வியாழன், பிப்ரவரி 08, 2007

It happens only in a Democrazy

சென்னை மாநகராட்சி தேர்தல்: மா. சுப்பிரமணியன் போட்டியின்றி தேர்வு- சுயேச்சை வாபஸ் ஆகிறார்

எதிர்க்கட்சியான அதிமுக மற்றும் மதிமுக இத் தேர்தலைப் புறக்கணிப்பதால் அக்கட்சிகள் சார்பில் யாரும் இத்தேர்தலில் மனுத் தாக்கல் செய்யவில்லை. பதவி விலகிய மேயர் மா. சுப்பிரமணியன் 140-வது வார்டில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். அவரை எதிர்த்து தேமுதிக சார்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. கடைசி நேரத்தில் சுப்பிரமணியன் என்பவர் தேமுதிக வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அவரது வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டது.

அதிமுக & மதிமுகவை எதிர்க்கட்சி என்று இந்த செய்திக்குறிப்பு அடைமொழி தருவது தவறு. ஆளுங்கட்சிக்கு எதிராக போட்டியிடாவிட்டால், அவர்களும் மைனாரிட்டி கூட்டணிக்கு வெளியில் இருந்து ஆதரவு தருகிறார்கள்.


'ஜீ நியூஸ்' தொலைக்காட்சி, நிருபருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

குஜராத்தில் கீழ்நீதிமன்றங்களில் நடைபெறுவதாகக் கூறப்படும் ஊழல்கள் குறித்து வெளிப்படுத்த, ஜோடிக்கப்பட்ட ஒரு வழக்கில், ஆமதாபாத் கீழ்நீதிமன்றத்தில் லஞ்சம் கொடுத்து குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி வி.என்.கரே, நீதிபதி பி.பி.சிங் மற்றும் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ஆர்.கே.ஜெயின் ஆகியோருக்கு வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இதுதொடர்பான செய்தியை ஜீ நியூஸ் தொலைக்காட்சி ஒளிபரப்பியது.

Counsel for Gujarat said a committee appointed by the Gujarat High Court exonerated the magistrate and he was reinstated in service.

லஞ்சம் பெற்றுக்கொண்ட விபச்சாரி நீதிபதி குற்றமற்றவர். குற்றத்தை வெளிக்கொணர்ந்தவர் மேல் வழக்கு.

6 கருத்துகள்:

வழக்கத்திற்கு மாறாக நம்ம முதல் பின்னூட்டம்.

//லஞ்சம் பெற்றுக்கொண்ட விபச்சாரி நீதிபதி குற்றமற்றவர். குற்றத்தை வெளிக்கொணர்ந்தவர் மேல் வழக்கு.//

இது பழைய கதையாச்சே! இப்பத்தான் தீர்ப்பு வந்ததா?

@சிபி

---இது பழைய கதையாச்சே! ---

ஆமாம்... முன்னாடியே மேஜிஸ்திரேட்டை மாசற்றவர் என்று சொல்லியிருக்கிறார்கள். ஆனால், இப்பொழுது ஜீ டிவி மேல் வழக்குத் தொடர்ந்த கதையைப் படித்தபோதுதான் தெரிந்து கொண்டேன்

I agree. It happens only in a democracy. Election and Justice system.

Also crazy party leaders, crazy judges and idiotic cases.

தற்போதைய நிலையில் சென்னை மாநகராட்சி தேர்தலில் அதிமுக போட்டியிட்டால் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டுவிடும் என்று தெரியவந்ததால்தான் அதிமுக போட்டியடவில்லை என்று எங்கேயோ படித்த நினைவு....

இது எப்படி இருக்கு?

@சிறில்

---crazy party leaders, crazy judges ---

க்ரேசி பொதுஜனம் ; )

@அருட்பெருங்கோ

---அதிமுக போட்டியிட்டால் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டுவிடும---

அதுதான் உண்மையாக இருக்கும். விமர்சனம் செய்வது மட்டும் எதிர்க்கட்சி வேலை இல்லையே. போட்டியிடாமலேயே, 'போங்கு', 'உறவினர்களால் நடத்தப்படுகிறது' என்று நொள்ளை சொல்வதற்கு அதிமுக எதற்கு?

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு