புதன், அக்டோபர் 25, 2006

Games & Minds - Block

நினைவு கூர்தலை சரி பார்ப்பதற்கான விளையாட்டு. நானும் என் ஆறு வயது மகளும் ஆடுகிறோம். தரையில் உட்கார்ந்து பல்லாங்குழி ஆடுவது போல் கீழே அமர்ந்திருக்கிறோம்.

முன்னே அட்டையில் விதவிதமான சின்னங்கள். ஒவ்வொரு சின்னமும் இரு முறை இடம் பிடித்திருக்கிறது. எல்லா சின்னமும் மூடியிருக்கும்.

ஒன்றைத் திறக்க வேண்டும்; அடுத்து இன்னொன்று; இரண்டும் ஒரே சின்னமாக இருந்தால், எடுத்தவருக்கு இரண்டு வாக்கு. மற்றொரு வாய்ப்பும் உண்டு. இரண்டும் ஒத்துப் போகா விட்டால், எடுத்த இடத்திலேயே, காய்களை மீண்டும் வைத்து விட வேண்டும். எதிராளி ஆடத் தொடங்குவார்.

காலையில் ஏழு மணிக்கு எழுந்த களைப்புடன் என் மகள். அலுவலில் மேலாளர் இல்லாத குறையுடன் ஓய்வெடுத்த புத்துணர்வுடன் நான். முப்பத்தி மூன்றுக்கும் ஆறுக்கும் போட்டியில், இரண்டு முறை ஆறு வயது தோற்று விட்டது. முப்பத்தி மூன்றுக்கு விட்டுக் கொடுக்காமல் வளர்ந்த சுபாவம். சின்னக் குழந்தையோடும் வெற்றிக் கொடி கட்டும் ஆசை. கணினியில் ஆடி பழக்கம். (தேட: கூகிள் :: memory blocks game)

tha 11105நினைவில் நிறுத்துவதற்கு சூட்சுமங்களை சொல்லித் தரப் பார்க்கிறேன். எவ்வாறு காய்களை எடுத்து அவதானிக்க வேண்டும்? அடுத்தவருக்கு எப்படி துப்புகள் கொடுக்காமல் ஆடுவது? வலதுகை ஓரம், இடதுபக்க நடு, என்றெல்லாம் குறியீடுகள் கொள்ள சொல்கிறேன்.

இரண்டாவது ஆட்டம் முடிந்தவுடன் என்னிடம் கோரிக்கை வைத்தாள்.

"அப்பா... இதுவரை இருவரும் வேகவேகமாக அடுக்கியது போல் இல்லாமல், இந்த முறை காய்களை நான் அடுக்கப் போகிறேன். நீ திரும்பி உட்கார்!"

உள்ளாட்சித் தேர்தல் நினைவுக்கு வந்தது.

இறுதியாட்டத்தில் சுளுவாக வெற்றி பெற்றாள். அனைவருக்கும் மகிழ்ச்சி. ஆழ்துயில் பயிலச் சென்றோம்.



| | |

6 கருத்துகள்:

இந்த ஆட்டம் பேர் நெப்போலியன். சீட்டுக் கட்டைப் பிரித்து தரையில் பரப்பி வைத்து விளையாடுவோம். அதாவது ரம்மி, மங்காத்தா எல்லாம் கற்றுக் கொள்வதற்கு முன்பாக :-)

:)))))

அந்தப் புத்திசாலிப் பெண்ணை முடிந்தால் சந்திக்க வேண்டும்... :))

எங்க ஊர்ல இதுக்கு பேரு "ஞாபகம்"

பிரகாஷ்

---ரம்மி, மங்காத்தா எல்லாம் கற்றுக் கொள்வதற்கு முன்பாக---

Fish, யூனோ போன்ற விளையாட்டுக்களையும் சீக்கிரமே தொடங்கி விடுகிறார்கள்.
இப்படிக்கு,
குழந்தைத்தனமாக விளையாடுபவன் : )

பொன்ஸ்

---புத்திசாலிப் பெண்ணை ---

நீங்க சொன்ன முகூர்த்தம்... அவள் என்னை மாதிரி புத்திசாலித்தனமான காரியம் ஒன்றை செய்தாள்.

வாரயிறுதி. அவளுடைய தோழனின் பிறந்த நாள் விழா. வந்திருந்தவர்கள் வாழ்த்தி எழுத, பெரிய அட்டை வைத்திருந்தார்கள். கூகிள் இல்லாததாலும், சிறுவனுக்கு அட்வைஸ் கொடுக்க விரும்பாததாலும், எல்லாரும் 'Happy Birthday' மட்டுமே எழுதி, வேறு சில வாழ்த்துக்களையும் தொகுத்து கையெழுத்திட்டார்கள்.

குடும்பத்தின் சார்பாக நான் பேனாவைப் பிடித்தபோது, மகள் தடுத்தாட் கொண்டாள்.

'அப்பா... நான் எழுதறேன்! ப்ளீஸ்'.

'உனக்கு ஹேப்பி பர்த்டே பலுக்கத் தெரியாதேம்மா... நானே எழுதிடறேன். அதன் பிறகு உன் பெயரைக் கையெழுத்திடு!'

'பிரச்சினை இல்லேப்பா... இங்கே இத்தனை பேரு அதைத்தானே எழுதியிருக்காங்க! அப்படியே காப்பியடிச்சுடுவேன்'.

அப்பனுக்கு புள்ள தப்பாம பிறந்திருக்கு ; )

யோசிப்பவர்

---எங்க ஊர்ல இதுக்கு பேரு "ஞாபகம்"---

நினைவாலே விளையாட்டு செய்து நமக்காக வைத்தான்...
'நியாபகமே ஓடி வா...!'

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு