புதன், நவம்பர் 22, 2006

Irony and Hypocrisy - The staples of Satire

நகைச்சுவை எழுதுவது எப்படி?

நகைச்சுவையில் பல வகை உண்டு.

இன்று படித்த கட்டுரையில் இருந்து (OpinionJournal - Leisure & Arts: It's Enough to Make You Laugh :: Politics is a funny business) மொழியாக்க உதாரணம்.

ஜெயேந்திரர் கைதான சமயம். கூடவே ரவி சுப்பிரமணியமும் மாட்டிக் கொண்டுவிடுகிறார்.

பொதிந்த அர்த்தத்துடன் கிண்டலடிக்க விரும்பினால்: "ரவியின் சொந்த ஊரான காஞ்சீபுரம் ஜெயிலில் வைப்பது, காவல்துறைக்கு சிரமதசையைத் தந்திருக்கிறது. ரவி பாட்டுக்கு, ஒவ்வொரு அரசியல்வாதியின் வண்டவாளங்களை விளக்குவதால், புதுசு புதுசாக விஷயம் சிக்கிக் கொண்டேயிருக்கிறது; காஞ்சிக்கும் சென்னைக்கும் பாயிண்ட் டு பாயிண்ட் விட போலீஸ் விரும்பவில்லை."

வெளிப்படையாக நக்கலடித்தால்: "ரவி சுப்பிரமணியம் இன்று பிடிபட்டார். சிறைக்குள் நுழைந்தவுடன் மடத்தில் இருக்கும் சாமியார்களை விட, அதிக அளவில் அருள்வாக்கு ஆனந்தாக்களைப் பார்த்தவுடன், தோழமையைக் கொண்ட பரிச்சயமான இடமாக ஆக்கிக் கொண்டார்."

படிப்பவர் ஜெயேந்திரராக இருக்காத பட்சத்தில், இரண்டுமே சிரிப்பை வரவைக்கும். முதலாம் வகை நிஜ செய்தியாகவே வாய்ப்பு உண்டு. பூந்தமல்லி, காஞ்சி, சென்னை என்று அலைக்கழிக்காமல் நீதிபதி முன் ஆஜராக, விசாரிக்க, இப்படி நடந்திருக்கலாம் என்பதை நுட்பமாக உள்ளடக்கத்தில் வைத்திருக்கிறது.

இரண்டாவது வகை, எந்த வித கிரிமினலுக்கும் பொருந்தும். செரினா, சரவண பவன் என்று யாரை உள்ளே தள்ளினாலும், எள்ளலை பெயர் மாற்றி சொருகி விடலாம்.


இன்னொரு உதாரணமாக, முரண்களை வெளிக்கொணரவும் நகைச்சுவை கை கொடுக்கும்.

முதல் வகை: 'கணவன் இழந்தவர்கள் மீண்டும் மணமுடிக்கக் கூடாது என்று ஜெயேந்திரர் அறிவுறுத்தினாரே... ஏன் தெரியுமா? அவர்கள் தன்னிடம் வருவார்கள் என்னும் ஆசையில்தான்!'

இரண்டாவது: 'ஜெயேந்திரருக்கு கட்டாங்கடைசியாக நிம்மதி பிறந்திருக்கிறது. சிக்குன் குனியாவினால் அவருடைய பெயர் முதல் பக்கத்தை விட்டு அகன்றிருக்கிறது. அவருடைய 'ஜெயேந்திரர்' பட்டம் ஏற்கனவே அகன்றிருந்தது.'

முதலாவதில் எள்ளல் இருக்கும். வெளியே ஒரு வேஷம், உள்ளே இன்னொன்று வைத்திருப்பதை உரித்துக் காட்டும். இரண்டாவது எளிமையானது. செய்திகளின் மேற்சென்று அலசாமல், கரையிலே நின்று மீன் பிடிக்கும்.

முந்தைய வகையில் பெரியமனுசத்தனம் வெளிப்படும். கொஞ்சம் ஆலோசனை வழங்குவது போல் தோன்றும். பிந்தையது வெ.சீதாராமன் மாதிரி யாருக்கும் மனம் நோகாது. சிரித்து விட்டு செல்லச் சொல்லும்.

நடுவே தேவையில்லாமல் இருள்நீக்கி சுப்பிரமணியன் என்று விளித்தால் அது தனிமனிதத் தாக்குதல் என்று வகைப் பிரிக்கலாம்.

இதற்கெல்லாம் இடையில் சிலர் இருக்கிறார்கள். அமெரிக்காவுக்கு பில் க்ளிண்டன். இந்தியாவில் சுப்பிரமணிய சுவாமி. இவர்களுக்கு சுட்டுப் போட்டாலும் கோபமே வராது. எள்ளி நகையாடினாலும் சிரித்து புறந்தள்ளி விடும் குணம் வாய்ந்தவர்கள்.


இப்போது சில சமீபத்திய பதிவுகள்:

  1. joke party: சென்னை வலைபதிவர் சந்திப்பு

  2. simulation padaippugal: 2007 இடைத்தேர்தலில் சென்னை வலைப்பதிவர்கள் சங்கம்

  3. ஜொள்ளுப்பேட்டை: சென்னை வலைப்பதிவர் ( ரகசிய ) சந்திப்பு !!

  4. அம்மான்னா சும்மாவா?: இலைக்காரன் - well done கலாநிதி


எந்த எந்த பதிவு, பதிவில் வரும் எண்ணங்கள் - எப்படிப்பட்டவை என்று நீங்களே வீட்டுவேலையாக செய்து பார்த்து, எனக்கு பின்னூட்டமிடவும் :-D)


ஜோக் சொன்னால் அனுபவிக்கிற மாதிரி இருக்க வேண்டுமா? ஆராயுமாறு அமைய வேண்டுமா?



| |

9 கருத்துகள்:

//ஜோக் சொன்னால் அனுபவிக்கிற மாதிரி இருக்க வேண்டுமா? ஆராயுமாறு அமைய வேண்டுமா?
//
அடுத்தவங்களை பற்றிய (அதாவது பாலா மாதிரி வச்சிக்குங்களேன்) ஜோக்குனா ஆராயாம அனுபவிக்கலாம், அதே நம்மளை பற்றியென்றால் அனுபவிக்க தோனுமா? ஆராயத்தோனுமா? என்னிக்காவது எனக்கு நகைச்சுவையா எழுத வர்ற அன்னிக்கு உங்களை பற்றி ஒரு நகைச்சுவை பதிவு போடுறேன், அன்னிக்கு நீங்க ஆராயாம அனுபவிங்கோ தலைவா :-)))

//ஜோக் சொன்னால் அனுபவிக்கிற மாதிரி இருக்க வேண்டுமா? ஆராயுமாறு அமைய வேண்டுமா?//

பாலா...!
சிரிக்க சிந்திக்க என்று சொல்கிறார்களே !
:)

//ஜோக் சொன்னால் அனுபவிக்கிற மாதிரி இருக்க வேண்டுமா? ஆராயுமாறு அமைய வேண்டுமா?
//

//எந்த எந்த பதிவு, பதிவில் வரும் எண்ணங்கள் - எப்படிப்பட்டவை என்று நீங்களே வீட்டுவேலையாக செய்து பார்த்து, எனக்கு பின்னூட்டமிடவும்//

படித்துவிட்டுப் போவோரையும் வம்பில் மாட்டி விடுமாறு அமையக் கூடாது.

//அடுத்தவங்களை பற்றிய (அதாவது பாலா மாதிரி வச்சிக்குங்களேன்) ஜோக்குனா ஆராயாம அனுபவிக்கலாம், அதே நம்மளை பற்றியென்றால் அனுபவிக்க தோனுமா? ஆராயத்தோனுமா? என்னிக்காவது எனக்கு நகைச்சுவையா எழுத வர்ற அன்னிக்கு உங்களை பற்றி ஒரு நகைச்சுவை பதிவு போடுறேன், அன்னிக்கு நீங்க ஆராயாம அனுபவிங்கோ தலைவா//

குழலி! அப்படியே நம்மளைப்பத்தியும் ஒண்ணு போடுங்க! நான் எப்படின்னு தெரிஞ்சிக்க எனக்கு வசதியா இருக்கும்.

//எந்த எந்த பதிவு, பதிவில் வரும் எண்ணங்கள் - எப்படிப்பட்டவை என்று நீங்களே வீட்டுவேலையாக செய்து பார்த்து, எனக்கு பின்னூட்டமிடவும் :-D)
//

நான் அலுவலகத்தில் மட்டுமே பதிவுகளையும் படித்து வேலையும் பார்க்கலாம் என்றிருக்கிறேன்..வீட்டுவேலையாக இல்லாமல் அலுவலகத்திலேயே செய்யலாமா? ;))

@குழலி

---அதே நம்மளை பற்றியென்றால் அனுபவிக்க தோனுமா---

இதற்கும் இரு உதாரணங்களைக் கொடுத்திருக்கிறேன். க்ளிண்டன் & சுப்பிரமணிய சாமி. அமெரிக்காவில் பெரும்பாலான தலைவர்கள் 'சுய எள்ளல்' (self parody) சர்வ சாதாரணமாக செய்து கொள்வார்கள்.

வெகு சமீபத்தில் பார்த்த An Inconvenient Truth விவரணப் படத்தின் துவக்கத்தில் முன்னாள் ஜனாதிபதி ஆல் கோர், தன்னைத் தானே நக்கலடித்துக் கொண்டுதான் துவங்குகிறார். தேர்தல் சமயத்தில் தங்களின் குறைகளை (opportunities for improvement என்று பொலிடிகலி கரெக்டாக சொல்லலாம்) வெளிப்படையாக கேலி செய்யும் துண்டு நாடகங்களில் ஆர்வத்துடன் கலந்து கொண்டு, ஒவ்வொருவரும் சுய விமர்சனமாக மக்களிடம் பழகுகிறார்கள்.


---அடுத்தவங்களை பற்றிய ஜோக்குனா ஆராயாம அனுபவிக்கலாம்---

எப்பொருள்... மெய்ப்பொருள்?

அப்படியே.. இன்னொரு உல்டா:
நகுதற் பொருட்டன்று நகைச்சுவை மிகுதிக்கண்
மேற்செனறு இடித்தற் பொருட்டு.

@கோவி

---சிரிக்க சிந்திக்க என்று சொல்கிறார்களே---

துணுக்குத் தோரணம் அல்லது உள்குத்து என்று சொல்லாத வரைக்கும் மகிழ்ச்சிதான் கண்ணன் சார் : )

@ஆவி

---படித்துவிட்டுப் போவோரையும் வம்பில் மாட்டி விடுமாறு---

கழுவற நீரில நழுவற மீனாக ஓடிட்டிங்களே... சொல்லுங்கப்பா : P

@கப்பி

---வீட்டுவேலையாக இல்லாமல் அலுவலகத்திலேயே செய்யலாமா---

எத்தனை மணிக்கு வேண்டுமென்றாலும் சந்தேகம் கேட்கலாம் என்றவுடன் நள்ளிரவில் மாத்ருபூதத்திடம், விவேக் டவுட்டு கேட்கும் காட்சிதான் நினைவுக்கு வருகிறது : )))

இவ்வளவு பொறுப்பா... மெச்சினோம் உமது அளப்பரிய ஆர்வத்தை!

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு