திங்கள், பிப்ரவரி 05, 2007

100 Days of Kindergarten - Final Project Details

பத்து பொருட்களை எடுத்துக் கொள்வது. ஒவ்வொன்றிலும் பத்து பத்தாக சேர்ப்பது என்று முடிவானது. சாப்பாடு அயிட்டங்கள் முன்னிலை வகித்து, சாக்லேட், cereal என்று தொடங்கியது. திடீரென்று பாதை மாறி விளையாட்டு காய்களைக் கோர்க்கலாம் என்று முடிவானது.

முதலில் செட் சேர்க்கும் சீட்டாட்டம்




இன்னொரு வகை சீட்டுக்கட்டு - ஃபிஷ் என்னும் கண்டுபிடிப்பு விளையாட்டு




சிறிய பொம்மை பலூன்கள்




குட்டி அடுக்குமாடி கட்டிட செங்கல்




அலைபாயுதே படப்பாடல் ஞாபகத்துக்கு வரலாம்




ஜெம் என்பதற்கு அகரமுதலியைப் புரட்டி அர்த்தம் பார்க்க வைத்தாள்




வண்ண வண்னக் கோலங்கள்




செக்கர்ஸ் காய்கள்




சதுரங்கம் இல்லை... அது மாதிரி இன்னொரு ஆட்டம்




எல்லாவற்றையும் ஒட்டும் படலம்




வெற்றிகரமான நூறாவது நாள்



முந்தைய பதிவு: E - T a m i l : ஈ - தமிழ்: Help - 100 days of Kindergarten : Ideas Required

எண்ண மழையாகக் குவித்து எங்களுக்கு உதவிய இலவசக்கொத்தனாருக்கும், ஆதிரை, சிந்தாநதி, பொன்ஸ், செந்தழல் ரவி, பாலராஜன்கீதா, சர்வேசன், ஜி, பத்மா அர்விந்த், சேதுக்கரசி & மற்றவர்களுக்கும் வணக்கங்கள்.

14 கருத்துகள்:

அப்போ கொத்தனார் ஐடியா ஒர்க் அவுட் ஆகி இம்ளிமெண்ட் செய்யப்பட்டதா ?

சூப்பர்...:)))))

வெற்றிகரமா 100 நாள் புராஜக்ட் நிறைவுபெற்றது... sanjitha - பேரு நல்லா இருக்குங்கோ..

நானெல்லாம் கல்லூரில தான் (அதுவும் முதுகலையில் தான்!) புராஜெக்ட் எல்லாம் பண்ணியிருக்கேன்.. இதெல்லாம் பார்த்தா பொறாமையே வந்துடும்னு நினைக்கிறேன் :-) ரொம்ப வண்ணமயமா இருக்கு. இந்த ஊருல பள்ளிக்கூடத்துல கிரியேட்டிவிட்டிக்கு தான் என்ன ஒரு முக்கியத்துவம் தராங்க!

வாழ்த்துக்கள் சஞ்சிதாவுக்கு. நல்ல திட்டம்

சஞ்சிதாவின் ப்ராஜெக்ட் நல்ல வரவேற்பைப் பெற என் வாழ்த்துக்கள்.

அப்புறம் சேது, ரொம்ப கவலைப்படாதீங்க.இந்த ஊரில் மூச்சு விடுவதையே ப்ராஜெக்ட்ன்னு சொல்லிடுவாங்க. பள்ளிக்கூடத்தில் படிப்பு இருக்கோ இல்லையோ ப்ராஜெக்ட் கட்டாயம் இருக்கும்.

அப்படித்தான் ஒரு முறை கணினி நண்பர் ஒருவருடன் பேசும் பொழுது ப்ராஜெக்ட் எப்படி இருக்கு எனக் கேட்கப் போக, பக்கத்தில் இருந்த என் மகன் உடனே, "நீங்களும் ப்ராஜெக்ட் பண்ணறீங்களா? எந்த ஸ்கூல்? எந்த க்ரேட்?" எனக் கேட்க, ஒரே களேபரம்தான் போங்கள்!!

(நான் எழுதியதிலேயே பெரிய வாக்கியம் இதுதான் என நினைக்கிறேன்!)

//பள்ளிக்கூடத்தில் படிப்பு இருக்கோ இல்லையோ ப்ராஜெக்ட் கட்டாயம் இருக்கும்//

:-) நான் சின்ன வயசுல ஏதும் புராஜெக்ட் பண்ணியிருக்கேனான்னு ஞாபகப்படுத்திப் பார்த்தேன். 2வது அல்லது 3வது வகுப்பில் படிக்கும்போது அட்டைகளை வச்சு மாடல் செய்யற வேலை கொடுத்திருந்தாங்க. படங்களை அட்டையிலிருந்து வெட்டி, மடக்கவேண்டிய இடங்களில் மடக்கி 3D மிருகங்கள் மாதிரி மாடல்கள் செய்யறது. ரொம்ம்ம்ம்ப சுவாரசியமா இருந்தது. அப்பாவைத் தவிர எல்லாரும் சேர்ந்து பண்ணினோம்னு நினைக்கிறேன் :-) இதே மாதிரி அட்டை மாடல் புராஜெக்ட் மறுபடியும் அடுத்த வருசமும் கொடுப்பாங்கன்னு நினைச்சு ஏமாந்து போனது தான் மிச்சம். இதெல்லாம் ஒரு பள்ளிக்கூட activity-னு தான் நினைச்சேனே தவிர இதுக்குப் பேர் புராஜெக்டுன்னு அமெரிக்கா வந்தப்புறம் தான் தெரிஞ்சுது :-)

நம்மூர்ல முதுகலைப் படிப்புக்கே பிராஐக்ட் எல்லாம் சமீபத்தில் தான் வந்தது.

முன்னால பள்ளிக்கூடத்தில் botany க்கு herbarium தயாரிக்கிற வேலை இருந்தது. இப்போ social science க்கு கூட album project இருக்கு

எங்க வீட்டுல "பள்ளிக்கூடத்தின் நூறாவது நாள்" இன்னிக்கு வந்தது. செய்ய ஆரம்பிக்கிறப்ப உங்க வலைப்பதிவு நினைவு வந்தது, கூகூளில் போய் 100 days of kindergarten boston bala-ன்னு தேடினா உங்க பதிவு ரெண்டும் உடனே வந்துருது :-)

எங்க பள்ளிக்கூடத்தில் project கொஞ்சம் வேறமாதிரி... ஒரு பக்கத்தில் கோடுபோட்டு 100 கட்டம் போட்டு, ஒவ்வொரு கட்டத்துலயும் ஏதாவது வரையணும் அல்லது ஒட்டணும். சின்னச்சின்னக் கட்டமா இருக்கிறதால குட்டியோண்டா ஏதாவது வரையவேண்டியிருக்கு. கொஞ்சம் வரையறது, மற்றும் மேக்கரோனி (பாஸ்டா), பொத்தான்கள், நூல், பைப் கிளீனர் wire, பாசி (beads), கலர்கலரா சாப்பிடற சீரியல், பேப்பர் கிளிப், ஸ்டிக்கர்கள் இப்படி கொஞ்சம் சேகரிச்சு ஒட்டறதா ஐடியா :-)

சேதுக்கரசி,
இந்த வருஷமும் ப்ராஜெக்ட் கேட்டாங்க.

கொஞ்சம் எளிதாக இருக்கட்டும்னு, பத்து வடிவங்களை எடுத்துக் கொண்டோம். (வட்டம், சதுரம், நிலா, நட்சத்திரம், முக்கோணம், ஓவல், ஸ்டாப், பென்டகன்...)

பெரிதாக ஒரு வடிவம்; அதற்குள் சிறிதாக அதே வடிவம் பத்து தடவை வரும்.

ஒவ்வொரு வடிவத்துக்கும் ஒரு நிறம்.

இதற்கு பதிலாக நூறு நாடுகளின் கொடிகளை ஒட்டலாம் என்பதுதான் முதல் திட்டம். சரியான நேரத்தில் அந்த புத்தகம் வந்து சேரவில்லை.

உடுத்தும் துணியில் 100 பொருட்கள் இருக்கணுமாம். அதனால ஒரு வெள்ளை டீ ஷர்ட் ஒன்றில் அமெரிக்க கொடி வரைந்து அது 50 ஸ்டார், ஒரு ஒரு ஸ்டாரிலும் ஒரு பொத்தான் பாசி எனச் செய்து ஒட்டிவிடலாம் என ஐடியா. இந்த வார இறுதியில் நம்ம வீட்டுப் ப்ராஜெக்ட்!!

கொத்ஸ்,
நம்ம ஊரில முறுக்கு, தட்டை, அதிரசம் எல்லாம் தொங்க விட்டுண்டு போவேன். அது ஞாபகத்துக்கு வருது :)

நல்லா இருக்கு. இப்போல்லாம் எங்க வீட்டுல project வேலைக்கு என்னையெல்லாம் உதவி செய்ய விடுறதே இல்ல !

செல்வராஜ்,
இந்த த்டவை ஐடியா சொன்னதற்கே பெரிய பிரச்சினை ஆகிப் போய்விட்டது.

அவளின் அசல் திட்டப்படி ஸ்டிக்கர் ஃபோம்களை வாங்கிக் கொண்டு, பத்து பத்தாக ஒட்டித் தருவது. 'I love Mommy' என்பதில் பத்து எழுத்துகள் இருப்பது போல் பத்து சொற்றொடர்கள் அமைத்து தர உதவி கோரினாள்.

உயிரெழுத்துகள் பற்றாக்குறை, எம், டி போன்ற எழுத்துகள் அடிக்கடி வருவது என்பது எல்லாம் இதை நிராகரிக்க வைத்தது. 'என் கருத்துகளுக்கு மதிப்பில்லை...' போன்ற ரேஞ்சில் அதில் ஆரம்பித்தது பூகம்பம் :))

ஒருவாறாக சமாதானக் கொடி பறந்தாலும், அடுத்த வருசம் எட்டிக் கூட பார்க்க கூடாது என்று வாக்குறுதி வாங்கிக் கொண்டிருக்கிறாள்.

:-) :-)

இப்போ அடுத்த project வேலை ஆரம்பமாகிடுச்சு - பிப் 14 பக்கத்துல வருதே... டீச்சருக்கே ஸ்டிக்கர் தாள்கள் தயாராகிக் கொண்டிருக்கின்றன!

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு