வெள்ளி, ஜூன் 08, 2007

Tamil Poonga gets mentioned in Dinamani Kathir

ஞாயிறு தினமணியுடன் வெளிவரும் இலவச இணைப்பான தினமணிக் கதிரில் இந்த வாரம் வெளிவந்த செய்தியின் நறுக்கு:
நன்றி: தினமணிக் கதிர்.


தமிழுக்கொரு பூங்கா!
- என்.ஜே.


குடந்தைத் தமிழ்ச் சங்கம் தமிழ்ப் பூங்கா என்றொரு காலாண்டிதழை வெளியிட்டுள்ளது.

தாத்தாவும் பேரனும் கைகோர்த்து நடப்பது போல, பழமையும் புதுமையும் இந்தப் பூங்காவில் கைகோர்த்து நடக்கின்றன.

கம்பராமாயணம் பற்றிய கட்டுரை ஒரு பக்கத்தில் என்றால் புகழ்மிக்க எழுத்தாளர் அமரர் எம்.வி.வெங்கட்ராம் அளித்த நேர்காணல் இன்னொரு பக்கத்தில்.

இந்தத் தமிழ்ப் பூங்காவில் தமிழைப் பற்றி மட்டும்தான் இருக்கும் என்று நினைத்தீர்கள் என்றால் ஏமாந்து போவீர்கள். வரலாறு, புதுக்கவிதையின் தந்தை ந.பிச்சமூர்த்தி பற்றிய கட்டுரை, மஞ்சளின் மகிமை, வாழையின் பயன், தேனின் மருத்துவக் குணங்கள் எனப் பல்சுவையும் நிறைந்திருக்கிறது இந்தத் தமிழ்ப் பூங்காவில்.

7 கருத்துகள்:

பாலா,

விஷயத்துக்கு,
ம்...
சம்பந்தமில்லாத ஒரு கேள்வி,
தலைப்பை ஏன் ஆங்கிலத்திலேயே வைக்கிறீர்கள்? கூகிள் தேடல் வழிக்காகவா?

---தலைப்பை ஏன் ஆங்கிலத்திலேயே வைக்கிறீர்கள்?---

:D

ஆமாம் :)

லேபிள்களும் ஆங்கிலத்தில் இருப்பதற்கு இதுவே காரணம். இப்படியெல்லாம் ஆள் பிடிக்கணுமா என்று நீங்க கேட்பது/நினைப்பது புரிகிறது ;))

இந்தப் பூங்கா நம்ம பூ'ங்'கா இல்லையே பாபா.

\\இதுவே காரணம். இப்படியெல்லாம் ஆள் பிடிக்கணுமா என்று நீங்க கேட்பது/நினைப்பது புரிகிறது ;))\\

கட்டாயமா இல்லை. எழுதறதே அடுத்தவங்க படிக்கறதுக்குதானே..
ஒரு குறுக்கு வழி நான் பண்றது,
தலைப்பயும contentக்குள்ள தட்டச்சி வச்சுக்கறது மொதல்ல தலைப்பை ஆங்கிலத்துல வைச்சுட்டு ஒரு publish
இப்போ மறுபடி, தலைப்பை தமிழ்ல வெட்டி ஒட்டிடவேண்டியது. மறுபடி publish. தமிழ்மணத்துக்கு அனுப்பிடவேண்டியது தான். உங்களுக்கும் தெரிஞ்சிருக்கும் இருந்தாலும்...

---இந்தப் பூங்கா நம்ம பூ'ங்'கா இல்லையே பாபா.---

இல்லை :)

கடந்த வாரக்கதிரில் இந்தத் தலைப்பை கண்டவுடன் ஓடோடி சென்று படித்தேன். யாம் பெற்ற இணையம் பெறுக இவ்வையகம்

facelift looks nice.

---கட்டாயமா இல்லை. எழுதறதே அடுத்தவங்க படிக்கறதுக்குதானே..---

நன்றி... நாம் பிற்காலத்தில் தேடும்போது கிடைக்கவும் பயன்படும். புத்தகம், நூல், போன்றவற்றுள் எந்தத் தொகை (நூற்பட்டியல், புத்தக விருப்பங்கள் போன்ற சுருக்கங்கள்) கொடுத்திருக்கிறோம் என்று தேடுவதும் சிரமம் ஆகிப் போகலாம்.

இதற்கு குறிச்சொற்கள் கை கொடுக்கும். எனினும், கவனம் சிதறாமல், லேபிள்களை அடுக்கிக் கொண்டே போகாமல், ஒரு எல்லைக்குள் நிர்மாணித்து சுருக்குவது நல்லது. அதுவும் நான் ஒழுங்காக செய்யாமல், வகை, தொகை இல்லாமல் கூட்டிக் கொண்டே போகிறேன் ;)

---தலைப்பயும contentக்குள்ள தட்டச்சி வச்சுக்கறது---

இது நிஜமாகவே நல்ல சிந்தனை. எனக்குத் தோணவில்லை!

இன்னும் கொஞ்சம் ஆஃப்லைனர்ஸ்:
- உங்களின் கற்றது கைமண்ணளவு: இலவசகொத்தனாருக்கு சமர்ப்பணம் அல்லது படம் காட்டுதல் பதிவை எடுத்துக் கொண்டால்... பாஸ்டன், புகைப்படம், Boston Visitor, Travelog என்றெல்லாம் தேடினால் கூட கிடைக்க வேண்டும் என்பது என் விருப்பம். இது எப்படி சாத்தியப்படுத்துவது (கையைப் பிடித்து அழைத்து வரமுடியாது; ஆனாலும், நம்மால் இயன்றவரை திசைகாட்டிகள் வைத்திருக்க வேண்டும் ;)

- SEO என்று பார்த்தால் தலைப்பில் இருக்கும் வார்த்தைகள் அட்சர லட்சம் பெறுமானவுள்ளவை. அதன் பிறகு லேபிள்/டாக்-கள். சிவாஜி - தி பாஸ் என்று கூகிள் வாசிகள் தேடுவதில்லை. Sivaji Rajni போண்ற சொற்றொடர்கள்தான் உபயோகிப்பார்கள். அவர்களுக்கு தமிழ் படிக்கத் தெரிந்திருக்கும். வலைப்பதிவுக்கு இழுக்கவேண்டும் என்பது என் விருப்பம் :)

(சொன்னதையேத் திரும்ப சொல்லியிருக்கிறேனா... வூட்டுக்குக் கிளம்பும் அவசரம் :D)

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு