புதன், மே 25, 2005

தினகரன் - மெடிமிக்ஸ் விருதுகள்

விருது என்றவுடனே ஆஸ்கார் நினைவுக்கு வந்தது. ஆங்கிலப் படங்கள், பாடல்கள் விருது எல்லாமே வார்ப்புருவில் செய்யப்பட்டது போல் இருக்கும்.

  • விளம்பரதாரர் மேடையில் தோன்றி விருதுகளைத் தரமாட்டார்.

  • திடீரென்று ஏடாகூடமான கேள்வி எல்லாம் கேட்டு விருது பெறுபவரை 'ஏண்டா சாமீ... விருது வழங்கினே!' என்று விசனப்பட வைக்க மாட்டார்கள்.

  • விருதுப் பெறப் போகும் வழியில் முத்தங்கள் கிடைக்கும்; கை கூப்பி, காலில் விழுந்து, கையை அசைத்து 'கவனிக்க' வேண்டாம்.

  • விருது கொடுப்பவர் தயாராக மேடையில் இருக்க, அதன் பின்புதான் - பெறப் போகிறவர் மேடையில் தோன்றுவார்.

  • ஒவ்வொரு விருதுக்கும் பரிந்துரைக்கப் பட்டவர்களின் பட்டியல் சொல்லப்பட்டு, விருது வாங்குபவர் யாரென்பது ரகசியமாக வைத்துக் கொள்ளப்படும்.

  • வாழ்நாள் விருது பெறுபவருக்கு வருகை புரிந்த அனைவரும் எழுந்து நின்று கைதட்டி மகிழ்வார்கள்.

  • பதக்கம் மாட்ட மாட்டார்கள்.


    இவை எல்லாம் தினகரன் விழாவில் வித்தியாசப்பட்டாலும், மற்ற இடங்களில் ஆஸ்கார் விருதுகளுக்கு நிகராகவே இருந்தது.

  • அங்கே ஜெனிஃபர் லோபஸ் அரைகுறையாய் ஆடுவார்; இங்கே ரகஸியா, ரம்பா, தேஜாஸ்ரீ, மதுமிதா, சொர்ணமால்யா.

  • அங்கே 'Good Will Hunting' பென் அஃப்லெக்; இங்கே 'மன்மதன்' சிம்பு போல ஒரு சிலர் அதிகமாய் அலட்டிக் கொள்வார்கள்.

  • சிறந்த நடிகர் விருதைப் பெறுபவர் அமைதியாய், விக்ரம் போன்றோரின் இருப்பை உணர்ந்து, விஜய் போல் அடக்கமாய் இருப்பார்.

  • ஸ்ரீமானும் பெயர் மறந்துபோன சின்னத்திரை நாயகியும் நன்கு தொகுத்து வழங்கினார்கள்.

  • சாதனையாளர் விருது பெறுபவர் எதையாவது தாக்குவது வழக்கம்: நாகேஷுக்கு பத்மஸ்ரீ வழங்காததை எண்ணி வருந்திக் கொண்டார்.

  • நாகேஷுக்குப் தேவையான பதிலை முன்கூட்டியே வாலி சொல்லியிருந்தார்: 'பக்கபலமோ போஷகரோ இல்லாத திறமை வீண்'.

  • கிடைத்ததை யாருக்காவது காணிக்கையாக்குவது சர்வ சாதாரணம்; அனேகர் நன்றி மட்டும் நவின்றாலும், ஜோதிகா மட்டும் சூர்யாவுக்கு அர்ப்பணித்தார்.

  • விருது எதுவும் கிடைக்காவிட்டாலும் வைரமுத்து வந்திருந்து, வாலி விருது பெறுவதற்காக சண்டை எல்லாம் போடாமல் ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்.

  • உருப்படியான சிலருக்கும் பொதுமக்கள் வாக்களிப்பார்கள்: 'அழகிய தீயே' ராதாமோகன், 'காமராஜ்' திரைப்படம், 'ஆட்டோகிராஃப்', இசைக்கு '7ஜி ரெயின்போ காலனி', வில்லனுக்கு பிரகாஷ்ராஜ்.

  • சம்பந்தமே இல்லாமல் க்ளோசப் கொடுத்தாலும் மிடுக்கு குறையாமல் அரங்கத்தை கவனித்துக் கொண்டிருந்த சிறந்த 'நடிகை' ஜோதிகா.

    சன் டிவி போட்டிருப்பதை எண்ணி சந்தோஷப்பட வைத்த பதிவு.

    2004 வருட விருதுகள் குறித்த பதிவு | Dinakaran Awards

  • 4 கருத்துகள்:

    ம்ம்ம்... நல்ல ரசிச்சி பார்த்திருக்கீங்கன்னு தெரியுது. அடசே... ரஸிகா டான்ஸ் வர்றதுக்கு முன்னாடி வெளியே போக வேண்டியதாகி விட்டது :-(

    நானும், கமலும் சேரனும் பேசுறதுவரை பாத்தேன், அப்புறம் எழுந்து போயிட்டேன். (குடைக்குள் மழை நாயகி தனது நடனத்தின் போது கன்னாபின்னாவென்று ஆடிய மேலாடையை உள்ளே சென்று சரிசெய்துவிட்டு வந்தார்..இது முக்கிய காட்சி!)

    ஸ்ரீமனும் அந்த்ப்பொண்ணும் நல்லாத்தான் பண்ணினாங்க, ஆனா கேட்ட கேள்விகள் எல்லாம் படு அபத்தம். நல்ல கேள்வியா கேளுங்கப்பா.

    வாற எல்லாருக்கும் விருதோட சம்பத்திப்படுத்திடுறாங்க, சில பேரு கொடுத்து சில பேரு வாங்கி. நல்ல பிஸினெஸ்.

    சிம்பு ரொம்ப அலட்டல். 3, 4 கதாநாயகி ஏன் எடுத்துகிறேன்னு சொல்லியிருந்தா நல்லாயிருந்திருக்கும்...நற நற..!

    சுள்ளானை சுத்தமா இந்தப்பக்கமே காணோம்?!

    எம்.கே.

    ரசித்ததை எனக்குத்தெரியாத சில விசயங்களுடன் பகிர்ந்துகொண்டதற்கு நன்றி.

    விஜய்,
    அன்னிக்கு நம்ப சந்திப்புக்கு நானும் எனக்குப்பிறகு குமாரும் - ஏன் லேட்டுன்னு இப்போவாவது புரிஞ்சா சரி:)
    கேசட் வேணுமா!?

    >>ரஸிகா டான்ஸ் வர்றதுக்கு முன்னாடி

    தவற விட்டீங்களே!!!

    >>கேட்ட கேள்விகள் எல்லாம் படு அபத்தம்

    இத்தனைக்கும் extempore-ஆக பேசவில்லை. எழுதிவைத்துக் கொண்டுதான் கேட்டார்கள்.

    >>சுள்ளானை சுத்தமா இந்தப்பக்கமே காணோம்

    அப்படியே 'தல'யையும் சேர்த்துக்குங்க. ஜோதிகா விருது வாங்குகிறார்; இருந்தும் சூர்யா வரவில்லை

    நன்றி அன்பு.

    கருத்துரையிடுக

    புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு