திங்கள், ஜூன் 19, 2006

Sheik Chinna Moulaana

ஷேக் சின்ன மௌலானா
'கரவாடி'. ஆந்திராவில் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள இந்தக் கிராமத்தில் முந்நூறு வருஷங்களுக்கு மேல் நாதஸ்வரத்தை இசைக்கிற குடும்பத்தின் இளங்கொழுந்து. அங்கு இருந்த விஷ்ணு கோவில், சிவன் கோவில்களில் காலையிலும், மாலையிலும் கேட்பது இஸ்லாமிய சமூகத்தவர்களான சாஹிப் குடும்பத்தாரின் நாதஸ்வர இசைதான்.

ஆந்திராவில் சிவகலூரிப் பேட்டையில் இருந்த ஷேக் ஆதம் சாகிப்பிடம் நாதஸ்வரம் கற்றுக் கொண்டு மூத்த சகோதரரான பெரிய மௌலானாவுடன் இணைந்து வாசிக்க ஆரம்பித்ததால் இவர் பெயர் ஷேக் சின்ன மௌலானாவாகி விட்டது.

மௌலானாவும், தவில் வித்வான் வலங்கைமான் சண்முகசுந்தரமும் இணைந்த இசைக் கூட்டணி, முப்பதாண்டுகளுக்கு மேல் தமிழகம் இந்தியா, வெளிநாட்டு நிகழ்ச்சிகள் உட்பட நீடித்திருக்கிறது.

நாதஸ்வரத்தில் தனது மருமகன் ஷேக் சுபானுடன் இணைந்து நிகழ்ச்சிகள் நடத்தின மௌலானா, கடந்த பதினைந்து வருடங்களாக தனது பேரன் காசிமுடன் இணைந்து நிகழ்ச்சிகள் நடத்துகிறார். அதோடு இன்னொரு பேரன் பாபுவும் நாதஸ்வரம் இசைக்கிறார். முந்நூறு ஆண்டுகளாக கரவாடி கிராமத்தில் எத்தனையோ தலைமுறை தாண்டி வந்த நாதஸ்வர இசை ஸ்ரீரங்கத்திற்கு வந்தாலும் அடுத்தடுத்த தலைமுறை தாண்டி தொடர்கிறது.

"எழுபத்தி நாலு வயசிலும் இன்றைக்கும் சாதகம் பண்றார். மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கிறார். இப்போதும் இசைக் கச்சேரிகளில் ஒன்றரை மணி நேரத்தீற்குக் குறையாமல் வாசிக்கிறார். அவருடைய ஈடுபாடு, சிரத்தையிலிருந்து இளைய தலைமுறையிரான நாங்கள் நிறையக் கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது" என்கிறார் மௌலானாவின் பேரனான இளம் நாதஸ்வரக் கலைஞரான காசிம்.

நன்றி: நதிமூலம் - மணா (உயிர்மை) - புத்தகம் குறித்த மாலனின் அணிந்துரை | சுப்பிரமணிய சுவாமி



| |

10 கருத்துகள்:

ஏன் தலைப்பு ஆங்கிலத்தில இருக்கு உங்க பதிவுல...ஏதாவது வேண்டுதலா ?

மௌலானாவின் இசைக்கு பல தடவை மயங்கியிருக்கிறேன்.

கம்பீரம் கலந்த உத்சாக இசை நாதஸ்வரம். அதன் சுவை அனுபவித்தவர்களுக்கு அந்த நாதம் எப்போதுமே மனதை இழுக்கும். அதிலும், மௌலானாவின் கச்சேரி ஒலிநாடாக்கள் எல்லா வீடுகளைப்போல எங்கள் வீட்டிலும் இன்றியமையாத பாகம். இந்த நகர வாழ்க்கையில் எல்லா மங்கள காரியங்களுக்கும் முத்தாய்ப்பாக எங்களுக்கு கூட வருவது அவர் நாதம்தான்.

அவரைப்பற்றி தெரியாத விஷயங்களை சொன்னதுக்கு மிக்க நன்றி.

அவர் லேட்டஸ்ட் படம் இருந்தால் போடுங்களேன்.

நன்றி

உண்மையா சொல்கிறீங்களா,,
இவர் காலமாகிவிட்டார் என செய்தி படித்த தாக ஞாபகம்.தயவு செய்து தெளிவு படுத்தவும்.
யோகன் பாரிஸ்

ரவி...
கற்காலத்தில் எழுதியதை பிற்காலத்தில் தேடுவதற்கு ஆங்கிலத் தலைப்புகள், குறிச்சொற்கள் எனக்குப் பயனுள்ளதாக இருக்கிறது.

யோகன் பாரிஸ்...
கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்கு முன்பு குமுதம் ஆசிரியராக மாலன் இருந்த சமயத்தில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பில் இருந்து இட்டிருக்கிறேன். தற்போது அவர் மறைந்திருக்கலாம்.

---கம்பீரம் கலந்த உத்சாக இசை நாதஸ்வரம்---

வெகு அருமையாய் சொல்லி இருக்கிறீர்கள். ஒலிப்பேழையில் கேட்கும்போதும் நேரில் கேட்பது போன்ற ஆளுமையுடன் இனிய வாசிப்புக்கு சொந்தக்காரர்.

தயவு செய்து, இப்படி மறு பதிப்பிடும் கட்டுரைகளுக்கு; அதன் முதற்பதிப்பு வந்த திகதியையோ;அல்லது சம்பந்தப்பட்டவர்; உயிருடன் இருக்கிறாரா?. இல்லையா? என்பதையாவது குறிப்பிடவும்.இந்த மதங்களுக்கப்பாற்பட்ட உன்னத கலைஞன் சுமார் 5 வருடங்களுக்கு முன் இறையெய்திவிட்டார். காரைக்குறிச்சியாருக்குப் பின் ஒப்பாரும் மிகாருமற்ற ;இசையுரு!; எங்கள் ஈழத்துக்குப் பல தடவை வந்துள்ளார். பாரிசிலும் 15 வருடங்களுக்கு முன் அவர் கச்சேரி கேட்டேன். அவர் மறைந்த போது "இந்தியா ருடெ" கண்டு கொள்ளாது விட்டதைக் கண்டித்து; ஓர் கடிதம் ஆசிரியருக்குப் போட்டு.அவர்கள் ஞான சூனியத் தன்மைக்குக் குட்டுப் போட்டேன்.
நன்றி
யோகன் பாரிஸ்

For the picture and more info of Sheik Chinna Moulana:-

www.musicalnirvana.com/carnatic/sheik_chinna.html

விரிவான தகவல்களுக்கு நன்றி யோகன்.

சிமுலேஷன் __/\__

Balaji

Yes he died in Srirangam some three years back. even PM Vajoayee expressed his personal condolences on his death

Rajan

Thank you Rajan

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு