய்தார்?
  • த்ரிஷா வீடியோ
என்று என்னுடைய மசாலாவுக்கு ஏற்ற பொடி நிறைந்த பதிவு என்று வாக்குறுதி கொடுக்கிறேன்.



இந்த சமயத்தில் சம்பந்தமில்லாத இன்னொரு குரங்கு கையில் பூமாலை.

அமெரிக்காவை போராட் (படிக்க: Borat - Wikipedia & Borat: Cultural Learnings of America for Make Benefit Glorious Nation of Kazakhstan) கலக்குவது அறிந்த விஷயம். சமீபத்தில், போராட்டும் மார்த்தா ஸ்டூவர்ட்டும் ஒரு சேர ஜே லீனோவில் வந்திருந்தார்கள்.

போராட் இந்த துருவம். கரணம் தப்பினால் விரசமாகி விடக்கூடிய நவரசம் செய்பவர்.

மார்த்தா ஸ்டூவர்ட் இந்த துருவம். அமெரிக்கர் ஒருவரின் ஆதர்ச சின்னம். கஷ்டப்பட்டு முன்னேறியவர்.

அவர்கள் இருவரும் சந்தித்ததை இங்கு காணலாம்: Best Week Ever » Blog Archive » ICYMI: Borat On Martha Stewart On Leno


மார்த்தா ஸ்டூவர்ட் குறித்த பழைய பதிவு: அம்மா மாட்டிகிட்டாங்க! - Jury finds Martha Stewart guilty



| |

4 கருத்துகள்:

தாளிகை துறை- படிச்சா ரசத்துக்கு தாளித்துக் கொட்டுகிறது தான் ஞாபகம் வருகிறது .நீங்களா கண்டுப்பிடிச்ச சொல்லா :-))))

அம்புட்டு சமர்த்து இருந்தா, நான் தினாம் ஒரு வார்த்தை என்று ஒரு புதுப்ப்பதிவு தொடங்கி விட மாட்டேனா ; )

வளவு: மின்தாளிகைகள் - மடற்குழுக்கள் - வலைவாசல்கள்

பாபா காற்றுவெளியில் எழுதிட்டு, பார்க்க வந்தவங்களிடம் எல்லாம் நல்ல பெயர் வாங்கிட்டீங்க:-)

///மசாலாவுக்கு ஏற்ற பொடி நிறைந்த பதிவு என்று வாக்குறுதி கொடுக்கிறேன்.///

ஆனா இங்கே மசாலா பதிவுன்னு வாரிவிட்டீங்களே. அதுக்கு உறுதி வேற குடுத்திருக்கிறீங்க:-(

இந்த (போராட்டும் மார்த்தா ஸ்டூவர்ட்டும்) ரெண்டையும் சேர்த்து ஒரே பதிவா போட்டதில உள்குத்து எதுவும் இல்லையே:-)

@மதுமிதா
---வந்தவங்களிடம் எல்லாம் நல்ல பெயர் வாங்கிட்டீங்க:---

எல்லாம் உங்க தயவில்தான்... ஹீரோவுக்கு பதிலாக துணைநடிகர்கள் சில சமயம் 'அட...' பெறுவதில்லையா? அந்த மாதிரி : )


---இங்கே மசாலா பதிவுன்னு வாரிவிட்டீங்களே.---

குங்குமம் விற்பதற்கு 'சந்தைப்படுத்தல்' விளம்பரத் தலைப்பு கொடுப்பதில்லையா... அப்படித்தான் இங்கும், கொஞ்சம் கவர்ச்சிகரமானத் தலைப்பு கொடுத்து தூண்டில் போட்டுப் பார்க்கிறேன் : D


---ரெண்டையும் சேர்த்து ஒரே பதிவா போட்டதில உள்குத்து ---

மார்த்தா ஸ்டூவர்ட்டை அன்று நிகழ்ச்சியில் பார்க்க பரிதாபமாக இருந்தது. எவ்வளவு பெரிய ஆளு! இப்படி 'போராட்' மாதிரி கிண்டல் பேர்வழிகிட்ட மாட்டி விட்டுட்டாரே லீனோ... என்று கொஞ்சம் பாவம் வந்துச்சு.

அவ்வளவுதான் உள்ளர்த்தம் ; )
வேறு முடிச்சு எதுவுமில்லை : ))

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு