வெள்ளி, பிப்ரவரி 23, 2007

Hello world! « சாகர அலை

கல்யாண் நினைவாக...

Hello world! « சாகர அலை:

சுகம் கொடுத்துத்தான் போய்விட்டது என்று நினைக்கிறேன். 8 மணி நேரம் பஸ் பிரயாணம் ஏற்படுத்தியிருந்த அலுப்பு, மிகுந்த ஆயாசத்தைத் தந்தது. டிசம்பர் 1ம் தேதி. சென்னை விட்டு ஈ.சி.ஆர் ரோடு வழியாக கடலூர் வந்து, கடலூரிலிருந்த்து சீர்காழி வழியாக திருக்கடவூர் சென்றிருந்தேன். ஈ.சி.ஆர் டிராவல் கூட பெரிசாகத் தெரியவில்லை. ஆனால் திருக்கடவூர் வழி செம கடி.

மார்கண்டேயர் கதை தெரிந்திருக்கும். அந்த கதை நடந்த இடம் இதுதான். இந்த இறைதான் காலனை அழித்தவர் என்று அறிந்த போது.. பார்க்க வேண்டும் என்ற எண்ணம் மிகுந்தது. அதைவிட அந்த இடம் அபிராமிப்பட்டரால் பாடப்பட்ட அபிராமி அந்தாதியின் இடம் என்று சொல்லிய போது எண்ணம் வலுப்பெற்றே இருந்தது.

மாலை 6 அரை மணி இருக்கும். கோவில் அலாதியாக இருந்தது. ஆங்காங்கே 60 வயசுக்காரர்கள் அந்த மாலை நேரத்திலும் சடங்குகளில் ஈடுபட்டிருந்தார்கள். மார்கண்டேயர் போல காலனை ஒழித்து இன்னமும் பல வருடங்கள் வாழ வேண்டுமென்ற எண்ணம் எல்லோருக்கும் இருக்கத்தான் செய்கிறது போலும். கோவிலின் மேலே சந்திரன் பிரகாசித்துக்கொண்டிருந்தான். மனசு மாறி மாறி யோசித்துக்கொண்டிருந்தது.

அபிராமி சந்திதியில் நுழையும் போது, இங்குதானே சந்திரனை மீண்டும் தோன்றச்செய்த சக்தி மிகு - தாரமர் கொண்றையும் சன்முக மாலையும் - அபிராமித் தேவி என்று மனசு நினைந்து நினைந்து உருகியது. ஆனாலும் அதிக நேரமில்லை…

ஏன் இந்த காலத்தில் அப்படி ஒரு நிகழ்வு நிகழவில்லை. தெய்வம் இவ்வளவு தூரம் தள்ளிப் போய்விட்டதற்கான காரணம் என்ன? கேள்விகள் மனசை துளைக்கத் துவங்கியிருந்தன. கேள்விகள் வந்துவிட்ட பிறகு எல்லாமே எட்டித்தான்!

திரும்ப வரும் போது கிடைத்தது டவுண் பஸ். இந்த பஸ் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. காரணம் பஸ்ஸில் நிகழும் சம்பாஷனைகள். அந்த பேருந்திலும் மிகச் சுவாரஸியமான சம்பாசனை ஒன்றை கேட்க நேர்ந்தது.

December 3rd, 2006 Posted by sakaran | Uncategorized

3 கருத்துகள்:

பஸ்ஸில் மட்டுமே ஓபனாக ஒட்டுகேட்கலாம்.

very touching.... do ya have any more postings of Kalyan? where does one find his postings>

//
Anonymous said...
very touching.... do ya have any more postings of Kalyan? where does one find his postings>
//

http://sakaran.blogspot.com/

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு